ஒரு பாசக்கார அப்பா எப்படி இருப்பார்.... ???
அன்புள்ள
அப்பா சிவாஜி போல இருப்பாரா,-?
என்பீர்கள்..
இல்லை நாம் பேசுவது ஹாலிவுட்
படத்தினை பற்றி.... எட்ஜ் ஆப் டார்க்னஸ்
என்ற ஹாலிவுட் படத்தின் அப்பா மெல் கிப்சன் போல
இருப்பார் என்று சொல்ல வேண்டும்...
அப்பா என்றால் அப்படி ஒரு பாசக்கார அப்பா....
தன் மகள்
வருகைக்காக ரயில் நிலையத்தில் காத்து இருக்கின்றான்...மெல்கிப்சன் (தாமஸ்)
மகள் வரப்போகின்றாள்.....
வாட்ச் பார்க்கின்றான்.. நேராக போய் அட்டவனையை பார்க்கின்றான்..
நம்ம ஊராக
இருந்தால் எப்படியும் பத்து ரயிலில் நாலு ரயிலாவது டிலே என்று போட்டு
இருப்பார்கள்.... எல்லாம் சரியான
நேரத்துக்கு வரும் என்று அட்டவனை
சொல்கின்றது...
மகள் வருகின்றான்... அவளை அனைத்து வீட்டுக்கு அழைத்து
போகின்றான்.... போகின்ற வழியில் , நைட்டு சாப்பிட பொருட்கள் வாங்கி கொண்டு கார் அருகே வரும் போது
மகள் வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கின்றாள்..... அவளை காரில் உட்கார வைத்து...
சோ... என்று பெய்யும்
மழையில் கார் ஓட்டியபடி மகளிடம்
கேட்கின்றான்.
சரி எங்கேயோ சேப்ட்டியா இல்லாம, வயித்தை ரொப்பிக்கிட்டா போல இருக்குன்னு நம்ம தமிழ் சினிமா அப்பாக்கள் போலவே, நேரடியா
கேட்காம.... காரில் அழைத்து போகும் போது மகளிடம் சுற்றி வளைத்து கேட்கின்றான்..
மகளே...என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் சொல்லி
விடு... நான் வாக்கு கொடுக்கின்றேன்... நீ
சொல்வதை நான் கேட்கின்றேன்.. என்று ஒரு
அப்பனின் பதட்டத்தோடு மகளிடம்
கேட்கின்றான்..
பொண்ணு கற்பூர புத்தி.. அப்பாவை சில நொடிகள்
பார்க்கின்றாள்... அப்பா நான் பிரகனன்ட்டாக இல்லை போதுமா என்கின்றாள்...
நான் அப்படி நினைக்கலை என்று யோக்கிய மயிறு போல ஜகா வாங்கு
கின்றான்...
மகள் சிரித்தபடி அப்பா என்னை அப்படித்தான் நீ நினைச்சே என்கின்றாள்
மகள்...
இருந்தாலும் அப்பன்
போட்டு வாங்கலாம் என்று கேட்கின்றான்...
ஏம்மா யாரையாவது பார்த்தியா???
ம்...
பார்த்த விஷயத்துக்கு பேர் இருக்குமே..?
இல்லை அவனை உனக்கு
பிடிக்காது...
எப்படி எனக்கு
அவனை பிடிக்காதுன்னு நீயே முடிவு பண்ணே என்று எதிர் கேள்வி மகளிடம்
கேட்கின்றான்..?
உனக்கு யாராவது தெரிஞ்சவங்க இருந்து இருக்கலாம்
என்கின்றாள்...
எனக்கு அப்படி இல்லைன்னு யாரு சொன்னது என்று
சொல்கின்றான்....
அவள் அவன்
கேள்விக்கு பதில் சொல்ல வில்லை.. முகம் முழுவதும் அவளுக்கு மலர்ச்சி இல்லை..
வெட்டி முறித்த டயர்டு அவள் முகத்தில் தெரிகின்றது...
அவள் எதுவும் பேசவில்லை...
உரையாடலை வளர்க்காமல்...
தன் கேள்வியின் அபத்தம் உணர்ந்து அவள் அப்பன்
சிரிக்கின்றான்...
நீ என்னுடைய மகள்
என்று மகளின் புறங்கையில்
முத்தமிடுகின்றான்...
கார் வீட்டுக்கு வந்து விடுகின்றது..
வெளியில் மழை வெளுத்து
வாங்குகின்றது.. மியூசிக் பிளேயரில்
மெலிதாய் இசை வழிகின்றது..
மகளுக்கு உணவு தயாரிக்கின்றான்... சோறு வடிக்கும் போது
அல்லது நூடுல்ஸ் வடிக்கும் போது.. பார்த்து சுட்டுக்குவே ரொம்ப சூடு என்ற மகளை
எச்சரிக்கின்றான்.....
அவர்களுக்குள் சின்ன உரையாடல்...
அவள் சொல்கின்றாள்... அப்பா எனக்கு ரொம்ப டயர்டா
இருக்கு என்கின்றாள்...
பெட்டில் படுத்துக்கொள் என்று சொல்லிமுடிக்கும்
முன், மகளின் மூக்கில் ரத்தம் வந்து குபுக் என்று வாந்தி மறுமுறை எடுக்கின்றாள்...
அவள் கலவரமாகின்றான்...
அவன் தன் மகள் இப்படி ஆகி விட்டாலே என்று எதுவும் புரியாமல் இன்னும் கலவரமாகின்றான்...
அவள் அப்பா நான்
உடனே டாக்டர் வீட்டுக்கு போவனும்...
உங்கிட்டயும் ஒன்னு சொல்லனும் என்கின்றாள்....
வீட்டுக்கு வெளியே வந்து கதவை பூட்ட அவன் திரும்பும் போது,,
கேர்வன் என்று முகமூடி அணிந்த ஒருவன்
டாமல் என்று சுட...
அவள் வயிறு சிதறி வீட்டுக்கு உள்ளே போய்
விழுகின்றான்... பாசமகளை தூக்கி
பார்க்கின்றான்.. உயிரின் மிச்சம் ரத்த சகதியோடு அவளிடம் இருக்கின்றது...
அவன்
சொல்லிகின்றான்....
நீ என் மகள்....
அவள் எனக்கு தெரியும்..... என்று சொல்லி விட்டு அப்பாவின் கைகளில் உயிரை விடுகின்றாள்..
இந்த பர்ஸ்ட் ஹூக் போஷன்தான்... எனக்கு இந்த படத்தை இன்னும்
ரசிக்க பார்க்க வைத்து என்பேன்...
ஒரு அப்பா மகள் ரிலேஷன் ஷிப் எப்படி இருக்கும் என்று இரண்டு பேரும் படத்தில்
வரும் சில நிமிடங்களில் வாழ்ந்து காட்டி இருப்பார்கள்...
ஏன் அவளை சுட வேண்டும்..?? அவள் என்ன தப்பு செய்தாள்--??...
வடி கஞ்சியில் பொண்ணு சுட்டுக்க
கூடாதுன்னு பதறிய அப்பா எதிரில்
துப்பாக்கியால் சுடப்பட்டு கண்
எதிரில் இறந்து போனால், சுட்டவன் ஆந்திராவுக்கு ஓடி
இருப்பான்னு காசி ராமேஸ்வரம்
போனானா?
என்ன எது வென்று வெண்திரையில்
கண்டு மகிழுங்கள்.
==============
சுவாரஸ்யங்கள்...
படத்தோட மேக்கிங்..
நான்சே இல்லை.... டைரக்டர் நமக்கு ரொம்ப
அறிமுகமான இயக்குனர்தான்... Martin Campbell ... நியூசிலாந்து இயக்குனர்...
முதல்ல டிவி சீரியல் பண்ணிட்டு அப்புறம்
வெண்திரைக்கு வந்து கலக்குனவர்..
கோல்டன் ஐ, மாஸ்க் ஆப் ஜரோ
போன்ற படங்களை இயக்கியவர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்...
மெல்கிப்சனக்கும் இந்த படம் முக்கியமான படம்தான்...
காரணம்.. மனோஜ் நைட் ஷியமளன் இயக்கிய
சைன் படத்துக்கு பிறகு... அதாவது எட்டு வருசத்துக்கு அப்புறம் லீட் ரோல் பண்ண
படம் இந்த படம்தான்...
அப்பகலிப்டோ ,பேஷன்
ஆப் த கிரைஸ்ட் போன்ற படங்களில் டைரக்டர் அவதாரம் எடுத்துட்டு திரும்ப
முகத்துக்கு அரிதாரம் பூசிய படம்.. எட்ஜ் ஆப் டார்க்னஸ்...
இதுல ரெண்டூ மூனு சீனு.... சசி இயக்கிய 555 படத்துல அடிச்சி
இருப்பாங்க.. முக்கியமா அந்த ஆக்சிடென்ட்
சீன்... பயங்கரம்....
மகள் இறந்துட்டா...
அந்த துக்கத்தை இறுக்கத்தோட நடிச்சி இருக்கும் நடிப்பு இருக்கே.. வாவ் ஐ லைக் ... கிப்சன்...
Phil Meheux கேமராவை கையாண்டு இருக்கார்....
சான்சே இல்ல...
சார்... எதுக்கு பாஸ்டன் தலைப்பில் என் வந்துச்சி..?? படத்தை பாருங்க பாஸ்......
==========
படத்தின் டிரைலர்..
===========
படக்குழுவினர் விபரம்.
Produced by
Graham King
Timothy Headington
Michael Wearing
Bruce Davey (uncredited)
Written by
William Monahan
Andrew Bovell
Based on Edge of Darkness
by Troy Kennedy Martin
Starring
Mel Gibson
Ray Winstone
Danny Huston
Bojana Novakovic
Music by Howard Shore
Cinematography Phil Meheux
Editing by Stuart Baird
Studio
GK Films
BBC Films
Icon Productions
Distributed by Warner Bros. Pictures
Release date(s)
28 January 2010 (Worldwide)
29 January 2010 (United Kingdom &
United States)
Running time 117 minutes
Country
United Kingdom
United States
Language English
Budget $60 million[1][2]
Box office $81,124,129
==================
பைனல்கிக்.
இந்த படம்
பார்க்கவேண்டிய படம்... வழக்கமான பழிவாங்கும் கிரைம் திரில்லர் கதைதான்
என்றாலும் ஷாட் கம்போஸ் எப்படி பண்ணி இருக்காங்க.. மேக்கிங் எப்படி பண்ணி இருக்காங்க..?? நடிப்பை ஆர்ட்டிஸ்ட் கிட்ட இருந்து எப்படி எல்லாம்
வேலை வாங்கி இருக்காங்கன்னு இந்த படத்தை
பார்த்து நிறைய கத்துக்கலாம்.. அவசியம்
பார்க்க வேண்டியதிரைப்படம்...
============
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறரை..
==============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
விமர்சனம் நல்லாத்தான் பண்றீங்க... இருந்தாலும் ஓவர் ஸ்பெல்லிங் மிஸ்டேக். சில இடங்களில் அர்த்தமே மாறுது.
ReplyDeleteநீங்க க(ழண்டவரை)லஞ்ஜரை தூக்கி சுமப்பதை நிறுத்துங்க. என்னமோ அவர் ஆட்சியில் தேனாறும் பாலாரும் ஓடுன மாதிரி. ஏற்கனவே கெட்ட வார்த்தைகள் காரணமா பெண்கள் உங்கள் எழுத்துக்களை நிராகரிக்க வாய்ப்புண்டு இதுல அரசியல் வேறு.
நாம எழுதுறது அடுத்தவனுக்கு உபயோகமா இருக்கணும்... இல்ல குழந்தைகள் கிறுக்கிய புத்தகம் மாதிரி ஆயிடும். உங்கள் பிளாகை தினமும் படிக்கும் வாசகர் என்ற முறையில் சொல்கிறேன்
thanks thala
ReplyDeleteஅவளை சுட்டாச்சி..........மாமி அப்புறம் என்னாச்சி? யாருக்கு தெரியும்?அதான் கட் பண்ணிட்டு வெண்திரையில் காண்க........அப்பிடின்னு போட்டச்சே........
ReplyDeleteஅவன் அவள் என்று தட்டும் போது பார்த்து தட்டவும். அவன் இடத்தில் அவளும் அவள் இடத்தில் அவன் என்றும் மாற்றி type செய்திருக்றீர்கள். படிக்கும் போது நான் இது ஒரு வேளை "the skin i live in" வகையைச் சார்ந்த படமா என நினைக்க தோன்றுகிறது...
ReplyDeleteஅவன் அவள் என்று தட்டும் போது பார்த்து தட்டவும். அவன் இடத்தில் அவளும் அவள் இடத்தில் அவன் என்றும் மாற்றி type செய்திருக்றீர்கள். படிக்கும் போது நான் இது ஒரு வேளை "the skin i live in" வகையைச் சார்ந்த படமா என நினைக்க தோன்றுகிறது...
ReplyDelete