Begin Again (2013) Review | வாழ்க்கை என்பது தொடர்ந்து பயணித்தல். பிகெய்ன் அகெய்ன்.




பிகெய்ன் அகெய்ன்.
 நீங்கள் மியூசிக் லவ்வராக  உங்கள் காதலில் பிரேக்கப்பை  சந்திதவராக இருந்தால் இந்த திரைப்படம் உங்களுக்கானது…
வாழ்க்கையை  புரட்டி போடும் விஷயங்களில் மிக  முக்கியமான  ஒன்று நாம்  நேசித்தவர்கள் இனி நம்மோடுஇருக்க போவதில்லை. என்ற  வெறுப்பும் ஆற்றாமையும்…  ரொம்ப கொடுமையானது… அதில் இருந்து மீண்டு வர வேறு வழியே இல்லை… ரொம்ப சிரமம் அப்படி வர நல்ல  இசை அநேகம் பேருக்கு உறுதுணையாக இருந்து இருக்கின்றது…
இரண்டு பேருமே இசையில்  ஏதோ ஒரு வகையில்  சம்பந்தபட்ட இரண்டு பேர் பிரேக்கப்பில்  வந்து நிற்கின்றார்கள்…


கெய்ரா   அவள் சாங் ரைட்டர்….  அவளின் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு… அதனால் அவனை பிரிந்து நண்பனின் ரூமில் தங்கி இருக்கின்றாள்.

மார்க் அவன் பெரிய மியூசிக் புரொட்யூசர்.… எல்லாத்தையும் இழந்து விட்டான்… மனைவி இன்னோருத்தன் கூட படுத்த காரணத்தால் அவளை விட்டு விட்டான்.. ஆனால் வயதுக்கு வந்த பெண்ணை  வாரத்துக்கு ஒரு நாள் பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும்… அதுதான் அவனுக்கு வேலை.. சொந்த கம்பெனியில் மிதிப்பில்.. வீழ்ந்து போன மனிதன் அவன்… அப்போது ஒரு பாரில் சரக்கும் அடிக்கும்  போது அவளை  சந்திக்கின்றான்.. கெய்ரா  அவனுடைய நண்பன் வற்புறுத்தலுக்காக பாடுகின்றாள்…

So you find yourself at this subway
With your world in a bag by your side
And all at once it seemed like a good way
You realize it's the end of the line
For what it's worth

Here comes the train upon the track
And there goes the pain, it cuts to black
Are you ready for the last act?
To take a step you can't take back?

 உயிரை உருக்கும் பாடல் அது… வாழ்வின் கடைசி  கட்டத்தில் இருப்பனை பற்றிய பாடல் அதை கேட்கும் மார்க் அவனிடம்  என் மியூசிக் ஆல்பத்தில்  பாடி தர வேண்டும் என்று கேட்கின்றான்… முதலில் மறுக்க பின் நட்பாகி  பிரேக்கப்பில் இருக்கும் இரண்டு பேரும்  எப்படி இணைந்து  அவர்கள் வெற்றி  பெற்றார்கள்…?? அவர்கள் எதிர்காலம் என்னவானது போன்ற விஷயங்களை  வெண்திரையில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

 எல்லா பாடல்களும்  பட்டையை கிளப்பும்.. சான்சே இல்லை… கடந்த  ஒரு வருடமாக ஆங்கில பாடல்கள் அதிகம் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன்…

  நிறைய ஆங்கில படத்தில்   நிறைய கேட்டு இருக்கின்றேன்.. ஆனால்  எந்த படத்தின்  பாடல்களும் இந்த திரைப்படத்தின் பாடல்களை போல என்னை வசீகரம் செய்ததில்லை…



 முக்கியமாக ஸ்டிரிட் ஆல்பம் செய்ய போகும் போது பாடும் பாடல்கள் மற்றும்   மொட்டை மாடியில் பாடும் பாடலும் மார்க் பெண்ணின் கிட்டார் இசையும் மனதை மயக்கும் என்பதில்  மாற்றுக்கருத்து இல்லை..
 வாழ்க்கையில்  திடிர் என்று  கல்  தடுக்கி விழும் தடு மாற்றம் நிறைய வரும்… நாம்தான்…  கீழே விழுந்தாலும்  டக்கென்று எழுந்து  தூசியை தட்டி விட்டு நடக்க வேண்டும்.. கல் தடுக்கி  காயம் ஆகி இருக்கலாம். பிறர் கவனிக்க அவமானம்  பிடுங்கி தின்னலாம்… ஆனாலும்  மீண்டு நடக்க வேண்டும்…


ஒரு வருடம்  கழித்து பிரேக் நாளின் போது பட்ட  வலியை  நினைத்து பார்த்தால் வாயால் மட்டுமல்ல… சூத்தாலும் சிரிப்போம்… இதுக்கா தற்கொலை எல்லாம் செய்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினோம்… என்று நீங்களே யோசித்து   யோசித்து பார்த்து சிரித்துக்கொள்வீர்கள்.. வாழ்க்கை என்பதே  தயங்கி  நிற்காமல்  பயந்து நிற்க்காமல்  சோர்ந்து  நிற்காமல்  தொடர்ந்து பயணிப்பதே… இந்த திரைப்படம்  பிரேக் அப் ஆனவர்களுக்கு  ஒரு அருமருந்தாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

 கெய்ரா நைட்லியின் பரமரசிகராக மாறி இருக்கின்றேன்... வாவ்  எல்லாம் சிம்பிள் டிரஸ்... ஆனாலும் ஐ லவ் யூ செல்லம்.


பில் குட் மூவி…


பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் என்று ஜாக்கி சினிமாஸ் பரிந்துரைக்கின்றது…






நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 
ஜாக்கிசேகர்.


0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner