பொதுவா நம்ம கூட இருக்கறவங்க…
முக்கியமா நம்மளை பொறாமையா பார்க்காம அவங்க பாதையில போய் தில்லா ஜெயிக்கறவங்களை நமக்கு ரொம்பவே பிடிக்கும் அந்த வரிசையில்
நேற்று இன்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் தம்பி
ரவிக்குமாரும் ஒருவர்…
சில வருடங்களுக்கு முன்
ஈரோட்டில் நடந்த பதிவர் சந்திப்பில் நான் கலந்துக்கொண்ட போது ஜாக்கி சார் உங்களோடு ஒரு போட்டோ என்று போட்டோ
எடுத்துக்கொண்டவர்…
ஆனால் சில வருடங்களில்
இயக்குனர் அதுவும் புதுமுக இயக்குனர் அளவுக்கு உயர்ந்தது பெரிய விஷயம்..அதன் பின்
உள்ள கடின உழைப்பும் விடாடுமுயற்சியும் சாதாரண விஷயம்மில்லை… அதுவும் தமிழ்
சினிமாவில் சயின்ஸ் பிக்ஷன் கதை கொண்டு ஜெயித்தது ரொம்ப பெரிய விஷயம்.
படம் ரிலிஸ் ஆன போது வாழ்த்தினேன்…
ஆனால் எல்லவற்றையும்
விட முக்கியமான விஷயம்… நேற்று இன்று நாளை படம் ஜெயித்து விட்டது… பொதுவாக நிறைய பேருக்கு படம் ஜெயித்த உடன் கொம்பு முளைத்து இருக்கும்
ஆனால் ரவியிடம் அப்படி
எதுவும் நடக்கவில்லை..
ஒரு நாள் ரவியிடம்
இருந்து எனக்கு போன்…
ஜாக்கி சார்.. நான் ரவி
பேசறேன்…
சொல்லுப்பா எப்படி
இருக்கே…-?
ரொம்ப நன்றி சார் எதுக்கு.?? இந்த படம் பண்ண நிறைய பேர் நேரடியா மறைமுகமா எத்தனையோ பேர் எனக்கு உதவி செய்து இருக்காங்க…
ஆனா நீங்க உங்க தளத்துல
எழுதின நிறைய உலகபடங்கள் நான்
பார்த்து அனுபவிச்சி இருக்கேன்…நான் படம்
செய்ய ரொம்ப ஹெல்புல்லா இருந்துச்சி… அதுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றியை தெரிவிச்சிக்கறேன் என்றார்..
சென்னை உலக திரைப்பட
விழாவில் சந்தித்துக்கொள்ளும் உதவி இயக்குனர்கள், மாணவர்கள் அத்தனை பேரும்
நான் அறிமுகப்படுத்திய படங்கள் பெரும்
உதவியாக இருந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.. ஆனால் படம் பெற்றி பெற்ற இயக்குனர்
ஒருவர் படம் ஜெயித்த பின்பு போன் செய்து நன்றி தெரிவிப்பது
என்பது எல்லாம் சதாரண விஷயம் இல்லை..ரவியின்
போன் எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது…
இப்படி கூட மனிதர்கள் இருப்பார்களா? என்று…
சென்னை சத்தியம் வளாகத்தில் கடந்த நாலாம் தேதி நடந்த இறுதி
சுற்று திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்று இருந்தேன்… அப்போது
ரவியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.. இப்போது விகடன் அவருக்கு சிறந்த புதுமுக இயக்குனர் என்ற கவுரவத்தை கொடுத்துள்ளது…
பொறாமை இல்லாமல் பழையதை
மறக்காமல் பணிவுடன் இருக்கும் ஒட்டு மொத்த
எளிய மனிதர்களுக்கான வெற்றி இது என்பதில்
ஐயமில்லை.. இன்னும் நிறைய வெற்றிகளை பெற வாழ்த்தும் அன்பும்..
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் ரவிக்குமார்..
ஜாக்கிசேகர்
09/01/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.
Beautiful!
ReplyDelete