நகரின் மத்தியில் இருக்கும் சைதாபேட்டை பாலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது... ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்....
எல்லோரும் மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர்.... மின்சாரம் இல்லாத காரணத்தால் தகவல் தெரிவிக்க முடியாமல் விழி பிதுங்கி உள்ளனர்..
ஆக்ஷுவலாக இந்த பாதிப்புக்கு பத்து ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்...
ஆனால் மதியத்துக்கு மேல்தான் படகுகள் லாரியில் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க ஆரம்பித்துள்ளன...
பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டும் இல்லையென்றால்..... நினைத்து பார்க்கவே பயமாக இருக்கின்றது..
=======
அடையாறு ஆறு உத்வேகத்துடன் சைதாப்பேட்டை மறைமலை பாலத்தை காலை ஒன்பது மணியில் இருந்து... காமத்தின் மூர்கத்தோடு விழுங்கும் காட்சியை மேட்ரோ ரயில் பாலத்தில் இருந்து எடுத்தேன்... ஒரு பாலம் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் என்றால்...???
அப்போது அது கடந்து வரும் பாதையோரம் உள்ள கரையோர மக்களை நினைத்து பாருங்கள்...
மின்சாரம் இலலாத காரணத்தால்... யாரிடமும் தகவல் தொடர்பு பாதிப்பில் உள்ளது... அதனால் உரியவர்களை தேடி உதவிடுங்கள்..
jackie Cinemas brings you this footage with severe struggle
by going in rain and unavailability of current and also transport in
the motive that everyone should know about the status of heavy rainfall in Chennai.
by going in rain and unavailability of current and also transport in
the motive that everyone should know about the status of heavy rainfall in Chennai.
Saidapet Maraimalai Bridge is been totally submerged under rain water today due to heavy flood. Total road is been blocked.
People was scared to even cross that bridge as it may collapse any time.
People was scared to even cross that bridge as it may collapse any time.
விரிவான பதிவு.
======
தேசிய கீதத்துக்கு எழுந்து நிக்கவில்லை என்று எங்கோ யாரோ செய்த தனிமனித தவறுக்கு...ஒட்டு மொத்த முஸ்லீம் சகோதரர்களையும் திட்டி தீர்த்தனர்... ஆனால் பல இடங்களில் எந்த மீடியா விளளம்பரமும் இல்லாமல்... அவர்கள் பலர் களப்பணியில் ஆரம்பத்தில் இருந்தே இறங்கி இருக்கிறார்கள்... அது மட்டுமல்ல.. சாதி பாகுபாடு இல்லாமல் வெள்ளாத்தால் பதிக்கப்பட்ட மக்கள் எவர் வேண்டுமானாலும் பள்ளிவாசல்களில் தங்கி கொள்ளலாம் என்ற ஜமாத்தின் முடிவுக்கு ஒரு ராயல் சல்யூட்...
ஜாக்கிசேகர்.
03/12/2015
03/12/2015
=========
எல்லோரும் உதவிகள் செய்ய தயாராய் இருக்கின்றனர்... எனக்கு போன் செய்து எவ்வளவு அனுப்பவேண்டும்.. உணவு பொருட்கள் எவ்வளவு வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.... உண்மை நிலவரம் என்னவென்றால்...உதவியை நேரில் சென்று சேர்க்க முடியாத அளவுக்கு சாலைகளில் வெள்ளம்... முன்னெச்சைரிக்கை நடவடிக்கையாக... அந்த அந்த கடல்புரத்தில் இருந்து படகுகளை தாழ்வான பகுதிகளில் நிறுத்தி இருந்து இருக்கலாம்... இப்போது எங்கேயும் செல்ல முடியாத சூழ்ல்... கண்டிப்பாக உங்கள் உதவிகள் நிச்சயம் தேவை... ஒரு வாரத்துக்கு பின் கண்டிப்பாக தேவை... அதுவரை பொருத்து இருங்கள்.. நன்றி
ஜாக்கிசேகர்.
03/12/2015
03/12/2015
==========
உங்களிடம் பெரும் பணம் இருந்தால் உங்களுக்கு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் என்னமிருந்தால்...
முதலமைச்சர் நிவாரண நிதி, பிரதமர் நிவாரண நிதிக்கு பணத்தை அனுப்பி... மனநிறைவு கொள்ளாதீர்கள்....
வீட்டை விட்டு வெளியே வாங்கள்...உங்கள் அருகில் மழை பாதித்த பகுதிகளுக்கு சென்று... இரண்டு அல்லது மூன்று குடும்பதை தத்து எடுத்துக்கொள்ளுங்கள்..
மழை வடிந்த பிறகு அவர்களுக்கு உடனே தேவை அத்தியாவசிய பொருட்கள்...
வாழ்நாள் எல்லாம் அந்த குடும்பங்கள் உங்கள் வாழ்த்தும்.. உங்களுக்கே ஒரு மன நிறைவு இருக்கும்... அது மட்டுமல்ல விரைவாய் உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்று அடையும்...
அரசு நிர்வாகம் இயங்கி அது பாதிக்கப்பட்டவர்களை சென்று அடைய அடுத்த பருவமழை வந்துவிடும்...
உதாரணத்துக்கு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும பிள்ளைகளுக்கு அரையாண்டு தேர்வுக்கு மேல்தான் இலவச புத்தங்கள் புத்தம் புதியதாய் கிடைக்கும்...
நானும் சத்துணவு சாப்பிட்டு அரையாண்டுக்கு மேல் இலவச புத்தகங்கள் வாங்கிய மாணவன் என்ற முறையில் இதனை எழுதுகிறேன்.
ஜாக்கிசேகர்
03/12/2015
03/12/2015
========
இப்ப மாதிரி அப்ப செல்லு மயிறு எல்லாம் இல்லை.. ஸ்கூலுக்கு எவனாவது டிரான்ஸ்சிஸ்டர் எடுத்து வருவான்... ஒன்னுக்கு வருதுன்னு பொய் சொல்லிட்டு கிரிக்கெட் ஸ்கோர் கேட்டுக்கிட்டு வந்து எவ்வளவு ஸ்கோர் எத்தனை விக்கெட் யாரு பேட்டிங்ன்னு சொல்றதுக்கு இல்லாத வித்தை மயிறு எல்லாம் காமிப்பானுங்க...
அவனுங்க பின்னாடியே அலையனும்... அது போல... முன்னாடியே தீபாவளிக்கு செக்கை போடு போட்ட மழை... அடுத்து பெரும் மழை..
பள்ளி கல்லுரிகளுக்கு ஒருவாரம் லீவ் விட்டு தொலைஞ்சி இருந்தா காலேஜ்ல ஹாஸ்டல்ல, லேடிஸ் ஹாஸ்டல்ல இருந்த பசங்க வீட்டுக்கு போய் சேபா இருந்து இருக்கும்...
ஒரு ஒரு நாள் நைட்டு லீவ் குத்தம் வெள்ளம் சூழுந்த உடனே கல்லூரி நிர்வாகமே உடனே வெளியே துரத்தும் கொடுமையும்.. சாப்பாடு இல்லாமல் பெண் பிள்ளைகள் தவிப்பதும் , சென்னை நகரை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதும்... எல்லா கல்லூரிகளிலும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றது...
கடலூர்ல இருந்து சென்னைக்கு 50 ரூபாய்க்கு வந்தவனை ஒரு நாள் இரவில் பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி 100 ரூபாய் டிக்கெட் எடுக்க வைத்த அரசாங்கத்துக்கு இது போன்ற அவஸ்த்தைகள் தெரியநியாயம் இல்லை.
ஜாக்கிசேகர்
03/12/2015
==========
சென்னை ஏர்போர்ட்டின் மூன்றாவது ஒடுதளம் அடையாற்றின்மேல்தான் அமைந்துள்ளது...
இந்தியாவிலேயே ஆற்றின் மீது ரன்வே அமைத்த ஏர்போர்ட் சென்னை ஏர்போர்ட்தான்...
அடையாறு ஆறு அனாகபுத்தூர் பொழுச்சலூர் வழியாக மீனம்பாக்க ஏர்போட்டை செல்லமாக எப்போதுமே பின் பக்கம் தட்டிவிட்டுதான் ராமபுரம் பக்கம் வளைந்து காசி தியேட்டர் பக்கம் வரும்...
ஆனால் செம்பாரம்பாக்கம் ஏறி திறப்பில் உணர்ச்சி வேகத்தில் கரை புரண்ட வெள்ளம் நேராக ஏர்போட்டின் பின் பக்கம் வேட்கையோடு புகுந்து விட...
ஏர் பஸ் எல்லாம் எம்டிவி பேருந்து போல மிதக்க...
ஏர்போர்ட் இரண்டு நாளைக்கு ஷட்டவுன் என்று ஏர்போர்ட் நிர்வாகம் கை விரிக்க..
கியா பாய் சாப்... சென்னை பிளைட்மே கேன்சல் ஓகயா என்று டெல்லி அலற ..
அதன் பின்தான் டெல்லி மீடியாக்களுக்கு இந்திய வரைபடத்தில் இருக்கும் தமிழ்நாடு கண்ணுக்கே தெரிந்தது...
சென்னை மாவட்ட நிர்வாகம் சொல்லி இருக்க வேண்டும்... அவர்கள் அலர்ட்டாக இருந்து இருந்தால் இவ்வளவு சேதம் இருந்து இருக்கும்.. ஆனால் மேல் தளத்தில் மாட்டிக்கொண்டு பசியில் வாடும் மக்களை ரெக்கவர் செய்து இருக்கலாம்.. இன்னும் நிறைய பேர் மீட்கப்படவில்லை என்பதுதான் நிஜம்... அதுதான்
உண்மை.
உண்மை.
நன்றி சென்னை ஏர்போர்ட்
ஜாக்கிசேகர்.
03/12/2015
============
சென்னையில் பத்து சதவிகிதம் பேரிடம்தான் மின்சாரம் இருக்கின்றது...
சரியாக ஒருவாரம் கழித்து நிறைய கண்ணீர்கதைகள் தெரிவரும்..
சோஷியல் மீடியாக்களில் பாதிக்ப்பட்டவன் ஒவ்வொருவரும் தாங்கள் பாதிக்கப்பட்ட கதைகளை இன்னும் வீரியத்துடன் ரிப்போர்ட்டிங்காக எழுதுவார்கள்...
அந்த கதைகள் இன்னும் வலிகள் நிறைந்ததாக இருக்கும்....
==
எல்லோருக்கும் தனி தனியாக சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியாது என்பதால்.,... ஒரே பதிவில் பதில் சொல்கிறேன்...
மின்சாரம் டீசல் இல்லாத காரணத்தால் செல்போன் கோபுரங்கள் செயல் இழந்து காணப்படுகின்றன...
அதனால் மட்டுமே உங்க உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை..
அதனால் மட்டுமே உங்க உறவினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை..
அவ்வளவு ஏன் சென்னையில் இருக்கும் எங்களாலும்... உதாரணத்துக்கு வெளியே நாங்கள் சென்றால் எங்களையே எங்கள் குடும்பத்தாரால்ல உடனே தொடர்பு கொள்ள முடியாது என்பது நிதர்சன உண்மை...
அதே போல சாலைகளில் வெள்ளம் வடிந்து விட்டது...தாழ்வான பகுதிகளில் ம்ட்டுமே வெள்ளம் இன்னும் உள்ளது... மின்சாரம் கிடைத்ததுமே உங்கள் உறவினர்கள் உங்களிடம் பேசுவார்கள்..கவலை வேண்டாம்..
அரசியல்வாதிகளை விட சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரிடமும் மனிதம் இன்னமும் மிச்சம் உள்ளது.
=============
எச்சரிக்கை...
தயவு செய்து முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்...
. சென்னை கடலூர் பகுதிகளில் வெள்ள நிவாரணம் செய்கின்றோம் என்று வாட்ஸ் அப் மற்றும் சோசியல் மீடியாக்களில் மனதை பிசையும் படங்களை வெளியிட்டு ஊர் பேர் தெரியாதவர்கள் அக்கவுண்ட் நம்பர் கொடுத்து பணத்தை போடுங்க என்று சொன்னால் ...பணம் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்..
உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள், மற்றும் உறவினர்கள் மூலம்... உங்கள் உதவிகளை செய்ய வேண்டுகிறேன்..
போட்டோஷாப் செய்து வெள்ள நிவாரண உதவி செய்கிறேன் என போலிகள் பெருகி நிறைய பணத்தை அடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன....
போட்டோ ஷாப் வேலை செய்யும் பசங்களே... எரிச்சலுடன் பகிர்ந்த செய்தி இது...
தயவு செய்து எச்சரிக்கையாக இருக்கவும்...
ஏன்டா இதிலேயுமாடா??
உருப்படவே மாட்டிங்கடா.. எரியற வீட்டுல புடுங்கனது எல்லாம் லாபம் என்பது பெரும் பாவம்டா ..
நிறைய பேர் எச்சரிக்கையாக இருக்க இதனை ஷேர் செய்யவும்...
ஜாக்கிசேகர்
05/12/2015
05/12/2015
=======
எச்சரிக்கை...
நிவாரண பொருட்கள் வழங்க செல்லும் தோழர்களுக்காக....
ரூல் நம்பர்..1
எந்த ஊருக்கு நிவாரணபொருட்கள் எடுத்து சென்றாலும் அதனை உங்கள் குழுவினர் கையால் கொடுங்கள்... நான் தான் ஊர் தலைவர்.. என்கிட்ட கொடுங்க என்று சொன்னால் தயவு செய்து கொடுத்து விடாதீர்கள்... முக்கால்வாசி பொருட்களை அபிட் விடும் ஆட்களே ஊர் தலைவர் போர்வையில் வளைய வருகின்றார்கள்..
ரூல் நம்பர்..2
தெரியாத ஊருக்கு செல்கின்றீர்கள் என்றால்.. அந்த ஊரில் இருக்கும் ஆசிரியர் நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.. அவர்களுக்கு தெரியும் எங்கே நிவாரணம் அதிக தேவை என்று..
ரூல் நம்பர்..3
எல்லோரும் தலைநகரத்திலேயே கொடுக்க வேண்டாம்... உங்கள் உதவிகள்....
கூக்குரல் காட்டு கத்து கத்தினாலும் கேட்காத உள் கிராமங்களுக்கு புறநகர் பகுதிகளுக்கும் சென்று வழங்குகள்...
ரூல் நம்பர்..4
நிவாரண பொருட்கள் வழங்கும் வண்டியை ஓரமாக நிறுத்தி அந்த ஊருக்கு சென்று வமெல்ல விசாரித்து விட்டு அதன் பின் அந்த ஊருக்கு என்ன தேவையோ... அதை மட்டும் அங்கே கொடுங்கள்... செம டயர்டா இருக்கு இங்கேயே கொடுத்துட்டு போய் தொலைவோம் என்று நினைக்காதீர்கள்... இன்னும் இரண்டு கிலோமீட்டரில் நீங்கள் கொடுக்கும் வாட்டர் பாக்கெட்டில் வாய் நனைக்க ஏதாவது ஒரு ஜீவன் காத்திருக்கலாம்..
ரூல் நம்பர்..5
நீங்கள் நுழையும் முதல் ஊரிலேயே... எங்களுக்கே நிவாரணம் கிடைக்கலை.. அடுத்த ஊருக்கு எடுத்துக்கிட்டு போறிங்களா-? என்று மலைக்கள்ளன் கணக்காக உங்களிடம் பொருட்களை உங்கள் கண் எதிரில் அபகரிக்க முயற்சிக்கலாம் ஜாக்கிரதை..
ரூல் நம்பர்..6
முதல் ஒருவாரம் உணவுதான் பிரதானம் என்று எல்லோரும் உணர்ச்சிவசப்பட்டு உதவிகளை செய்து விட்ட திருப்தியோடு அடுத்தவேலையை பார்க்க போய்விடுவார்கள்... ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையாகவே அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் உதவி இரண்டாம் வாரத்தில் இருந்து தான் தேவை அதிகரிக்கும்... அதனால் இதே உழைப்பை சிலவாரம் கழித்து உடை மற்றும் அரிசி பருப்பு பாத்திரங்கள் என்று சில குழுக்கள் உதவிகளை தள்ளி செய்யலாம்...
ரூல் நம்பர்..7
தயவு செய்து பதுசாக பேசி வெளியே வரும் வழியை பாருங்கள்... விதாண்டாவாதம் வேண்டாம்... எப்படியும் அந்த ஊரில் ஒரு வெட்டிகேசு வெண்ணலிங்கம் நோவாமல் நோம்புகும்பிட உதவி செய்யும் குழுவினை வார்த்தைகளில் உரசி பார்க்கும்... அந்த நேரத்தில் அதுக்கு ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா கொடுத்தால் அது அடங்கி விடும்... அது மட்டுமல்ல.. நமக்கு அதிகம் பேரிடம் நம் கொண்டு செல்லும் பொருட்கள் கொண்டு சேர வேண்டும்... காரியம்தான் முக்கியம் என்பதை மறவாதீர்கள்...
ரூல் நம்பர்..8
அந்த ஊரில் ஆளும் கட்சி எதிர்கட்சி ஆட்களை வைத்துக்கொண்டு வழங்குவது போலிகளை இனம் கண்டுகொள்ள தோதாக இருக்கும்...அதே போல இரண்டு பேரும் சண்டை போடாமல் பார்த்துக்கொள்வது ரொம்ப முக்கியம்...
நிவாரண உதவி செய்துக்கொண்டு இருக்கும் அனைத்து நல்லுள்ளம் கொண்ட குழுக்களும் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தூக்க கலக்கத்தில் இப்போதைக்கு இவைகள்தான்...
குறிப்பு....
(2012 ஆம் ஆண்டு..
சிங்ககையில் இருந்து தம்பி ரோஸ்விக் கொடுத்த நிதிஉதவியில் தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் நானும் தம்பியண்ணன் அப்துல்லா, ஜோசப் பால்ராஜ் போன்றவர்களோடு
60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்த அனுபவத்தில் எழுதியது...)
சிங்ககையில் இருந்து தம்பி ரோஸ்விக் கொடுத்த நிதிஉதவியில் தானே புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிந்தாமல் சிதறாமல் நானும் தம்பியண்ணன் அப்துல்லா, ஜோசப் பால்ராஜ் போன்றவர்களோடு
60க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்த அனுபவத்தில் எழுதியது...)
ஜாக்கிசேகர்
05/12/2015
05/12/2015
#chennai #chennairains #chennaiflood #chennaifloodhelp#ChennaiRainsHelp #staystrongchennai
#staystrongcuddalore #CuddaloreFlood #CuddaloreRain
#staystrongcuddalore #CuddaloreFlood #CuddaloreRain
=========
ஏன்டா ஒன்னாம் தேதியானா வாடகை மட்டும் வக்கனையா வாங்கற இல்லை… ஏன்டா வீடு ஒழுவுது, வீட்டுக்குள்ள ஏன் வெள்ளம் வருதன்னு ஹவுஸ் ஓனரை பார்த்து எப்ப கேள்வி கேட்போம் மக்களே....?
நீங்களே சொல்லுங்க...
வீடு ஒழுகறது போதுதானே கேட்போம்..??
அதைதானே கமலஹாசன் கேட்டார்…
ஏன்டா நீ இப்ப கேட்டே??
பொத்திக்கிட்டு இருந்து சாவகாசமா அடுத்த வருசம் மே மாசம் மண்டைய பொலக்கற வெயில்ல கேள்வி கேட்கவேண்டியதுதானேன்னு சொல்றது எந்த விதத்துலடா நியாயம்..??
ஏண்டா நீங்க எல்லாம் படிச்சவன்கதானா? இல்லை படிச்சவன்க போல நடிக்கிறிங்களா?
முடியலை...
எம்பா நானாவது புரியறது போல பேசறேனா?
===========
எல்லாரும் போல பத்து லட்சம் கொடுத்து ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு மேக்கப் போடாம....
ஒரே ஒரு நடிகன் ஏண்டா என் வரிப்பணம் என்னாச்சின்னு மக்களுக்காக சேர்த்து ஒரே ஒருத்தன் கேள்வி கேட்டான்...
அவன் அவனுக்காக மட்டும் கேட்கலை.. எல்லாருக்கும் சேர்த்துதான் கேட்டான்.. அவ்வளவுதான்...
அவனை லூசுன்னு சொல்றதுக்கும் சொல்ல வைக்கறதுக்கும் ஒரு கூட்டமே இயங்குது...
நல்லா வருவிங்கடே...
=============
ஒரு நிகழ்வை பதிவு செய்வது... பத்திரிக்கை துறையில் இருப்பதால் அது எனது கடமையாகிறது.. வெள்ளம் பாதித்த பகுதிகளை பதிவு செய்ய சென்று இருக்கிறேன்... அவ்வப்போது அதனூடே சின்ன சின்ன உதவிகள் செய்து வருவேன்...
நேற்று கூட வேளச்சேரியில் கிராண்ட் மால் பின்புறம் மழையில் கழுத்தளவு தண்ணிரில் மக்கள் படும் இன்னல்கள்... மற்றும் தீயணைப்பு துறை தேசிய பேரிடர் வீரர்கள் என அவர்களின் சுறு சுறுப்பான உழைப்பையும் , காப்பாற்றும் வேகத்தையும் படம் பிடித்துக்கொண்டு இருந்ததோடு... எங்கு எங்கு உதவி தேவை என்பதையும் சாப்பாட்டு பொருட்கள் எந்த எந்த தெருக்களுக்கு செல்ல வேண்டும் என்று வாலன்டியர்களுக்கு வழிகாட்டிக்கொண்டு இருந்தேன்..
கோவையில் இருந்து தம்பி ஜெரால்டு பேசினான்.. கோவை வைஸ்மன் கிளப்காரர்கள் நிவாரண பொருட்கள் சென்னை மக்களுக்கு கலெக்ட் செய்கின்றார்கள்அவர்களுக்கு சென்னையில் வழிகாட்டுதல்கள் தேவை என்று சொல்லி அவர்கள் போன் நம்பரை என்னிடத்தில் கொடுத்தான்...
திருசெல்வகுமார் அவர்களிடம் பேசினேன்... ஒன்றரை லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எடுத்து வருவதாக தெரிவித்தார்....
முதலிலேயே எல்லோரும் நிவாரண பொருட்கள் கொடுக்கும் இடத்திற்கோ…அல்லது எளிதில் சென்று அடையும் சைதாப்பேட்டைக்கோ செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்...
அவர்கள் எந்த எந்த இடத்தில் உதவிகள் தேவை என்பதோடு என்ன என்ன வேண்டும் ?என்று இரண்டு நாட்களுக்கு முன் கேட்டார்கள்.. உணவை குறைத்து அத்தியாவசிய பொருட்கள் அதிகம் வாங்கி வரச்சொன்னேன்.
நீங்கள் மட்டும் எப்படி செய்ய முடியும்... யாராவது உதவிக்கு இருக்கின்றார்களா? என்று கேட்டார்கள்.. நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள்... தயக்கமில்லாமல் வருகைதாருங்கள் என்றேன்..அதற்கு முன் ஷங்கர்ஜியிடம் தகவல் தெரிவித்தேன்… அவர்கள் சென்னை வந்தார்கள்… பல்லாவாரத்தில் ஒன்று கூடினோம்..
அங்கே இருந்து சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு அவற்றை கொடுக்க சென்றோம்... ஒருவர் துரைபாக்கம், மீனம்பாக்கம், வேளச்சேரி,வானகரம் என்று உதவிகள் விரிய... நான் வேளச்சேரிக்கு 500 சானிட்டரி நாப்கின்கள்,500 தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், மருந்து பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டு வேளச்சேரியை நோக்கி பயணித்தோம்.....
காரில் இடப்பாற்றாக்குறை காரணமாக சானிட்டரி நாப்கின் பெட்டியை உடைத்து காரில் சந்து பொந்துகளில் எல்லாம் நாப்கின்களை நிரப்பிக்கொண்டு பயணப்பட்டோம்.
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் தற்காலிக மருத்துவ முகாமில் ஒப்படைத்தேன்… எங்கள் வண்டியில் இருந்து அவர்கள் வண்டியில் மாற்றும் போது நாப்கினை பார்த்து விட்டு பெண்கள் மொய்க்க தொடங்கினார்கள்…
நான் மருத்துவமுகாமில் தங்க வைக்கப்பட்ட பெண்களுக்கும் பணிபுரியும் பெண்களுக்கானது என சொல்லியும் கேட்கவில்லை… உரியர் கொஞ்சம் நாப்கின் கொடுங்க என்று சொன்னதும் கொடுக்க ஆரம்பித்தேன்…
பிரியாக கொடுத்தால் ஒருவரே பத்து பதினைந்து வாங்கி அடிக்கிகொள்ளும் உயர்ந்த நோக்கத்தோடு நிறைய பெண்கள் கையில் இருந்து பிடுங்க முயற்சித்தனர். அது என்ன பழக்கம் என்று தெரியவில்லை.. கையில் இருந்து பிடுங்குவது.
500 கிலோமீட்டர் கடந்து ஒன்றரை லட்சத்துக்கு மேற்ப்பட்ட நிவாரண பொருட்களை கொண்டு வந்ததோடு கூடவே வந்து கொடுத்து விட்டு செல்ல நல்ல விசாலமான மனது வேண்டும்..
கோவை வைஸ்மென் கிளப் நண்பர் செல்வா அவர்களுக்கும் கோவை மக்களுக்கும் எனது நன்றிகள்… வாய்ப்பு ஏற்ப்படுத்திக்கொடுத்த தம்பி ஜெரால்டுக்கு என் நன்றிகள்.
பொருட்களை மிகச்சரியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்த நண்பர் ஷங்கர் ஜி, மணிஜி மயில்ராவணன், செங்கோட்டையன்,ராஜன் செல்வா மற்றும் அவர் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
அதே போல இரவு 200க்கும்மேற்ப்பட்ட உணவு பொட்டலங்களை நண்பர் ராமு அவர்களுடன் மயிலை சுற்றுவட்டார பக்கிம்காம் கால்வாய் ஓரமாக வினியோகித்து விட்டு இப்போதுதான் வீடு வந்தேன்..
உடலில் கடுமையான வலி இருப்பினும் மனதுக்குநிறைவாய் உள்ளது.
ஜாக்கிசேகர்
05/12/2015
05/12/2015
==============
சென்னை மற்றும் கடலூரில் மழை நிவாரணம் செய்யும் தோழர்களே….
கவனமாக ஒரு ஒரு நிமிடம்…
இந்த போஸ்ட்டை படிக்கவும்…
சென்னையில் இன்று காலை மழை பெய்தாலும் கடுமையான மழை இல்லை…
சைதாபேட்டை பாலத்துக்கு கீழே வீடு முழுவதுமாக மூழ்கி இருந்த மக்கள்… திரும்பவும் அவர்களின் உரு குலைந்த வீட்டுக்கு சென்று ரெடி செய்யஆரம்பித்து விட்டார்கள்… அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதியதாய் வீடு கட்டிக்கொடுத்தாலும் அதனை வாடகை விட்டு விட்டு திரும்பவும் அதே ஆற்றின் ஓரத்தில்தான் வீடு கட்டி வாழ்வார்கள்..சரி விடுங்கள்..
சென்னையில் இருக்கும் வெள்ளம் பாதிக்காத பணக்காரர்கள்… தங்கள்விலை உயர்ந்த கார்களில் வந்து சைதாப்பேட்டை பாலத்தில் வந்து பொருட்களை வழங்குகின்றார்கள்.. உண்மையாக பாதிக்கப்பட்ட மக்கள் பக்கத்தில் உள்ள பள்ளிகளிலும், மண்டபங்களிலும் தங்கி இருக்கின்றார்கள்…
ஆனால் நானும் ஹெல்ப் செய்தேன் என்ற மன நிறைவுக்கு காரில் உட்கார்ந்த படியே செய்தாலும்… அது சைதாப்பேட்டை பாலத்துக்கு கீழே பாதிக்கப்படட பயனாளிகளுக்கு ஒரு சதவிகிதம் கூட சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை.
சரி சைதாப்பேட்டை பாலத்தில் நின்று கொண்டு டிராபிக் ஜாம் அளவுக்கு பொருட்களை யார் பெருகின்றார்கள் என்றால்..???
அரசு அளித்த இலவச பேருந்ததில் ஏறி சரவண ஸ்டோரில் கொடுத்த பெரிய பையில் தமிழகம் முழுவதும் வந்து உதவும் நண்பர்களின் உணவு மற்றும் நிவாரண பொருட்களை பக்கி போல அலைந்து சரவண ஸ்டோர் பைகளில் திணித்துக்கொண்டு பேருந்து ஏறி வெள்ளத்தில் பாதிக்கப்படாத தங்கள் பகுதி நோக்கி செல்கின்றார்கள். இதில் எல்லோரையும் அப்படி சொல்ல முடியாது.. இருந்தாலும் எரியும் வீட்டில் பிடிங்கியது வரை லாபம் என்ற நோக்கில் இருக்கும் மக்கள் அதிகம்.
அதே போல கடலூரில் நிவாரண பொருட்கள் ஏற்றி சென்ற வண்டிகள் டிராபிக்கில் சிக்கி திணறுகிறது.. அத்தனை வண்டிகள்… கடலூரில் பாதிப்பு குறைவு… ஆனால்.. கடலூர் சிப்காட் தாண்டி புவனகிரி வரை இருக்கும் சுற்று பட்டு கிராமங்களும் குள்ளஞ்சாவடி , ஆலப்பாக்கம் இ குறிஞ்சிப்பாடு போன்ற இடங்களின் சுற்றுப்புற கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால்… பாதிக்ப்பட்ட பொருட்கள் கடலூரை தாண்டி செல்ல முடிவதில்லை…
நிவாரண பொருட்கள் என்று ஸ்டிக்கர் ஓட்டி வரும் லாரிகளில் மறித்து அதில் இருக்கும் பொரூட்களை அள்ளிக்கொண்டு செல்கின்றார்கள்… ஒருவரே பத்து போர்வை பத்து கொசுவலையை அள்ளிக்கொண்டு செல்கின்றார்கள் என்று நண்பர் ஒருவர் வேதனையை பகிர்ந்து கொண்டார்.. நாங்கள் பத்து பேர்.. அவர்கள் ஐம்பது பேர் எங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது என்று கதறினார்.. இதுதான் நிலைமை.. அதனால் ஜாக்கிரதை...
தயவு செய்து நிவாரண பொருட்கள் ஸ்டிக்கள் ஒட்டிக்கொண்டு செல்லாதீர்… சரியான சோர்ஸ்களை ரெடி செய்துக்கொண்டு செல்லவும்..அதே போல கரை வேட்டிகள் வண்டியை மறித்து அம்மா ஸ்டிக்கர் ஒட்ட சொன்ன கதைகள் தனியான செம காமெடி கதைகள் அவை.
அதே போல சாப்பாடு கண்டிப்பாக இனி தேவையில்லை.. இனி தேவைபடுவது எல்லாம்..
படுத்து உறங்க பாய், பெட்ஷிட், கைலி, நைட்டிகள், துண்டுகள் சிகரேட் லைட்டர்கள்… மெழுகுவர்த்திகள்.. கொசுவலை ,சமைத்து சாப்பிட ஒரு பாத்திரம் ஒரு கரண்டி இரண்டு தட்டுகள், பத்துகிலோ அரசி பருப்பு அவ்வளவுதான்..
தயவு உணர்ச்சி வசப்படாமல் விசாரித்து செயல்படவேண்டுகிறேன்…
சுனாமி, தானே புயல் பாதித்த போதும், இந்த சென்னை பெருமழையின் போதும் களத்தில் இறங்கி பணியாற்றியவன் என்ற முறையிலும்,நேரில் பொது மக்களை சந்தித்தவன் என்ற முறையிலும் இதனை எழுதுகிறேன்..
அதன் பிறகு மகனே(ளே) உங்க சமத்து…
ஜாக்கிசேகர்
06/12/2015
06/12/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் வெள்ள நீரில் மூழ்கும் காட்சி,
ReplyDeleteஅப்பப்பா பயங்கரம்!
மனதை நெகிழ வைத்த விரிவான பதிவு. சைதாப்பேட்டை மறைமலை பாலத்தின் வெள்ளக் காட்சிகள் மனதை இறுக்கியது. (திருச்சியில் 1977 நவம்பர், புயல், மழை, வெள்ளத்தில் கட்டிய துணியோடு ஆளுக்கொரு திசையில் நாங்கள் ஓடியதும், உயிர் தப்பியதும் நிழலாடியது) தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். இங்கு திருச்சியில் எங்கள் பகுதியில் (புறநகர்) இண்டர்நெட் இணைப்பு விட்டு விட்டு கிடைப்பதால் கருத்துரை உடனே தர முடியவில்லை. நன்றி.
ReplyDelete//பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும பிள்ளைகளுக்கு அரையாண்டு தேர்வுக்கு மேல்தான் இலவச புத்தங்கள் புத்தம் புதியதாய் கிடைக்கும்.//
ReplyDeleteஜாக்கி சார் இது அந்தக் காலம். .
அடுத்த ஆண்டுக்காண புத்தகங்கள் ஏபரல் மாதத்தில் வழங்கப்பட்டு விடுகின்றன. தற்போது முதல் மழையின்போதே பட்டியல் கேட்கப்பட்டு உடனடியாக பள்ளி திறந்த நாளே மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப் பட்டது. அதைக் கொண்டு வர படாத பாடு பட்டோம்.அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் மழை இம்முறை இன்னும் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர்.அவர்களுக்கும் பள்ளி திறந்த இரண்டொரு நாட்களில் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இப்போது நிவாரணப் பணிகளில்தான் முழு கவனம் செலுத்தப் பட்டாலும் இணையாக புத்தகங்களுக்கான விவரங்களும் சேகரிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
மிகந்த கவலையை இம்மழை தந்துள்ளது..இதிலிருந்து மீண்டெழ காலகள் ஆகும்....இனி ஒரு மழைவெள்ளம் இப்படி வேண்டாம்....
ReplyDeleteஇப்படி ஒரு பதிவை வெளியிட்டதிற்கே உங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்ன்னே . . .
ReplyDeleteஇப்படி ஒரு பதிவை வெளியிட்டதிற்கே உங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்ன்னே . . .
ReplyDeleteமுயர்ச்சி
திருவினை ஆக்கும்.
parts of this blog may please be repeated time and again
ReplyDeleteஒரு வகையில் சென்னை மழைக்கு நன்றி சொல்வேன் என நீங்கள் பதிந்திருப்பது நூற்றுக்கு நூறு உண்மையான வரிகள். சென்னையில் வசிக்கும் என் நண்பன் தெரிவித்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். அவன் சொன்னவை 'என் பையனுக்கு பால் வாங்க எங்கெங்கோ அலைந்தேன் கிடைக்கவில்லை. மதிய நேரம் என் வீட்டுக் கதவை தட்டி உங்கள் வீட்டில் சின்ன குழந்தை இருப்பது எங்களுக்குத் தெரியும், எங்கள் குழுந்தைக்கு வாங்கியதில் பாதியை எடுத்துக்கோங்க என்றனர். பணம் வாங்கவும் மறுத்துவிட்டனர் (அவர்கள் 160 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள்). கிட்டதட்ட ஒருவருடம் ஒரே தெருவில்தான் வசிக்கிறோம். இரண்டு வீடு தள்ளியிருக்கும் அவர்களிடம் ஒரு ஹாய் ஹலோ கூட சொன்னதில்லை. நினைத்தாலே கூச்சமாக இருக்குறது '.
ReplyDeleteMy wishes to you jackie for you tremendous work.
ReplyDeleteWay to go...
Your lifetime increased to 15 years by these 15 days, also all like yours. And thanks to support Kamal Haassan
ReplyDelete