நீங்கள் கோ
விளையாட்டை விளையாடி இருக்கின்றீர்களா?
ஒருவன் ஓடுவான் ஒருவன் பிடிப்பான்...
பிடிப்பவன் பிடிக்க முடியவில்லை என்றால் உட்கார்ந்து இருப்பவனை கோ விட்டு விட்டு
உட்கார்ந்து கொள்ளுவான்... கோ விட்ட
அடுத்த செகன்ட் அவன் ஓடுவான்... அவனால் பிடிக்கமுடியவில்லை... சாதகமான ஆளை கோ விட்டு விட்டு உட்கார்ந்து விடுவான்... இப்போது நம்
கண்கள்.. எவன் பிடிக்க ஓடுகின்றானோ அவன்
மீது பதிந்து இருக்கும் அல்லவா.... ஆனால்
பிடிக்க ஓடும் அத்தனை பேருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கும் எல்லோரும் ஒரே
டீம் என்பதுதான் இல்லையா?
அது
போலான திரைக்கதைதான் இந்த திரைப்படம்....
மூன்று
மெயின் கதாபாத்திரங்கள்...ஒரு பெண் நர்ஸ்அவளுடைய கள்ளக்காதல்... மளிகை
கடையில் வேலை செய்யும் பெண் அவளுடைய காதலன்...டிவோர்ஸ் செய்துக்கொண்ட தம்பதிகள்... இந்த மூன்று pairs க்கும் நடக்கும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பான விஷயத்தை வீரன் சாமிக்கிட்ட சோழியை களைத்து போட்டு உத்தரவு கேட்பது போல திரைக்கதையை நான் லீனியரில் களைத்து போட்டு எழுதி செல்லுலாய்டில் எரோட்டிக் டேஸ்டுடன் சிறைபடுத்தி இருக்கின்றார்கள்.
இந்த படத்தின் திரைக்கதை உத்தியில் இன்னும்
சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால் மூன்று pairsக்கும் சம்பந்தமானவர்கள் ஒரே அப்பார்ட்மென்ட்டில் வசிக்கின்றார்கள்.... ஒருவருக்கு ஒருவர்
சம்பந்தம் இல்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம். இந்த படத்தை பார்த்தோ அல்லது கேள்விபட்டோ
கூட நிறைய மாற்றங்கள் செய்து மூன்று பேர் மூன்று
காதல் படத்தை எடுத்து இருக்கலாம்...
இந்த படத்தின் கதை..
டாக்சியின்
பின் இருக்கையில் ஒருவன் உட்கார்ந்து இருக்கின்றான்... அவன்
தன் கோட் பாக்கெட்டில் கை விட்டு சில புகைபடங்களை எடுக்கின்றான்... எல்லா புகைபடங்களிலும் ஒரு பெண்ணின் முழு
நிர்வாணம் வித விதமான கோணத்தில் படமாக்கப்பட்டு இருக்கின்றது... அந்த போட்டோக்களை
ரசித்துக்கொண்டே இருக்கும் போது....ஒரு கார் வேகமாக வந்து மோதி
விபத்துக்குள்ளாகின்றான்.... திரை
இருட்டாகி படம் திரும்ப ஆரம்பிக்கின்றது. அவன் யார்? அந்த நிர்வாண பெண்மணி யார் போன்ற கேள்விகளுக்கு
திரைப்படத்தில் பதில் இருக்கும் ஆகையால் வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்.
===================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...
ஒரு நர்ஸ்.. கணவன் மகள் என்று அழகான வாழ்க்கை...
அன்பான கணவன்தான் இருந்தாலும் அவளுக்கு வேறு ஒன்று தேவை படுகின்றது...
சேல்ஸ்மேனோடு கள்ளக்காதல்... அவனோடு
இருக்கும் அந்த நிமிடங்களை அவள்
ரசிப்பது.. முக்கியமாக சல்லாப காட்சிகளில் அவள் அவளிடம் காட்டும் ஈடுபாடு ...வாவ்.....
40க்கு மேலான வாழ்க்கையில் பெரும்பாலும்
பெண்கள் மனதளவிலும் உடல் அளவிலும் புறம்
தள்ளபடுகின்றார்கள்.... அந்த இடத்தில் யாராவது நீங்கள் ரொம்ப நல்லவர் என்று
சொல்லும் வார்த்தை கூட போதுமானதாக இருக்கின்றது... முக்கியமாக கணவனை விட புதிதாக
வந்தவன் வயதான தளர்ந்த , பிள்ளை பெற்ற அழகையும் அவன்
ஆராதிக்கும் போது அவள் தடம்
மாறுகின்றாள்,...
அதுக்கான காரணம்.... செக்சில் அவள் ஆசைகள்
வெளிப்படுவதும்,. அதை பேரர் பார்க்க
வேண்டும் என்று சொல்வது...செக்ஸ் வறட்சியின்
வெளிப்பாடுகள்.. அதே போல அவளுக்காக அவன் அவள் சொல்வதை எல்லாம் செய்வதும், அதனால் அவள்
நிர்வாணத்தை படம் பிடிக்க அனுமதிப்பதும் விஷூவலாக உணர்த்தப்பட்ட காட்சிகள...
இது
இல்லாமல் அந்த நர்ஸ் வாழும் அதே
அப்பார்ட்மென்ட்டில் இன்னும் இரண்டு
ஜோடிக்கதைகள் இருக்கின்றன... ஆனாலும் அவர்கள் கதைகள் ஒன்றுடன் ஒன்று சம்பந்தபட்டவைதான்.
இந்த படத்தின் கிளைமாக்ஸ்.. அந்த நர்ஸ் தன் கணவனை எப்படி கன்வின்ஸ் செய்கின்றாள் என்று பார்த்து ஆச்சர்யப்ட்டு போவிர்கள்..
===========
படத்தின் டிரைலர்.
================
படக்குழுவினர்விபரம்
Directed by Götz Spielmann
Produced by Wulf Flemming
Erich Lackner
Written by Götz Spielmann
Starring Petra Morzé
Andreas Patton
Hary Prinz
Susanne Wuest
Music by Walter W. Cikan
Marnix Veenenbos
Cinematography Martin Gschlacht
Editing by Karina Ressler
Release date(s)
5 August 2004 (Locarno Film Festival)
Running time 105 minutes
Country Austria
Language German
Croatian
English
Produced by Wulf Flemming
Erich Lackner
Written by Götz Spielmann
Starring Petra Morzé
Andreas Patton
Hary Prinz
Susanne Wuest
Music by Walter W. Cikan
Marnix Veenenbos
Cinematography Martin Gschlacht
Editing by Karina Ressler
Release date(s)
5 August 2004 (Locarno Film Festival)
Running time 105 minutes
Country Austria
Language German
Croatian
English
=========
பைனல் கிக்.
இந்த
படத்தை ஒரு முறை பார்க்கலாம்... கலைத்து போட்ட திரைக்கதைக்காக நிச்சயம்
பார்க்கலாம் .. கண்டிப்பாக இந்த படம் வயதுக்கு வந்தவர்களுக்கானது,.
=========
படத்தின் ரேட்டிங்
பத்துக்கு ஆறு..
=================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

எப்பொழுதும் யதார்த்தமான நடையில் பட விமர்சனம். பகிர்வினிற்கு மிக்க நன்றி திரு. ஜாக்கி சார்..!
ReplyDeleteஇணையத்தில் கிடைத்தால் பார்க்கலாம்...
ReplyDeletePlease give the download link Jackie!
ReplyDeletePlease give me the download link of this film Jackie!
ReplyDelete