கெத்து எனப்படுவது யாதெனில் அது – ஜெயமோகன்.








நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான  புத்மஸ்ரீ   விருதினை எழுத்தாளர் ஜெயமொகன்  தனக்கு வேண்டாம் என்று மறுத்து இருக்கின்றார்…


 அவர் விருதினை பெற்று இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்றுஇணையம் எங்கும் பல்வேறு விதமான   விவாதங்கள் நடைபெற்று வருகின்றன…





 தமிழ் எழுத்தாளனுக்கு கிடைக்க கூடிய ஆகச்சிறந்த கவுரவம்  இந்த பத்மஸ்ரீ என்றால் அதில் மிகையில்லை…

ஆனால் என்னதான் அவர் விழுந்து விழுந்து எழுதினாலும் தீவிர  இந்துத்வா, ஆர்எஸ்எஸ் மனோபாவம் கொண்டவர் என்ற விமர்சனம் அவர் மீது  அநேகம் பேர் வைக்கின்றார்கள்…


சொந்த அப்பா அம்மா பக்கத்து ஊட்டுக்காரன் என்று  எண்ணும் போது  சொந்த அப்பா அம்மாவை கொண்டாடுவது இயல்புதான் என்றாலும், கொடும்   செயலை  தான் தாய் தந்தையர் செய்யும் போது அல்லது  செய்ய துணியும் போது, அது கண்டிக்கப்படவேண்டும் அல்லவா என்று  அவர் மீது விமர்சனம் வைப்பவர்கள் வைக்க கூடிய குற்றசாட்டு…


அவருடைய எழுத்துக்களை  நான்  தீவிரமாக வாசித்தவன் இல்லை என்றாலும் அவருடைய அறம் சிறுகதைகள்  நெகிழ்ச்சியின் உச்சம் என்றால் அது மிகையில்லை…


என்னை பொருத்தவரை அவரின் யானை டாக்டர் சோத்துக்கணக்கு போன்ற இரண்டு கதைகளுக்கே இவ்விருதினை அளிக்கலாம்  என்பது எனது  எண்ணம் என்றால் சிரிப்பீர்கள்…

இதற்கு முன் அவர்  எழுதியதை விட்டுவிடுங்கள்.. ஆனால் மகாபாராதத்தை வெண்முரசு என்ற பெயரில் பேய் போல தினமும் எழுதிக்கொண்டு இருப்பது சாதாரண  விஷயம் இல்லை... அதே போல தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஜெ மோ என்றால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது....


பொதுவாக ஒரு புத்தகம் பதிப்பகத்துக்கு வந்து  புத்தகமாக வெளி வந்து விட்டால் அதுவும் அது பரபரப்பாக பேசப்பட்டு விட்டால், அதனை  இணையத்தில் இருந்து எடுத்து விடுவார்கள்… ஆனால்ஜெமோ இன்று வரை அறம் சிறுகதைகளை அவர் இணையபக்கத்தில் வைத்துள்ளார்…


 சரி ஏன் அவர்  விருதினை மறுக்கின்றார்…


இப்போது அந்த  பத்மஸ்ரீ விருதினை பெற்றால்.. அவரது எதிரிகள் பாஜகவுக்கு ஐல்ரா  அடித்து  பத்ம விருதினை  வாங்கி விட்டார் என்று பொதுவெளியில் பொங்கல் வைத்து  கொண்டாடிடுவார்கள்…

விருதினை   கெத்தாக வாங்கிய  சந்தோஷமே அவருக்கு இருந்து இருக்காது..  அவரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டிதள்ளினால்….திருவிளையாடல் தருமி மன நிலையில்… இது எழுதி வாங்கியதா? அல்லது மண்டபத்துல நாலு பேர் ஜல்ரா அடிச்சி இந்த விருது உனக்கு கிடைச்சுதான்னு அவரையே  தனியாக புலம்பும் நிலைக்கு அழைத்து சென்று விடுவார்கள் இதுதான் நிதர்சன உண்மை…



அது மட்டுமல்ல.. இந்திய திருநாட்டில் விருதுகள் சரியான நபரை போய் சேர்வதில்லை என்ற ஆதாங்கம் கண்டிப்பாக அவருக்கு உண்டு…பாஜக ஆட்சி இல்லாமல் காங்கிரஸ் கவர்மென்ட் இருந்து,  இந்த விருதினை அறிவித்து இருந்தால் கூட , பத்ம விருதினை  வாங்கி இருக்க வாய்ப்புள்ளது…

அதே போல விருதினை பெற என்னமாதிரி லாபிகள்  டெல்லியில் செய்வார்கள் என்பதை தனது யானை டாக்டர் கதையில் மிக அழகாக சொல்லி இருப்பார்….


அப்பேற்பட்டவருக்கும் இந்த விருதினை இப்போது வாங்கினாலும் லாபி செய்து வாங்கி விட்டார் என்று குத்திக் குதறி விடுவார்கள் மத்தளத்துக்கு ரெண்டு பக்க இடி.. என்பதுதான் ஜெமோவின் இப்போதைய  நிலை…


 சரி இந்த விருதுக்கு  எழுத்து துறையில் அவர் தகுதியானவரா என்றால் நிச்சயம் தகுதியானவர் என்பதில் ஐயமில்லை… ஆனால் நாட்டின் உயர்ந்த விருதினை வாங்க மறுக்க  ஒரு கெத்து தேவை… அது ஜெமோவுக்கு இருக்கின்றது…


 யோசித்து பாருங்க… வீட்டில் மனைவி மற்றம் சொந்தங்கள் நிச்சயம் இந்த ஜெமோவின் இந்த விருது  மறுப்பை  பொழைக்க தெரியாத மனுசன் என்று அவர்  காது படவே சொல்லி செல்வார்கள்.. நிறைய பினக்குகள் மற்றும் நையாண்டிகளை நெருங்கிய உறவுகள் இடத்தில்  அவர்   சர்ச நிச்சயமாக  சந்திக்க  வேண்டிஇருக்கும்…


 இருந்தும்   இந்த விருதினை மறுத்து இருப்பது அவரது கெத்தினை காட்டுகின்றது என்றே சொல்லுவேன்… அதற்கு மன உளைச்சல் இல்லா தைரியம் தேவை என்பது  உணர்ந்தவர்களுக்கே  புரியும்…

தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரை இந்த விருதினை அவர் பெற்று இருக்க வேண்டும்….
பத்மஸ்ரீ என்பது ஒரு அங்கீகாரம்…. ஒரு நாட்டின் உயரிய கவுரவம்…

அதற்குதானே போராட்டம்…முயற்சிகள் எல்லாம்…


 டாக்டர் பத்மஸ்ரீ கமலஹாசன் என்று படத்துக்கு படம் டைட்டிலில்  போடுவது  ஒரு பெருமைதானே… அதனால் இந்த விருதினை கண்டிப்பாக பெற்று இருக்க வேண்டும்…

நாய் வானத்தை பார்த்து குலைத்துக்கொண்டுதான் இருக்கும் என்பது போல எதிரிகள் குரைத்துக்க்கொண்டுதான் இருப்பார்கள் என்ற எண்ணி   சென்று இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்..


அவர் அந்த விருதினை மறுத்து இருக்க கூடாது.,.

இதுவரை இந்தியாவில்   2497  பேர்  பத்மஸ்ரீ  விருதினை வாங்கி இருக்கின்றார்கள்… போன வருடத்தில் மட்டும் 80 பேர்   வாங்கி இருக்காங்க…


பத்மஸ்ரீ  விருது பயண்கள்…


பத்மஸ்ரீ ஜெயமோகன் என்று  இலக்கிய விழாக்களில் பெயர் போட்டுக்கொள்ளலாம்..   சென்னையில் இருந்து  நாகர்கோவிலுக்கு சாலை வழியாக  காரில் பயணப்படும் போது 500 ரூபாய்க்கு மேல் டோல் கேட்டில் கப்பம் கட்டாமல் தப்பிக்கலாம்…இரயிலில்  சிறப்பு சலுகைகள் கிடைக்கலாம்.. வீட்டில் விருதினை சட்டம் போட்டு  மாட்டிக்கொள்ளலாம்.

மற்றப்படி பத்மஸ்ரீ  விருதினை   மறுத்ததன் மூலம்… இந்திய அரசில் விருது கொடுக்கும் முறை , அல்லது  பெரும் முறைகள் குறித்தும், அதன்   உள்ளார்ந்த காக்கபுடி அரசியல், போன்வற்றை இணைய  பொதுவெளியில் விவாதபொருளாக்கி இருந்தாலும்…


ஜெமோ கொடுத்த  விலை  அதற்கு அதிகம் என்றாலும்…



 கெத்து எனப்படுவது யாதெனில்? ……………. ஜெயமோகன்….












ஜாக்கிசேகர்
25/01/2015




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

3 comments:

  1. ஜெயமோகனுக்கு விருது கிடைத்துவிட்டது என நம்பி லிஸ்ட்டில் தேடினேன். அப்புறம்தான் அவர் மறுத்திருப்பதை அறிந்தேன். மறுத்தது சரியில்லை எனத்தான் எனக்கும் தோன்றுகிறது. தேசிய உயர் விருது. இந்தமுறை சரியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. மறுத்திருக்கக்கூடாது.
    போக்கிரிகளும், பிழைப்பத்தவர்களும் எதைப்பற்றி வேண்டுமானாலும் வாயைப் பெரிதாகத் திறக்கும் நாடு இது. கேட்டால் கருத்துச் சுதந்திரம், அது இது என்பான். ஒவ்வொருத்தன் பேச்சையும் கவனித்துக்கொண்டிருந்தால், படைப்பாளி எப்படித்தான் இயங்குவது?
    -ஏகாந்தன்

    ReplyDelete
  2. சும்மா ஜால்ரா அடிக்காதீங்க ஜாக்கி.
    மறுத்ததை அப்படியே விட்டுருக்கலாம்ல? அதை ஏன் வெளிப்படுத்தனும்? பிஜேபி க்கு ஜால்ரா அடித்து வாங்கியதைக்காட்டிலும் மிகக்கேவலம் இது.

    ReplyDelete
  3. பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை பெயருக்கு முன்னதாகவோ பின்னதாகவோ போடக் கூடாது என்பது விதி.பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம் பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆந்திர நடிகர்கள் இருவர் மேல் இது தொடர்பாக வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டது.அப்போது கமலுக்கு பிரச்சனை வருமா என்றும் விவாதிக்கப் பட்டது

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner