இளைய தலைமுறை,புதிய தலைமுறை.

புதியதலைமுறை  புத்தகம் விளம்பரம் பார்த்து இருப்பிங்க...
டிரெயின்ல ஒரு பையன் அந்த புத்தகத்தை ஓப்பன் செஞ்சதும் …பக்கத்துல இருக்கற  எல்லாரும் ஆர்வமா பார்ப்பாங்க..
அவன் நிமிர்ந்து  பார்த்ததும், எல்லோரும் அப்படியே திரும்பிக்குவாங்க...

ஊர்ல டீக்கடை பெஞ்சில உட்கார்ந்து ஒரு  டீ சொல்லிட்டு... தினத்தந்தியை ஒரு  பக்கத்தை  புரட்டினா.. பக்கத்துல ஒருத்தன்  உட்கார்ந்துக்கிட்டு குறு குறுன்னு நம்ம பேப்பர் படிக்கற  பக்கத்தை  அவனும் சேர்ந்து படிப்பான்...  


அதே கான்சப்ட் இந்த  புதியதலைமுறை புத்தகம் விளம்பரமும்...

ஓகே இந்த சீனை நல்லா நியாபகம் வச்சிக்கோங்க...

டிரெயின்... காலையில் சென்னையில் தாம்பரத்தில் இருந்து பீச்சிக்கு போற  டிரெயின்... எவ்வளவு கூட்டம் இருக்கும்ன்னு சொல்லித் தெரியவேண்டியதில்லை. லேடிஸ் அப்பார்ட்மென்ட் நிறைமாத  கர்பினி போல பிதுங்கி  வழியும் ஜாக்கி....    சீட்டுல உட்கார்ந்து இருக்கற சின்ன பொண்ணுங்க பண்ணற அலும்பு தாங்க முடியலை...


செம கூட்டம்.. லேப்டாப்  பேக்.... சாப்பாட்டு பை எல்லாம் வச்சிக்கிட்டு, வியர்வை  கசகசப்போட நின்னுக்கிட்டு இருப்போம்.... உட்கார்ந்து இருக்கற காலேஜ் போற பொண்ணு  என்ன செய்வா தெரியுமா? பன்புக், டெப்லெட் போனை எடுப்பா... நல்ல பெரிய ஸ்கீரின் வேறயா? பேஸ்புக் ஓப்பன்  பண்ணுவா.. எவ்வளவு நேரத்துக்குதான் அடுத்தவ முதுகையும், குளோசப் மொகரையையும்  பார்த்துக்கிட்டு இருக்கறது.. ???

இதுல சிலது  சென்ட்ல குளிச்சிட்டு  வேற  வந்து தொலைச்சி இருக்குங்க...  அப்படி ஒரு கடுப்பான பயண்த்துலதான் டாப்லெட் போனை உட்கார்ந்து இருக்கற சின்ன பசங்க ஓப்பன் பண்ணுங்க...

 பேஸ்புக்ல.. ஒரு நாலு ஸ்டேட்டஸ் லைக் கொடுப்பாளுங்க... மூனு போட்டோவை பெரிசு பண்ணி பார்ப்பாளுங்க... பொதுவா அந்த பொண்ணோட  குளோசப் போட்டோதான் அதுக்கு வரும் கமென்ட் படிச்சி லைக் பண்ணுவா..

அப்புறம்... மெரினா கடல்ல இல்லை தியேட்டர் வாசல்ல அவுங்க பிரண்ட்ஸ்  நாலு பேரு,உலகத்தை மறந்து சிரிக்கறது போல ஒரு போட்டோ... அதுக்கு  ஒரு லைக் .

 அப்புறம்  சிம்பிளா ஒரு கமென்ட்...பொதுவா  தேங்ஸ் டியர்ன்னு  கமென்ட் போடுவா....

அடுத்தது... ஏதாவது சினிமா நட்சத்திரத்து பேஜ்... லைக் பண்ணி இருப்பா போல... சூர்யா போட்டோவை பெருசி பண்ணி பார்ப்பா...

முந்தாநாள் இது போல ஒரு பொண்ணு விஜய் சேதுபதி போட்டோவை  பெரிசு பண்ணி... வச்சக்கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருந்தா......


சரி மெயின் மேட்டருக்கு வரேன்...

  அடுத்தது.. விகடன் சப்ஸ்கிரைப்  வாங்கி இருப்பா போல... அவள் விகடன் ஓப்பன் பண்ணுவா... இன்னும் ஆர்வம் அதிகமாய் கிரிஸ்டல் கிளியர் குவாலிட்டியில் படங்கள் கட்டுரை எல்லாம் தெரியும்....


இப்ப அவளுக்கு உள்ளுணர்வு சொல்லி இருக்கும்... இப்ப  நம்மை சுத்தி டிரேயின்ல இருக்கற எல்லாரும் நம்ம டேப்லட் போன் புக்கைதான் எல்லோரும் பார்த்துக்கிட்டு இருக்கறாங்கன்னு தெரிஞ்சிடும்...


டபால்ன்னு டெப்லெட் ஆப் பண்ணி பேக் உள்ளே வச்சிக்குவா...
 அது எப்படி இருக்கும்னா....?? 1985 ஆம் வருஷத்துல ஒளியும் ஒலியும் ஓடிக்கிட்டு இருக்க சொல்லோ.. கரெண்ட் போனா எம்மாம் கடுப்பா ஆவோம்... அப்படி ஆவோம்...

 இதுல கொடுமை என்னன்னா?? நாமதான் பேக்கு போல... அவ டாப்லெட்டை பார்த்து  தொலைச்சோம்ன்னு பார்த்தா?.... நம்மளை மாதிரி   அவளை சுத்தி நிக்கறவங்க அத்தனை பேரும் பார்த்து அசடு வழியறது அவுங்க கண்ணுலே  தெரியும்....

இது இன்னைக்கு நேத்து நடக்கலை.. பெரிய ஸ்கீரின் மொபைல் போன் வந்ததில்  இருந்து நடக்குது.. அதுவும் இப்ப டெப்லேட் , பன் புக் எல்லாம் வந்த பிறகு இதுங்க அட்ராசிட்டி தாங்கலை..... இதை கண்டிப்பா உங்க ஸ்டைலில் எழுது ஜாக்கி என்று என்னிடத்தில்  உசுப்பி விட்டால் என் ரயில் பயண தோழி....

 அப்படியே கட் பண்ணா  பிளாஷ் பேக்...

ஊர்ல டீக்கடை பெஞ்சில... டீ சொல்லிட்டு தினத்தந்தி வாங்கி திறந்து  பார்க்கும் போது பக்கத்துல குறு குறுன்னு படிப்பான் இல்லையா....  அப்ப ...நாம அந்த பக்கத்தை படிச்சிட்டு அடுத்த பக்கத்தை புரட்ட சொல்ல....  பக்கத்துல இருக்கறவன் கண்ணை பார்த்தா... அவன் படிக்கலைன்னு தெரியும்... அதனால ,அவன் படிச்சி முடிக்கறவரைக்கு வெயிட்  பண்ணுவோம்...

தினந்தந்தி டீக்கடை பொது  சொத்து படிக்க சொல்ல அடுத்த பக்கத்துக்கு போனாலும் மூடி வச்சாலும் நம்ம கிட்ட கொஞ்ச நேரத்துல வந்துடும்...
பன் புக்... டெப்லெட் எல்லாம் அப்படியா என்ன???

 விஞ்ஞான வளர்ச்சி காரணமாக மனிதர்கள் மாறிவிடவில்லை...ஒரே மாதிரி வாழ்க்கைதாதான் வாழ்கின்றார்கள்..    என்ன....அப்ப  பக்கத்துல உட்கார்ந்து தினதந்தி படிச்சான்... இன்னைக்கு  பன் புக்.....


ஆனா அன்னைக்கு  சாணக்கியன் சொல் படிச்சாலும்... வெயிட் செஞ்சான்.. ஆனா இன்னைக்கு டபால்ன்னு வேணும்னே  கவனிக்கறது தெரிஞ்சதால முடி வைக்கறாங்க...  IT’S A FUN……… FOR FUN BOOK…..


அன்றைக்கும் இன்றைக்கும்  மனித மனங்கள்தான் முற்றிலும் மாறி இருக்கின்றன...


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

14 comments:

 1. நல்லா எழுதி இருக்கீங்க அண்ணா..

  ReplyDelete
 2. நல்லதொரு அவதானிப்பு! நன்றி!

  ReplyDelete
 3. சாதாரண விசயத்தை இவ்வளவு அழகா இடையில் நிறுத்தாமல் படிக்க வைக்க எப்படிதங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது.தங்களுடைய பெற்றோர்களின் உபயமா?அல்லது கற்றுக்கொண்டதா?அல்லதுஎங்கேயாவது கடையில் மொத்தக் கொள்முதல் செய்துகொண்டீர்களா?
  எனக்கெல்லாம் இந்தக் கலை மட்டும் வரவே மாட்டேன்கிறதே
  அது சரி எல்லோரும் ரஜினி ஆகிவிட்டால் படம் பார்க்க ஆள் வேண்டாமா?
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 4. படிக்கும் போதே என்னையும் ரயிலில் ஏற்றி டெப்லெட்டை எட்டி பார்க்க வைத்து விட்டிர்கள். சூப்பர் நன்றி ...

  ReplyDelete
 5. மிக்க நன்றி கொச்சின் தேவதாஸ் அவர்களே....

  நன்றி அருள்

  நன்றி சுரேஷ்

  நன்றி பாண்டி கலியபெருமாள்

  ReplyDelete

 6. அன்றைக்கும் இன்றைக்கும் மனித மனங்கள்தான் முற்றிலும் மாறி இருக்கின்றன...

  உண்மைதான்....

  ReplyDelete
 7. மாற்றமொன்றே மாறாதது என்பதைச் சொல்கிறீர்கள் அண்ணா :)

  ReplyDelete
 8. // அது எப்படி இருக்கும்னா....?? 1985 ஆம் வருஷத்துல ஒளியும் ஒலியும் ஓடிக்கிட்டு இருக்க சொல்லோ.. கரெண்ட் போனா எம்மாம் கடுப்பா ஆவோம்... அப்படி ஆவோம்... //
  ஒளியும், ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈஸி பாலிஸி... :)

  நேற்று காதலன் பட, ஊர்வசி ஊர்வசி பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த போது, மேற்கண்ட வரிகளைக் கேட்டதும் தான் - அந்தப் பாடல் எவ்வளவு பழையதாகி விட்டது என்பது உறைத்தது!!!

  ReplyDelete
 9. IT’S A FUN……… FOR FUN BOOK…..
  அன்றைக்கும் இன்றைக்கும் மனித மனங்கள்தான் முற்றிலும் மாறி இருக்கின்றன...

  உண்மைதான்....

  ReplyDelete
 10. Thalaivaa rocking again. Back to the form. I hope. Very eager to see your work in big screen.

  ReplyDelete
 11. உண்மைதான் கார்த்திக்.. நானும் அதை பீல் பண்ணேன்..

  நன்றி ரவி தங்கள் கருத்தக்கு..

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner