நம்ம கூட இருக்கும் பசங்க முன்னேறும் போது.. நம்ம ஜெயிச்சதா ஒரு சந்தோஷமும் மன நிறைவும் வரும் இல்லையா... ?
அப்படியான சந்தோஷம்தான் குடியரசு தினமான இன்று எனக்கு...
தம்பி விமல்குமார் பாலிமர் தொலைகாட்சியில் கிராபிக் டிசைனர் கடிண உழைப்பாளி... நான் பாலிமர் தொலைகாட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த போது எனது நிகழ்ச்சி சார்ந்த விஷயங்களுக்கு கிராபிக்ஸ் செய்து கொடுப்பார்...
இந்தியா முழுவதும் நடந்த டிஜிட்டல் இந்தியா பெஸ்ட் டிசைன் போட்டியில்... தமிழகத்தை சேர்ந்த தம்பி விமல்குமார் மூன்றாம் பரிசினை வென்றார்.....
அவருக்கான பரிசினையும் பாராட்டினையும் டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் இன்னும் சில மணி நேரத்தில் வழங்க இருக்கின்றார்கள்.
இன்னும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..
ஜாக்கி சினிமாஸ் வீடியோ தளம் ஆரம்பித்த போது நிறைய இரவுகளில் வீட்டுக்கு வந்து கம்யூட்டரிலும் எடிட்டிங்கிலும் என் சந்தேகத்தை போக்கியவன் தம்பி விமல் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன்
அவன் ஜெயித்தது நான் ஜெயித்தது போல... அவன் விருது வாங்குவது நான் விருது வாங்குவது போல...
மனம் நிறைந்த வாழ்த்துகள்டா
பெருமையும் நெகிழ்ச்சியுமாக
அன்பு அண்ணன்
ஜாக்கிசேகர்
26/01/2016
நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அருமை... உண்மைதான்...நம் கூட இருப்பவர்கள் வெற்றி பெற்றால் நாமே வெற்றி பெற்ற உணர்வு உண்டாகும்...!
ReplyDeleteநல்வாழ்த்துகள் விமல்.
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துகள் நண்பா ஜாக்கி.
உங்கள் சினிமா விமர்சனங்கள் அருமை
ReplyDeleteநான் உங்கள் விமர்சனங்களை சுட நினைக்கிறேன்