செல்லமே படத்தில் விஷால் நடித்த போது , ரீமா சென் மேல் இருந்து ஈர்ப்பு அவர் மேல்
இல்லை என்பதே நிஜம்...
வைரமுத்து அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கூட இந்த பையன் கண்ணுல ஒரு பெரிய
ஸ்பார்க் இருக்கும் கண்டிப்பா பெரிய ஆளா வருவான்னு சொல்லி இருந்ததை மறுநாள்
ஊடகங்களும் கூவீன நானும் அதை படித்து இருக்கின்றேன்......
விஷாலை பார்க்கும்
போது எல்லாம்...எனக்கு எனது பால்ய நண்பன்
சுபாஷை நினைவு படுத்துவது போல விஷாலின் உடல்வாகு மற்றும் உயரம் இருக்கும்
முக்கியமாக கண்கள் உட்பட....
அதன் பின் சண்டைக்கோழி திரைப்படம்... அந்த படத்தின் இன்டர்வெல் எப்போது வந்தது என்று
கூட தெரியாது... அந்த அளவுக்கு பரபர
சரசர திரைக்கதை... அந்த படத்தில் விஷாலை
பிடித்து போனது...
கருபழனியப்பனின்
சிவப்பதிகாரம் கூட எனக்கு மிகவும் பிடித்த படம்தான்... மம்தாவுக்காகவும் என்று இடைசெருகலாக சொல்லிக்கொள்ள
பெருமைகொள்கின்றேன்... வரலாறு முக்கியம் அமைச்சரே... திமிரு ஓக்கே...
அவன் இவன்... படம்
அந்த படம் ஒரு பெயிலியர் படம்
என்றாலும் விஷாலின் டெடிகேஷன் சான்சே இல்லை...
ஒன்றரை கண் போல வைத்துக்கொண்டு பெண்
சாயிலில் அதுவும் எம்டன் போல உடம்பை வைத்துக்கொண்டு அப்படி நடிப்பது சான்சே இல்லை... கமல் நடனத்துக்கு பிறகு ஒரு ஆண் நடனத்தை அசந்து போய் பார்த்தது... விஷால் அவன் இவன்
பாடலில் பெண் வேடமிட்டு மைதானத்தில் ஆடும்
அந்த கரூப் சாங்... சும்மா அடி பின்னி இருப்பான் மனுசன்... சினிமாவில் பணிபுரிந்து இருந்தால் மட்டுமே அந்த
வியர்வையின் உழப்பையும் டெடிகேஷனையும் அறிய முடியும்... சான்சே இல்லை மனுஷன்
பின்னி இருப்பாப்பல........
இனி ஒரு நடிகர்
அப்படி ஒரு ஆட்டத்தை பெண் உடை அணிந்நது
புழுதி பறக்க ஆட முடியுமா? என்பது டவுட்தான்... ஆனால் அதை விஷால் சாத்தியப்படுத்தி
இருந்தார்... அந்த பாடல் உங்களுக்காக...
டே ஆஆ டூ பாடலில் இருந்து விஷால் உழைப்பின் மீது ஒரு சின்ன பாசம் என்று
வைத்துக்கொள்ளலாம்... சமர் படம் பார்க்கலை
... பட் அவரின் போலிஸ் மிடுக்கு சில பாடல்
காட்சிகளில் ரசிக்க வைத்தார்.... ஒரு
பெரிய பிரேக் இல்லாமல் கூடு பறித்த பறலை போல தவித்து கிடந்தவருக்கு தற்போது பாண்டிய நாடு பெரிய ரிலிப்....
வழக்கமான கதை சலித்து புளித்து போன மாவில் அரைத்த சுட்ட தோசை போலான கதைதான்
என்றாலும்.. விஷால் திரை வாழ்வில் இந்த படம்
ஒரு பிரேக்கிங் மூவி என்று சொல்லவேண்டும்.
ஆரம்பம் நல்லா
இருந்தாலும் நல்லா இல்லாவிட்டாலும் ஓடி
விடும்.... காரணம் அஜித் ரசிகர்கள் சப்போர்ட் மட்டும் பெரிய ஸ்டார் வேல்யூ திரைப்படம் என்பதால் மிகுந்த
எதிர்பார்ப்பு அந்த படத்துக்கு இருந்தது....
அடுத்த விளம்பர அளவிலும், ஊடக அளவிலும் பெரிய எதிர்பார்ப்பு ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்துக்கு சொல்ல
வேண்டும்... பாடல்கள் மற்றும் காஜல் பலர் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு
இருந்தார்... ராஜேஷ் படத்தின் மீது பெரிய
எதிர்பார்ப்பு வேறு எகிறி கிடக்க...
அந்த படத்தை மீடியா எல்லோர்ரும் கொண்டாடிக்கிட்க்க...
பாண்டிய நாடு எந்த விழ ஆர்பாட்டமும் இல்லாமல் முக்கியமாக பெரிய தியேட்டகள் எதுவும்
இல்லாமல் ஒப்புக்கு சப்பானியாக வந்து
ஓரளவுக்கு நல்ல படம் என்று பெயர் எடுத்து இருக்கின்றது...
படத்தின் கதைன்னு
ஒன்னும் பெரிசா சொல்ல முடியாது... ஊர்ல பெரிய டான் செத்து போறான்.. அவன் கீழ வேலை
செஞ்ச இரண்டு பேர் நீ பெரிசா? நான்
பெரிசான்னு வெட்டிக்கிட்டு
சாவறாங்க... அதுல ஒருத்தன் டான் ஆயிடுறான்.... அவன் ஒரு சந்தர்பத்துல விஷால்
அண்ணனை கொன்னுடறான்... விஷால் ஒரு
அப்பாவி.. அவன் எப்படி அந்த வில்லனை பழி தீர்க்கறான் என்பதுதான் பாண்டிய
நாட்டின் கதை.........
இயக்குனர் சுசீந்திரன் பாண்டியநாடு பாடத்தோட கிளைமாக்சை...
வெயில் படத்து கிளைமாக்ஸ் போல எடுக்க டிரை பண்ணி
இருப்பார் போல... ஆனா அதை பாராதிராஜான்ற இயக்குனர் இமயம் விஷால் அப்பாவ நடிச்ச பாரதிராஜாவை சாகடிச்ச்சிடுச்சி...
சுசீந்திரனும்...
இயக்குனர் இமயமாச்சே.... சஜெஷன் எதாவது சொன்னா... எனக்கே சொல்லிறியான்னு
கோப்ப்பட்டுவிட்டா என்ன செய்றதுன்னு அமைதி காத்து இருப்பது பல இடங்களில்
தெரிகின்றது... அப்ப அவரு நல்லாவே நடிக்கலையான்னா..? நடிச்சார்... அவர் வக்கில் பிரண்டுக்கு போன் பண்ணும் போது... என்ன
என்ன செய்ய சொல்லறடா.. வீட்டுல உட்கார்ந்துகிட்டு சோறு திங்க சொல்லறியான்னு
குமுறும் இடம் போல... குமுறி அன்டர்பிளே பண்ணி இருக்க வேண்டும்...பாராதிராஜா பல
படத்துல நடிச்சி இருக்கலாம்... ஆனா அவரை
சரியா பயண்படுத்தியது மணிரத்னம்தான்....
ஆயுத எழுத்து கிளைமாக்ஸ்.. சூர்யா சட்ட மன்றத்துல
நுழைவார்..
வா மைக்கேல்.... வந்துட்ட இல்லை... உன்னை போல நிறைய பேரு
லட்சயத்தோட இங்க நுழைஞ்சி இருக்காங்க...தெரியுமில்லை.... வெல்கம் என்று
சொல்லுவார்....
வச்துட்டியா?
நாங்களும் உன்னை போல நிறைய எதிர்பார்ப்புகளோடு வந்தோம் இந்த அரசியல் சாக்கடை
எங்களை மாத்திடுச்சி... ஆல் த பெஸ்ட் என்பது போல அந்த சீனை மணி முடிச்சி இருப்பார்...
அதே போல அந்த படத்துல பல காட்சிகளில் பாரதி ராஜா சிறப்பா நடிச்சி இருப்பார்...
எப்படி முதல் மரியாதையில் முதல் தலைமுறை நடிகன்
சிவாஜியை நாடக பாணியில் இருந்து
சிவாஜியை வெளியே அழைச்சிக்கிட்டு வந்தாரோ அது போல இந்த படத்துல இந்த கால
டிரென்டுக்கு அவர் மாறி இருந்தா இன்னும் ரசிச்சி இருக்கலாம்...
சுசீந்திரன் நல்லா
வேலை வாங்கும் இயக்குனர்தான்.. பட்..
பிரமாண்ட அனுபவத்தை பார்த்து விட்டு,
நிறைய காட்சிகளில் அவரிடம் என்ன சொல்லி வேலை வாங்குவது என்று யோசித்து
இருப்பது பல காட்சிகளில் தெரிகின்றது...
பட் பாராதிராஜாவோட நடிப்புல மாஸ்டர்பீஸ் ஆயுத
எழுத்துதான்...
பட் மற்ற படி படத்துல நடிச்சவங்களில் எல்லோரும் நல்லாவே நடிச்சி இருக்காங்க... ஃபை
ஃபை பாட்டு ரம்யா நபீசன் திறமையை மெச்ச வேண்டிதான் இருக்கின்றது... அந்த பாடலில்
வெற்றிலை பாக்கு போட்டு கண்டாங்கி சேலை காட்டி பி,சி ரசிகர்களை திருப்தி படுத்த
நடன இயக்குனர் முயன்று இருக்கின்றார்..
அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்
என்றே சொல்ல வேண்டும்....
ஒத்தக்கடை
ஒத்தக்கடை பாடலில் இமான் ரசிக்க வைக்கின்றார்...
அது மட்டும் அல்ல... பாடல் ஆரம்பிக்கு
முன் வரும் இசையில் தமிழ்சினிமாவின் பிராண்ட் டான்ஸ்ஆனா இடுப்பை வெட்டி ஆடும் அந்த ஸ்டெப்பை நன்றாகவே
ஆடி இருக்கின்றார்கள்.. அதுவும்
சென்டரில் ஆடும் அந்த பெண் ரொம்ப எனர்ஜியோடு ஆடி இருக்கின்றார்...
மதியின்
ஒளிப்பதிவில் எனக்கு பிடித்தது.... கோவில்
பாடல் காட்சி... காரணம்
எத்தனை லைட்டை போட்டாலும் பவுன்ஸ் ஆகாமல் லைட்டை பாறை கற்கள் இழுத்துக்கொள்ளும் அதில்
மிக அதிகமான பேக் லைட் சோர்ஸ் கொடுத்து மிக அழகாக
அசத்தி செல்லுலாய்ட்டில் பதிய வைத்து இருக்கின்றார் மதி.
ஆண்டனி எடிட்டிங் அசத்தல்
முக்கியமாக பை பை சாங்....
எதிர்நீச்சல் அப்பாவி அப்பா பாத்திரத்தில் நடித்தவர் இந்த படத்தில் மெயின் வில்லன்... அதே
போல படம் பார்க்கும் போது பீர் பாட்லால்
குத்தும் போது நாமே குத்தும்
உணர்வை ஏற்ப்படுத்தியது... அது படம்
பார்த்த எத்தனை பேருக்கு ஏற்ப்படுத்தியது என்று தெரியவில்லை...தெரிந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்... அவன் கெட்டவன்...
அவனிடம் இருந்து ஒரு அப்பாவி நல்லவன் தப்பிக்க
வேண்டும் இதுதான் பொது மனநிலை... அது எல்லோருக்கும் கேட்ச் ஆகி இருந்ததா? என்பதே
என் கேள்வி.
==============
படத்தின் டிரைலர்.
============
படக்குழுவினர் விபரம்
Directed by Suseenthiran
Produced by Vishal
Written by Suseenthiran
Bhaskar Sakthi
Starring Vishal
Vikranth
Lakshmi Menon
Bharathiraja
Music by D. Imman
Cinematography R. Madhi
Editing by Anthony
Studio Vishal Film Factory
Distributed by Vendhar Movies
Release date(s)
November 2, 2013
Running time 145 minutes
Country India
Language Tamil
Box office
INR24.54 crore
===========
பைனல்கிக்...
ஏற்கனவே சலித்து
புளித்து .....பார்த்த கதைத்தான் என்றாலும் பிரசன்டேஷனிலும், நடிப்பிலும்
இயக்குனர் சுசீந்திரன் மற்றும் விஷால்
கரையேறி இருக்கின்றார்கள் என்றே சொல்ல
வேண்டும்... கண்டிப்பாக ஒரு முறை
பார்க்கலாம்....
=============
படத்தோட ரேட்டிங்...
பத்துக்கு ஏழு.........
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
=============
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
படம் இன்னும் பாக்கல... உங்க விமர்சன பதிவு சூப்பர்..
ReplyDeleteம்ம்
ReplyDeleteஜாக்கி அண்ணே அது ரம்யா நபீசன் இல்ல லக்ஷ்மி மேனன்... எப்ப பாத்தாலும் ரம்யா நபீசன் ஞாபகம் தானா.... :-P
ReplyDeleteSong was sung by Ramya Nambeesan
DeleteActually song was sung by Ramya, Jackie anna is right.
Deleteoh.. nandrigal nanbare...
Deletevishal is not police in samar. that was sathyam
ReplyDeleteEnna sir, beer you had while writing this one... And you have not mentioned anything about Vikranth acting?
ReplyDeleteபாப்போம்...
ReplyDeleteசூப்பர் அண்ணே.... இங்க இப்போ தான் தியட்டர் கிடைச்சிருக்கு படத்துக்கு.... அழகுராஜாவ தூக்கிட்டாங்க.....
ReplyDeleteஹி ஹி.... ஹாட் ஹாட்டார் ஹாட்டஸ்ட் ல பின்னாடி நிக்கிறவர் என்ன அண்ணே பண்ணுறார்.......
Interesting movie review. Thanks.
ReplyDeleteThe video of Vishal dancing in saree is impressive. Your comments on that video are totally justified.
@Kanib : Athu Ramya Nambeesan than... She sang this song.
ReplyDeleteoh.. nandrigal nanbare...
Deleteenakkum same feeling..beer bottlelala kuthum pothu
ReplyDeleteஜாக்கி அண்ணே அது என்மொ அண்ணே மதுர ல1 நல்லவன் கூடவா இல்ல யலறும் ரத்த வறீ புடிச்சிய மீருகம் வாலும் மதுர....?
ReplyDeleteவிமர்சனத்துக்கு நன்றி.
ReplyDeleteஆமாம் பீர் சாப்பிட்டு அப்பறம் குவாட்டர் சாப்பிட்டுட்டு எழுதினேன்... நன்றி.
ReplyDeleteசுமா... இது சினிமா லுலுலாயி.... நல்லவங்க நிறைய பேரு மதுரையிலதான் வாழறாங்க..
ReplyDelete