METPO/ரஷ்யா/மெட்ரோ ரயில் நீச்சல்.




 சென்னையில இன்னும் கொஞ்சம்  நாளில் மேட்ரோ ரயில்  வந்து விடும்
அந்த அனுபவம் சென்னை வாசிகளுக்கு புதுசு... டெல்லியில் சுரங்க ரயில் இருக்கின்றது.. ஆனால் நம்மவர்களுக்கு சுரங்க ரயில் அனுபவம் கொஞ்சமும் இல்லை. ரஷ்யாவில் ஸ்வஸ்த்திக் வடிவில் எல்லாம் ரயில் பாதைகளை அமைத்து இருக்கின்றார்கள்...


நம்ம ஊர்ல எல்லாம் எல்லாம் நேரான பாதைகள்தான்.. அனால் ரண்யாவில் பூமிக்கு அடியில் கோலம் போடுவது இஷ்டத்துக்கு ரூட் போட்டு  வைத்து இருக்கின்றார்கள்... பாருங்கள் இந்த படத்தை இப்படி ஒரு ரூட் சென்னையில் போட்டா எப்படி இருக்கும்...


ரஷ்யாவின் இதயதுடிப்பு இது ன்னு சொன்னா கண்டிப்பா நம்புவிங்கன்னு  நம்பறேன். அந்த பாதையில் பிரச்சனை வந்தா?-

=================
METPO/ரஷ்யா/படத்தின்  ஒன்லைன்.

மேட்ரோ ரயில் பாதையில் ஆத்து  தண்ணி பூந்தடுச்சின்னா?  இதான் படத்தோட ஒன்லைன்.
==================
METPO/ரஷ்யா/ படத்தின் கதை என்ன?


ரஷ்ய ஆக்டத் பேரு எனக்கு தெரியலை பட் கதையை அப்படியே சுருக்கமா சொல்லிக்கின்றேன்... ஒரு பிரபலமான  டாக்டர்.. அவருக்கு  அழகான மனைவி ஒரு பொண்ணு... பொண்டாட்டி வேலை பார்க்கறா...   வெளியூருக்கு  போய் இருக்கா... ஆனா இரண்டு நாள் முன்னடியே  சொந்த ஊருக்கு வந்துட்டாலும்,  வீட்டுக்கு வரமா... உடம்புல ஒட்டுதுணி இல்லாம  இன்னோருத்தன் கூட மேல ஒக்காந்து மேட்டர் பண்ணிக்கிட்டு இருக்கா... அவன் சொல்லறான்..

 நீ உன் புருசன் கிட்ட இருந்து இன்னைக்கு டைவர்ஸ் வேணும்ன்னு சொல்லிடுன்னு சொல்லி அவளை அவ  வீட்டுல டிராப் பண்ணிடறான்.. அனா அதுக்கு முன்ன பொண்ணு ஸ்கூல்ல விட டாக்டர் பெண்ணை அழைச்சிக்கிட்டு மெட்ரோ ரயில்ல போறார்... கள்ளக்காதலியை இறக்கி விட்ட போர்ட்  மீட்டிங் அட்ட்ன் செய்யலாம்ன்னு பார்த்தா டிராபிக்.. அவனும்  அந்த டிரெயினில் ஏறுகின்றான்.. இவுங்க போறாதா காலம் மெட்ரோ  சுரங்க ரயில் பாதையில்  ஆத்து தண்ணி பூந்துடுச்சி எப்படி தப்பிக்கறாங்க, டாக்டர்  பொண்டாட்டி டைவர்ஸ் அப்ளை பண்ணலா என்பதை வெண்திரையில் பாருங்கள்.
================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


மேட்ரோ சுரங்க ரயில்தான் கதைக்களம்.. அதை வைத்துக்கொண்டு ஆக்ஷன் கில்லி  அடித்து இருக்கின்றார் இயக்குனர்.


 மேட்ரோரயில் விபத்தையும் அது எப்படி  எல்லாம் உள்ளே இருக்கும் மக்களை காயபடுத்துகின்றது என்பதை 96 பிரேமில் மிக டிடெய்லாக சொல்லி இருக்கின்றார்கள்..
ஒரு விபத்து நடந்த உடன் என்னவெல்லாம் நடக்கும் மக்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அழகாக விவரித்து எடுத்து இருக்கின்றார்.. முக்கியமாக கண்ணாடியை ஒரு பெண்மணி ரொம்ப நேரம் உடைத்துக்கொண்டு இருக்கும் காட்சி..


 சரி விபத்து நடந்து விட்டது என்று இல்லாமல் அதன் பிறகு சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் என்று டிராவல் ஆகும்  திரைக்கதை சான்சே இல்லை.


விபத்து நடந்த உடன் திருடும் ஒரு பையன்... மனநலம் கழன்றி திரியும்  பெண்... சற்று நேரம் முன் மேக்கப் கலையாமல் இருந்த ரத்தசகதியில் எப்படி குளிக்கின்றார்கள் என்பது செம டீடெயிலிங்..



ஆஸ்துமா பெண் அவளை கப்பாற்றும் கைடு என்று  அந்த போர்ஷன் அருமை.



முடிவில் கள்ளகாதலனா,-? அல்லது புருஷனா என்று ஒரு டுவீஸ்ட் அந்த காட்சி ஏ கிளாஸ்...

டாக்டர் ஒய்ப் செம பிகர்......


==============
 படத்தின் டிரைலர்..


================
படக்குழுவினர் விபரம்.



Directed by
Anton Megerdichev


Produced by
Sergey Kozlov  
Igor Tolstunov

Original Music by
Yuriy Poteenko

Cinematography by
Sergey Astakhov


==============
பைனல்கிக்.
இந்த படம் பார்க்கவேண்டிய படம்..  என்ன இரண்டு மணி நேரத்துக்கு மேல் இழு இழு என்ற இழுத்து கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றார்கள்...   இன்னும் ஷார்ப்பாக நருக்கி இருந்தால் பார்த்தே  தீர வேண்டிய லிஸ்ட்டில் வந்து இருக்கும்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

4 comments:

  1. படத்தின் ட்ரெயிலருக்கு பதிலாக முழுப்படத்தின் இணைப்பையே குடுத்தமைக்கு மிக்க நன்றிகள்...

    ReplyDelete
  2. இந்த படமெல்லாம் எங்கதான் பாக்கறீங்க பாஸ்..சென்னையில் ஒருசில தியேட்டர்களில் போடுவார்களோ?

    ReplyDelete
  3. 96 fame 96 framenu solringalae bossu .... apdina yena framenu konjam detaila solunga bossuu.......

    ReplyDelete
  4. அது ரொம்ப தப்புங்க... அதனால எடுத்திட்டேன்...

    யூடியூப் நண்பர்களிடம் இரவல் வாங்கி அல்லமு நண்பர்கள் டவுன்லோட் செய்து நன்றாக இருந்தால் கொடுப்பார்கள்.. கலிய பெருமாள்... நிங்க எனக்கு போன் செய்யுங்க..

    சிவா ஸ்லோமோஷத்ன் 96 பிரேம் அதுல ஸ்லோமொஷன் ஸ்பீடுக்கு ஏத்தது போல டிபரன்ட் ஸ்பிட் இருக்கும் அம்புட்டுதான்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner