ஊர்ல ஒரு பழ மொழி சொல்லுவாங்க... தேரை இழுத்து தெருவுல உட்ட கதையான்னு பேச்சு வழக்குல சொல்லுவாங்க... அது போலத்தான் சகாயம் கதையும்...
ஒரே ஒரு விஷயம்தான்... சகாயம் யாரு.. என்னன்னு தெரியாம... ஊடகங்கள் எழுதுவதை வைத்து ஒரு கோஷ்ட்டி ஒரு நாள் முதல்வர் ரேஞ்சிக்கு புகழ்பாடுது..
சகாயத்தை விட மிக நேர்மையான அரசு ஊழியர்கள் இருக்கின்றார்கள்.... அவர்களின் பணி தெரிவதில்லை...
சகாயத்தோடு டிராவல் ஆன ஊழியர்களை கேட்டுப்பாருங்க...அப்ப தெரியும்...
அதை விட..
இந்த ஊடகங்கள் இருக்கே.. ஊடகங்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு ஒருவனை கடவுளாக கட்டமைக்கின்றன... நேரம் வரும் போது அதே சுயநலத்தின் பொருட்டு கடவுளாக போற்றப்பட்டவன் களமாடபடுகின்றான்.
டிராபிக் ராமசாமியாகட்டும் அல்லது தமிழக அம் ஆத்மியா இருக்கட்டும்...
ஒருவேளை சகாயம் வேட்பாளராக நின்றால்... பத்தாயிரம் ஓட்டுகள் பெறலாம்...
தமிழ் நாட்டை பொருத்தவரை ரெண்டே கட்சிதான்.. ஒன்னு திமுக மற்றது அதிமுக...
இரண்டு கொள்ளியில நல்ல கொள்ளியை தேர்ந்தெடுக்கும் பாக்கியம்தான் நமக்குன்டு என்பதை மறவாதீர்கள்..
ஜாக்கிசேகர்
21/12/2015
21/12/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Kataisi vari unmai pesukirathu. Sakayam engal oorkkaarar. Aanaal yaaraaka irunthaalum konjam vilamparam kitaithu vittaal pothum. Straightaaga CM thaan. Avarin aatharavaalargal avarin anumathiyintri avvaaru goshamida vaaippukalundu.
ReplyDeletePani seitha varudathin ennikkaiyai vita athika murai transfer seiyappattavar.Sakayam nallavar.Avar arasiyalukku varamaattaar. Vanthaal nallavaraaga irukka maattaar. Irukka vidamaattaargal enpathey unmai.
ஏன் டெல்லியை கேஜெர்வால் இரண்டு தேர்தல்களில் வெற்றி பெரியவில்லையா ?
ReplyDeletelets think something positive for future ....
ppl can change any thing...
ReplyDeleteபாவம்! சகாயம்! ஒரு நல்ல அதிகாரியை புகழ் போதையில் தள்ளி குழி தோண்டுகின்றன ஊடகங்கள்!
ReplyDeleteBut, If saghayam is interested in politics and ready to jump in, he is far better than DMK, ADMK....
ReplyDeletewell said
ReplyDeleteஎரியிற கொள்ளியில எது நல்ல கொ(ல்லி)ள்ளின்னு சென்னைய தாண்டி இருக்குற மத்தவங்களுக்கு வேனும்னா சந்தேகம் வரலாம்... உங்களுக்குமா..?
ReplyDeleteஇன்னொரு புயலை தாங்குற சக்தி உங்களுக்கு இருக்கலாம்.. உங்க ஊருக்கு இன்னொரு தடவ 'ஊறு' வந்தா எங்கள போல ஜனங்களால உதவ முடியுமான்னு.. எங்களுக்கு தெரியல.
ஒருவேள அவங்க வந்தா சொல்லுங்க தமிழ்நாடுன்றது அவங்க வீடும் இருக்குற தெருவும் மட்டுமில்லன்னு...
பொதுவாக மக்களுக்கு அவர்கள் மீதே ஒரு நம்பிக்கை இருக்காது. நாம் தேர்ந்தெடுத்தவர்களை கேள்வி கேட்போம் என்று இருந்தால் இப்படி ஊழல் மயம் ஆகி இருக்காது. அரசு, அதிகாரிகள் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எஜமான் பொது மக்கள் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. மக்கள் எதிலும் குறுக்கு வழி தேடுகிறார்கள். கடவுள் தத்துவமே அதுதான். தன் கடமையை செய்யாமல் யாரோ ஒருவர் வந்து எல்லாம் சரி செய்து விடுவார் என்று நம்புகின்றனர். மந்திரம், ஜோசியம் என்று நம்புவதும் இதனாலே. எல்லோரும் ஓர் நிறை என்ற எண்ணம் வந்தால் இங்குள்ள எல்லா மக்களும் நல்ல வண்ணம் வாழமுடியும். விடுவார்களா ?
ReplyDeleteஅரச பதவியில் இருக்கும் போது அரசியலில் ஈடுபடக்கூடாது எனும் அடிப்படை அறிவு கூட இல்லாமலும் அரசு பதவியை விட்டு விலகி இருவருடங்கள் பின்பே அரசியலுக்குள் நுழையலாம் என்பதும் தெரியாமலா சகாயத்தை இதனுள் இழுக்கின்றார்கள்.
ReplyDeleteநம்மாட்கள் உணர்ச்சிக்குவியல்களில் மூழ்கி எழுபவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கின்ரார்கள்.அறிவைகுப்பையில் போட்டு உணர்வுக்கு முக்கியம் கொடுப்பதால் இப்படித்தான் ஆகும்.
"ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை" என்று ஒரு முதுமொழி உள்ளது.
ReplyDelete