பொழுதுபோக்கு என்ற வார்த்தையை பற்றி தமிழகத்தில் எழுத வேண்டும் என்றால் திரை அரங்குகள் பற்றியும் எழுத வேண்டும்...
நாங்கள் வாரம் ஒரு முறை கண்டிப்பாக சினிமா பார்க்க போகும் இடம்... அன்றைய காலத்தில் இரண்டு, மூன்று முறை எல்லாம் தியேட்டரில் படம் பார்த்து இருக்கின்றோம்..
நாங்கள் வாரம் ஒரு முறை கண்டிப்பாக சினிமா பார்க்க போகும் இடம்... அன்றைய காலத்தில் இரண்டு, மூன்று முறை எல்லாம் தியேட்டரில் படம் பார்த்து இருக்கின்றோம்..
ஒரே நாளில் ஐந்து காட்சிகளையும் பார்த்து விட்டு வீடு வந்து
இருக்கின்றோம்.... தியேட்டர்களுக்கும்
தமிழர்களுக்கு பிரிக்க முடியாத உணர்வு
உண்டு...ஒரு சில தியேட்டரில் படம் பார்த்தால்தான் படம் பார்த்த நிறைவை
கொடுக்கும் என்பதால் புது படம் ரிலிஸ் ஆகும் போது... ஆண்டாவா இந்த தியேட்டர்ல கமல்
படம் ரிலிஸ் ஆக கூடாது... பிடித்த
தியேட்டரில் படம் ரிலிஸ் ஆக வேண்டும் என்று
கடவுளை வேண்டிக்கொண்டு இருந்த
கணங்கள்இந்த நேரத்தில் நினைத்து பார்க்க வேண்டி இருக்கின்றது...
என் அம்மா படம் போடும் போது ,குழந்தையின்
சட்டையை அவிழ்த்து விட்டு ஜட்டியோடு துண்டில் படுக்க வைத்து,நடைபாதையில்
உட்கார்ந்து கொண்டு படம் பார்த்து இருப்பதை நான் நிறைய முறை பார்த்து இருக்கின்றேன்.... அம்மா இரண்டு ரூபாய்
டிக்கெட் தவிர்த்து வேறு எந்த டிக்கெட்டும் போக
மாட்டார்.. நான் சம்பாதித்துதான் அம்மாவை பர்ஸ் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு
அழைத்து போய் இருக்கின்றேன்... மறக்க
முடியாத பார்த்த படங்கள்... தியேட்டர்
சம்பவங்கள் வித்தியாசமான மனிதர்கள் என்று வாழ்வில் நிறைய சம்பவங்கள்
தியேட்டரை சுற்றி நிகழ்ந்து இருக்கின்றன.. ஆனால் கால ஒட்டத்தில் அப்படி ஒரு
தியேட்டர் இருந்தது.. அது பல மடங்கு
சந்தோஷத்தை எனக்கு கொடுத்தது என்று
இப்போது சொன்னால் யாரும் நம்பவேமாட்டார்கள்.. ஆனால் அப்படி ஒரு தியேட்டர் இருந்தது.. கால
ஓட்டத்தில் மண்ணோடு மண்ணாக்கி ஷாப்பிங்
காப்ளெக்ஸ் ,ஓட்டல், திருமண மண்டபம் என்று மாறி விட்டது...இப்போது போல அப்போது
எல்லாம் கேமரா செல்போன் இல்லை அப்படி இருந்து இருக்கும் பட்சத்தில் அந்த தியேட்டர் போட்டோக்கள் இணையத்தில் கிடைத்து இருக்கும்... முடிந்த வரை
அந்த தியேட்டரின் போட்டக்கள்
கிடைத்தால்
பிகிர்கின்றேன்.....இல்லையென்றால் எழுத்தில் முடிந்த வரை விவரிப்போம்..
நெஞ்சில் நீங்கா மகிழ்வை
கொடுத்த திரையரங்கள் மகிழ்வித்து விட்டு மண்ணோடு மண்ணாகி தற்போது வேறாகி விட்டன...
அப்படி மண்ணோடு மண்ணாக மாறிய தியேட்டாகள் பற்றியும் தியேட்டர் அனுபவங்கள், பார்த்த படங்கள்
சந்தித்த அனுபவங்கள் என எல்லாவற்றையும்
உங்களோடு நேரம் கிடைக்கும் போது பகிர
இருக்கின்றேன்... படித்து விட்டு ஒருவேளை
அந்த தியேட்டரில் நீங்கள்
பார்த்த திரைப்படம், அதன் அனுபவம், என்ன படம் பார்த்தீர்கள்.... ஏன் அந்த தியேட்டர் உங்களுக்கு பிடித்தது என்பதை
பின்னுட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.... முதலில் மண்ணோடு மண்ணாக போய் விட்டு
நினைவு அடுக்குகளில் நீங்கமற நிறைந்து இருக்கும் பாணடிச்சேரி ஆனந்தா பால ஆனந்தா தியேட்டர்
நினைவுகளை பார்ப்போம்...
பாண்டி ஆனந்த பால ஆனந்த தியேட்டர் இடிக்கப்பட்டு இப்போது
ஓட்டலாக மாறி விட்டது.. ஆனால் எனக்கு
தெரிந்து பாண்டியில் பெரிய தியேட்டர் வரிசையில் ராஜா தியேட்டர் மற்றும் அனந்தா
தியேட்டரை சொல்லுவேன்...
நான் கடலூர்காரன்
ஆனாலும் பாண்டிச்சேரியில் இருக்கும்
திரையரங்கை முதல் பாகத்தில் ஏன் சொல்ல வேண்டும்... காரணம்
எனக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த தியேட்டர். படம் பார்க்க கடலுரில் இருந்து பஸ் பிடித்து
பாண்டி பேருந்து நிலையத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ பிடித்து ,வியர்க்க விறு
விறுக்க சென்று டிக்கெட் எடுத்து பார்த்த திரைப்படங்கள் ஏராளம்.
எனக்கெல்லாம் மைக்கெல் ஜாக்சன் பாடல்களில் எந்த
பாட்டுக்கும் அர்த்தம் தெரியாது... நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஐ லைக் யூ
என்ற ஆங்கில சொல்லுக்கு ,
தமிழ் அர்த்தம் தெரியாது... அப்படித்தான் நான் படித்தேன்...
நான் ஒரு சரியான மக்கு....அப்போது எல்லாம் ஒரு கிணற்றுதவளையாகவே என் வாழ்க்கை
இருந்தது... (இப்போதும் அப்படித்தான்...)
முதன் முதலாக பாண்டி ஆனந்தா தியேட்டரில் படம் தொடங்குவதற்கு
முன் ஒரு மைக்கேல் ஜாக்சன் இசை தொகுப்பில் ஒரு பாடலை ஓட விடுவார்கள்.. அந்த
பாடலின் அர்த்தம் எனக்கு தெரியாது... ஆனால் அந்த இசை என்னை சொக்க வைத்தது
என்பேன்... அந்த பாடலை அர்த்தம் தெரியாத என் உதடுகள் உச்சரிக்க தொடங்கின... இரவில்
சைக்கிள் மிதித்து வீடு வருகையில் என் கவலையை அந்த பாடல் போக்க வைத்து ....
அந்த பாடல் டேன்சரஸ் தொகுப்பில் வந்த பாடல் எனக்கு சுத்தமாக
இப்போது கூட அர்த்தம் தெரியாது... அர்த்தம் தெரிகின்றதோ இல்லையோ... அந்த பாடல்
என்னை ரசிக்க வைத்தது...அதற்க்கு காரணம் பாண்டி ஆனந்தா தியேட்டர்....
வெள்ளை திரை முன்
உட்கார்நது கொண்டு இந்த பாடலைதான் நிறைய முறை
கேட்டு இருக்கின்றோம்.... இந்த பாடலை
கேட்கும் போது எல்லாம் வெள்ளைக்காரனாக மாறி விட்ட ஒரு உணர்வு தோன்றும்...
சரவணன் , லட்சுமி நாராயணன், சங்கர், இந்த மூன்று பேர்தான்
படம் பார்க்க போகும் போது கூட்டு சேரும்
தோஸ்துகள்... அதில் சினிமா பற்றி அதிகம் இப்போதும் பேசிக்கொண்டு இருப்பது நான்
மட்டுமே.,...
ஆனந்தா தியேட்டரில் மீரா முதல் காட்சி பார்த்து விட்டு பட்ட பிளை பாடலை மற்றும் ஒரு முறை
பார்க்க வேண்டும் என்று உடனே அடுத்த
காட்சிக்கு அதே தியேட்டரில் அதே
காட்சியை போய் பார்த்தோம்....
நிறைய படங்கள்..
முக்கியமாக ஆங்கில படங்களில் ஆக்ஷன் படங்கள் அங்கேதான் பார்போம் அகன்ற திரை....
டிடிஎஸ் சவுன்ட் எல்லாம் சேர்ந்து ஆனந்தா
தியேட்டருக்கு போவோம்...
காதலிக்க ஆரம்பித்த போது என் சுவாசக்காற்றே திரைப்படம் அதன்
பாடல்கள் ரொம்ப பேமஸ்... அதனால் அந்த
படத்தின் முதல் காட்சியை பார்க்க பாண்டி
ஆனந்தா தியேட்டருக்கு சென்றுதான்
பார்த்தேன்...
பிகர்கள் அதிகம்
காணப்படும் தியேட்டர் ஆனந்தாதான்...
கடலூரில் ஜீன்ஸ் டி ஷர்ட் முக்கா பேன்ட் அணிந்தால் பெண்களை தேவிடியா லிஸ்ட்டில்
வைத்து இருந்த காலத்தில் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் தேவதைகள் கலக்கி உயிரை
எடுப்பார்கள்..
பாலஆனந்தாவில்.. ஒரு படம்... அது சோலையம்மா.. கள்ளிப்பட்டி
ஜோதிராஜாவின் சோலையாம்மா சோலையம்மா என்று
உயிரை வாங்கும் அளவுக்கு டிரைலர் போட்டு உயிரை எடுத்த படம்...
நல்ல படம் என்றால் அடுத்த படம் வருகிறது என்றால் புது படத்தை போட்டு விட்டு நன்றாக ஓடும் படத்தை பாலஆனந்தாவில் போடுவார்கள்...
ஆங்கில படம் என்றால் நிறைய வெள்ளைக்காரர்கள் இரவு காட்சிக்கு வருவார்கள்...
ஜாக்கிசான் படத்தில் முதலில் இன்டு ஓவர்சிஸ் பிலிம் என்றும் கோல்டன் ஹார்வஸ்ட் டைடில் வரும் போது கை தட்டலும் ,விசிலும் காதை கிழிக்கும்....
இன்றைய பிளக்ஸ் மற்றும் ஓவியர்களுக்கு பாண்டிகாரார்கள்தான் முன்னோடு ரஜினி கமல் படத்துக்கு பேனர் கட்டி ரகளை விடுவார்கள்.. அதே போல தத்ரூப ஓவியங்கள் வரைந்து வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
தியேட்டர் மிக மிக
சுத்தமாக பராமரிப்பார்கள்... டாய்லட் மிக
சுத்தமாக பராமரிப்பார்கள்...அவ்வளவு பெரிய பிரமாண்ட தியேட்டர் தற்போது பாண்டியில் இன்று இல்லை....
25 வருடங்கள் பாண்டி ,கடலூர் ,விழுப்புரம் திண்டிவனம், மரக்காணம் மக்களின் வாழ்வில் கலந்து இருந்த தியேட்டர்...
பாண்டிச்சேரிக்கு எந்த நடிகர் ஷுட்டிங் வந்தாலும் நைட்டு இந்த தியேட்டரில் படம் பார்ப்பார்கள்....அந்த அளவுக்கு பேமஸ் தியேட்டர்...
பாண்டிச்சேரிக்கு எந்த நடிகர் ஷுட்டிங் வந்தாலும் நைட்டு இந்த தியேட்டரில் படம் பார்ப்பார்கள்....அந்த அளவுக்கு பேமஸ் தியேட்டர்...
ஆனந்தா, பால ஆனந்தா இரண்டு தியேட்டர்களையும் சேர்த்து 1467 சீட்டுகள்... படம் விட்டால் திருவிழா போல இருக்கும்...
இரண்டுமே ஏசி தியேட்டர்.. படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் போது ஏசி நிறுத்தும் பேச்சிக்கே இடம் இல்லை...1982 ஆம் ஆண்டே இந்த தியேட்டரில் ஏசி வசதி வந்து விட்டது.
இரண்டுமே ஏசி தியேட்டர்.. படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் போது ஏசி நிறுத்தும் பேச்சிக்கே இடம் இல்லை...1982 ஆம் ஆண்டே இந்த தியேட்டரில் ஏசி வசதி வந்து விட்டது.
பரட்டை மற்றும் மொழி திரைப்படங்களுடன் இந்த தியேட்டர் 2007 ஆண்டு வாக்கி மூடு விழா கண்டது...
அதே போல முதல் பாண்டிச்சேரி கியூப் டிஜிட்டல் தியேட்டர் ஆனந்தா தியேட்டர்தான்.
40 ஆயிரம் சதுர அடி தியேட்டர்... வருமானம் குறைந்து செலவு அதிகரிக்க தியேட்டரை மூடி ஆனந்த இன் ஓட்டலின் ஒரு பகுதியாக மாறி விட்டது... எழைகளின் பொழுது போக்கு தளமாக விளங்கிய இந்த தியேட்டருக்கு அடியில் 40க்கு மேற்ப்பட்ட சொகுசு கார்கள் தற்போது நின்றுக்கொண்டு இருக்கின்றன.....
பாண்டிச்சேரியில் அந்த தியேட்டர் பக்கம் இப்போது கடக்கும் போதும் அந்த தியேட்டரின் சந்தோஷ கணங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன...
இன்று பாண்டி ஆனந்தா மற்றும் பாலஆனந்தா தியேட்டரின் ஒரு செங்கல் கூட தொட்டு பார்க்க முடியாது... எல்லாம் மண்ணோடு மண்ணாகி விட்டது... ஆனால் அது ஏற்ப்படுத்திய சந்தோஷங்கள், அந்த தியேட்டரில் படம் பார்த்த அனுபவங்கள் ....இன்னும் நெஞ்சில் குடிகொண்டு இருக்கின்றன... ஒவ்வொரு தியேட்டருக்கும் உள்ளே ஒரு வாசனை நிரம்பிக்கிடக்கும் ...மண்ணோடு மண்ணாக ஆனாலும் ஆனந்தா தியேட்டரின் வாசனை இன்னும் நாசி துவாரங்களில் வியாபித்து இருக்கின்றன......
(தற்போது தியேட்டர் இருந்த இடத்தில்....) பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
குறிப்பு... பாண்டிச்சேரி வாசிகள் யாரைவது அனந்தா, பால ஆனந்தா தியேட்டர் புகைப்படங்கள் கிடைத்தால் எனது dtsphotography@gmail.com மெயிலுக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கின்றேன்.
சின்னதாய் ஒன்றரை நிமிடத்துக்கு சேனலுக்கு அழகாய் ஒரு நியூஸ் செய்யலாம் என்று நினைத்து இருந்தேன்... பார்ப்போம்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
அருமையான nostalgic பதிவு. சென்னையிலும் எத்தனையோ திரை அரங்குகள் வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறி விட்டன. அதில் கோடம்பாக்கத்தில் உள்ள ராம் தியேட்டரும் ஒன்று. ராம் தியேட்டர் பின் புறம் தான் நான் சிறுமியாக இருந்தபோது வசித்தது. இதே மாதிரி நினைவுகளும் எண்ணங்களும் எனக்கும் சொந்தம் :-))
ReplyDeleteamas32
ஏழை மக்களின் பொழுது போக்குத்தலங்கள் தியேட்டர்! உண்மைதான்! காலப்போக்கில் அவை காணாமல் போனாலும் மனதை விட்டு அகலமறுப்பதென்னவோ உண்மைதான்! நன்றி!
ReplyDeleteஎங்க ஊரு தியேட்டர் பத்தி எழுதனதுக்கு நன்றி அண்ணா..நான் கடைசியாக காதலர்தினம் படம் பார்த்தேன் அந்த தியேட்டரில்
ReplyDeleteஎங்க ஊர் தியேட்டர் பற்றி எழுதியதில் ரொம்ப சந்தோஷம் சகோ!! நிறைய படம் ஆனந்தா ,பாலாஜியில் தான் பார்த்திருக்கேன் ,பிடித்த தியேட்டரும் கூட...ஆனா இப்போ ஆனந்தா பாலா ஆனந்தா இல்லை என்பதில் வருத்தமே...
ReplyDeleteநான் கடைசியா ஆனந்தாவில் பார்த்த படம் ஜெமினி என நினைக்கிறேன்...எனக்கும் இந்த மாதிரி பசுமையான நினைவலைகள் இருக்கு.
பாலாஜியில் 23 ஆம் புலிகேசி படம் கடைசியா பார்த்தேன் என நினைக்கிறேன்.அடுத்து பாலாஜி,ராஜா தியேட்டர் பற்றி எதிர்பார்க்கிறேன்.
தற்போது அந்த இடத்தில் உள்ள லாட்ஜில் தங்கி இருக்கிறேன்.ஆனால் முதலில் தியேட்டர் இருந்த இடம் என்று தெரியாமல்.அதற்காக சந்தோசப்படுவதா அல்லது வருத்தப்படுவதா?
ReplyDeleteஆனால் ஒன்று அந்த லாட்ஜில் அவர்களின் உபசரிப்பு பராமரிப்பு எல்லாம் மிகவும் அற்புதமாக இருந்தது.
ஆதலால் தியேட்டரின் நிர்வாகத் திறனும் நன்றாகவே இருந்திருக்கும்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
திருநெல்வேலியிலும் சில தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக மாறிக் கொண்டிருக்கு. பாலஸ்-டி-வேல்ஸ் பற்றிய என் பதிவைப் பாருங்களேன்.
ReplyDeletevedivaal.blogspot.com
நினைவுகளைப் புரட்டிப் பார்க்கும் அருமையானதொரு பகிர்வு அண்ணா...
ReplyDeleteஎனெக்கென்னவோ தியேட்டர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது....
ReplyDeleteநல்ல பதிவு ... ஜாக் ...
மலரும் நினைவுகள்...
ReplyDelete-
நானும் அந்த தியேட்டர்களில் படம்
பார்த்துள்ளேன்...
Jackie
ReplyDeleteI remember watching Roja movie on its first show in this theater. It was my first day in Pondi and first day at the University too. Too bad these legendary theaters have lost their luster.
ஆனந்தா திரை அரங்கு பற்றிய உங்கள் செய்தி வாசிக்கும் இந்த தருணத்தில்
ReplyDeleteஒரு சோக சித்தி. அந்த திரை அரங்கில் வேலை பார்த்த பீட்டர் என்ற ஆப்பரேட்டர் தீபாவளி அன்று விபத்தில் இறந்து போனார்.
ஆனந்தாதிரை அரங்கு பற்றிய பதிவு செய்யும் இந்த வேளையில் ஒரு துக்க செய்தி. தீபாவளி அன்று இந்த திரைஅரங்கில் வேலை பார்த்த பீட்டர் என்ற ஆப்பரேட்டர் விபத்தில் இறந்து போனார். நல்ல மனிதர்.
ReplyDeletePlease write about Asiavin Maperum Thangam Theatre at Madurai
ReplyDeleteboss
ReplyDeletenaan paarthathu friends padam, marakka mudiyaathu
ReplyDeleteIts a best theater in pondicherry. Every one like to enjoy. But right now we last the big entertainment. Before its one of the landmark also.....
ReplyDeleteIts one of the biggest theater in pondicherry. I was enjoyed many shows with my college friends. Its also good landmark for pondicherry people. Great post...
ReplyDeleteஒரு தீபாவளி அன்று ,காதலன்,நம்மவர்,பவித்ரா என்று ஒரு நாள் முழுவதும் தியேட்டரில் நாமிருந்த நாள் ..................................இனி வருமோ...
ReplyDeleteலக்ஷ்மி... அன்று 5 படங்கள் பார்த்தோம் என்று நினைக்கின்றேன்.... முத போனி ரத்னாவில் யூனிவர்சல் சோல்ஜர் படம் பார்த்தோம் என்று நினைக்கின்றேன்..
ReplyDeleteஸ்ரீராம் ராஜன்... சோ சேட்.....
ReplyDeleteஉண்மைதான் ரியாஸ்..
நன்றி கிரிதர்
சுந்தர் ஜி நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக எழுதுகின்றேன்..
நாடோடி பையன்... ரோஜா படம் பாண்டி ராஜாவில் ரிலிஸ் ஆனது... அனந்தாவில் ரிலிஸ் ஆனது பற்றி எனக்கு நினைவில்லை...
நன்றி முத்து..
நன்றி சகா
நன்றி குமார்.
நன்றி மணி... உங்கள் அனுபவ பகிர்தலுக்கு.
மேனாகா நன்றி.... பாலாஜி மற்றும் ராஜா எனக்கு பிடித்த தியேட்டர்.. ஆனால் நான் படம் பார்த்து முற்றிலும் அழிந்து போன தியேட்டக்ளை பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றேன்... பிறகு பார்க்கலாம்.
உண்மைதான் அமாஸ்..
நன்றி கலிய பெருமாள்.
ஆமாம். யாழ்ப்பாணத்திலும் இதே நிலமை தொடர்கின்றது,
ReplyDeleteலிடோ.வின்சர்,ரீகல்......இவை எல்லாம் தற்போது ஷாப்பிங் காப்ளெக்ஸ் ஆக மாறிவருகின்றன.இவை தவிர, வெலிங்டன். ஸ்ரீதர் என்பன மூடப்படு விட்டன...