எட்டுமணிக்கே வீட்டுக்கு வந்து விட்டேன்.... ஆனாலும் விலைஉயர்ந்த கார் மூழ்கும் ஆபாயத்தில் இருப்பதாகவும்... கணவர் ஓஎம்ஆர் ரோட்டில் சிக்கிக்கொண்டு இருப்பதாக தோழி உதவிக்கு அழைக்க...
இரவு பத்து மணிக்கு மீண்டும் மழையில் நனைந்த உடைகளை அணிந்துக்கொண்டு மயிலையில் இருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன்.
ஆர்ஏ புரம் சென்றால் ....எங்கேயும் மின்சாரம் இல்லை... முட்டிக்காலுக்கு மேலே தண்ணீர் ஒடுகின்றது...
மீடியன் மறைந்துக்கொண்டு நீர் ஓடியதால் அதில் தடுக்கி விழுந்து மழை நீர் கண்ணில் பட்டு அதில் உள்ள மண் கண்ணில் விழுந்து ஐந்து நிமிடம் நரக வேதனை போங்கள்...
அந்த விலைஉயர்ந்த காரின் வண்டி சைலன்சரில் தண்ணீர் புகுந்து காரின் உள்ளே தண்ணீர் செல்ல முயற்சிக்க.... நான் ரோட்டில் சென்ற இருவரை உதவிக்கு அழைத்து காரை மேடான இடத்தில் நிறுத்தினேன்...
உதவிக்கு அழைத்ததும் ஓடி வந்த மனிதர்களிடத்தில் பணம் கொடுக்க எளிதில் வாங்கிகொள்ள மறுத்தார்கள்...
ஆனாலும் வற்புறுத்தி கொடுத்து விட்டதும்தான் மனது நிறைவாய் இருந்தது...
மந்தவெளிப்பக்கம் பைக்கில் வந்தால் சாலையில் வெள்ளம் கரை புரண்டு பங்கிம்காம் கால்வாய் நோக்கி மூச்சிரைக்க ஓடிக்கொண்டு இருந்தது...
ரோட்டில் யாருமே இல்லை... இரண்டாம் உலக போர் எபெக்ட்டில் சென்னை மாநகரம்...
ராதாகிருஷ்ணன் மடம் எதிரில் கொட்டும் மழையில் ஒரு முஸ்லீம் குடும்பம் டிவிஎஸ் பிப்டியை தள்ளிக்கொண்டு செல்ல... மனது கேட்காமல்... என்ன பிரச்சனை என்று வினவ...
வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று மொட்டையாக சொல்ல ... பிளக் கிளீன் பண்ணி போடமுயற்சிக்கும் போது... வண்டி தண்ணிரில் மூழ்கி சைலென்சரில் தண்ணீர் கொட்டியது என்று சொல்ல.. வண்டி கிளம்ப வாய்ப்பே இல்லை என்று சொன்னேன்...
எங்க போவனும்...?
அயனாவரம்..
வண்டியை தள்ளிக்கிட்டு மயிலை ஸ்டேஷனுக்கு போங்க...அங்க பார்க்கிங்கல போட்டுட்டு எது கிடைக்குதோ அதில் ஏறி போங்க...
இல்லைன்னா..எங்க வீடு மாதவபெருமாள் கோவில்கிட்ட இருக்கு...அங்க தங்கிட்டு காலையில போங்க என்றேன்...
அவர் மவுண்ட்ரோட்டுக்கு எப்படி போவனும் என்றார்... லஸ் சிக்னல் தாண்டி போகும் வழி சொன்னேன்...
சார்.. மெக்கானிக் எங்க இருப்பாங்க என்றார்...
கொட்டும் மழையில் மின்சாரம் இல்லாமல் மாலை ஆறுமணிக்கே... கடைசாத்திவிட்டு மூழ்கும் வீட்டில் உள்ள மனைவி பிள்ளைகளை காப்பாற்ற சென்ற கதை அவருக்கு தெரிய நியாயம் இல்லை ...
சார் பொண்டாட்டி புள்ளையோட நடந்து போனாதால் நின்னேன்.. சிக்கிரம் சொல்லுங்க என்றேன்.. மீண்டும் மவுண்ட் ரோட் எப்படி போவனும் என்றார்...
நான் வழி சொன்னேன்... எப்படியும் இந்த விடாத மழையில் அயனாவரம் வரை அந்த தாயும் அவரின் மகனும் நடக்க போகும் பீதியை அவர்கள் கண்களில் கண்டேன்... அவர்களை விட்டு விட்டு வீட்டுக்கு கண்ணில் அடித்து வலிக்க வைக்கும் மழை துளிகளை புறங்கையால் தடுத்து ஒத்தக்கையில் மயிலை தெப்பக்குளம் வருகையில்...ஒரு அழகான பெண் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டு இருந்தார்..
பக்கத்தில் ரெண்டு ஆண்கள் நின்றுகொண்டு இருந்தார்கள்... நான் மனது கேட்காமல் .. அந்த பெண்ணிடம் சென்றேன்..
இங்க பாரும்மா.. முதல்ல தப்பா நினைக்காதே பயப்படாதே. பஸ் சர்விஸ் எல்லாம் நிறுத்திட்டாங்க.... ஆட்டோ அல்லது ஏதாவது உதவி வேணும்னா தயங்காம சொல்லும்மா என்றேன்..
இல்லை பஸ் வரும்... கண்டிப்பா வரும் என்று சத்தம் வராமல் பேசினார்... சரி வந்ததும் ஏறி போம்மா... என்று வாழ்த்தி வணங்கிவிட்டு வீடு வந்து இந்த பதிவை எழுதிக்கொண்டு இருகின்றேன்...
#சென்னைமழை #chennai #chennairains
ஜாக்கிசேகர்.
02/12/2015
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
Hats off to your helping tendency..,,
ReplyDeleteஇதுதான் நிஜமான உதவும் கரங்கள்.
ReplyDeleteமிகுந்த அவலம்,இயல்பு நிலைக்குத் திரும்பப் பிராத்திக்கிறேன்.
ReplyDeleteசென்னை மக்களை நினைக்கையில் மனம் வலிக்கிறது சார்!
ReplyDelete