கமலஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…
தேவர் மகன் திரைப்படத்தின் திரைக்கதை ஏழு நாளில் எழுதி முடிக்கப்பட்டது…
இந்த படத்தில் எத்தனையோ காட்சிகள் இருந்தாலும் சக்தி பஞ்சவர்ணம் போர்ஷன் ரொம்பவே உசத்தி..
காரணம் கணவனான சக்தியிடம் பஞ்சவர்ணம் தனக்கு நீ வேண்டும் என்பதை எப்படி உணர்த்துவாள்??? மிக அற்புதமான சித்தரிப்பு அது.. சான்சே இல்லை…
பானு போல சக்தியோடு அந்த அளவுக்கு உடனே கட்டி புரண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லும் நிலையில் இல்லை… ஆனாலும் பஞ்சவர்ணத்துக்கு அவன் வேண்டும்… என்னைக்கு நான்தான் பொண்டாட்டி என்ற அந்தஸ்த்து கொடுத்தவனின் அருகாமை வேண்டும்..
அவன் அணைப்பு வேண்டும்.. அவன் மூச்சிக்காற்று கழுத்தில் பட வேண்டும்… இன்னும் என்ன என்னவோ கனவுகள் பஞ்சவர்ணத்துக்கு இருந்தாலும் அவள் கமலோடு நட்பு பாராட்டும் போது படுக்கை அறையில் கையை மட்டுமே குறியீடாக உணர்த்துவாள்…
திரும்பவும் இஞ்சி இடுப்பழகா பாட்டை பாருங்கள்…
அதே போல சக்தி பஞ்சவர்ணத்திடம் சாய்த காட்சி எதுவெனில் சின்ன ட்ம்ளர் சத்தத்திற்கு பதறி போகும் பெண்களை ரொம்பவே பிடிக்கும் முக்கியமாக அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு தனக்காக பதறும் பெண் தெய்வமாவாள்..
சின்ன சத்தம் கேட்டாலும் சின்னம்மா…. ஐயாவுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு பதறிடுறாங்க என்று சங்கிலி முருகன் சொல்லும் அந்த கனம் பஞ்சவர்ணம் சக்தி நெஞ்சில் குடியேறுகின்றாள்..
#hbdkamalahasan #hbdkamal #kamal #revthai #thevarmagan #devarmagan
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment