
சென்னை நகரெங்கும் உச்ச நடிகர் ரஜினி நடிக்கும் குசேலன் பட சுவரொட்டிகள் இப்போதுதான் பார்க்க நேர்ந்தது,
அதில் பசுபதி என்ற நடிகர் கூட நடிக்கிறார் போல் தெரிகிறது. படத்தில் நடிக்கவில்லை என்றால் பட போஸ்டரில் வரமுடியுமா? என்ன..
பாடல் வெளியீட்டு விழாவில் கூட ரஜினி அவர்களின் படம் தவிர வேறு எவருடைய படமும் அதில் இல்லை,
குசேலன் கதை என்ன என்று சிறு வயது முதலே நன்றாக தெரியும் அவல் கொடுத்த கதையும் அல்வா கொடுத்த கதையும் எல்லோருக்கும் தெரிந்தததே...
அதே போல் ரஜினி அங்கிள் இங்க இங்க என்று அஹஹ என்று அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில்சிரிக்குமே அந்த பொண்ணு பேரு என்ன? மீனாவா அந்த பொண்ணு கூட நடிச்சிருக்குப்பா...
இருப்பினும் வியாபார தந்திரத்துக்காக பசுபதி படம் பாடல் வெளியீட்டு விழா சவரொட்டியில் விடுபட்டு இருக்கலாம்
இப்போதாவது பசுபதி படத்தை சுவரொட்டியில் சேர்த்தார்களே அதற்க்காக உச்ச நடிகர் ரஜினிக்கும், பெருமை நிகர் நிறுவனமான கவிதாலயா நிறுவனத்துக்கும் என் நன்றிகள்
சினிமா ஒரு கூட்டு முயற்சி என்று எங்கோ படித்ததாக ஞாபகம்...
இந்த சனியம் புடிச்ச ஞாபகம் இந்த மாதிரி வரி எல்லாத்தையும் சுதி மதி இல்லாம ஞாபகபடுத்தி தொலைக்குது
அன்புடன்/ ஜாக்கிசேகர்
அதுதான் பசுபதியை விட்டே பதில்சொல்ல விட்டுடாங்களே 'ரஜினிக்கு பெரிய மனசு..அவர் படத்துல எனக்கு சான்ஸ் கெடச்சதுக்கு குடுத்து வெச்சிருக்கணும்னு' இவங்ககிட்ட எல்லாம் நியாயத்தை எதிர்பார்த்தா எப்படி ஜாக்கி..
ReplyDeleteபதிவு போட்ட அடுத்த நொடியே பதில் போட்ட வெண்பூவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் அதிலும் அற்தமான நக்கல் வேறு
ReplyDelete:-)))
ReplyDelete//இப்போதாவது பசுபதி படத்தை சுவரொட்டியில் சேர்த்தார்களே அதற்க்காக உச்ச நடிகர் ரஜினிக்கும், பெருமை நிகர் நிறுவனமான கவிதாலயா நிறுவனத்துக்கும் என் நன்றிகள்//
ReplyDelete:-))))
கிரி நன்றி
ReplyDeleteநன்றி சின்னா தங்கள் வருகைக்கு
ReplyDeleteசேகர்.படத்துக்கு ஹீரோ அவர் தானேங்க?? :-)). நல்ல நடிகர் பசுபதி.எனக்கு என்ன தோணுதுன்னா படத்துல பசுபதி "மட்டும்" தான் நடிச்சிருப்பார்.
ReplyDeleteபிரேம், நச்சு கமென்ட்
ReplyDelete//நல்ல நடிகர் பசுபதி.எனக்கு என்ன தோணுதுன்னா படத்துல பசுபதி "மட்டும்" தான் நடிச்சிருப்பார்.//
ReplyDeleteகாமெடி பண்ணாதீங்க.. அவரை மட்டும் நம்ம ஆளுங்க எல்லாம் நடிக்க விட்டிருப்பாங்கன்றீங்க.. எல்லாமே மொக்கையாத்தான் இருக்கப் போவுது.
இந்தியாவுல நல்லவர்களுக்கு எப்போதும் மரியாதை இல்லை, திறமையானவர்களுக்கு கூட
ReplyDeleteரஜினியும் பாலச்சந்தர் அவர்களின் நிறுவனமும் பண்றத கூட மன்னிச்சிடலாம், ஆனா இந்த படத்துக்கு ஒரு டைரடக்கர் இருக்காரே, அவர் நாளைக்கு வெளிவரப்போற அத்தனை பத்திரிக்கைகளிலும் ஒரு பேட்டிய தட்டி விட்டு பெரண்டு குமுறி அழுதிருப்பார் பாருங்க, அது எதுக்குன்னா ரஜினி சார் வாயையும்,நாக்கையும் இந்தப் படத்துக்காக வசனம் பேச உபயோகிச்சு அம்புட்டு கஷ்டம் பட்டிருக்காருன்னு. இருக்கட்டும், என்னிக்கிருந்தாலும் எங்க தல ஜே.கே.ரித்தீஷ் படத்த அவர் டைரக்ட் பண்ண வந்தாகனும்ல, அப்போ தெரிஞ்சுப்பார், சினிமா கூட்டு முயற்சியா, பொரியல் முயற்சியான்னு
ReplyDeleteரேப் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த பக்கம் காத்து அடிக்குது, இருப்பினும் நீங்கள் சொல்வது போல் வாசு கொஞச்ம் பந்தா பண்ணத்தான் போறார்
ReplyDeleteநம்ம ஆளு கமலுக்கு சமமா படம் இருக்கப்போறதில்ல.ரெண்டு புதிய ஸ்டைலு ஒரு பஞ்ச் டயலாக்குக்காக படம் பார்க்கப் போறேன்.
ReplyDeleteபார்த்து விட்டு சொல்லுங்கள், படத்தின் கதை எல்லோருக்கும் தெரிந்து இருப்பதால் சுவாரஸ்யம் சற்று குறைவாகதான் இருக்கும் என்பது என் எண்ணம்....
ReplyDeleteகுசேலன் படம் தோல்வி அடைந்தால் காரணம் அது பசுபதி படம் ரஜனி கெளரவ வேடம். வெற்றி அடைந்தால் காரணம் ரஜனி. இதே ஸ்டைலில் பாபாவையும் செய்திருந்தால் ரஜனிக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
ReplyDeleteDear Jaki
ReplyDeletewell said the reality of Rajini and KB they are well know how to make money.
so use write letter to KANADA cine field to release this film there.
pavam pasupathi :-((
puduvai siva
இதெல்லாம் சினிமா அரசியல்ல சாதா'ரணம'ப்பா
ReplyDelete:((((
சினிமா அரசியல்ல சாதாரனம்தான் ஆனால் பசுபதி பாவம் சும்மா விடவில்லை
ReplyDelete/
ReplyDeletejackiesekar said...
சினிமா அரசியல்ல சாதாரனம்தான் ஆனால் பசுபதி பாவம் சும்மா விடவில்லை
/
அது கரெக்ட் அதுதான் படம் சிரிப்பா சிரிச்சிடிச்சே
:)))))))))