#தேவர்மகன் திரைப்படத்தில் என்னால் எப்போதும் மறக்க முடியாத காட்சி…
சக்தி பானு காதல் காட்சிதான்… இந்த ஊர் இந்த மண் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்துக்கு நானே மருமகளாக இருக்க போகின்றேன்..
சலிக்க சலிக்க காதலித்தவனையே திருமணம் செய்துக்கொள்ள போகின்றேன். என்று மனக்கோட்டை கட்டியவளை ஒரே நாளில் தகர்ந்து போக அவள் கதறி அழும் காட்சிகளை யாரும் மறக்க முடியாது..
எந்த பெண்ணுக்கு தான் நேசிக்கு ஆண் கலங்குவதும் கதறுவதும் அறவே புடிக்காது.. ஆண் என்பவன் எப்போது கம்பீரம் நிறைந்தவனாகவே அவள் கண்ணுக்கு தெரிய வேண்டும்…
அந்த கதறலின் ஊடே… பழைய பழக்கத்தில் கமல் கவுதமியின் உதட்டை தொட போக ஆனால் தயங்கி தொடமாட்டார்..
ஆனால் கமல் இந்த சின்ன துவலுரையும் அந்த பொண்னையும் கவுரவம் கொறையாம நான்தான் காப்பத்தனும் என்று சொல்லும் போது கவுதமி கமலின் உதட்டின் மேல் கை வைப்பார்…
அதே பஞ்சவர்ணத்தை கட்டிக்காம இருந்து இருந்தால் அந்த நேர வருத்ததில் கவுதமி உதடு தொட்ட அடுத்த நொடியே அப்படியே டேக் ஆப் ஆகி உடலுறவு வரை செல்ல வேண்டிய சூழல் அது…
ஆனால் சட்டென அந்த கை பிடித்து ஒரு கனம் மனம் உதறி வேண்டாம் என்று தன்னை அந்த பேய் காதலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார்…
வாட் ஏ சீன்…
சான்சே இன்னைக்கு எல்லாம் பார்த்துகிட்டே இருக்கலாம்.
வழக்கம் போல வீடியோ பிடித்து இருந்தால்…? ஷேர் செய்யுங்க.
#TheverMagan25
சக்திக்குள்ள இப்படி ஒரு கிரமத்தான் இருப்பான்னு நான் நினைக்கலை
#Kamalhaasan #gowthami
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment