#spotlight
investigative journalism ங்கறதுஒரு கலைன்னு வெளி நாட்டுல சொல்லலாம்... ஆனா நம்ம ஊர்ல உயிருக்கு உத்திரவாதம் இல்லாத விஷயம்... investigative journalism ங்கறது சாதாரண விஷயம் இல்லை... உயிரை பணயம் வைக்கிற விஷயம்... உடல் பொருள் ஆவி அத்தனையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்...
முதன் முதலில் தமிழகத்தில் ஒருவன் எழுத்தை பார்த்து பயந்து போனது யாருக்கு தெரியுமா? எனக்கு தெரிந்து முன்டாசுக்கவி பாரதிக்குதான்.. குறித்துக்கொள்ளுங்கள் எனக்கு தெரிந்தவரை....... பாரதியை கைது செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள்... ஆனாலும் சுந்திர தாகத்தை தனது கட்டுரை மற்றும் கவிதைகள் மூலம் தமிழக மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டிக்கொண்டு இருந்தான்...
விடுதலை போராட்ட வீரர் வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததை , இந்தியா என்ற வார ஏட்டிலும், பாலபாரதம் என்ற ஆங்கில இதழிலும் தோலுரித்து தொங்க விட்டுக்கொண்டு இருக்க..... 1918 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து வெளியேறிய போது தமிழ் நாட்டு எல்லையில் பாரதி கைது செய்யப்பட்டார்... 34 நாட்கள் காவலில் வைக்கபட்டு விடுதலை செய்யப்பட்டார்...
மணிரத்னம் பள்ளியில் இருந்து வெளி வந்து இருக்கும் அவருடையமாணவி சுதா கோங்கரா பிரசாத் இயக்கத்தில் நம்ம மேடி நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம் இறுதி சுற்று.
தமிழ் பெண் இயக்குனர்கள் வரிசையில் மேலும் ஒரு எண்ணிக்கை சுதா வருகையினால் கூடி இருக்கின்றது.
மாதவன் ரொம்ப நாளைக்கு அப்புறம் காத்திருந்து செய்து இருக்கும் திரைப்படம் இந்தியின் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹீராணியின் தூக்கத்தை கெடுத்து மாதவன் அவரிடம் சொன்ன கதை..
கதையின் மேல் உள்ள ஈர்ப்பின் காரணமாக இந்தி திரை வடிவத்தை வட இந்தியாவில் தன் பேனர் மூலம் ரிலிஸ் செய்கின்றார்...
====
இறுதி சுற்று திரைப்படத்தின் கதை என்ன,?
மாதவன் இந்திய பாக்சிங் விளையாட்டில் சிறந்த கோச்... ஆனால் பாக்சிங் ஆணையத்தில் உள்ள உள் அரசியலில் அவர் சிக்கி சின்னபின்னமாகின்றார்.. அவரை டிகிரேட் செய்கின்றார்கள்... சென்னைக்கு அனுப்புகின்றார்கள்.. அங்கே இருக்கும் யாரையாவது உருவாக்கி தங்கம் வாங்கி காட்டு என்று சவால் விடுகின்றார்கள்... சவாலில் மாதவன் ஜெயித்தாரா -? இல்லையா? என்பதே இறுதிசுற்று திரைப்படத்தின் கதை..
===
படத்தின் சுவாரஸ்யங்கள்..
மாதவன் பின்னி இருக்கின்றார்.. சான்சே இல்லை... அவர் ஹேர் ஸ்டைலே தேசாந்திரி லுக்கையும் அறிவு ஜீவித்தனத்தையும் கொடுக்கின்றது... படத்துக்கு பெரிய பலம்...
மாதவனா இது என்று நடிப்பில் பின்னி இருக்கின்றார்.. மிக முக்கியமாக இப்ப அவ வெளையாட நான் என்ன செய்யனும் என்று கேட்டு... வெற்று பேப்பரில் கையெழுத்து போட்டு விட்டு டேய் நீ இன்னும் திருந்தலை என்பதாக சொல்லும் அந்த கட்டம் சிம்ப்ளி சூப்பர் ...
ரித்திகா சிங்... இந்தியாவின் ஏசியன் கேம்சில் கலந்துக்கொண்ட உண்மையான பாக்சரையே... கதையின் நாயகியாக்கி இருக்கின்றார்கள்.. யார் கிட்ட என்ன திறமை இருக்குன்னு யாருக்கு தெரியும்... யப்பா.. பாக்சர் பொண்ணாங்க அது.. நடிப்புல பின்னி இருக்கா... அந்த குழந்தை தனம் எல்லோருக்கும் பிடிக்கும் அதை விட இன்னும் பல பேருடைய தூக்கத்தை கெடுக்கும்.
அப்பா மாதிரி இருக்கறவன் ஆயிரம் பேரு தெரியும் எல்லார்க்கிட்டயுமா நான் ஐ லவ்யு சொல்லிக்கிட்டு திரியிறேன் என்று சொல்லும் அந்த காட்சி அருமை...
உன் அக்கா வாழ்க்கையும் சேர்த்து கெடுக்க போற என்று சொன்னதும்... வெளியே போகாமல் பனிஷ்மென்ட் ஏற்றுக்கொண்டு கிரவுண்டை சுற்றி வருவதும்.. போலிஸ் ஸ்டேஷனில் மாஸ்டர் நீங்க என்ன சொன்னலும் கேப்பேன் என்று சொல்லி கதறுவதும்.. செமை...
ஒரு லட்சம் கொடுத்துட்ட... கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தா 25 ஆயிரத்துல முடிச்சி இருக்கலாம் என்று சொன்னதும்.. இரண்டு லட்சம் கூட கொடுப்பேன் என்று மாதவன் சொல்லும் அந்த காட்சியும்... அதற்கு நாசர்.. யோவ் நீ ரொம்ப நல்லவன்யா என்று சொல்ல மாதவன்... அதற்கு மாதவன் நான் பேசிக்கலி நான் நல்லவன்தான் உன் பார்வையில் நான் கேட்டவன் என்பதாக மேடி அழுத்தம் திருத்தமாக பார்த்து விட்டு செல்லும் அந்த காட்சி செமை.
நாசர், ராதாரவி இரண்டு பேருமே செமையாக பின்னி இருக்காங்க.
அப்பா கேரக்டரில் வரும் காளி வெங்கட் பின்னி இருக்கின்றார்.. திருட்டு கேபிள் எடுக்கும் காட்சி நெகிழ்ச்சி
படத்துக்கு பெரிய பலம் சந்தோஷ் நாரயணன் இசை... சான்சே இல்லை.. மனுஷன் பின்னி இருக்கார்... நிறைய காட்சிகள் நெகிழ்ச்சி அடைய அவருடை பேக்கிரவுண்ட் ஸ்கோர் ரொம்ப ஹெல்ப் செய்யுது.
படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் உதயன் கோணங்கள் அருமை.. மாதவன் சென்னைக்கு வரும் போது சென்னையை பற்றி எடுத்து இருக்கும் மாண்டேஜ் ஷாட்டுகள் அருமை...
சதிஷ் சூர்யாவின் எடிட்டிங் பாக்சிங் காட்சிகளில் பின்னி இருக்கின்றார்..
படத்துல மைனஸ் சௌக்கார் பேட் குடும்பம் நொச்சி குப்பத்தில் என்பதில் தான் நெருடல்
======
படத்தின் டிரைலர்
======
படக்குழுவினர் விபரம்..
Directed by Sudha Kongara Produced by S. Sashikanth C. V. Kumar (Tamil) R. Madhavan (Hindi) Rajkumar Hirani (Hindi) Written by Sudha Kongara Sunanda Raghunathan Arun Matheshwaran (Tamil dialogues) Screenplay by Sudha Kongara Story by Sudha Kongara Starring R. Madhavan Ritika Singh Music by Santhosh Narayanan Cinematography Sivakumar Vijayan Edited by Sathish Suriya Production company Y NOT Studios UTV Motion Pictures Thirukumaran Entertainment (Tamil) Distributed by Dream Factory (Tamil) Rajkumar Hirani Films Tricolour Films (Hindi) Release dates 29 January 2016 Country India Language Tamil Hindi
========
பைனல் கிக்.
எப்படி பெண் இயக்குனர்களில் பிரியா கண்ட நாள் முதல் படத்தில் காதல் மூலம் நெகிழ வைத்தாரே..? அதே போல இயக்குனர் சுதா... ஆக்ஷன் படத்தில் அசத்தி இருக்கின்றார்.. ஸ்போர்ட்ஸ் ஜானரில் தமிழில் இப்படி ஒரு சிறப்பான படத்தை கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்...
பின்னி இருக்கின்றார்... சினிமா என்பது கூட்டுமுயற்சி என்பதை புரிந்து திறமையாளர்களை கண்டு பிடித்து அவர்களது திறமையின் உச்சத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.. அதனாலே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது... அதை விட கதை விவாதத்துக்கு இயக்குனர் பாலாவிடம் கூட கருத்துக்களை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...
அதை விட மாதவன் அடிஷ்னல் ஸ்கிரின் பிளே ஒர்க் செய்து இருக்கின்றார்.... எல்லாவற்றையும் விட நெகிழ்ச்சியான காட்சிகள் இந்த படத்துக்கு பெரிய பலம் என்பேன்... ஒரு திரைக்கதையை செல்லுலாய்டில் மாற்றும் வித்தை சுதாகோங்ரா பிரசாத்துக்கு கை வந்துள்ளது என்பேன்..
எல்லவற்றையும் விட கிளைமாக்ஸ் நெகிழ்ச்சியின் உச்சம்... ஆனால் அதை கையாண்ட விதத்தில்இந்த படம் ஜெயிக்கின்றது.. கிளைமாக் ரெபரன்சுக்கு சுதா வேறு எங்கும் அலையவில்லை.. மணிரத்னத்தின் திருடா திருடா கிளைமாக்சே போதுமானது..
வாழ்த்துகள் இறுதி சுற்று டீம்.
===
படத்தின் ரேட்டிங்..
பத்துக்கு எட்டு
======
வீடியோ விமர்சனம்.
#iruthisutrumoviereview
#iruthisutru #SaalaKhadoos #madhavan
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
இசைஞானியின் ஆயிரமாவது
திரைப்படம். அதனாலே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு…இளையராஜா அறிவிருக்கா சர்ச்சையில் சிக்கிஅவரை படுத்தி எடுத்துக்கொண்டு இருக்கும்போதுதாரா தப்பட்டை திரைப்படத்தின் பாடல்கள்வெளி வந்தவுடனே சமுக வலைதளங்களில்அவரைமீண்டும் கொண்டாட வைத்தனஅது மட்டுமல்லாமல் சசிக்குமார்
புரொடெக்ஷன்மற்றும் அவரே நடிக்கின்றார்
என்பதும்… வரலட்சுமி போன்ற சிட்டி மார்டன் கேரக்டர் எப்படிஆட்டக்காரியாக ஆட முடியும் என்றகேள்விகள் எல்லாம் ஒரு சேரஎழ…படத்தின்மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்றே சொல்ல முடியும்…
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம்தான் ரஜினி முருகன் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. இயக்குனர் லிங்குசாமியின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் திரைப்படம் ரிலிஸ் தேதி சிக்கலில் சந்தித்துத்து இதோ அதோ என்று போக்கு காட்டி வெளி வந்து இருக்கும் திரைப்படம் ரஜினிமுருகன்.. நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்பதுதான் ரஜினி முருகன் திரைப்படத்தின் கேப்ஷன்… நம்பி வந்தவங்களை மோசம் செய்ததா இல்லையா? என்பதை இப்போது பார்ப்போம்.
பொதுவா நம்ம கூட இருக்கறவங்க…
முக்கியமா நம்மளை பொறாமையா பார்க்காம அவங்க பாதையில போய் தில்லா ஜெயிக்கறவங்களை நமக்கு ரொம்பவே பிடிக்கும் அந்தவரிசையில்நேற்று இன்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் தம்பிரவிக்குமாரும்ஒருவர்…
13 வருடத்துக்கு முன்பாண்டியை சேர்ந்த அன்பு என்ற உதவி இயக்குனர்
உலக படவிழாவுக்குசெல்வதாக இருந்தார்வேலை பளுகாரணமாக அவர் செல்லவில்லை…அந்த
டிக்கெட்டை என்னிடம் கொடுத்துபடங்களை
பார்க்க சொன்னார்.. அதுதான் ஆயிரக்கணக்கான உலக திரைப்படங்கள் பார்க்கவும் அதை
பற்றியும் எழுதுவும் விழுந்த முதல் விதை அதுதான்.
1995 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு இதே அம்மாவின் ஆட்சியில் நடைபெற்றது... கடலூரில் இருந்து நண்பர்களோடு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றேன்... அன்று முழுவதும் அந்த பிரமாண்டத்தை விட்டு எங்கேயும் போகவில்லை...
நார்வேயின் புற நகரில்தேசிய நெடுஞ்சாலைகளில்பனி குவிந்து இருந்தால்… அதனைவிலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயதுநீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும்வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம்.
பனி என்றால்நம்மஊர்
மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம்
அல்ல….தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க
வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்டசமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்..
நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி
லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே…கொடைக்கானலில்ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டுஇருக்கும் சமாச்சாரத்தைசென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும், பனி
பெய்தால் காதில் பஞ்சி வைத்துக்கொண்டு செல்லும்புண்ணியவான்களுக்கும்நார்வே வாழ தகுதி
இல்லாத நாடு என்பதை அறிக…
அப்படியான இடத்தில் நீல்ஸ்
தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்….
ஒருநாள் அவரதுபிள்ளை இறந்து விட்டாதாகபோன் வருகின்றது.
பையன் என்றால் 20 வயது மதிக்கத்தக்க
பிள்ளை…எர்போர்ட்டில் லக்கேஜ் ஏற்றிக்கொண்டு
செல்லும் வண்டியை இயக்குபவன்…
ஒரே ஒரு ஆண் பிள்ளை…நானே இன்னும் சாவாம இருக்கேன்.. அதுக்குள்ள அவன்
எப்படி இறப்பான் என்ற கேள்விக்குழப்பத்தோடு… ஆனால் தெளிவாக நீல்ஸ் தன்மனைவியை அழைத்துக்கொண்டுபிரேத பரிசோதனைஇடத்துக்கு வருகிறான்..
வந்து பார்த்தால் மகனுக்கு
எந்த சின்ன கீறலும் இல்லாமல் இறந்து கிடக்கின்றான்… அட ஒரு விபத்தில் போய்சேர்ந்து இருந்தாலும் விபத்துநடந்து விட்டது .. யார் என்னசெய்யமுடியும் ? என்று மனதை தேத்திக்கொள்ளலாம்..
ஆனால்எந்த பிரச்சனையும் அவனுக்கு இல்லை… காதல்
கத்திரிக்காய், உடல் உபாதையும்ஏதும் இல்லாமல்வாழவேண்டிய பையன் இறந்து கிடக்கின்றான்.
அது மட்டுமல்லகேஸ் ஆப் டெத்என்ன? என்று விசாரித்தால்..
உங்க பையன் அளவுக்கு அதிகமானபோதை பொருள் எடுத்துக்கொண்டதால்
இறப்பு சாத்தியமாகியுள்ளது என்று மருத்துவர் கை விரிக்கின்றார்..
நீல்ஸ் என் மகனுக்கு அந்த
பழக்கமே இல்லை என்று வாதிட்டாலும் அடாப்சி ரிப்போர்ட் அதைதான் சொல்கிறது என்று டாக்டர்
வாதிடாமல் அடுத்த வேலை பார்க்க போகின்றார்…
நீல்ஸ் நிச்சயமாகதன் மகன் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இல்லாதவன்
என்பதில் திடமா நம்பினாலும், ஒருவேளை எடுத்து இருந்தால் என்ற எதிர்கேள்வி கேட்கும்
போது நிச்சயம் நீல்ஸ் மனம் அலைபாய்ந்துகொண்டு இருந்தது..
சரி இனிமே வாழ்ந்து என்ன
மயிர புடுங்க போறோம் என்ற தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கும் போதுஒரு டுவிஸ்ட்… மகன் இறப்பு கொலை… என்ற செய்தி கிடைக்கின்றது…
சாவபோனவனுக்கு இந்த செய்தி
வந்தால்என்ன செய்வான்.. வந்தால் மலை போனா
மயிறு என்று களத்தில் இறங்கமாட்டோம்.. எஸ் நீல்ஸ் எப்படி வயதானாலும் தன் மகனை கொலை
செய்தவர்களை பழி வாங்குகின்றார் என்பதை சாப்டர்சாப்டராகஅற்புதமானகிரைம் திரில்லராக இந்த திரைப்படம் நம்கண் முன் விரிகின்றது.
பட்த்தின் சுவாரஸ்யங்கள்..
ஸ்லோவாக இருந்தாலும் இன்ரஸ்டிங்கான
திரைக்கதை… இத்தனைக்கும் எத்தனையோ பழி வாங்கும் படங்களை நாம் பார்த்து இருகின்றோம்..
ஆனாலும் பழிவாங்குவது அதுவும் தனி ஒருவனாகபோதை பொருள் கும்பலை எதிர்ப்பது என்பது சாதாரண
விஷயம் இல்ல..
நன்றாக இருக்கின்றது…..
டிஸ் அப்பியரன்ஸ் ஆகும் பெயர்கள்
மற்றும் செப்டர் குளோஸ் செய்யும் இடங்கள்அருமை.
சினிமாட்டோகிராபி சான்சே
இல்லை… படத்தின் பெரிய பலம்…
ஊர்ல ஒரு பழ மொழி சொல்லுவாங்க... தேரை இழுத்து தெருவுல உட்ட கதையான்னு பேச்சு வழக்குல சொல்லுவாங்க... அது போலத்தான் சகாயம் கதையும்...
ஒரே ஒரு விஷயம்தான்... சகாயம் யாரு.. என்னன்னு தெரியாம... ஊடகங்கள் எழுதுவதை வைத்து ஒரு கோஷ்ட்டி ஒரு நாள் முதல்வர் ரேஞ்சிக்கு புகழ்பாடுது..
சகாயத்தை விட மிக நேர்மையான அரசு ஊழியர்கள் இருக்கின்றார்கள்.... அவர்களின் பணி தெரிவதில்லை...
சகாயத்தோடு டிராவல் ஆன ஊழியர்களை கேட்டுப்பாருங்க...அப்ப தெரியும்...
அதை விட..
இந்த ஊடகங்கள் இருக்கே.. ஊடகங்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு ஒருவனை கடவுளாக கட்டமைக்கின்றன... நேரம் வரும் போது அதே சுயநலத்தின் பொருட்டு கடவுளாக போற்றப்பட்டவன் களமாடபடுகின்றான்.
டிராபிக் ராமசாமியாகட்டும் அல்லது தமிழக அம் ஆத்மியா இருக்கட்டும்...
ஒருவேளை சகாயம் வேட்பாளராக நின்றால்... பத்தாயிரம் ஓட்டுகள் பெறலாம்...
தமிழ் நாட்டை பொருத்தவரை ரெண்டே கட்சிதான்.. ஒன்னு திமுக மற்றது அதிமுக...
இரண்டு கொள்ளியில நல்ல கொள்ளியை தேர்ந்தெடுக்கும் பாக்கியம்தான் நமக்குன்டு என்பதை மறவாதீர்கள்..
ஜாக்கிசேகர் 21/12/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்… தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம் விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும் என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்…
எட்டுமணிக்கே வீட்டுக்கு வந்து விட்டேன்.... ஆனாலும் விலைஉயர்ந்த கார் மூழ்கும் ஆபாயத்தில் இருப்பதாகவும்... கணவர் ஓஎம்ஆர் ரோட்டில் சிக்கிக்கொண்டு இருப்பதாக தோழி உதவிக்கு அழைக்க...