(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை





(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)



கமல் பெங்களுருவில் வீடு பார்த்தான், எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க தனி வீடு பார்த்தான்...

ஒரு சுப யோக சுப தினத்தில் தமிழர்களை வெறுக்கும் கன்னட வெறியர்கள் மண்ணில் தன் சொந்தங்களை விட்டு குடி யேறினான்.

92ல் சொந்த நாட்டிலேயே ஈழத்தமிழர் போல் பெங்களுரி்ல் உதை வாங்கிய சம்பவங்களை அவனுக்கு கல்பாக்கம் நண்பர்கள் மூலம் ஞாபகப்படுத்தப்பட்டன..

இருப்பினும் ரோஜா படத்தில் எஸ் வி சேகர் அப்பா மதுபாலாவிடம் குழி பணியாரம் கேட்டு விட்டு, ரிஷி இந்த நேரத்தில் உன்னை காஷ்மீர் அனுப்பறத நினைச்சா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்பர். அதற்க்கு நம்ம அரவிந்சாமி, “காஷ்மீர் போக ஏன் சார் பயப்படனும், காஷ்மீர் நம்ம இந்தியாவுலதான் சார் இருக்கு”என்பார் அந்த டயலாக் எல்லாம் நினைத்து மனதை தேற்றிகொண்டான்..

வீடு குடியேறிய போது எல்லா தேவையான பொருட்களையும் கமல் அம்மா,அப்பா வாங்கி வைத்தார்கள், நிரு பெண்வீட்டு பொருளாக ஏதும் எடுத்து வராததால் எல்லா பொருட்களும் வாங்கி வைத்தார்கள்...

கமலும் நிருவும் ரொம்ப சந்தோஷமாக வாழ்வை துவங்கினார்கள். அது காங்கிரஸ் இடதுசாரி கூட்டனி போல் இருந்தது...கமலுக்கு ஒரு பழக்கம் இருந்தது தினமும் வேலை விட்டு வந்து எந்த நேரமாக இருந்தாலும் அவன் அம்மாவுக்கு போன் செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தான்

கிழே பேசும் அனைத்து டயலாக்குகளும் கமலும் நிருவும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டவை, எழுதும் எனக்கு சரியாக ஆங்கிலம் தெரியாததால்,அவரவர்கள் தங்கள் மனதில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொள்ளவும் (சாரி பார்த டிஸ்டபண்ஸ்)


“வீட்டுல குத்து கல்லு மாதிரி இருக்கேன் என்னை சாப்பிட்டியா, தூங்கினாயான்னு ட கேட்காம அப்படி என்ன அம்மா புன்ளைக்கு அப்படி என்ன கொஞ்சல் ”

“நிரு நான் ஒன்னும் எவகிட்டயும் பேசல எங்க அம்மா கி்ட்டதான் பேசனேன்...”

நிருவுக்கு தனிமை தந்த வெறுப்பும் தான் அம்மா ,அப்பாவிடம் பேச முடியவில்லையே என்று வெறுப்பும் கோபமாக வெடித்தன...

காங்கிரஸ் இடதுசாரி பிரச்சனை அனுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டது போல் கமல் நிருவுக்கும் கமல் அம்மாவால் பிரச்சனை ஏற்பட்டது..

எல்லா விஷயங்களையும் கமல் அம்மாவிடம் கேட்டு கேட்டு செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை

அழகிரிக்கு தயாநிதி மாறனை பிடிக்காதது போல் நிருவுக்கு கமல் அம்மாவை பிடிக்காமல் போனது.

நிரு தனிமையை விரட்ட பெங்களுருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள் .கமல் ஏதும் மறுப்பு சொல்லவில்லை.. மாதம் 15000சம்பளத்திற்க்கு சேர்ந்தாள்.

கமல் சின்சியாரிட்டியை பார்த்து அவனுக்கு பிடித்தம் எல்லாம் போக 60,000 கையில் வந்தது,நிருவின் சம்பளம் எல்லாம் சேர்த்து மாதம் 75,000 வந்தது..

கமல் கார் வாங்கினான், கார் வாங்கும் முன்பே தன் நண்பகள் கார் ஓட்டி இருப்பாதால் கார் அவனுக்கு பெங்களுர் சாலைகளில் அவன் சொன்ன பேச்சு கேட்டது.

நேராக அவன் தன் மனைவி வேலை செய்யும் அலுவலகத்துக்கு சென்றான். நிருவுக்கு கமல் கார் வாங்கியதை சொல்லவில்லை சின்ன சஸ்பெண்ஸ் மற்றும் அவள் அழகை ,சாரி அவள் கண் விரியும் அழகை ரசிக்க நினைத்தான்.

நிரு சீ த்ரு சாரியில் ஹை ஹில்சுடன் ஒய்யாரமாக கார் அருகே நடந்து வந்தால், யாரோட கார் இது கமல் ?என்றாள். என் எஜமானியம்மாவுக்கு என் பரிசு என்றான் கமல்..
உலக அழகி பட்டம் வாங்கியதும் ஐஸ்வார்யாராய் உட்பட இரண்டு கையையும் தாடையில் வைத்து அழகிகள் சிரிப்பார்களே அதே போல் நிருவும் சிரித்தால்...


கமல் தன் மனைவியுடன் மைசூர் ரோட்டில் 130கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்தான், நிரு வயிற்றை பிடித்துக் கொண்டு காரை ஓரம் நிறுத்த சொன்னாள்,காரை ஓரம் நிறுத்தியதும் கார்விட்டு இறங்கி நிரு வாந்தி எடுத்தாள்

கமல் முதலில் அது சாதரண வாந்தி என்றுதான் நினைத்தான் அப்புறம் அது கமல் நிரு இருவரும் சேர்ந்து செய்த ஓவர்டைம் வேலையால் வந்த வாந்தி என்பது நிருவின் வெட்க புன்னகையால் அறிந்து கொண்டான்.

கமல் அன்று ரொம்பவும் சந்தோஷமாக இருந்தான்.....தற்போதைக்கு நம்ம சோனியா காந்தி போல...

11 comments:

  1. //கமல் தன் மனைவியுடன் மைசூர் ரோட்டில் 130கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்தான்//

    கதையும் அதே வேகத்தில்தான் போகுது... நடுநடுவில அரசியல் துணுக்ஸ் சூப்பர்...

    ReplyDelete
  2. வெண்பூ தொடர்ந்து என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து பாரட்டுக்கு உங்களுக்கும் ,மங்களுர் சிவாவுக்கும் என் நன்றிகள்

    ReplyDelete
  3. /
    அது கமல் நிரு இருவரும் சேர்ந்து செய்த ஓவர்டைம் வேலையால் வந்த வாந்தி என்பது நிருவின் வெட்க புன்னகையால் அறிந்து கொண்டான்.
    /

    நல்ல புன்னகை ! அடிக்கடி மலரட்டும்!.

    ReplyDelete
  4. /
    jackiesekar said...

    வெண்பூ தொடர்ந்து என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து பாரட்டுக்கு உங்களுக்கும் ,மங்களுர் சிவாவுக்கும் என் நன்றிகள்
    /

    எப்ப வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா கண்டிப்பா வருவேன்னு முன்னாடியே கமெண்ட் போட்டுட்டீங்க!

    நன்றி ஜாக்கி சேகர்!

    ReplyDelete
  5. 7 ம் பாகம் நேற்று எழுதினேன் உங்க கமென்ட் ஏதும் வரல அதான்...இருந்தாலும் நீங்களும் வெண்பூ இரண்டு பேரும்தான் தொடர்ந்து படித்து வருகிறீர்கள்

    ReplyDelete
  6. அடிக்கடி மலர்ந்தால் இந்திய ஜனத்தொகை ஏறிவிடும் சிவா

    ReplyDelete
  7. //இருந்தாலும் நீங்களும் வெண்பூ இரண்டு பேரும்தான் தொடர்ந்து படித்து வருகிறீர்கள் //

    நீங்க நல்லா எழுதுகிறீர்கள் ஜாக்கி, நிறைய பேர் படிப்பார்கள் ஆனால் பின்னூட்டமிடுவதில்லை என்று நினைக்கிறேன். காரணம் நானே நான் படிக்கும் எல்லா பதிவுக்கும் பின்னூட்டமிடுவதில்லை :(

    (ஹிட் கவுன்ட்டர் சேர்த்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு உண்மை புரியும், 100 ஹிட் வந்தால் 5 பின்னூட்டம்தான் வரும்)

    ReplyDelete
  8. வெண்பூ பொதுவாய் சராசரியாக 150லிருந்து250 பேர் இந்த கதையை படிக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இது போல் யோசித்து எழுதும் விஷயங்களுக்கு கிடைப்பதில்லை, என்பதுதான் வருத்தம் அளிக்கிறது தொடந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் மங்களுர் சிவாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  9. //அடிக்கடி மலர்ந்தால் இந்திய ஜனத்தொகை ஏறிவிடும் சிவா//
    இது சரி

    ReplyDelete
  10. கதை கலக்கலாகப் போகுது....
    :)

    ReplyDelete
  11. நன்றி ஜெகதிஸ் உங்களை போன்றவர்களின் பாராட்டுதான் எல்லாவற்றிக்கும் காரணம்

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner