PRIMAL FEAR-1996/ அமெரிக்க அந்நியன்.




மெட்டி ஒலி திருமுருகன் எல்லாருக்கும் தெரியும்...
அவரு நிறைய சீரியல் பண்ணி இருக்கார்... சீரியல் பண்ணிக்கிட்டு இருந்த அவுரு  சினிமா டைரக்டரும் ஆயிட்டாரு இல்லையா? அப்ப  அவரு சினிமா  எம் மகன் பண்ணும் போது என்ன செஞ்சார்..?

 அவரு கூட  வேலை பார்த்தவங்களையும்  சினிமா களத்துக்கு அழைச்சிக்கிட்டு போவாங்க இல்லை...? எஸ் திருமுருகன் சீரியல்ல ரெண்டு கேமராமேன் ஒர்க் பண்ணி இருக்காங்க... ஒருத்தர் செவிலோ ராஜா மற்றவர் வைத்தி... இரண்டு பேரும் தன் இயக்கிய படத்துக்கு கேமராமேனா  ஒர்க் பண்ண வச்சார்... 

அது போல ஹாலிவுட்ல இயக்குனர் Gregory Hoblit ஒரு சிரியல் பார்ட்டி.... சீரியலா எடுத்து  தள்ளும்.... டமால்ன்னு பெரியதிரைக்கு வரும் போது சிரீயல்களில் நடிச்சிக்கிட்டு  இருந்த பயபுள்ளையான... Edward Norton யை  சினிமாவுக்கு அழைச்சிக்கிட்டு வந்துச்சி... எஸ் Edward Norton க்கு இதுதான் முதல் படம்... அதுவும் பெயர் சொல்லக்கூடிய படம்... Edward Norton நடிப்பை பார்த்து பிரமிச்சி போவனும்ன்னா நீங்க   கண்டிப்பா The Illusionist படத்தை கண்டிப்பா பாருங்க... அந்த படத்துக்கு நான் எழுதிய விமர்சனத்தைபடிக்க இங்கே கிளிக்கவும்...


ரைட்  விஷயத்துக்கு வருவோம்....



அந்நியன் படத்தை சலிக்க சலிக்க பார்த்து இருப்போம் மல்ட்டி பில்  பார்சனாலிட்டி என்ன செய்வாங்க..? எப்படி நடந்துக்குவாங்கன்னு  புட்டு புட்டு வச்சி இருக்கறதை பார்த்து இருப்போம்.. விக்ரம் ரேமோ, மற்றும் அம்பியா கலக்கி இருப்பார்... அப்படி நம்ம கரம் மசாலா படத்துக்கு இந்த  பிரைமல் பியர் படம்தான் இன்ஸ்பிரேஷ்ன் மக்கா..... பிரைமல் பியர் ஒரு நூல்தான் பட்... அந்த நூல்ல  துணி காய வைக்கற  கொடி கட்டி ,ஈர பெட்ஷிட்  அளவுக்கு வெயிட் துணி எல்லாத்தையும்  அதுல   போட்டு காய வைக்க எம்மாம் திறமை வேணும்... அம்புட்டு திறமையோட இயக்குனர் சங்கர் அந்நியன்ல அசத்தி இருப்பார்... பிரைமல் பியர்... படத்தை பார்த்துட்டு அந்நியன் பார்த்தா.. காப்பிக்கு இன்ஸ்பரேஷனுக்கு என்ன வித்தியாசம்ன்னு சில மரமண்டைகளுக்கு கண்டிப்பா புரிஞ்சி தொலைக்கும்...


 சரி பிரைமல் பியர் படத்தோட கதை  என்னன்னு  இப்ப லைட்ட பார்த்துடலாம்...


மார்ட்டின் (ரிச்சர்ட் கேர்... சால்ட் பெப்பர்  தலையோட  சில்பாவுக்கு முத்தா கொடுத்து விமர்சனத்துல மாட்டினாரே அவரேதான்)  சிக்காகோவுல பெரிய லாயர்.... அவர் நின்னா நடந்தா எல்லாம் செய்திதான்.... அப்படி பட்ட ஒரு பெரிய லாயர்....  சர்ச்ல இருக்கற ஆர்ச் பிஷப் கொடுரமா கொலை செய்ஞ்ச கைதிய பிடிச்சிட்டோம்ன்னு சொல்லி டிவியில் காட்டறாங்க.. பார்த்த அந்த கைதி அப்பாவியா இருக்கான்... அவனுக்கு தான் வாதடறேன்னு  வாண்டாட வண்டியில ஏறி குந்திக்கிறார்...ஆரோன் ஸ்டேம்லர்( Edward Norton) அந்த கொலைக்காரன்... அவனுக்கு அதரவா வாதாடுகின்றார்... கொலையாளி யார்...?  கொலை ஏன் நிகழ்த்த பட்டது?  கொலைரயை ஆரோக் செஞ்சானா? கேஸ்ல மார்ட்டின் செயிச்சாரா?  என எல்லாக்கேள்விக்கும் விடை வெண்திரைதான்...


==========
படத்தோட சுவாரஸ்யங்கள்



Edward Norton நடிப்பு சான்சே இல்லை.. மல்ட்டிபில் டிசார்டரா நடிக்கறதும் முன்னாடி அப்பாவி அப்படியே கோவக்கரானா ராய் கேரக்டரா மாறி அசத்தி இருக்ககார்..


இந்த படம் நியோ நார் வகையைசேர்ந்த திரைப்படம்தான்..   

இதே டைரக்டர் பிராக்சர்ன்னு ஒரு படம் எடுத்து அசத்தி இருக்கார் நான் இன்னும் பார்க்கலை....

முதல்ல ஆர்ச் பிஷப்  கொலைக்காட்சி சான்சே  இல்லை....


பிஷப்  கொலை,  அடிக்கி வச்ச வீடியோ கேசட்  என்று காட்சிகள் நகரும் போதே ஒராளவுக்கு  சினிமா பார்க்கறவனும்  கதை படிப்பவனும் யூகிக்க முடிஞ்சாலும் கிளைமாக்ஸ் ஓம்மால எவனாலயும் யூக்க முடியாதுன்னு டைரக்டர் தடிப்பு மேல சொல்லறது விஷூவலா பார்த்தா தெரியும்...


என்னதான் கொடூர  குற்றவாளியா இருந்தாலும், அவனுக்கு கோட்டு டை எல்லாம் கட்டி  கோட்டுல உட்கார வைக்கறி மனித உரிமை எங்கே.. இங்கே போட்டு அடிச்சி துவைச்சி காலி பண்ணிடுவானுங்க.. புழுவை போல நடத்துவானுங்க..


வாதாடும் போது சின்ன முரண்பாடு என்றாலும் ஜட்ஜ்கிட்ட போய் குசு குசுன்னு பேசி   விஷயத்தை விளக்கி சொல்லறது எல்லாம் தமிழ்சினிமா விதி கோர்ட் சீனு பார்த்து பழக்கப்பட்ட என்ன மாதிரி ஆசாமிகளுக்கு புதுசா இருக்கும்..

=========
 படத்தோட டிரைலர்.



=========
படக்குழுவினர் விபரம்.

Directed by     Gregory Hoblit
Produced by     Gary Lucchesi
Howard W. Koch, Jr.
Screenplay by     Steve Shagan
Ann Biderman
Based on     Primal Fear
by William Diehl
Starring     Richard Gere
Laura Linney
John Mahoney
Alfre Woodard
Frances McDormand
Edward Norton
Music by     James Newton Howard
Cinematography     Michael Chapman
Editing by     David Rosenbloom
Distributed by     Paramount Pictures
Release date(s)    

    April 3, 1996

Running time     130 minutes
Country     United States
Language     English
Budget     $30 million
Box office     $102,616,183
============
பைனல் கிக்.
இந்த படம் கண்டிப்பா  பார்க்கவேண்டிய படம்.. இன்னைக்கு ஒன்னா சில காட்சிகளில்  படம் பார்த்துக்கிட்டு இருக்க சொல்ல... கோட்டுவாய் வரலாம்.. ஆனா  18 வருஷத்துக்கு முந்தி இந்த படம் என்ன போடு போட்டு இருக்கும்... அதனால இந்த படத்தை  கண்டிப்பா  பாருங்க..... நடுவுல ஒரு டாப்லஸ் சீன் இருக்கு ஜாக்கிரதை... அதனால் படம் பார்க்கும் போது கவனம்


==========
படத்தோட ரேட்டிங்...
பத்துக்கு ஏழு...
 



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

15 comments:

  1. Dear Anna,
    The way in which you writing the reviews are really inducing us to see the movies. Very friendly writing. Hats off brother!!!

    ReplyDelete
  2. மிக்க நன்றி சங்கர்.. இந்த தளம் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களக்கு அறிமுகபடுத்துங்கள்....

    ReplyDelete
  3. I'm a regular follower of your blog mate!!! Excellent movie... not sure in India you get viooz - fracture is available there.

    ReplyDelete
  4. வாழ்த்த்க்கள் ஜாக்கி சார். http://www.topindianblogs.com/.இந்திய அளவில் தமிழில் முதல் இடம் பெற்ற ப்ளாக்கர் ஆக இடம் பெற்றமைக்கு .

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஜாக்கி .http://www.topindianblogs.com/

    ReplyDelete
  6. Hats off Sir,
    Nice Review, Induced to see the movie. Thanks.

    ReplyDelete
  7. Nice review, Induces to see movie, Thanks Jackie Sir.

    ReplyDelete
  8. பார்க்கும் படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.....பதிவு நன்று.

    ReplyDelete
  9. JSEE...Ithu thana Uanga Taku.....

    Any ways...I think you will start writing reviews for "Bridge on River Kwai" and Guns of Navron etc etc....

    But one good thing is, its nice to know people are watching the movies after they read your review.

    Continue your good work Mate

    cheers
    VKay

    ReplyDelete
  10. http://www.topindianblogs.com/
    Congrats brother...

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete


  12. Appadiyaa.... Neenga ethukkum "seven" appadinnu oru padam paarunga... athula irunthu major scenes anniyan la irukkum...

    http://en.wikipedia.org/wiki/Seven_%28film%29
    Ithula oru killer iruppan avan pesura dialog ellam appadi irukkum...
    Mudinja kandippa paarunga

    ReplyDelete
  13. jackie, manidha urimai pathi.. US-la kobragade case-la paarthome...

    ReplyDelete
  14. jackie.. avanga manidha urimai-ya thaaan., devyani kobragade case-la paarthome.. avanga oorukku solluvaanga.,

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner