Happy Birthday Pavithra ... தோழி பவித்ரா
  கடந்த வருடம் 2015  டிசம்பர் மூன்றாம் தேதி செம மழை...  சென்னையில் வெள்ள பாதிப்பு உக்ரமாக இருந்த தினம்.

நான் வேளச்சேரியில் வெள்ள நிவாரண பணிகள் செஞ்சிக்கிட்டே , வீடியோ எடுத்துக்கிட்டு இருக்கேன்.. அங்கதான் என் பிரண்ட் பவித்ரா வீடும்...

செம மழை வெளுத்து வாங்குது..


வேளச்சேரி ரோடு புல்லா வெள்ளம் போய்கிட்டு இருக்கு... மக்கள் அப்படியான வெள்ளத்தை பார்க்கலை..

சாலைகளில் போட் போய்கிட்டு இருக்கு...

 என் பிரண்டு பவித்ரா கணவர் ராஜாவை  அந்த வெள்ளத்தில் பார்த்தேன்...

எங்க வீட்டுக்கிட்ட எல்லாம் ஆள் உயரத்துக்கு தண்ணி நிக்குது ஜாக்கின்னு சொன்னாரு..

இல்லைங்க  நானும் பார்த்தேன்... பட்  வீட்டுல இருக்க மாட்டிங்கன்னு  நினைச்சேன் என்றேன்...

இல்லைங்க  முக்கியமான சில பொருள்களை எடுக்க வந்தேன்...இப்ப  நங்கநல்லூர் போவனும் என்றார்..

 எப்படி வந்திங்க என்றேன்..?

வண்டியில வரலை ஆனா லிப்ட் கேட்டு கேட்டு நங்கநல்லூல இருந்து வேளச்சேரிக்கு வந்துட்டேன் என்றார்...

மழை வெளுத்து  வாங்கிக்கொண்டு இருந்தது...அரசு  கொடுத்த நில வேம்பு கஷாயத்தை இரண்டு பெக் இருவரும் அடித்து விட்டு....

 சரி நான் கிளம்பறேன் என்றார்..  இருங்க நான் டிராப் பண்ணறேன் என்றேன்...
தவிர்த்தார்.. உங்களுக்கு ஏன் சிரமம்..?  செம வெள்ளம்... வேண்டாம்  என்றார்..

செம மழை எப்படி போவிங்க ? நான் டிராப் செய்யறேன் என்றேன்... ஏங்க யாரு யாருக்கோ இங்க ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன்...  வாங்க நான் அழைச்சிக்கிட்டு போறேன்னு சொல்லி எனது பைக்கில் வேளச்சேரி  வெள்ளள நீரில் இருவரும் சாகசம் எல்லாம் செய்து  வாகனத்தில் பயணித்து   பைபாஸ்  ரோட்டை அடைந்து... நங்கநல்லூருக்கு  சென்றோம்..

 நான் கிளம்பறேன் என்றேன்... வீட்டுக்கு வராம நீங்க போக முடியாது என்று மறியல் செய்தார்...

பவித்ரா உங்களை பார்த்த  சந்தோஷப்படுவா...  வாங்க என்றார்... திடிர் சர்ப்பிரைசில்   என் தோழி மகிழ்ந்தாள்..தலை  துவட்டிக்க துண்டில் இருந்து புது டிஷர்ட் வரை எடுத்துக்கொடுத்து போட்டுக்கோ ஜாக்கி என்று பாசத்தை பொழிந்தாள்..

சூடான தோசை கொடுத்தார்கள்.. பசியில் நான் பிகு பண்ணவில்லை... ஏடிஎம்மில் பணம் இல்லை...அதனால் சாப்பிடவில்லை.,.. இருந்த  காசுக்கு  பெட்ரோல் போட்டு விட்டேன்.. நகரம்  பணத்துக்கும் மின்சாரத்துக்கு எரிபொருளுக்கும் தவித்துக்கொண்டு இருந்தது..

நான் என் தோழி பவித்ராவிடம் .. காதில் சொன்னேன்.. ஏடிஎம்ல  பணம் இல்லை சுத்தமா கையில காசு இல்லை... உங்கிட்ட  ஒரு 500 பணம் இருந்தா கொடேன் என்றேன்..

கணவன் ராஜாவிடம் சொன்னாள்...

   வாசல் வரை வந்து வழியனுப்ப வந்தார்கள்.. பணம் இன்னும் கொடுக்கவில்லை.. திரும்ப கேட்க தயக்கம்...
வாகனத்தை இயக்க முற்பட்ட போது பவித்ரா சொன்னாள்..

ஏங்க ஜாக்கிக்கு பணம் கொடுக்கனுமே என்றாள்...

மறந்துட்டேன் சாரி என்று  அவளின் கணவர்  ராஜா வீட்டுக்குள் ஓட்டமா ஓடினார்...

 பர்ஸ்  எடுத்து வந்து பிரித்து என்னிடத்தில்  காட்டினார்... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கோங்க என்றார்... பர்சில்  பத்தாயிரத்துக்கு மேல் 500 ரூபாய் நோட்டுகளும்... சில ஆயிரம் ரூபாய்  தாள்களும் இருந்தான...

 நகரம்  சீர் அடைய  இன்னும் நான்கு நாட்கள்  ஆகும் என்பதால் முன்ஜாக்கிரதை முத்தன்னாவாக நான் நான்கு 500 ரூபாய் தாள்களை எடுத்துக்கொண்டேன்..

பொதுவா நாம யாருக்காவது பணம் கொடுக்கறோம்னா..  கேட்ட பணத்தைதான் கொடுப்போம்... அல்லது  எவ்வளவு கொடுக்கனும்னு நாம நினைக்கறோமோ... அவ்வளவு பணத்தை பர்ஸ்  பிரித்து எடுத்து நாமளே கொடுப்போம்...

 ஆனா என் தோழியின் கணவர் ராஜா.. பர்ஸ் பிரித்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கோங்க என்று சொன்னது  நெகிழ்வாய் இருந்தது.. இத்தனைக்கும் அவர் எனக்கு  நண்பரும் அல்ல... அதற்கு முன் இரண்டு முறை மட்டுமே சந்தித்து இருக்கிறோம்..


சென்னை நகரம் சீர் அடைந்து ஒருவாரம்  கழித்து  குடும்பத்தோடு சென்று அந்த இரண்டாயிரம் பணத்தை அவர்களிடத்தில் கொடுக்க   சென்றால் புருஷனும்  பொண்டாட்டியும்...  பணத்தை வாங்கி கொள்ள ரொம்ப பிகு  காட்டியது மட்டுமில்லாமல்... அவசரத்துக்கு நட்பின் அடிப்படையில் கொடுத்த பணத்தை திரும்பி கொடுத்தால் அது  நல்ல நட்புக்கு அழகன்று என்று எனக்கு வகுப்பு எடுக்க  ஆரம்பித்து விட்டார்கள்... வலுக்கட்டாமாக மிரட்டி  அவர்கள் கையில்  அந்த பணத்தை தினித்தது  தனிக்கதை.. சரி இப்ப எதுக்கு இந்த கதை..மேலுள்ள சம்பவங்களில் பங்கு பெற்றுள்ள எனது  தோழி பவித்ராவுக்கு இன்று பிறந்தநாள்...


நம்ம வாழ்க்கையில சில பேர்கிட்டமட்டும்தான் மனசு விட்டு பேசுவோம்.. அப்படித்தான் அவளும்...
========

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பவி..

ஜாக்கிசேகர்.
11/01/2016 கடந்த வருடம்  பேஸ்புக்கில் எழுதிய பதிவு இது..


சென்னை படூரில் இருக்கும் இந்துஸ்தான் கல்லூரிதான் என் வாழ்வில் மிகப்பெரிய மாறுதலைக்கொடுத்த கல்லூரி என்றால் அது மிகையில்லை என்றே சொல்லவேண்டும்
வீடியோகிராபி பற்றி படம் எடுக்க செல்ல வேண்டும் முதன் முறையாக வகுப்பறைக்கு சென்று பாடம் எடுக்க வேண்டும். எலெக்ட்ரானிக் மீடியா மாணவர்கள் 15 பேர் உட்கார்ந்து இருந்தார்கள்..
உள்ளங்கை வியர்வையில் குளிக்க நான் தவித்து நின்ற போது எனக்கு தைரியமுட்டியவர் என் அருகில் நின்று கொண்டு இருக்கும் பவித்ராதான்... ஜாக்கி சார்... போங்க தைரியமா கிளாஸ் எடுங்க என்று தைரியமூட்டியவர்... வாழ்வில் மறக்க முடியாத கணங்கள்.
நான், பவித்ரா ஒன்றாக ஒரே நாளில் கல்லூரி பணியில் சேர்ந்தவர்கள் பின்னாளில் நண்பர் பீனாசுதின் எங்களோடு இணைந்தார்.. முதல் பேட்ச் என்பதால் வேலை அதிகம் இருக்காது.... நாங்கள் மூன்று பேரும்தான் அப்போது எலக்ட்ரானிக் மீடியா ஸ்டாப்.
தொலைதூரகல்வியில் மேற்படிப்பு படிக்க சொல்லி வற்புறுத்தி என் பயத்தை போக்கியவர் பவித்ராதான்.. என்னங்க வயசாயிடுச்சி.. படிப்புக்கு , கத்துக்கறதுக்கும் வயசே இல்லை.. முதல் அப்ளிகேஷன் பில்லப் பண்ணி போடுங்க என்று சொன்னவர்...
கம்யூட்டர் என்றால் என்ன என்று எனக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அருகில் இருக்கும் நண்பர் பினாசுதீன்...
வாழ்வில் மறக்க முடியாத காலக்கட்டம்.... ஆங்கிலத்தில் எந்த சந்தேகம் ,இருந்தாலும் பவித்ரா எளிமையாக சொல்லிக்கொடுப்பார்...
பவித்ரா மாணவ மாணவிகளோடு ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்... நட்பாய் பழகுவதில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொல்லலாம். கார்த்திக் வீரா என்ற மாணவன் கல்லூரிக்கு வரவேமாட்டான்.. அவன் பிரச்சனைகளை பேசி தீர்த்து அவனை கல்லூரிக்கு ரெகுலாக வரச்செய்து... அவனை டிகிரி முடிக்க தூண்டு கோளாக இருந்தவர்.
நான்கு மாதங்களுக்கு முன் அதே கார்த்திக் வீரா வீடு தேடி வந்து திருமணத்துக்கு பத்திரிக்கை வைத்து விட்டு வாழ்த்து பெற்று சென்றான்...
எனக்கு பெண் சினேகிதி அதிகம் என்றாலும் பவித்ரா கொஞ்சம் ஸ்பெஷல்.. அலட்டல் இல்லாத பெண்கள் அபூர்வம்.. அது மட்டுமல்ல அதிகம் படித்து விட்டால்... வெல் வாட் ஐ டெல் யூ என்று ஆரம்பிப்பார்கள்.. ஆனால் பவித்ரா கிஞ்சித்தும் அலட்டியது இல்லை.
தோழி பவித்ராவுக்கு இன்று பிறந்தநாள்... எல்லா வளமும் நளமும் சந்தோஷமும் அவரும் அவர் குடும்பத்தினரும் பெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்.
நினைவுக்காக.
புகைப்படம் 2005 ஆம் ஆண்டு இந்துஸ்தான் கல்லூரியில் எலக்ட்ரானிக் மீடியா ஆடியோ ஸ்டூடியோ வாசலில் எடுக்கப்பட்டது..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
11/01/2015


==========
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. எவ்வளவு எதார்த்தமான தம்பதிகள்.... நெஞ்சம் நெகிழ்கிறது.....

  ReplyDelete
 2. // பர்ஸ் எடுத்து வந்து பிரித்து என்னிடத்தில் காட்டினார்... எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்கோங்க என்றார்... பர்சில் பத்தாயிரத்துக்கு மேல் 500 ரூபாய் நோட்டுகளும்... சில ஆயிரம் ரூபாய் தாள்களும் இருந்தான..

  எந்த நண்பரும் இவ்வாறு செய்து கேள்விப்பட்டதில்லை. எதார்த்தமான மனம் படைத்தவர்களுக்கு இது ஒரு சான்று...

  ReplyDelete
 3. நல்ல மனம் படைத்த நண்பர்கள்.

  பவித்ராவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..பவித்ரா

  ReplyDelete
 5. நல்ல நண்பர்களை தேடி வைத்திருக்கிறீர்கள்! உங்கள் தோழிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. எனது வாழ்த்துக்களும்...
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. Nice to read about your friendship.
  Good friends are hard to acquire. You are blessed with more than a handful. I am happy for you.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner