அப்படி வேளச்சேரிக்கு சென்று கொண்டு இருந்த போது..
பினிக்ஸ் மால் எதிரில் இளைஞர்கள் உற்சாக மிகுதியில் தன்னை இழந்து எந்த வாகனத்தையும் செல்ல விடாமல் தடுத்து வைத்து இருந்தனர் என்பதை விட சிறை பிடித்து வைத்து இருந்தார்கள் என்பதே நிஜம்…
பேருந்து ஓட்டுனர்கள் செய்வதறியாது நின்றனர்.. பேருந்தை எடுக்க விடாமல் அதில் ஏறி ஆடிக்கொண்டு இருந்தார்கள்.. மீறி எடுத்தால் பேருந்து சக்கரத்தில் விழுந்து விட்டால்...? என்ற பயத்தை கொஞ்சம் கூட நகர்த்த யோசித்தார்கள் அப்படியே நகர்த்தினாலும் போதை இளைஞர்கள் தடுத்து ஆர்பாட்டாத்தில் ஈடுபட்டார்கள்…
ஒருமணி நேரத்துக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தி வைத்ததோடு கலாட்டாவில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள்.. அதை விட எந்த காரையும் விடவில்லை…
அவ்வளவு அராஜகம்.. அப்படியே ஒரு கார் அவர்களை மீறி சென்றாலும். அந்த காரின் பானட்டில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஏறி ஆட்டம் போட்டார்கள்…
யோசித்து பாருங்கள் கார் ஓனர்கள் எப்படி பயந்து போய் இருப்பார்கள் என்று அப்படியும் ஒரு கார்… வேகம் எடுக்க சில பேர் அதில் இருந்து குதித்ததார்கள்..
ஒருவன் பேனட் மேலேயே உட்கார்ந்து கொண்டு சென்றான்…
போலிஸ் ரோந்து வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது…
வந்தார்கள்… தடியை சுழற்றினார்கள்… ஒரு மணி நேரம் டிராபிக்கை நிறுத்தி வச்ச ஒரு பயலையும் அங்கே காணோம்..
தமிழக காவல் துறைக்கு மிக்க நன்றி…
என்ன மாதிரி அத்து மீறினார்கள் என்று பாருங்க… அதை விட.. ஒரு கார் போனா ஹேப்பி நியூயர் சொல்லுவாங்க.. ஆனா நிறுத்தி வச்சி அதுக்கு மேல் ஏறி ஆடினது எல்லாம் ஓவர்….
புத்தாண்டு இரவு சென்னை ரவுண்டப் வீடியோ.. மற்றும் போலிஸ் வந்ததும் தெறித்து ஓடும் போதை கூட்டம்.
பைக்கில் ஸ்டேண்ட் மூலம் தீப்பொறி திருமுகமாக மாறிய பைக் வாலாக்கள்...
வீடியோ பிடித்து இருந்தால் ஷேர் செய்யுங்கள்.
#chennainewyear
#newyear2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
பகிர்வுக்கு நன்றி! புத்தாண்டில் இந்த அராஜகம் அளவுக்கு மீறி இருக்கிறது! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக அருமையாக எடுத்து தொகுத்து அளித்ததற்கு நன்றி. அத்துமீறல்கள் அதிகமாகவே தெரிகிறது. காலை 2.15 க்கு இந்த அளவு ட்ராபிக் என்று நினைத்தால் பகலில் எப்படி இருக்கும் என்று பயமாக இருக்கிறது!
ReplyDelete