கடந்த டிசம்பர் மாதம் சென்னையை அடித்து புரட்டி போட்ட பெருமழையில் ரபிக் குழுவினரின் பணி மெச்சதக்கது...
தனதுவிளம்பர துறையில் இருக்கும் பெரிய பெரிய கிளைன்ட்டுகளோடு கைகோர்த்து லட்சக்கணக்கான நிவாரண பணிகளை சத்தம் இல்லாமல் செய்து வருபவர்... சிலதை எழுத வேண்டும் என்று நினைத்த போது கூட ஏங்க என்று கை பிடித்து தடுத்தவர்...
ஒரு விஷயத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.. அண்ணா யூனிவர்சிட்டி எக்சாமுக்கு வழி தவறி கவுன்சிலிங்கிற்கு வந்த கிராமத்து மாணவியை யாரும் எளிதில் மறந்து இருக்க முடியாது... வாங்கிங் போனவர்கள் பிளைட் ஏற்றி அனுப்பினார்களே...?
அந்த பெண் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றாள் என்பது யாருக்காவது தெரியுமா?
அந்த பெண்ணுக்கு தற்போது அடைக்கலம் கொடுத்ததோடு... அவள் கல்வி கற்க தேவையான உதவிகளை தொடர்ந்து செய்து வருவதும் எனது நண்பர் ரபிக் என்பதில் எனக்கு பெருமையே.. அது மட்டுமல்ல...
அந்த பெண் பல் மருத்துவம் படித்த வருதும் மதுரவயலில் ஒரு பிரபல கல்லூரியில் நான்கு வருடம் கல்லூரி செலவான 23 லட்ச ரூபாய் சீட்டை இலவசமாக வாங்கி கொடுத்தவரும் லோக்கல் கார்டியனாக தற்போது வரை அந்த பெண்ணுக்கு இருந்து வருபவர் நண்பர் ரபிக்தான்.....
நண்பர் ரபிக் அட்வென்சர் மீடியா என்னும் விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார்...முகநுலில்தான் பழக்கம்... லிங்கா படம் பார்க்கும் போதுதான் நேரில் சந்தித்துக்கொண்டோம்.. நான் எல்லாம் அவ்வளவு பெரிய ஆள் இல்லை...இருந்தாலும்... முக்கிய தினங்களில் நண்பர் Rafeek Mohd எனக்கு அனுப்பும் வாழ்த்து பார்சல்கள் நெஞ்சை நெகிழ வைப்பவை...
வீட்டு முகவரி ஒரு முறை கேட்டார் கொடுத்தேன்...
அன்றில் இருந்து விழாக்காலங்களில் ஏதாவது ஒரு சர்பிரைஸ் பார்சலை அனுப்பி வைத்து திக்கு முக்காட செய்வது அவரது வழக்கமாகி வருகின்றது...
கடந்த வருடம் டைரி மற்றும் காலாண்டர்கள்.. கடந்த தீபாவளிக்கு இனிப்பு காரவகைகள்...
கடந்த வருடம் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு காலண்டர் எங்கள் வீட்டை அலங்கரித்தது என்றால் அது மிகையில்லை... இந்த முறை புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலண்டர் வெளியிட்டு இருக்கின்றார்.. லாடர்க்கில்இருந்து கன்னியாகுமாரி வரை ...புகைப்படக்கலைஞர் Arun Titan எடுத்துள்ள புகைப்படங்கள் இந்த வருட காலண்டரில் பதிவு செய்துள்ளது கொள்ளை அழகு...
நட்பும் உங்கள் சமுக பணிகளும் தொடரட்டும் ரபிக்
ஜாக்கிசேகர்
09/01/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
"லிங்கா படம் பார்க்கும் போதுதான் நேரில் சந்தித்துக்கொண்டோம்". ஒரு கஷ்டத்தில் ஏறபட்ட நட்பு. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
ReplyDelete:-)
Deleteசேவைகள் தொடர MR.Rafeek அவர்களுக்கு வாழ்த்துக்கள்,பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்.
ReplyDeleteசேவைகள் தொடர MR.Rafeek அவர்களுக்கு வாழ்த்துக்கள்,பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்.
ReplyDelete