ஜுனியர் விகடன் கோபச்சாரிக்கு என் பணிவான பதில்


இன்று காலை புகை பிடித்தல் பற்றி ஒரு பதிவை எழுதி விட்டு எதெச்சையாக இந்த வார ஜுவி படிக்க நேர்ந்தது. எதிர்பாராத விதமாக கோபாச்சாரி சிகரேட் பிடிப்பது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி இருந்தார். மிகச்சிறப்பாக எழுதும் அவர் இந்த கட்டுரையில் சறுக்கி இருந்தார். என்ன நிர்பந்தமோ? அவரின் பல கட்டுரைகள், சமுதாய பிரச்சனைகளை பற்றிய அவரின் அக்கரைக்கு நான் ரசிகன். உதாரனமாக ஆம்னி பேருந்து கொள்ளை, சென்னை வீட்டு வாடகை பிரச்சனை, தமிழில் படங்களுக்கு பெயர் வைத்தல் போன்ற சமுதாய பிரச்சனைகளை அவர் கிழித்த விதம் ரொம்பவும் அருமை . மொத்தமாக புகையிலை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று வாதிட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது, புகை ,மதுவால் எந்த குடும்பமும் பாதிக்கப்பட்டுவிடகூடாது என்பதில் கோபச்சாரிக்கும் எனக்கும் எந்த மாற்றுகருத்தும் இல்லை.ஆனால் ,எதெற்கெடுத்தாலும் சினிமா நடிகர்களை வம்புக்கு இழுத்தல் என்ன நியாயம் .சரி இந்தியசினிமாவில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பதை கட்டுப்படித்தினால், உலக சினிமாவில் சிகரேட் பிடிப்பதை கட்டுப்படுத்துவீர்களா? அல்லது உலக சினிமாவை இந்தியாவில் தடை செய்வீர்களா? ஒரு வாதத்திற்க்கு நடிகர்களால் தான் சிகரேட் பிடிப்பது அதிகம் என்றால் , நம் மக்கள் மேல் பரிவு காட்டும் மத்திய அரசு மொத்தமாக புகையிலையை இந்தியாவில் தடை செய்யட்டும். நம் உதாரணபுருஷர்கள் சுவாமி விவேகானந்தர், நேருமாமா, காந்தி, பாரதியார் போன்றவர்கள் எந்த நடிகர் பார்த்து சிகரேட் மற்றும் கஞ்சா இழுத்தார்கள் . எனக்கு பாரதியார் ,விவேகானந்தர் ரொம்ப பிடிக்கும் .அதனால் ,நான் டோப்பு பைப் இழுக்கிறேன் என்றால் , அவர்கள் சுயசரிதையில் அந்த இடத்தை மட்டும் ரப்பர் வைத்து அழிக்க மத்திய அமைச்சகம் முயற்ச்சி செய்யுமா? கோபச்சாரியின் எழுத்து பரங்கிமலை ஜோதியில் ‘கனவில் கில்மா’ மலையாளப்படம் பார்த்ததால்தான் இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது , என்பதுபோல் இருக்கின்றது. கோபச்சாரியிடம் இருந்து வரும் வாரங்களில் இன்னும் வலுவான கோபங்கள் எதிர்பார்க்கும் , உங்கள் ரசிகன் ஜாக்கிசேகர்

2 comments:

  1. பாரதியார் போதை பழக்கத்தில் சிறிது காலம் இருந்தார் என்று தெரியும். விவேகானந்தரைப் பற்றியும் எழுதியிருக்கிறீகளே. எதுவும் ஆதாரம் இருக்கிறதா?

    காந்தியின் 'சத்திய சோதனை'யில் அவர் புகை பிடித்தது மட்டுமல்ல, அந்த பழக்கத்திலிருந்து வெளிவந்தது பற்றியும் எழுதியிருக்கிறார். அது ஒரு தீய பழக்கம் என்பதையும் சொல்லியிருக்கிறார். அவருடைய 'பிரம்மசர்ய சோதனைகள்' கடும் விமர்சனத்துகுட்பட்டது. ஆனால் புகைபிடித்தல் பற்றி அவர் ஒரு தெளிவான கருத்தையே முன்வைத்திருந்தார். அது ஒரு தீய பழக்கம் என்பதைதான்.

    ReplyDelete
  2. விவேகானந்தர் பைப் பிடித்த ஆதாரங்கள் உள்ளன, புகை மது இரன்டுமே தீய பழக்கம் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை, இவர்கள் எல்லாம் எந்த நடிகர் பார்த்து சிகரேட் பிடித்தார்கள் என்பதே என் கேள்வி, ஒருமனிதன் தீய பழக்கம் கற்று கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளன, எல்லோர் வாழ்க்கையிலும் தீய பழக்கம் கடக்கும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே அவன் தனி தன்மை. நன்றி ஸ்ரீதர்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner