Bez wstydu (2012)உலகசினிமா/போலந்து/வெட்கமில்லாதவர்கள்.
சமுகத்துக்காக நம் வாழ்க்கையை வாழ்கின்றோம்...
நமக்கு பிடித்த வாழ்க்கையை நம்மில் பலர் வாழ்வதில்லை... அப்படியே வாழ நினைத்தாலும் இந்த சமுகம்  நம் வாழ்க்கையை வாழ விடுவதில்லை.

பெண்ணாக இருப்பவள் இரண்ம்டாம் தாரமாக வாழ்க்கையை வாழ நேர்வது போன்ற கொடுமை இந்த உலகத்தில் இல்லை.

 எல்லாவற்றிர்க்கும் காம்ரமைஸ் செய்து கொள்ளவேண்டும்...தன் சுக துக்கங்களை இழக்க வேண்டும்...சுயமரியாதையை நல்லநாளில் குழி தொண்டி புதைத்து விட்டு இரண்டாம்தாரமாக வாக்கப்படவேண்டும்.... நல்லவனாக இருந்தால் பிரச்சனை இல்லை... 

ஆனால்  இரண்டாம் தாரமாக ஒருவனிடம் வாழ்க்கையை கொடுத்தால்  அவன்  கெட்வனாக இருந்து தொலைத்தால் புலிவால் பிடித்த கதையாக  அந்த வாழ்க்கை நரகத்தை கொடுத்து விடும்...

=================
Bez wstydu (2012) படத்தின் ஒன்லைன்.

வறுமையில் சிக்கி இருக்கும் பெண் சந்திக்கும் அனைத்து  ஆண்களும் ஏமாற்றி விட அவள் எடுக்கும் முடிவு என்ன என்பதுதான் இந்த படத்தின் ஒன்லைன்.

==============

 Bez wstydu (2012) படத்தின் கதை.

தான் வாழ்ந்த  நகரத்துக்கு திரும்ப வருகின்றோன் டெட்டி, தான் அதிகம் நேசிக்கும் அக்காவை(அன்கா) தேடி வருகின்றான்.. ஆனால் வந்த உடன் முதல் கேள்வி எப்போது கிளம்ப போகின்றாய் என்பதாய் இருக்கின்றது... அவளுக்கு கிடைத்த  பாய் பிரண்டுகள் எல்லாம் காரியம் முடிந்த உடன் கை கழுவி விட்டு செல்லும் நபர்களாக இருக்கின்றார்கள்...

தற்போது  இரண்டு பிள்ளைகள் இருக்கும் ஒரு  பிசினஸ்மேனோடு அவள் கதையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றாள்....ஆனால் அவன்  அவளிடம் உண்மையாக இல்லை... பணக்கஷ்டத்தில் இருக்கும் அவளுக்கு வேறு   வழியில்லை...வீட்டை விட்டு எப்போது கிளம்ப போகின்றாய் என்கின்றாள்  அக்கா...ஆனால் ஒரே வயிற்றில் பிறந்தாலும் இரண்டு பேருக்கும் அப்பா வேறு  வேறு... அவன் அன்காவை  அதிகம் காதலிக்கின்றான்... 

முடிவு என்ன என்பதை வெண்திரையில்...
===============  
படத்தின் கதை என்ன,

இரண்டு பிள்ளைக்கு தகப்பன் என்பது தெரிந்தும் அவனோடு அன்கா வாழ்கின்றாள் என்பதை டெட்டி பார்க்கையில் வெறுத்து  போகின்றான்...

அவன் ஒழுங்கானவன் இல்லை என்பதை அவன் அக்காவுக்கு உணர்த்தும் காட்சி ஜாலியான நகைச்சுவை....

அக்கா வீட்டில் இல்லாத  நேரம்  வேறு ஒரு பொண்ணுடன் உறவு வைத்துக்கொள்வதை அதுவும் அவள் அதிகம் நேசிக்கும் ஒருவன் அப்படி நடந்துகொள்வதை டெட்டிகையும் களவுமாக பிடித்து கொடுப்பதும்...வேறு வழியில்லாமல்  அதை மன்னித்து அவனோட திரும்ப வாழ்க்கையை தொடங்கும் அளவுக்கு அவளின் வறுமை இருக்கின்றது...

கரண்ட் பில்  கட்ட கூட காசு இல்லாமல் இருப்பதும்....ரீடிங் எடுப்பவன் காசு இல்லை என்றால் பரவாயில்லை நீ என்னிடம் வா என்று அவள் மார்பை அழுத்தி பார்த்து கண்ணடிக்கும் போது எதுவும் செய்ய முடியாமல் நிற்பதும் மனதில்  நிற்கும் காட்சிகள்.


டெட்டியோடு திடிர் சினேகம் அகும் இம்ரானா என்ற இளம் பெண்ணும் இவள்  மேல் காதலாய் அந்த பெண்   இவனை  சுற்றி வருவதும் அழகான கியூட் காதல் கதை.
தன் மீது  தன் தம்பிக்கு பாசம் இருந்தாலும் இதில் காமம் கலந்து இருப்பதை பார்த்து விட்டு அன்கா  விலகி செல்லும் காட்சிகள் அழகு ..

நம்பியவர்கள் அத்தனை பேரும் மோசம் செய்ய.. இரண்டு பிள்ளை இருப்பவன் என்று தெரிந்தும் அவனோடு வாழலாம் என்று  நினைத்தாலும் இன்னும் பலருடன் தன்னை படுக்க நிர்பந்திக்க படும் போதும், இந்த சூழலில் தன்னை நேசிக்கும் தம்பியிடம் அசாதராண சூழலில் அவனோடு உறவு கொள்ள...

இப்போது சமுகம் அவர்கள் இருவரையும்  பார்த்து என்ன சொல்லும்..?

வெட்கமில்லாதவர்கள் என்று...

எல்லோரும் கிடைப்பது போன்ற ஒரு சாதரண வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஒரு பெண்ணை நேசம் இல்லாத ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்க....அவளை தடுமாற வைத்த சமுகத்தில் உள்ளோர் வெட்கமில்லாதவர்களா? அவர்கள் வேட்கமில்லாதவர்களா? என்பதாக  இந்த தலைப்பை வைத்து இருக்கின்றார் இயக்குனர்.

Bez wstydu எனும் போலந்து வார்த்தைக்கு அர்த்தம்.... வெட்கமில்லாதவர்கள்.

அவர்கள் என்னவானார்கள் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடும் கிளைமாக்ஸ்.,

இந்த படம் பல உலகவிழாக்களில்   நாமினேஷன் கேட்டகிரியல் தேர்வு  பெற்றது.
====================
படத்தின் டிரைலர்.

===============
படக்குழுவினர் விபரம்.
Species           dramatic film
Year of manufacture   2,012
Release Date  May 7, 2012 August 3, 2012

Country of production Poland
Language        Polish
Duration          80 min
Direction          Filip Marczewski
Scenario          Gregory Łoszewski
The main roles            Matthew Kościukiewicz , Agnieszka Grochowska , Paul Krolikowski

Music  Paul Mykietyn
Photos Simon Lenkowski
Distribution      World Cinema


================
பைனல்கிக்.

இந்த படம் பார்க்கவேண்டிய படம்.... மிக மெதுவாக நகரும் திரைக்கதை.. வயதுக்கு வந்தவர்கள் இந்த படத்தினை பார்க்க பரிந்துரைக்கபடுகின்றார்கள்.

==========
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

7 comments:

 1. எங்கதான் பாஸ் கிடைக்குது இந்த படமெல்லாம் உங்களுக்கு..உங்களுக்கு மிகவும் பொறுமை அதிகம்..வேற்று மொழி படங்களை ரசனையுடன் பார்க்க பொறுமை அவசியம்..யூ ஆர் கிரேட் தலைவா.

  ReplyDelete
 2. Jackie na Wenevr u post review abt movie...
  PLz post the torrent link also...

  ReplyDelete
 3. அன்பின் நண்பர் ரிப்ரெஷ்... படத்தினை அறிமுகபடுத்துவது மட்டுமே என் வேலை.. தேடி பிடித்து பார்ப்பது உங்கள் வேலை...நீர்நிலையை காட்டிய பின்பும் நீச்சல் அடிக்கவும் கற்றுக்கோடுக்க வேண்டும் என்றால் எப்படி? முடியலை :-)

  ReplyDelete
 4. Jackie next film pls see "Human centepede" and review it. waiting for ur style review.

  ReplyDelete
 5. //அன்பின் நண்பர் ரிப்ரெஷ்... படத்தினை அறிமுகபடுத்துவது மட்டுமே என் வேலை.. தேடி பிடித்து பார்ப்பது உங்கள் வேலை...நீர்நிலையை காட்டிய பின்பும் நீச்சல் அடிக்கவும் கற்றுக்கோடுக்க வேண்டும் என்றால் எப்படி? முடியலை :-)

  அதானே மேய்ச்சல் நிலத்தை காட்டிட்டா போயி மேய வேண்டியதுதானே , புல்லு புடுங்கி வாயில வையின்னு சொன்னா எப்படி? முடியலை ஜாக்கி....

  ReplyDelete
 6. //எங்கதான் பாஸ் கிடைக்குது இந்த படமெல்லாம் உங்களுக்கு
  அண்ணன் வலை வீசி பிடிக்கிறார் .. இன்டெர்நெட் என்னும் வலை ...

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner