1995 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு இதே அம்மாவின் ஆட்சியில் நடைபெற்றது... கடலூரில் இருந்து நண்பர்களோடு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றேன்... அன்று முழுவதும் அந்த பிரமாண்டத்தை விட்டு எங்கேயும் போகவில்லை...
தஞ்சை பெரிய கோவில் பகலில் பார்க்கும் போது ஒரு உணர்வை கொடுக்கின்றது என்றால் இரவில் அந்த பிரமாண்டம் கொடுக்கும் உணர்வை வர்ணிக்க வார்த்தையில்லை என்றே சொல்ல வேண்டும்......
அதன் பிறகு பல வருடங்கள் அந்த பிரமாண்ட கோவிலை கடந்து இருந்தாலும் கடந்த ஞாயிறு அன்று உறவுகளுடன்... இரவு எட்டு மணிவாக்கில் கோலுக்கு சென்றேன்...
நடை சாத்தப்படும் போதுஅடிக்கும் மேள சத்தத்தை கேட்கையில் உடம்பு சிலிர்த்து விட்டது என்றே சொல்ல வேண்டும்..
தொல்பொருள் துறையினர் அமைத்து இருக்கும் மின்சார ஒளியில் கோவில் தகதகப்பாய் இருந்தது...
ராஜ ராஜன் காலத்தில் அதிக பட்சம் பவுர்ணமி ஒளியில் அந்த கோவில் தீப்பந்த வெளிச்சத்தோடு வேறு ஒரு அனுபவத்தை கொடுத்து இருந்தாலும்...
உடனே எனது கேமராவில் பத்து நிமிடத்தில் பதிவு செய்த காட்சிகள்தான் மேலுள்ளவை...
தஞ்சை செல்லும் நண்பர்கள் அவசியம் இரவு நேரத்தில் ஒரு மூலையில் அமைதியாக உட்காந்து அந்த பிரமாண்டத்தை ரசித்து விட்டு வாருங்கள்..
உடனே தஞ்சை பெரிய கோவிலை பார்க்க முடியாத வெளி நாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு இந்த காட்சிகள் பயனுள்ளதாய்இருக்கும்...
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்ய மறவாதீர்கள்.
#தஞ்சைபெரியகோவில்
#Brihadeeswarar
#BrihadeeswararTemple
#ThanjavurBrihadeeswararTemple
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அற்புதம்.
ReplyDeleteஅற்புதம்.
ReplyDeleteகாணொளி பகிர்வுக்கு நன்றி ஜாக்கி! நேரடி அனுபவத்துக்கும் அப்பால் இரவின் ஒளியும்,இசையும் அழகான உணர்வை தருகிறது.
ReplyDeleteVERY NICE.TKS.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete