Tharai Thappattai (2016 ) tamil movie review | தாரை தப்பட்டை திரை விமர்சனம்

 


இசைஞானியின் ஆயிரமாவது திரைப்படம். அதனாலே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு…  இளையராஜா அறிவிருக்கா சர்ச்சையில் சிக்கி  அவரை படுத்தி எடுத்துக்கொண்டு இருக்கும்  போது  தாரா தப்பட்டை திரைப்படத்தின் பாடல்கள்  வெளி வந்தவுடனே சமுக வலைதளங்களில்   அவரை  மீண்டும் கொண்டாட வைத்தன  அது மட்டுமல்லாமல் சசிக்குமார் புரொடெக்ஷன்  மற்றும் அவரே நடிக்கின்றார் என்பதும்… வரலட்சுமி போன்ற சிட்டி மார்டன் கேரக்டர் எப்படி  ஆட்டக்காரியாக ஆட முடியும் என்ற  கேள்விகள் எல்லாம் ஒரு சேர  எழ…படத்தின்  மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது என்றே சொல்ல முடியும்…
===

தாரை தப்பட்டை திரைப்படத்தின் ஒன்லைன்.
தான் நேசித்த பெண்ணை அவளின் நல்வாழ்வுக்காக மாற்றன் ஒருவனுக்கு மனம் முடிக்க சம்மத்திக்கின்றான் நாயகன்.. நாயகியோ  நய வஞ்சகனுக்கு வாக்கப்படுகின்றாள்…. எப்படி இருவரும் மீண்டார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
=
தாரை தப்பட்டை திரைப்படத்தின் கதை என்ன?
சசி (சன்யாசி) தஞ்சாவூரில்  கரகாட்ட குழு வைத்து நடத்தி வருகின்றார்.. அதில் அதி முக்கிய ஆட்டக்காரி வரலட்சுமி (சூறாவளி) சசியின் மாமன் மகள்தான்.. சசி மீது உயிரையே வைத்து இருப்பவள்..ஆனால் சூழ்நிலை காரணமாக  சூறாவளியின் நல்வாழ்வுக்காக வஞ்சகன் ஒருவனுக்கு வாக்கப்பட சன்யாசியும்  சூறாவளியும் வாழ்க்கை சுழலில்  சிக்கி தவிக்க எப்படி அதில் இருந்து விடு பட்டார்கள்  என்பதுதான் கதை.
===========
சன்னியாசியாக சசி அடக்கி வாசித்து இருக்கின்றார். ஆனாலும் இளையராஜாவின் இன்ட்ரோ அதகளத்தில்  ஆட்டத்தில் பின்ன முயற்சித்து இருக்கிறார்.. அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றுள்ளார்…
வரலட்சுமி.. என்ன ஆட்டம் யய்யா… சான்சே இல்லை… என்ன முக பாவம்.. என்ன ஆட்டம் என்ன வளைவு… படம் முழுக்க வரலட்சுமி வியாபித்து இருக்கின்றார்.  அதுவும் அந்தமானில் பசியில் சசி இருக்க… சட்டென் காலில்குத்திய ஆணியும் அது  ஏற்படுத்திய வலியையும்  பொருட் படுத்தாமல் சலங்கை  கட்டி  ஆடி… என் மாமனுக்கு பசின்னா நான் அம்மனாமா கூட ஆடுவேன்னு சொல்லி  ஆடி விழுந்து மயக்கத்தோடு ஒரு பார்வை பார்ப்பாரு பாருங்க.. சான்சே இல்லை..முதல் இரண்டு மூன்று ஷாட்டுகளில் வரலட்சுமியின் தொப்புளும்  இடுப்பு மடிப்பும் சலனம் ஏற்படுத்தினாலும்… அதன் பின் தனது நடிப்பின் மூலம்  முழுவதுமாக சூறாவாளியாக ஆக்கரமித்துக்கொள்கிறார்.
வில்லன் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாவின் வழக்கமாக சைக்கோ வில்லனை பிரதிபலித்துள்ளார்…

காயத்திரி ரகுராம்… ஒரே ஒரு சாவு பாடலில் அசத்தி இருக்கிறார்.. ஏசி வாழ்க்கைதான் என்றாலும் இது போன்ற படங்களில் நடிக்கும் போது  பெண்டு நிமிர்த்தி விடுவார்கள்…  ஹேட்ஸ் அப்… வரலட்சுமி, காயத்திரி மற்றும் உடன் ஆடிய ஜூனியர் ஆர்ட்டிஸ் பெண்கள்… எல்லாவற்றையும் விட இன்ட்ரோ பாடலில் முதலில்  ஆடி வரும் மஞ்சள் மற்றும் புளு சுடிதார் பெண் அதகளம் போங்கள்..

  அமுதவானன் மிகச்சரியான தேர்வு… தன் தங்கையுடன் ஆடும் அந்த ஆட்டமும் அந்த பாடலும், அப்பட்டமான பச்சையான வரிகள் வாக்கியங்கள் என்றாலும்  வயிற்றுபிழைப்புக்கு வேற என்ன செய்றது… கண்டவன் கிட்ட படுத்து எழுந்து நாரப்பொழப்பு பொழக்காம… தன் அண்ணன்  கூடயே ஆடி.. வயிற்றை கழுவும் அந்த    கதாபாத்திரங்கள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன …

இசைஞானி சான்சே இல்லை… இந்த மாதிரி படத்துக்கு என்னை விட்ட வேற ஆள் இல்லைடா ன்னு  தன் இசை மூலம் சொல்லி இருக்கார்.

செழியனின் ஒளிப்பதிவு அத்தமான் மற்றும்  கிளைமாக்ஸ் மற்றும் பாடல்காட்சிகளில் கோணங்கள் அருமை… சில காட்சி கோணங்கள் ஒளிப்பதிவாளர் கர்ணனை நினைபடுத்துகின்றன.

====
படத்தின் டிரைலர்.


====
படக்குழுவினர் விபரம்

Directed by    Bala
Produced by    M. Sasikumar
Bala
Written by    Bala
Starring    M. Sasikumar
Varalaxmi Sarathkumar
Music by    Ilaiyaraaja
Cinematography    Chezhiyan
Edited by    G. Sasikumar
Production
company
Company Production
B Studio
Distributed by    Ayngaran International
Release dates
January 14, 2016
Country    India
Language    Tamil

=====
பைனல் கிக்.

தாரை தப்பட்டை

 பார்க்க வேண்டிய திரைப்படம்தான்... ஆனால் கொஞ்சம் விரிவாய் பேச வேண்டி இருக்கின்றது.
இந்த படம் கரகாட்ட காரர்களில் வாழ்விய்ல் துன்பத்தையும் அவர்கள்  காம்பரமைஸ் வாழ்க்கையையும் உறக்க சொல்கிறது.. பச்சையான பாடல்கள் அர்த்தங்களை உடல் அசைவுகளை  அப்படியே  அப்பட்டமாக பதிவு செய்து இதுதான் உண்மை என்பதை சொன்ன தைரியத்துக்கு பாலாவுக்கு ஸ்பெஷல் பொக்கே. 

 சேது தவிர்த்து பார்த்தால்  தொடர்ந்து விளிம்பு நிலை  மக்களின்  வாழ்வியில் துயரங்களை  பாலா தன் திரைப்படங்களில்   பதிந்து வருகிறார்… சேதுவில் கூட மன நிலைபாதிக்கப்பட்டவர்களை பற்றிய டீடெயில் இருக்கும்…

ஆனால் அது டெம்ளெட்டான கதையாக மாறி வருகின்றது என்பதே உண்மை…

 உதாரணத்துக்கு பாலா படங்கள்… விளிம்புநிலை மனிதர்கள் வாழ்வியல் சந்தோஷத்தை முதல்  பாதியில்  பதிவு செய்து…  ஒரு கொடுரமான வில்லன் மூலம்  அந்த சந்தோஷத்தை பறிக்க  செய்து… பறிக்க  செய்வது என்றால் சாதாரணமாக அல்ல… கொடுரத்தின் உச்சமாக பறிக்க  செய்து… படத்தின் கடைசியில்  ஒரு பத்து நிமிஷத்தில் நாயகன் வில்லனை  சூரசம்ஹாரம் செய்து..அவன் குரல் வலையை  நாயகன் கடித்து  துப்பியதை தாங்களே கடித்து துப்பியது போல  படம் பார்க்கும்  ரசிகனை உணர்ச்செய்வதே… பாலாவின் படங்களின் டெம்ளேட் திரைக்கதைகள்…

நிச்சயம் பாலா  இதில் இருந்து மாற வேண்டும்.. விளிம்புநிலை மனிதர்களின் கதைகளை  பதிவு செய்யுங்கள்.. ஆனால் எல்லா படத்திலும் இதே டெம்ளேட்  இருந்தால்  ஒரு  ஆர்வத்தை எதிர்காலத்தில் குறைத்து விடும் என்பதே உண்மை…

விளிம்பு  நிலையில் இருந்து உயர்ந்த  நிலைக்கு சென்ற  தன்னப்பிக்கை கதைகள் நிறையவே இருக்கிறன… ஒரு இரண்டு பாடங்கள் அப்படியான திரைக்கதையில் எடுத்து விட்டு  இது போன்ற படங்கள் எடுத்தால் கூட ஓகே தான்…

பாலாவை அனுராக் கஷ்யாப் கொண்டாட காரணம் அவரின் பாசாங்கற்ற  திரைப்பட உருவாக்கம்.. ஆனால்  வேவ்வேறு தளங்களில் பாலா கஷ்யாப்பை போல பயணிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்..

நதி என்பது ஒரே நேர்கோட்டி சென்றால் அது அழகல்ல.. வளைந்து   நெளிந்து  செல்ல வேண்டும்… திடும் என  மலை முகட்டில் இருந்து சட்டென அருவியாய் ஆர்பரிக்க வேண்டும்.

கடலும் அப்படித்தான்… ஏரி போலதேமே என்று தண்டக்கருமாந்திரம் போல  அமைதியாக இருந்தால் அதில் ரசிப்பில்லை… கடல் அலை போல  வித விதமாக  ஆர்பரிக்க வேண்டும்… அப்போதுதான்  அவைகளை ரசிக்க முடியும்..

ஸ்டான்லி  கியூப்ரிக் 13 படம்தான் தன் வாழ்நாளில் எடுத்தார்.. ஆனால் எல்லா படங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத தளங்கள்…
அதுதான்  ஒரு இயக்குனருக்கு பெருமை..

பாலா சிறந்த இயக்குனர்… அது எரி போல தன் பரப்பை குறுக்கிக்கொள்ள கூடாது.. ஒரு ஆற்றை போல ஒரு கடலை போல…  அதன் எல்லைகளை  விரிவாக்கிகொள்ள வேண்டும்… அதுதான் அழகும் ரசனையும்..



செய்வீர்களா..? நீங்கள் செய்வீர்களா?
பாலா…

வீடியோ விமர்சனம்


=======


 ஜாக்கிசேகர்
21/01/2016

நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner