காலையிலேயே
இப்படி கண் கலங்க வச்சிட்டானங்களே இந்த கூகுள் சண்டாள பவிங்க... ஏன்டா இப்படி
பண்ணிங்க....???
அதுவும் காலையிலேயே.....
கோடி கோடியா
கொட்டி நாலாம் உலகம், எட்டாம் உலகம் எடுக்கறதுக்கு பதிலா.. நம்ம உலகத்துல எத்தனை காதல் ,நேசம், பரிவு, வேதனை இருக்குன்னு காமிக்குது இந்த சின்ன படம்...
பிரிவு
எவ்வளவு துயரமானது... அது ஆணோ.?. பெண்ணோ.... ?
நட்புக்குள் பிரிவு ஏற்ப்பட்டால்
அது எவ்வளவு பெரிய வலியை உண்டாக்கும்...??? மூர்த்தி சிரிசாக இருந்தாலும் கீர்த்தி பெரிசு....
வாவ்.....
சின்ன சின்ன ஷாட்டுல என்ன அற்புதமா கலக்கிட்டானுங்க.... என்ன அற்புதமான தேர்ந்த மிகையற்ற நடிப்பு...
சின்ன வயசுல
இணைபிரியாத நண்பர்கள் ...இந்தியா
பாகிஸ்தான் பிரிவு காரணமா ஒருத்தர்
இந்தியாவுலயும்.. ஒருத்தர் லாகூர்லயும் வாழறாங்க...
மும்பையில்
இருந்து டெல்லி வரும் பேத்திக்கிட்ட தன் பால்ய
நண்பனை பற்றி சொல்கின்றார்.. பல்டேவ் தாத்தா........ அவரு இப்ப
பாகிஸ்தான் லாகூர்ல இருக்கறதா சொல்ல.... எப்படி கூகுள் தேடல் இயந்திரத்தின்
உதவியுடன் ரெண்டு பேரும் ஒன்னு சேர பேரப்புள்ளைங்க எப்படி உதவறாங்க
அப்படின்றதுதான் இந்த நெகிழ்ச்சி வீடியோவின் சின்ன கதை.
இந்த வீடியோவுல எனக்கு ரொம்ப பிடிச்ச ஷாட்...
நான் தான்
உங்க சின்ன வயசு தோழனோட பேத்தி பேசறேன்னு சொன்னதும்.... அந்த லாகூர் கிழவனின் கண்ணில் இயல்பாய் கட்டப்படும் அந்த பிரைட்
நஸ்...
டெல்லி வெதர் என்னன்னு செர்ச் என்ஜின்ல
பார்த்துட்டு அதுக்கு ஏற்றது போல தன் தாத்தாவுக்கு பேக் செய்யும் லாகூர் பேரன்...
பிளைட் எத்தனை மணிக்கு அரைவல் என்பதை கண்டு பிடித்து டாக்சி டிரைவரை விரைவு படுத்தும் பேத்தி....
காலிங் பெல் அடிக்குது..
டெல்லி கிழவர் கதவை திறக்கின்றார்... எதிரே..
தாடியுடன் லாகூர் கிழவர்...
ஹான்ஜி....
கோன்....?
அந்த பெரியவர்
சின்ன வயது நண்பனை .... நரை கூடி கிழப்பருவம் எய்திய தளர்ந்த நண்பனை மேல் இருந்து
கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு,
பிறந்த
நாள் வாழ்த்து நண்பா.... என்று சொன்னதும் தன் கண்ணால் நம் முடியாமல் யூசுப் என்று
சொல்லி ,
பேத்தியை பார்த்துக்கொண்டே
நண்பனை கட்டி பிடிக்க...
யூசுப் ,
பல்டேவ் என்று கட்டுபிடித்து ......பாச மழை பொழிகின்றது... அதுவும் சுவீட் பார்க்ஸ் லாகூரில் இருந்து
நண்பனுக்கு கொடுக்க எடுத்து வந்து இருப்பார்...
இந்த வீடியோவுல......மீயூசிக் ஒளிப்பதிவு ...ரெண்டமே அசத்தல்.......
கூகுள் தேடல் இயந்திரத்திற்க்கான விளம்பர படம்... உலகம் சின்னது என்பதை இது நிருபிக்கின்றது.. அதே வேளையில் பாக் , இந்தியா பிரிவினை வலியை எனக்கு தெரிந்து .... முன்றே மூன்று நிமிடத்தில் பொட்டில் அடித்து சொல்லவில்லை என்பதும் உண்மை....

தேங்ஸ் லாட் கூகுள்......
அந்த வீடியோ உங்களுக்காக....
THANK U VERY MUCH FOR THIS VIDEO...........
THANKS A LOT GOOOOOOOOOOOOOOGLE......
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

already Kamal has touched this concept in his "Hey Ram" movie
ReplyDeleteVery nice... thanks a lot for sharing......
ReplyDeleteHeart touching....Very nice..... Thanks for sharing... Thanks a lot....
ReplyDeleteஜாக்கி, அதை விட அந்தப்பெண் Google ல் தேட ஆரம்பித்ததுக்கு உந்துதல் ஒரு நிகழ்வு காற்றுவாக்கில் கேட்கும் ஒரு சத்தம்தான். அது” யூசூப் உன்னோட பட்டம் அந்திருச்சுன்னு” ஒரு சின்னப்பையனின் குரல் கேட்கும். சங்கிலித்தொடர் போன்ற தேடல் மூலமாகத்தான் அந்தப்பெண் தனது தாத்தாவின் நண்பரை தொடர்புகொள்கிறாள். அந்த ஒரு சத்தம்தான் திருப்புமுனை. நாமும் மனம்போன போக்கில் பலவிஷயங்களை கூகிளில் தேடுவதுண்டு. தேட ஆரம்பித்த டாபிக்குக்கும், ஒருமணிநேரம் கழித்து தேடி முடித்த டாபிக்குக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரி இருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையதே. அதனால்தான் இதை வலை என்கிறார்கள்.

ReplyDeleteஇதயம் தொட்ட வீடியோ அண்ணா
ReplyDeleteஇதயம் தொட்ட வீடியோ அண்ணா
ReplyDeleteVery nice video...
ReplyDeleteThanks anna. really touched. feel like I should go and meet my friend tonight. In this hectic life, we are missing all these.. hats off anna..
ReplyDeleteஅருமையான காணொளி..அருமையான சிந்தனை..google is always great
ReplyDeleteJackie !!! Now they are releasing more related ad's on "Anarkali",Cricket & Sugar free..check it out..
ReplyDeleteஅருமையான காணொளி...
ReplyDeleteநன்றி அண்ணா...