IRANDAM ULAGAM-2013/ இரண்டாம் உலகம்/ சினிமா விமர்சனம்...
1989 ஆம் ஆண்டு  தி அபய்ஸ் என்று ஒரு ஆங்கில படம்  ....
  டைட்டனிக் புகழ் ஜேம்ஸ் கேமரோன் இயக்கத்தில் வெளிவந்தது..... டைட்டானிக் புகழ் என்று தமிழ் நாட்டில்  எழுதும் முன், என்னைக்கேட்டால் அபய்ஸ்  புகழ் என்று எழுத சொல்வதுதான்  நியாயம்...  அப்படி ஒரு திரைப்படம்.. அந்த திரைப்படம்.... அந்த திரைப்படத்தின் விமர்சனத்தை  வாசிக்க இங்கே கிளிக்கவும்...

 படத்தின்  கதை ரொம்ப  சிம்பிள்...

கடல் ஆராயச்சியில் ஆழ்கடலில்  நீர் மூழ்கியில் இருக்கும் குழுவிடம் இருக்கும் அணுகுண்டை  கடலின்  ஆழத்தில் வில்லன்  ஒருவன் வெடிக்க டைமர் செட்  செய்து விடவான். அதனை ஹீரோ வெடிக்காமல் இருக்க தன் உயிரை பணயம் வைப்பான்... அவன்    எப்படி  பிழைத்தான் என்பதுதான் கதை..   


கடலின் வெகு ஆழத்தில் சென்று பாமை டிபுயூஸ் செய்து,  மேலே வர அவனுக்கு ஆக்சிஜன் இருக்காது... அப்படியே இருக்கும் சூழ்நிலையில்  ஆழ்கடலில் ஒரு  அற்புதம் நடக்கும் பாருங்கள்...


ஆஹா...  அற்புதமான கணங்கள்... வாழ்வில் மறிக்க முடியாத காட்சிகள்.. இப்படி படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே  ஜேம்ஸ் கேமரோன் படம் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரின் காதுகளிலும் ஒரு முழம்  மல்லிகை பூவை  எடுத்து இரண்டு காதிலும் சுற்ற ஆரம்பிப்பார்....


 நமக்கு நன்றாகவே தெரியும்... காதில் பூ சுற்றுகின்றார் என்று ஆனாலும் காமத்தின்  உச்சநிலையில் மெய் மறந்து என்ன கருமத்தை வெறியோடு இம்மாம் நேரம் செஞ்சோம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருப்போமே? அப்படி ஒரு நிலையில் நாம் படத்தை பார்த்துக்கொண்டு இருப்போம்... லாஜிக் படி அப்படி நடக்க  வாய்ப்பே இல்லை.. ஆனால் அதை முழுவதும் நம்புவோம்.. இப்படி கடல் அடியில் இருந்தாலும் இருக்கும் இல்லை... ?இந்த பூவுலகில் நாம் மட்டும் தான் இருக்கின்றோம் என்று வாதாட என்ன முகாந்திரம் இருக்கின்றது...??


 நம்ப முடியாவிட்டாலும் .. அந்த காட்சிகளில் கண்ணிர் விட்டு அழுது இருக்கின்றேன்... அந்த கடல் வாழ் ஜந்து பேசும் போதும் ,எட் ஹரிஸ் கை பிடித்து அழைத்து சென்று இன்னோரு கடல் உலகத்தில்  இட்டு சென்று விடும் போதும், நீங்கள் பயணப்படுவதை போல உணரூவீர்கள்..  கடலை பார்க்கும் போது எல்லாம் அபய்ஸ் படத்தில் காட்டப்படும் அந்த உலகம் நியாபம் வரும்..  இத்தனைக்கு கேமரூன்  பூ சுற்றி இருப்பார்.. ஆனாலும் அந்த  நிகிழ்வுகளின் போது நெகிழ்வோம்....


ஆனால் செல்வாவின் இரண்டாம் உலகம் பார்த்து விட்டு  நெளிய செய்கின்றோம்...அபய்ஸ் பேன்னடசி மூவி இல்லை...சயின்ஸ்பிக்கஷன் திரில்லர்... எதற்கு சொல்கின்றேன் என்றால் கொஞ்சமாவது பார்வையாளர்களை நம்ப வைக்க வேண்டும்,   நெகிழ  வைக்க வேண்டும்.... 

ஆனால் இரண்டாம் பாதியில் அமெச்சூர் நாடகத்தை பார்த்த உணர்வே  எழுகின்றது...

பேன்டசி மூவி  என்பது  டிக்கெட் வாங்கி கொண்டு தியேட்டரில்  உட்காந்து இருப்பவனிடம் முன்பே  உன் காதில்  பூ சுற்ற போகின்றோம் என்று சொல்லி விட்டு பூ சுற்றும் வேலை..

நாய்  பேசிச்சி? குரங்கு ஏன் அழுதுச்சி... வைகோ போல பொறி பறக்க எந்த  காட்டு சிங்கம் தமிழ் பேசும் அப்படின்னு எல்லாம் படம் பார்க்கறவன்  கேள்வி கேட்கவே மாட்டான்... ? காரணம் பேன்டசி மூவி அப்படித்தான்....காரணம் எனக்கு தெரியும் என் காது ல பூ சுத்த போற.. அதை எவ்வளவு  சூப்பரா எனக்கு தெரியாம, நான் உணராம, எனக்கு பூ சுத்த போற என்பதுதான் இயக்குனரின் சவால்... 


இது போன்ற படங்களில் ஒரு நெகிழ்ச்சி இருக்கனும்... அது முதல் பாகத்தில் கொஞ்சமே கொஞ்சம் இருந்தது.....ஆனால் இரணட்ம் பாகத்தில்  அந்த  நெகிழ்ச்சி இல்லவே இல்லை..


ஒன்னு மட்டும் தெரியுது.. புள்ளையார் புடிக்க போய் குரங்கா மாறி இருக்கின்றது..

 60 கோடி பட்ஜெட்... பலரது உழைப்பு ,...???

முதல் கோணல் முற்றும் கோணாலா?

 முதல்ல 2006 லஇந்த படத்துக்கு பூஜை போட்டு  கார்த்தி காதல்  சந்தியாவை வச்சி  எடுக்க இருந்த  இரண்டாம் உலகம் படம் டிராப்..

2008ல தனுஷ் ஆண்ட்ரியா வச்சி இதே படத்துக்கு பூஜை போட்டாங்க....கொஞ்சம் ஷூட் பண்ணிட்டு  2009ல படம்  டிராப்...


திரும்ப 2010ல மறவன் பேர் மாத்தி எடுத்தாங்க... அப்ப ஆன்டிரியா  படத்தை விட்டு வெளியே வந்துட்டாங்க..

அப்பறம் ஆர்யா, அனுஷ்கா ஷெட்டி கூட்டனியில் இந்த படம் தொடங்கி , கோவா, பிரேசில்ன்னு போய் ஷூட் பண்ணி 60 கோடி பணத்தை முழுங்கி ஏப்பம் விட்டு இருக்கு.
இந்த படத்துல யார் யாரோ மாறியும் மாறதவர்... கேமராமேன் ராம்ஜி மட்டும்தான்...


ரெயின்போகாலனி,புதுப்பேட்டை,  மயக்கம் என்ன  செல்வாவோட மாஸ்டர் பீஸ்... நான் கொண்டாடிய படங்கள்.. ஆனால் ,ஆயிரத்தில் ஒருவன்... அவ்வளவு கஷ்டப்பட்டு போற இடத்துக்கு  வாக்கி டாக்கியில் சொன்னாலே ஹெலிகாப்டரில் கமாண்டோ படைகள் வந்து இருக்கும்  காட்சியை பார்துக்கொண்டு இருந்த போது, செவிட்டில்  வாங்கிய அறை.. இந்த  இரண்டாம் உலகத்தில் தொடர்வதும் கொடுமைதான்...


60 கோடியில்,  பத்து சூது கவ்வும், பத்து மூடர் கூடம் எடுத்து இருக்கலாம்.....

அவதார் போலவும் நார்னியா போலவும் படம் எடுக்க போறேன்னு  சொல்லிட்டு அதுல காதலை மட்டும் வச்சிக்கிட்டு   இரண்டரை  மணி நேரம்  மெனக்கெட்டு முயன்று இருக்கார் இயக்குனர் செல்வராகவன்... 

அவிங்க பட்ஜெட் 100  கோடின்னாலும் அதுக்கு பெரிய  மாக்கெட் இருக்கு.. ஆனா நமக்கு அப்படி  இல்லை... இப்ப கூட செல்வா சொல்லலாம்... தயாரிப்பாளர் டார்ச்சர் காரணமாக அல்லது பணத்தை அதிகமா இன்னும் இறக்கி இருந்தா, வெற்றி பெற வச்சி இருக்க  முடியும்ன்னு சொன்னாலும் சொல்லலாம் .....  யார் கண்டா...

ஒரு பெரிய இயக்குனர் அப்படின்னு  பேர் எடுத்துட்டா.. எந்த சஜஷன் சொன்னாலும் ஏத்துக்ககூடாது போல...டிஸ்கஸ் பண்ணி இருந்தா படம் இப்படி ஆகி இருக்காது..
 இரண்டாம்  உலகத்தில் முதன் முதலாக காதலை ஆர்யா ஆறி முகபடுத்துகின்றார்... ஆனால்  அவர்கள் மட்டும் இருந்தால் பரவாயில்லை.. ஒரு நாகரீக சமூகம்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது...

 காதல் அதன் பின் காமம் இது இல்லாமல்  ஒரு உலகத்தில் சந்ததி வளர வாய்ப்பேயில்லையே...? காதல் இல்லாத காமம்.. இரண்டாம் உலகத்தில் சாத்தியம் போல.. அதையாவது விளக்கி இருக்கலாம்... போங்கப்பா....

இரண்டாம் உலகம் என்று பெயர் வைத்தற்கு பதில் அம்மா உலகம் என்று பெயர் வைத்து இருக்கலாம்... படத்தை பார்த்தா உங்களுக்கே தெரியும்...

ஒரு படம் ரில்ஸ ஆச்ச்சின்னா... நல்லா இருக்குன்னு 100 பேர்  சண்டை போடுவான்.. நல்லா இல்லைன்னு 100 பேர் சண்டை போடுவான்... இந்த படத்தை பத்தி ஏ கிளாஸ் ஆடியன்ஸ் அதிகம் இருக்கற இணைத்தில் இதனை பற்றிய பேச்சு என்ன என்று படித்த  தெரிந்துக்கொள்ளுங்கள்...

இந்த பதிவே செல்வா மீது உள்ள ஆதாங்கத்தில் எழுதியதுதான்..
 

சார் இந்த படத்தை பார்க்கலாமா?-

அம்புலிமாமா , பாலமித்திரா சின்ன வயசுல படிச்சி  இருந்திங்கன்னா.. இந்த படம் உங்களுக்கு  பிடிக்கலாம்....

திரும்ப பழைய புதுப்பேட்டை , மயக்கம் என்ன ...செல்வராகவனா வரனும்... கண்டிப்பா வரனும்.
 பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ 

நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

14 comments:

 1. // ஆனால் இரண்டாம் பாதியில் அமெச்சூர் நாடகத்தை பார்த்த உணர்வே எழுகின்றது...

  பேன்டசி மூவி என்பது டிக்கெட் வாங்கி கொண்டு தியேட்டரில் உட்காந்து இருப்பவனிடம் முன்பே உன் காதில் பூ சுற்ற போகின்றோம் என்று சொல்லி விட்டு பூ சுற்றும் வேலை..//

  //இது போன்ற படங்களில் ஒரு நெகிழ்ச்சி இருக்கனும்... அது முதல் பாகத்தில் கொஞ்சமே கொஞ்சம் இருந்தது.....ஆனால் இரணட்ம் பாகத்தில் அந்த நெகிழ்ச்சி இல்லவே இல்லை..//

  //ரெயின்போகாலனி,புதுப்பேட்டை, மயக்கம் என்ன செல்வாவோட மாஸ்டர் பீஸ்... நான் கொண்டாடிய படங்கள்.. ஆனால் ,ஆயிரத்தில் ஒருவன்... அவ்வளவு கஷ்டப்பட்டு போற இடத்துக்கு வாக்கி டாக்கியில் சொன்னாலே ஹெலிகாப்டரில் கமாண்டோ படைகள் வந்து இருக்கும் காட்சியை பார்துக்கொண்டு இருந்த போது, செவிட்டில் வாங்கிய அறை.. இந்த இரண்டாம் உலகத்தில் தொடர்வதும் கொடுமைதான்...//


  அப்படியே என் எண்ணத்தை சொல்லிவிட்டீர்கள் :)

  ReplyDelete
 2. iruku... aanaaaaa illaaaaaaaa......!?!!?

  ReplyDelete
 3. Super Thala. I'm Going to Try this movie this matinee.

  ReplyDelete
 4. enna boss, padatha parthutu vanthu unga review padikalamu iruntaen, but niraya velaigal irunthathu ethukum padichuruvamaeynu padichu partha....

  ReplyDelete
 5. தாங்கல டா சாமி. எப்ப படம் முடியும்னு வெளியே ஓடி வந்தா சட்டையெல்லாம் கிழிஞ்சி தலைமுடியெல்லாம் பிஞ்சி போயிருந்தது.. கொடும டா சாமி...

  ReplyDelete
 6. அழகான விமர்சனம்... எங்கு போனாலும் இரண்டாம் உலகத்தை காய்ச்சி எடுக்கிறாங்க... பாவம் 'செல்வ'ராகவன்...

  ReplyDelete
 7. ///...ரெயின்போகாலனி,புதுப்பேட்டை, மயக்கம் என்ன செல்வாவோட மாஸ்டர் பீஸ்... நான் கொண்டாடிய படங்கள்.. ஆனால் ,ஆயிரத்தில் ஒருவன்... அவ்வளவு கஷ்டப்பட்டு போற இடத்துக்கு வாக்கி டாக்கியில் சொன்னாலே ஹெலிகாப்டரில் கமாண்டோ படைகள் வந்து இருக்கும் காட்சியை பார்துக்கொண்டு இருந்த போது, செவிட்டில் வாங்கிய அறை...////..
  /////.....60 கோடியில், பத்து சூது கவ்வும், பத்து மூடர் கூடம் எடுத்து இருக்கலாம்..../////. படம் பார்க்க இன்னும் நேரம் கிடைக்கல... பட் செல்வராகவனுக்காக பார்க்கணும்ன்னு இருந்தேன்... இப்போ ஐடியா போச்சு,,,,,,, செம பாஸ்....
  ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்... நல்லா இருக்கு பாஸ்.... (நான் அத தான் முதல்ல பார்ப்பேன்... ரொம்ப நாளா சமந்தாவ பார்த்து போரடிச்சு போச்சு)

  ReplyDelete
 8. Sir.... Enaku college la cinema va pottu katti oru oru padathukum adha pathi explain pannunennga adhu pola... Irandam ulagaatha pathi eppa solluvennga aarvama erunthen.... Release ana annaikey 2 thada va Paam Pathen.. Nanga ellarum manasula nenaikuratha appade ye sonna thalaivan Jackie ku Oru Ohhhho....

  ReplyDelete
 9. Mayakkam enna nalla padamna neengalum unga vimarsanamum......iyyo... iyyo

  antha padatha nalla parunga neraya ottai erukkum

  ReplyDelete
 10. //அவிங்க பட்ஜெட் 100 கோடின்னாலும் அதுக்கு பெரிய மாக்கெட் இருக்கு.. ஆனா நமக்கு அப்படி இல்லை..//

  சரியா சொன்னீங்க. சரியானா விமர்சனம்

  ReplyDelete
 11. Irandam Ullagam - Fantasy Fiction Anthology Based Film, This genre is something similar to Cloud Atlas, The Double Life of Veronique and best example is "The Fountain" by Hugh Jackman. I can say this is the first indian/tamil film released in this genre. Since there are some flaws, To be honest, i got surprised of seeing such film in tamil.
  ஐயா செல்வராகவன்,
  நம்ம ஆட்களுக்கு தெரிஞ்சது டாஸ்மாக் ல குடிக்கும் யூத், எவரையும் சகட்டு மேனிக்கு கலேய்க்கும் திறமை, குத்து பாட்டு, ஆத்திய சேனல், விஜய் சேதுபதி அப்புறம் அலுப்பு தட்டாத திரைக்கதை.
  த்ரில்லர் படம் எடுத்த மிஸ்கின் யை போஸ்டர் ஓட்ட விட்டுடாங்க..நீங்க இது போல சோதனை முயற்சில் படம் அடுத்த முறை எடுத்தல் டிக்கெட் குடுத்து, ப்ரொஜெக்டர் ஓட்றதுவரை நீங்கேள செய்ய வேண்டி இருக்கும்..Be Careful of Modern Youths

  ReplyDelete
 12. Irandam Ullagam - Fantasy Fiction Anthology Based Film, This genre is something similar to Cloud Atlas, The Double Life of Veronique and best example is "The Fountain" by Hugh Jackman. I can say this is the first indian/tamil film released in this genre. Since there are some flaws, To be honest, i got surprised of seeing such film in tamil.
  ஐயா செல்வராகவன்,
  நம்ம ஆட்களுக்கு தெரிஞ்சது டாஸ்மாக் ல குடிக்கும் யூத், எவரையும் சகட்டு மேனிக்கு கலேய்க்கும் திறமை, குத்து பாட்டு, ஆத்திய சேனல், விஜய் சேதுபதி அப்புறம் அலுப்பு தட்டாத திரைக்கதை.
  த்ரில்லர் படம் எடுத்த மிஸ்கின் யை போஸ்டர் ஓட்ட விட்டுடாங்க..நீங்க இது போல சோதனை முயற்சில் படம் அடுத்த முறை எடுத்தல் டிக்கெட் குடுத்து, ப்ரொஜெக்டர் ஓட்றதுவரை நீங்கேள செய்ய வேண்டி இருக்கும்..Be Careful of Modern Youths

  ReplyDelete
 13. //எனக்கு தெரியும் என் காது ல பூ சுத்த போற.. அதை எவ்வளவு சூப்பரா எனக்கு தெரியாம, நான் உணராம, எனக்கு பூ சுத்த போற என்பதுதான் இயக்குனரின் சவால்... // என்ன ஒரு அருமையான உவமானம் :)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner