#லக்ஷ்மி #lakshmi #லட்சுமி
லக்ஷ்மி ஏன் சோரம் போனாள் என்பதைதான் திரும்ப திரும்ப பேசும் இந்த சமுகம்... சேகரை பற்றி பேசுவதே இல்லை..
எப்ஐஆர் கூட போட்டு லஞ்ச ஊழல்ல சிறை செல்லாத கலைஞரை மிக தைரியமாக திருடன் என்று சொல்லும் இதே சமுகம்தான்.. கோடி கோடியாய் கொள்ளை அடித்த ஜெவை உச்ச நீதி மன்றம் ஆக்யூஸ்ட் நம்பர் ஒன்னுன்னு சொல்லியும்... எல்லாத்தையும் விட... செத்தும் ஊழல்வாதி என்று சொல்ல யோசிக்கும் சமுகத்திடம் வேறு என்ன எதிர்பார்த்திட முடியும்.???
லட்சுமியிடம் சேகர்... சரியாக மேட்டர் பண்ணாமல் ஊத்தி விட்டு திரும்ப படுத்துக்கொள்தைவ பற்றியோ.....
அல்லது வேலைக்கு செல்லும் பெண் சமைக்கும் போது எந்த உதவியும் செய்யாமல் மிரட்டலோடு தன் சுய தேவைகளை நிறைவேற்றி கொள்வதை பற்றியோ..?
காவிரி பிரச்சனையில் இங்க பஸ் ஓடலைங்க எனும் போது அதுக்கு இன்ன இப்ப என்று கேட்பதோடு அம்மா வீட்டில் தங்கி வரேன் சொல்லும் போது காலையில் சாப்பாடு என்று கேட்கும் போது.. முத பஸ் பிடிச்சி வரேன்னு கோபமாக சொல்லும் போது.. அப்ப கூட சேகரை ஒரு வார்த்தை யாரும் கேட்கலை...
விஸ்பரையும் ஸ்டேபிரியையும் கடைகாராரிடம் கேட்டால்...??? நாலாம் பேருக்கு தெரியாம கஞ்சா போல பேப்பர் சுத்தி மடிச்சி கொடுக்கும் சமுகத்தில்...
லட்சுமியின் யோனியின் மீது அதீத கவலை இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...
ஜாக்கிசேகர்
13/11/2017
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment