உப்புக்காத்து-29 (11-11-2013)






நாளுக்கு நாள் சென்னை மெரினாவில்  கடல் அலையில் சிக்கி தன்    விலைமதிப்பில்லா உயிரை விடும் இளைஞர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது...
13 KM மெரினா கடற்கரையை போலிசை வைத்து பாதுகாப்பது என்பது இயலாத காரியம்.. நடுத்தர குடும்பங்கள் அதிகம் வசிக்கும் சென்னையில் கட்டணம் இல்லாமல் பொழுது கழிக்க கூடிய இடம் மெரினா மட்டுமே.... முன்பெல்லாம் காணும் பொங்கலின் போது மட்டுமே மனித தலைகளாய் நிரம்பி இருந்த மெரினா தற்போது விடுமுறை காலம் என்றாலே சென்னை  நடுத்தர மக்கள் மெரினாவை நோக்கி படை எடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்....


சாதாரண நாட்களில்  முப்பது ஆயிரம் பேரும் விடுமுறை  நாட்கள் என்றால்  ஐம்பதாயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை மெரினாவுக்கு வருகின்றார்கள்...மற்ற கடல் போல மெரினா  குளித்து மகிழும் இடம் அல்ல... ஆபத்தான பல சுழல்களை உள்ளடக்கியது மெரினா.... பொதுவாக நீர்  நிலைகளை பார்த்தால் குளித்து மகிழ மனம் குதுகலிக்கும் என்பது  இயல்புதான் என்றாலும் ஊரில் பார்த்த கிணற்றை போலவோ? அல்லது ஆற்றை போலவோ அல்லது குளித்தை போலவோ கடல் ஒரு போதும் இருக்காது என்ற உண்மை மெத்த படித்தவர்களுக்கே தெரிவதில்லை...


 கடலூரில் பிறந்த எனக்கு கடலும் ஏரியும் ஆறும் பரிட்சயம்... ஆனால் தென் மாவட்டம் மற்றும் வட   மாநிலங்களில்ள இருந்து  சென்னைக்கு படிக்க வந்து ,ஹாஸ்டலை விட்டு வெளியே  வரும் நாளில் கடற்கரைக்கு அந்த மாணவர்கள் வரும் போது அங்கே எமன் காத்து இருக்கின்றேன்... சின்ன வயதில் இருந்தே  கடலை திரைப்படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த அவர்களுக்கு சுழற்றி விளையாடும் அலையை  பார்க்கும் போதே கடலில் குளித்து மகிழ ஆசை படுகின்றார்கள்.. அப்புறம் கடல் சுழலில் சிக்கி மடிந்து போகின்றார்கள்.... சமீபத்தில் கல்வி தந்தை கள் நடத்தும் கல்லூரியில் படிப்பவர்கள்  எல்லாம் வெளிமாநிலத்தவர்  உதாரணத்துக்கு மத்திய பிரதேசத்தில் இருப்பவன் எந்த கடலை பார்த்து இருப்பான்... 

இப்ப கூட மணிப்பூரி பையன்னு நினைக்கறேன்...ஏதோ கராத்தே கிளாசக்கு வந்துட்டு கடல்ல குளிக்க போய் சேர்ந்துட்டான்...  நேத்து  கோவளம் கடலில் ஒரே  நாளில்  அண்ணன் தம்பி உட்பட ஐந்து பேர் செத்துட்டாங்க...
வருஷத்துக்கு 50 பேர் சாகறாங்கன்னு அரசோட புள்ளி விபரம்  ஒன்னு சொல்லுது.. ஆனா வாரத்துக்கு சராசரியா பத்து பேருக்கு மேல சாவறாங்க... சைக்கிளோ பைக்கோ  ஒன்னு  மெரினா  பீச்சில அனாதையா இரண்டு நாளைக்கு மேல நின்னுச்சின்னா, பசங்களோட குளிக்க போய் கடல் சூழல்ல சிக்கி செத்துட்டாங்கன்னு அர்த்தம்... சில பாடிங்க இங்கேயே ஒதுங்கிடும்....  அதுவே கடல்  நிரோட்டத்தில சிக்கிடுச்சின்னா ஆஸ்திரேலியாவரைக்கும் கூட பாடி அடிச்சிக்கிட்டு போயிடுமாம்...


அப்படி போறதுக்குள்ள சுறா மற்றும் மற்ற மீனுங்க எல்லாம்  நாஷ்ட்டா முடிச்சி  மிச்சம் மீதியோடு அஸ்திரேலியா போனா அன்நவுன் பாடின்னு டேன் போட்டு எரிச்சிட போறான்... இப்படி யாருக்கும் தெரியாம பசங்களோடு வந்து கடல்ல குளிச்சி யாருக்கும் தெரியாம உயிரை விடும் சம்பவங்கள் நிறைய நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.... 

 கோடம் பாக்கத்து நல்லா படிக்கற பையன் 12ஆம் வகுப்பு படிச்சிட்டு  பத்து நாள் ஆயி இருக்கு... காலையில் எழு மணிக்கு பிரண்ட் போன் பண்ணி இருக்கான்... காலையில் ஏழு மணிக்கு கிளம்பி போயி இருக்கான்...  பெசன்ட் நகர் பீச்ல  கடல் சுழல்ல மாட்டி இறந்து போயிட்டான்னு போன் வந்தா  அந்த குடும்பம் எப்படி துடிச்சி போகும்.. இதுல கொடுமை போன் பண்ண அழைச்சிக்கிட்டு போன  பையனும் செத்து போயிட்டான்....


மக்கள் நல அரசை பொறுத்தவரை  இந்த பிரச்சனையை கையில் எடுக்க அவகாசம் இல்லை. வாரத்துக்கு பத்து பேர் செத்தா,தமிழ்நாடு புல்லா மருத்துவமனையில் ஒஒரு நாளைக்கு   ஆயிரம் குழந்தைங்க பொறந்து தொலைக்குதுங்க... அதுக்கு  இன்னா இப்ப ???என்று கேட்டாலும் கேட்பார்கள்....


 சரி இப்படி மாட்டிக்கொண்டு உயிர் விடுபவர்களை யார் காப்பாற்றுகின்றார்கள்...? கடலோர மீனவ சமுதாய மக்கள் தான்... பொது மக்கள் கத்துவதோடு  சரி வேறு ஒன்றும் செய்ய முடியாது... நீச்சல் தெரிந்த கடல் ஆழம் புரிந்தவர்களால்தான்  கடலில் விழுந்து சுழலில் மாற்றிக்கொள்ளுபவர்களை  காப்பாற்றுவது சாத்தியம்..


பாஸ்கர்   சென்னை நடுக்குப்பம் மீனவர்... எட்டு வயிசுல கடல்ல தூக்கி போட்டார் எங்க அப்பா... எனக்கு கல்யாணம் ஆயி  தோ மூனு புள்ளை பெத்து கல்யாணம் பண்ணியும் கொடுத்துட்டேன்...ஆனா  இன்னும் கடலை விட்டு  கரையேறலை... என் பொழப்பு இதுலதான் தலையில ஆண்டவன் எழுதிட்டான் என்றார் வலைபின்னியபடி... ஆனா ஒன்னு எம் புள்ளைங்க எதையும்  நான் கடல்ல தூக்கி போடலை... ஒருத்தன் பிட்டரா இருக்கான்... இன்னோருத்தன் எலக்ட்ரிசியன்... இந்த பாழபோன பொழப்பு எஎன்னோட போவட்டும்...
 மீனவர் பாஸ்கள் அவர்களை ஒரு  செய்திக்காக அவரை சந்தித்தேன்... ஒரு நண்பனை போல  மனம் விட்டு பேசலானார்.



  சேத்து போறது எல்லாம் காலேஜ் பசங்க.. காலேஜ் அல்லது ஸ்கூலை கட்டு அடிச்சிட்டு நேர வந்து கடல் ஆழம் தெரியாம குளிச்சி தண்ணியில சிக்கி செத்துப்போவுதுங்க..நாம சொன்ன எங்க கேக்குதுங்க.. டேய் கடல்ல  குளிக்காதிங்கடான்னு சொன்னா எவன்   கேட்கிறான்... உங்க வூட்டு கடலா? வேலையை பாருய்யான்னு சொல்லறான்... 


அப்படித்தான் போன வாரம்  நாங்க,..  சொன்னதை  கெட்காம  சேட்டு குருப்பு ஒன்னு குளிச்சிச்சி.. அலையில மாட்டிக்கிட்டாங்க... வேற என்ன செய்யறது பாழும் மனசு கேட்கலை போய் போட்டு எடுத்துக்கிட்டு போய் காப்பாத்தினோம்... ஒருத்தன் அவுட்.. மூனு பேரைதான் காப்பாத்த முடிஞ்சிச்சி...


 காப்பத்த போறப்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கனும் உயிர் விட போறவனுக்கு நாலு ஆளு பலம் வந்துடும்.. அப்ப அவன் எதிர்க்க போய் கையை கொடுத்தோம்னா நாமளும் செத்தோம்... பின்  பக்கமா போயி முடியை புடிச்சி இல்லைன்னா பேண்டை புடுச்சி இழுத்துக்கிட்டு வரனும்...நிறைய பேர் சூழல்ல  மாட்டியவனை  காப்பத்த போறேன்னு உணர்ச்சி வசப்பட்டு  அவன் எதிர்க்க போய் கையை கொடுத்தா மரண பயத்துல அவன் என்ன செய்வான்...??? ஒன்னையும் சேர்த்து அனைச்சிக்குவான்... கைய காலை  உன்னால அசைக்க மடியலைன்னா அவன் கூட நீயும்  போய் சேர்ந்துட வேண்டியதுதான்...
 அலையில சிக்கினவங்களை  மாசத்துக்கு எப்படியும் ஒரு 20 பேரையாவது நாங்க  காப்பாத்தி விட்டுக்கிட்டுதான் இருக்கோம்.... நாங்க வலை பின்ன சொல்ல... இல்லை கடல் பக்கம் இருக்க சொல்லோ... இப்படி ஏதாவது நடந்தா போய் காப்பாத்த முடியும்.. ஆனா நாங்க இல்லாதப்ப கடல் இறங்கி  சிக்கிக்கொண்டால்  எங்களால எப்படி காப்பாத்த முடியும்...
போலிஸ் பிரச்சனை?


காப்பத்திட்டு அவுங்க வேற விசாரனைன்னு டார்சர் பண்ணறாங்க்கதான் அதெல்லாம் பார்த்தா முடியுமா? கண்ணுக்கு எதிர்ல ஒரு உயிர் துடிச்சிக்கிட்டு இருக்கும் எப்படிங்க பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியும்????
ஐயோ காப்பாத்துங்கன்னு சத்தம் கேட்டுச்சின்னா போதும்  போட்ட வேலையை அப்படியே விட்டு விட்டு ஓடிவோம்.... நான் ஓடிக்கிட்டு இருக்கேன்னா... ரோட்டுல இருக்கறவன் போல வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க மாட்டாங்க எங்க ஜெனங்க.... நாலு பேர் மாட்டிக்கிட்டான்னு குரல் கொடுத்தக்கிட்டு இறக்கறப்பவே  என்னோட ரெண்டு பேரு கடல்ல குதிப்பானுங்க.. அதுக்குள்ள  இரண்டு பேரு கட்டு மரத்தை கடல்ல தள்ளிக்கிட்டு  கடல்ல   உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கறவனுங்க கிட்ட   நாங்க மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கறவன் கிட்ட வந்துடுவாங்க..
 எவ்வளோவோ பேரை காப்பத்தி இருக்கோம்... ஆனா அதையெல்லாம் பெரிசா எடுத்தக்கறதில்லை...


 கட்டுமரம்னா பிரச்சனை இல்லை.. தோ நிக்குதே பைபர் போட்டு... அது நடுகடல்ல ஓட்டை விழுந்துச்சின்னா அப்படியே  உள்ள போயிடவேண்டியதுதான்.... அது போல   பைபர் படகு மூழ்கி 300 பேருக்கு மேல உதவி கிடைக்காம செத்து போயிருக்காங்க...


தோ கடக்குதே கட்டு மரம்... எம்மாம் போயல் அடிச்சாலும் மூழ்கவே மூழ்காது... எப்படி போனலும் மிதக்கும்  இதைபுடிச்சிக்கிட்டு உயிர் பொழச்சி  உதவி கிடக்கறவரை வெயிட்  பண்ணலாம்...


இப்ப கூட பொயல்ல  படகு மூழ்கி ஒடிசாவுல கரை சேர்த்தாங்களே  நம்ம மீனவருங்க... அவுங்க போனது பைபர் போட்டுதான்.. நடு கடல்ல சிக்கி... 12 மணி நேரத்துக்கு மேல உயிர் பயத்துல நீச்சல் அடிச்சி அப்புறம் உதவி கிடைச்சி கரை   சேர்ந்து இருக்காங்க...


 போட்டு முழுகிடுச்சின்னா ....நாலு பக்கம் கடல் தம்பி....மனித சஞ்சாரமே இல்லாத மரண அமைதி.... கடல் அலை பயமுறுத்தும்..ஓத்தா ஏதாவது தட்டுப்பாடாதான்னு உயிர் பயத்து லமனசு ஏங்கும் அப்ப உதவிக்கு வருபவனையும் வந்து காப்பாற்றுபவனையும் நீ எப்படி பார்ப்பே.. அப்படித்தான் நாங்க பார்ப்போம்.. அதே போல கடல்ல பொது ஜனம் மாட்டிக்கிட்டாலும் காப்பத்தனும்னு எண்ணம் தோனுமே தவிர எனக்கு இன்னான்னு  எங்க வேலையை பார்க்க முடியாது...நடுகடல்ல சிக்கும் போதுதான் உயிரோட வலியும் வேதனையும் என்னன்னு தெரியும்...


 அது மட்டும் இல்லை.... நான் ரெட் கிராஸ் உறுப்பினர்.... வெள்ளம், மழை அப்படின்னா  கேகாட்டை எடுத்துக்கிட்டு வெள்ளத்துல தாழ்வான  பகுதியில  மாட்டிக்கிட்ட நிறைய மக்களை   காப்பாத்தி இருக்கோம்...
அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை... கரையில் வாழும் நாம் மனசாட்சியை கழட்டி வைத்து வெகு நாட்கள் ஆகி விட்டது..


  நண்பர் பாலா பகிர்ந்து இருக்கும் செய்தி... கரையில் வாழும் மனசாட்சி இல்லாத மிருகங்கள்  பற்றியது...
==============
ஒரு பச்சைப்படுகொலையும்.. உயிர்வலி அறியாத காவலர்களும்..
--------------------------------------------------------------------------------------------
இந்த பதிவை மிகுந்த மனவேதனையோடு எழுதுகிறேன். இசைப்பிரியாவின் கொடூரக்கொலையைக் கண்டித்தும் காமன்வெல்த்தில் இந்தியா கலந்துக் கொள்ளக்கூடாது என்று கோரியும் பத்திரிகையாளர்கள் அமைப்பொன்று 9-11-13 மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ளவதற்காக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தேன். ICF ரயில்வே வடக்கு காலனியை ஒட்டி இருக்கும் சிக்னல் அருகே சென்றபோதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மாணவர்கள் இருவர் வந்த ஸ்கூட்டியை 46 நம்பர் அரசுப்பேருந்து ஒன்று இடித்து தள்ளியது. (அரசு பேருந்து ஓட்டுபவர்களின் பலர் தாங்கள் விமானம் ஓட்டுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..) இதில் பின்னாடி அமர்ந்திருந்த பையன் துள்ளி குதித்துவிட்டான். வண்டியை ஓட்டிவந்தவன் பேருந்தின் சக்கரத்திற்கடியில் சிக்கி புரண்டான். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ``அய்யோ.. புள்ள பஸ்ல சிக்கிகிச்சேப்பா..கதறியபடி ஓடிவந்தார்கள் அந்த குடிசைப்பகுதியின் ஆண்களும் பெண்களும். அந்த வழியாக வந்த நானும் வேறு சிலரும் ஓடி சென்றோம். அடிபட்ட பையனுக்கு 17 வயது இருக்கும். அண்ணாநகர் ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவன் அவனது அடையாள அட்டையின் மூலம் தெரிந்தது. பள்ளி முடிந்து வீடு செல்லும் வழியில் விபத்தில் சிக்கியிருக்கிறான். அவனிடம் சுய நினைவு இல்லை. ஆனால் உயிர் இருந்தது. இடுப்பு பகுதியிலிருந்து ரத்தம் கொட்டியது. இடுப்பு பகுதியை அசைக்க முடியவில்லை. முதுகில் சக்கரம் ஏறிவிட்டதாக சிலர் சொன்னார்கள். அந்த பகுதி பெண்கள் பாட்டிலில் தண்ணீர் பிடித்து கொண்டுவந்து குடிக்க கொடுத்தார்கள். பலரும் போனை எடுத்து 108க்கு தகவல் சொல்ல 100க்கும் 108க்கும் தகவல் சென்னேன். குடிசைவாசி யாரோ ஒருவர் தனது துண்டை எடுத்து ரத்தத்தை அடைக்க கொடுத்தார். அந்த சிக்னலில் நின்றிருந்த போக்குவரத்து காவலர் மெதுவாக வந்து பையனை எட்டிப்பார்த்துவிட்டு மேலிடத்திற்கு தகவல் சொல்லிவிட்டு சிக்னல் பக்கம் போய்விட்டார். கூட்டம் சேர ஆரம்பிக்க பொதுமக்களில் சிலர் முன்வந்து வாகனங்களை ஒழுங்குப்படுத்த ஆரம்பித்தார்கள். ஆம்புலன்ஸ் வர தாமதமாகிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் வில்லிவாக்கம் காவல் நிலையத்திலிருந்து என் போனுக்கு அழைப்பு வந்தது. எந்த ஸ்பாட் என்று கேட்டுக் கொண்டார்கள். சில நிமிடத்தில் காவலர்களும் வந்தார்கள். ஆனால் வந்தவர்கள் பையனை குனிந்து கூட பார்க்கவில்லை. எட்டிப்பார்த்துவிட்டு விபத்து பற்றி சுற்றி நின்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். பையன் உயிர் வலியில் துடிக்க ஆரம்பித்தான். சுற்றி நின்ற பலரும் பையன் பிழைக்கிறது கஷ்டம் என்று சோகமாக பேசிக்கொண்டார்கள். ஆம்புலன்ஸ் வந்தபாடில்லை. 50 மீட்டர் தொலைவில் ICF மருத்துவமனையை வைத்துக் கொண்டு எதற்காக ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. காவலரிடம் சொன்னேன். கண்டுகொள்ளவில்லை. ``ஆம்புலன்ஸ் வந்துரும் சார்..என்று மட்டும் சொன்னார். இவர்களிடம் சொல்வது வேலைக்காகாது என்று தோன்றியது. ``ஆம்புலன்ஸ் வருவதற்குள் பையன் இறந்துவிட வாய்ப்பிருக்கிறது. நாம் முதலில் பக்கத்து மருத்துவமனையில் சேர்த்துவிடுவோம்.. அப்புறம் என்ன நடக்குதோ நடக்கட்டும்..என்று பக்கத்தில் நின்றிருந்த இளைஞர் ஒருவரிடம் சொன்னேன். சரி என்றவர் என்னோடு ஓடிவந்தார். இருவரும் ஐசிஎஃப் மருத்துவமனைக்குள் நுழைந்து விவரம் சொன்னதும் அங்கிருந்த பொறுப்பாளர் ``உடனே தூக்கிட்டு வாங்க சார்.. என்று ஸ்ட்ரெச்சரை கொடுத்தார். இருவரும் அதை இழுத்துக்கொண்டு வேகமாக பையன் கிடந்த இடத்திற்கு ஓடினோம். அவனுக்கு உயிர் இருந்தது. ``ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்க வேண்டாம்.. தூக்குங்க..என்று சொன்னதும் ஆறு ஏழுபேர் கைக் கொடுத்தார்கள்.. (கவனிக்க.. ஒரு காவலர் கூட பையனை தூக்க கைகொடுக்கவில்லை.) அவன் இடுப்பு பகுதியை நான் பிடித்திருந்தேன். ரத்தமும் சிறுநீரும் கலந்து பிசுபிசுத்துப்போயிருந்தது அந்த பகுதி. ஸ்ட்ரெச்சரை இழுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம். உள்ளே நுழையும்போது வழியிலே ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. மருத்துவரும் செவிலியர்களும் இறங்கி வந்து பையனை பரிசோதித்துவிட்டு ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு கேஎம்சி-க்கு கொண்டு செல்வதாக சொல்லிவிட்டு பறந்தார்கள். நானும் சரி ஆம்புலன்ஸை பின் தொடரலாம் என்று என் பைக்கை எடுக்க சென்றேன். அப்போது ஒரு காவலர், ``ஸ்ட்ரெச்சரை ஆஸ்பிட்டல்ல கொடுத்துட்டு போங்க..என்று என்னை கூப்பிட்டு சொன்னார்.. எனக்கு அந்த சமயம் அவரது கடமை உணர்ச்சியைப் பார்த்து உடம்பு சிலீர்த்துவிட்டது. (என்ன மனுசங்கடா நீங்களாம்..) ஸ்ட்ரெச்சரை கொண்டுபோய் மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டேன். அதற்குள் அந்த மருத்துவமனை உதவியாளர் கையில் க்ளவ்ஸ் மாட்டிக்கொண்டு ரெடியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காத்திருந்தார். ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. அதில் ஏற்றி அனுப்பிவிட்டோம் என்ற விவரம் சொன்னேன். ``பிழைச்சுக்குவானாப்பா.. என்று கேட்டார்.. ``அப்படித்தான் நினைக்கிறேன்என்று சொல்லிவிட்டு என் வண்டியை நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றேன். அங்கு இப்போது மேலும் சில காவலர்கள் வந்து விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். சினிமாவில் எல்லாம் முடிந்த பிறகு காவலர்கள் எண்ட்ரி கொடுப்பார்களே அதுதான் ஞாபகம் வந்தது. எரிச்சலாக இருந்தது. பைக்கில் கேஎம்சிக்கு சென்றால்.. இங்கு வரவில்லை என்று கூறிவிட்டார்கள். மறுபடியும் 108க்கு போன் செய்து விவரம் கேட்டேன். அந்த பையனுக்கு இடுப்பு எழும்பு சிதைந்திருப்பதால் அண்ணா நகர் சவுந்திரப்பாண்டியன் எழும்பு முறிவு மருத்துவமனையில் சேர்க்க கொண்டு செல்வதாக கூறினார்கள். வண்டியை திருப்பி அங்கு போய் சேர்ந்தேன். என் பின்னாடியே அவனின் உறவினர்கள் சிலரும் வந்துவிட்டார்கள். நிறைய ரத்தம் போய்விட்டது. 50-50 என்று கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள். பையனுக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. அவனது குடும்பத்தினர் கண்ணீரும் கம்பலையுமாக பதபதைப்போடு மருத்துவமனையில் காத்திருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள்.. பிழைச்சுக்குவான் என்று நம்பிக்கை வார்த்தைகளை அவர்களிடம் சொல்லிவிட்டு வீடு வந்தேன். ஆனால் இதோ இந்த நள்ளிரவு 12:40 மணிக்கு அந்த பையன் ஹேமந்தின் அப்பா போன் செய்தார்.. ஹேமந்தின் உயிருக்கு ஒன்றும் பிரச்னை இல்லையே.. என்று ஆர்வமாக கேட்டேன்.. .. ``பையன் தவறிட்டான் சார்..கதறியபடி சொன்னார். நெஞ்சடைச்சுப்போய் உட்கார்ந்திருக்கிறேன்.. அய்யோ.. உயிர் வலியில் அந்த பையன் தலையை தூக்கிப்பார்த்து துடித்ததெல்லாம் கண் முன்னாடி வருதே..
-கார்ட்டூனிஸ்ட் பாலா 10-11-13
===================
கரையில வாழுறோம் எந்த மயிறான் எப்படி செத்து போனா நமக்கு  என்ன? நாம நல்லா இருக்கோமான்னு  இங்க இருக்கறவன் இருக்கான்... தெனம் தெனம் கடல் செத்து செத்து பொழச்சவனுக்குதான் உயிர் வலியும் பயம்ன்னா என்னன்னு தெரியும்...


13 மீட்டர் கடற்கரையை பாதுகாப்பது சாதாரண விஷயம் இல்லை.. அதே போல கடலில குளிக்க இரும்பு வேலிகள் அல்லது ஒரு பாதுக்காப்பான கான்கிரிட் தளத்தில் அமைத்திடலாம்.... 300  மீட்டருக்கு ஒரு  டவர் வாட்ச் அமைத்து நீச்சல் தெரிந்த மீனவர்களை பணிக்கு அமர்த்தி  அலையில் சிக்கும் பொது மக்களை   காப்பாற்ற செய்யலாம்...   மேலை நாடுகளில்  கடற்கரை யோரம் உதவிக்கு   காப்பற்ற குழு அமைத்து  பைனா கூலர் மூலம் கண்காணித்து கொண்டு இருப்பார்கள்... இங்கே   அப்படி ஒரு திட்டத்தை கொண்டு வரலாம்...
பெற்றோர்கள்  நீர் நிலை என்றால் என்ன? கடலும் ஏரியும் ஒன்றல்ல என்பதை விளக்க வேண்டும்,.... முக்கியமாக பள்ளி கல்லுரிகளில்  இது போன்ற செய்திகளை மாணவர்கள் மத்தியில் சொல்லி விழிப்புணர்வை எற்ப்படுத்த வேண்டும்.... 


நீச்சல் நன்கு தெரிந்தாலும் கடலில் இறங்காமல் இருப்பதே நல்லது.. என்பதை உணர்த்த வேண்டும்...



உயிரில் துடிக்கும் பையனை எட்டி பார்த்து விட்டு செல்லும்  காவலர்களுக்கு மத்தியில் கடற்கரையோரம் உதவி என்று கத்தியதும் தன் உயிரை துச்சமென மதித்து கடலில் குதித்து பாஸ்கர் சார் போன்ற நடமாடும் தெய்வங்கள்  கடற்க்ரையோரம் நிறைய வசித்து வருகின்றார்கள்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

19 comments:

  1. Very good post. Please correct 13 மீட்டர் மெரினா கடற்கரையை ,it suppose to be 13km

    ReplyDelete
  2. Very good post. Please correct 13 மீட்டர் மெரினா கடற்கரையை ,it suppose to be 13km

    ReplyDelete
  3. Jackie

    Truly sorry to hear about the accident and the death of the student Hemanth. If I were in your situation, I would not have done anything differently. I hope others who read your blog gets inspired and stand up for their fellow human beings.

    ReplyDelete
  4. Padikkumpothu Manasu romba kastama irukkunna...

    ReplyDelete
  5. very important post thanks for posting

    ReplyDelete
  6. நேத்து கோவளம் கடலில் ஒரே நாளில் அண்ணன் தம்பி உட்பட ஐந்து பேர் செத்துட்டாங்க..
    எங்க எரிய பாசங்க தான் அவங்க அப்பா அம்மா இரண்டு பி்ள்ளைகளையும் இழந்து தவித்த தவிப்பு வார்த்தைகளால் கூற இயலாது
    உணர்வு புர்வமான. விழி்ப்புணர்வான எழுத்ததுகள் அண்ணே

    ReplyDelete
  7. மனதார பாரட்டப்பட வேண்டிய மனிதர்! அருமையான பகிர்வு! காவலர்களின் மனிதாபிமானமற்ற செயல் கண்டிக்கத்தக்கது! நன்றி!

    ReplyDelete
  8. இரண்டுசம்பவங்களுமே சோகமானது.

    ReplyDelete
  9. சின்ன வயசில பூம்புகார் கடலில் முழுக இருந்த நண்பனை காப்பாத்த கைய கொடுத்தா, கழுத்த இருக்க பிடிச்சிகிட்டு இடுப்புல ஒக்காந்துகிட்டான். இந்த வருடம் தம்மாம் (சவூதி) கடலில் பாகிஸ்தானிக்கு கைய கொடுக்கும்போது சட்டையை பிடிச்சி இழுத்து விட்டாரு. காப்பதவே பயமா இருக்கு ஜாக்கி சார்.

    ReplyDelete
  10. சோகம்...
    நல்லதொரு பகிர்வு,

    ReplyDelete
  11. நல்ல விழிப்புணர்வு உள்ள மனிதாபிமான பதிவு. ஆங்கிலத்தில் பே வாட்ச் என்றொரு சீரியல் வரும் அதில் இப்படித்தான் கடலில் தத்தளிப்பவர்களை காப்பாற்ற ஒரு ரெஸ்க்யு டீம் வேலை செய்யும், அது போல ஏற்பாடு காவல் துறையோ அரசோ செய்ய வேண்டும் ..

    ReplyDelete
  12. Ungal pathi in pinnoottatthai kaanum poluthe ungal thaguthi theriyaadhu.

    ReplyDelete
  13. அருமையான கட்டுரை.

    ReplyDelete
  14. துபாயில் கயிறால் ஒரு வேலி போட்டு இருப்பார்கள். அதை தாண்டி குளிக்க போபவர்கள் போக மாட்டார்கள். கயிறு அருகில் போபவர்களை rescue guard விசில் அடித்து எச்சரிக்கை செய்வார். இந்த கயிறு தூரத்தை பௌர்ணமியின் போதும், நல்ல அலை அடிக்கும் போதும் குறைத்து கொண்டே வருவார்கள்.

    ReplyDelete
  15. நல்ல தகவல் ரகுமான்.. நன்றி..

    நன்றி பாலசங்கர்...

    நன்றி மின்னல் நாகராஜ்..

    தாரிக் எனக்கும் அது போல அனுபவம் ஏற்ப்பட்டு இருக்கு. ஜாக்கிரதை.



    ReplyDelete
  16. கடலூர் சில்வர் பீச்சில், நான் அலையில் மாட்டி நீ காப்பாற்றியது .....அந்த நிமிடம் ............மறக்க முடியாது.

    ReplyDelete
  17. லக்ஷ்மி... அது ஒரு காலம்... இதே போல சுபாஷ்க்கும்... நீச்சல் தெரியாது.. ஆனாலும் ஒரு அரை கிலோ மீட்டர் கடல் உள்ள போய் இருப்போம்... அது ஒரு அழகிய காலம்...

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner