DEVOT-2003/உலகசினிமா/ ஜெர்மன்/ இரண்டு பேர்.

அது ஒரு ஆற்றுப்பாலம்...
 

இரவு  நேரம்....

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகின்றது.

ஒரு  பெண் சோகமாக இருக்கின்றாள்

அந்த பெண்ணின் கால்கள் மட்டும் காட்டப்படுகின்றன....

பாலத்தின் விளிம்பில் சின்ன கல் ஒன்று இருக்கின்றது.. அதை அவள் தள்ளி விடுகின்றான்... பொளக் என்ற  சத்தத்துடன் விழுகின்றது...

அவள் யாருமற்ற அந்த ஆற்றுப்பாலத்துக்கு ஏன் வரவேண்டும்?

தெரியவில்லை.... நம்ம பிரச்சனையே பெரும் பிரச்சனையாக இருக்கும் போது.... அவள் எதுக்கு வந்தாள்? ஏன் வந்தாள்? என்று யோசித்துக்கொண்டு இருப்பது  நேர விரயம்  அல்லவா?


 நம்ம வேலை படத்தை பார்க்கனும்...

 இதே ஷாட்டை பத்து நிமிடத்துக்கு மேல  காட்டி தொலைச்சா... நாம வேற எதையாவது  யோசிச்சி தொலைக்கலாம்... சோ... அவ ஏதோ ஒரு முடிவோட வந்து இருக்கா...

சென்னைவாசியா இருந்த நீங்க ஈசிய கெஸ்  பண்ணிடலாம்...

 சார் நான் வெளியூர்ல இருக்கேன்.... எப்படிசார் கெஸ் பண்ணறது...?

கணவனுடன் சண்டை..  மூன்றாம் மாடியில் இருந்து குதித்து பெண் சாவு...  

 கொஞ்ச நாளைக்கு முன்ன  கேகே நகர் கிட்ட இருக்கற இன்ஜினியரிங் காலேஜ்ல இதே போல ஒரு டீச்சருக்கும் அவரோட காதலருக்கும் சண்டை... டாமால்ன்னு மேல இருந்து குதிச்சி செத்து  போயிட்டாங்க...

எக்ஸ்பிரஸ்மால் மூன்றாவது மாடியில் இருந்து இப்பதான்  உழுந்து ஒரு பையன் மண்டை உடைஞ்சி செத்து போனான்... அந்த ரத்தம் ஈரம் காய்வதற்குள்  ஸ்பென்சர் மாடியில் இருந்து குதிச்சி  தற்கொலை இன்னோரு பையன் தற்கொலை பண்ணிக்கிட்டான்....

 பாடகி நித்திய ஸ்ரீ கணவன் அடையார்  பாலத்துல இருந்து   குதிச்சி தற்கொலைசெஞ்சிக்கிட்டாரு...  அதே பாலத்துல  இப்ப லேட்டஸ்ட்டா  ஒரு  ஆள் குதிச்சி செத்து போனான்...

 இரண்டு நாளைக்கு முன்ன சென்னை ராதகிருஷ்ணன் ரோட்டுல... எட்டாவது மாடியில் இருந்து ஒரு பொண்ணு குதிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டா...

உயரத்தை பார்த்தா   சென்னையில் உடனே ஏறி குதிச்சிடறாங்க... இது சும்மா  சேம்பிள்தான்.. நிறைய பதியல... அதனாலதான் சொன்னேன்.. சென்னை வாசியா இருந்தா உடனே கெஸ் பண்ணிடலாம்ன்னு...

 எஸ் அவ தற்கொலை பண்ணிக்கதான் வந்து இருக்கா...

ஆனா அவளுக்கு இரண்டு மனசா இருக்கு... தற்கொலை பண்ணிக்கலாமா? வேண்டாமா?

 சரி  ஒம்மால வாழ்ந்து என்ன  சாதிச்சிட போறோம்??ன்னு பாலத்துல ஏறி குதிக்கலாம்ன்னு கால் வச்சி ஏர்றா...

அமைதியா இருந்த பாலத்துல திடிர்ன்னு ஒரு  கார் வரும் சத்தம் கேட்குது..  

 என்னன்னு பார்க்கலாம்ன்னு காலை பாலத்துல இருந்து எடுத்துட்டு திரும்பி நிக்கறா...

கார்  வந்தவன்... அவளை ஐடம்ன்னு நினைச்சிகிட்டு கூப்பிடறான்...

 என்ன வயசு ?எவ்வளவு ரேட்டுன்னு  கேட்கறான்..


ரேட் சொல்லறா...

 அவன்  கார்ல அழைச்சிக்கிட்டு போறான்....

அந்த  பொண்ணு பேரு அன்ஜா... அவன் பேரு ஹென்றி...

அவன் ரூமுக்கு  அழைச்சிக்கிட்டு போறான்... 

அப்பதான் தெரியுது...  அன்ஜா மேட்டர் பொண்ணு இல்லைன்னு.... 


அப்புறம் ஏன்டி மண்டையை மண்டையை ஆட்டிக்கிட்டு ரேட் பேசி கார்ல  ஏறினன்னு கேட்கின்றான்...

சும்மாதான் வெளி ஆள் கூட அதுவும் யாருன்னு  தெரியாத மூன்றாம் மனுஷன் கூட செக்ஸ் வச்சிக்கிட்டா எப்படி இருக்கும்ன்னு ஒரு திரில்லுக்காக வந்தேன் சொல்லறா---...

ச்சே என்ன ஒரு உயர்ந்த நோக்கம்.. இல்லை????


வாய்ல வழியற ஜொள்ளை தொடச்சிக்கோ...

அப்புறம்...?

விழுப்புரம்....

போய்யா... யோவ்.. நான் வேலை வெட்டிக்கு எல்லாம்  போவ வேணாமா? உட்டா முழுக்கதையும் கேட்டுக்கிட்டு பொழப்பை கெடுத்துடுவ  போல இருக்கு..??

 படம் முழுக்க  ரெண்டு பேருதான்.. திரில்லர் படம்தான்... 

 பட் சுவாரஸ்யமா இருக்கும்..... 


கிளைமாக்ஸ் எதிர்பாராதது....
==============
படத்தோட டிரைலர்... 
=====================
படக்குழுவினர் விபரம்.


Director:
Igor Zaritzky
Writer:
Igor Zaritzky
Stars:
Annett Renneberg, Simon Böer, Tomek Piotrowski
Country:
Germany
Language:
German
Release Date:
15 April 2004 (USA)
Also Known As:
Devotion See more »
Filming Locations:
Halle, Saxony-Anhalt, Germany
Company Credits
Production Co:
Reflex Filmproduktion, Schmidtz Katze Filmkollektiv
Show detailed company contact information on IMDbPro
Technical Specs
Runtime:
89 min | 92 min
Sound Mix:
Dolby
Color:
Color (Fujicolor)
Aspect Ratio:
1.85 : 1 

====================
பைனல் கிக்.


படம் முழுக்க  ரெண்டு பேர்தான் என்றாலும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் டயலாக்குகள் சுவாரஸ்யத்தை  தருகின்றன.. இரண்டு பேர் ஆனா  போர் அடிக்காம பேசிக்கனும்..  அதனால டயலாக்குகளில் கதை சொல்ல வேண்டும்... அது பார்வையாளனுக்கு புரிய வேண்டும்....  அதனால் எழுத்தில் மெனக்கெட்டு இருக்கின்றார்கள்...அதே போல  பொண்ணு அழகா இருக்கனும்.. இதல ரொம்ப தெளிவா இருந்து இருக்கார் இயக்குனர்.  படம்  கண்டிப்பாக 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கானது...... பார்க்க வேண்டிய படம்.
=============

படத்தோட ரேட்டிங்..

 பத்துக்கு ஆறு.
====================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

0 comments:

Post a Comment

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner