(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை




(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)




கமலுக்கு காமத்தீ பற்றிக் கொண்டது. அந்த தீ நிருவிடமும் தன் வேலையை காட்டியது.

அம்மாவை பார்க்கும் ஆசையும் நிருவை இருட்டில் பார்க்கும் ஆசையும் அதிகமாகி போனதால், கமல் வெள்ளி இரவே பேருந்து பிடித்து சனிக்கிழமை காலை சென்னை வந்து ஞாயிற்று கிழமை இரவு சென்னையில் பஸ் ஏறி விடியலில் பெங்களுர் இறங்கி காலை ஷிப்ட் என்றால் கண்ணில் ஊளையுடன் வேலைக்கு சென்று
இருக்கிறான்


கமல் போல் இன்றும் நிறைய சாப்ட்வேர் இளைஞர்கள்,இளைஞிகள் தன் பெற்றோர் மற்றும் தன் காதலனை பார்க்க வாரம் வாரம் சென்னையும், சென்னையிலிருந்து பெங்களுரும் செல்கின்றன.

இந்த சாப்ட்வேர் இளைஞர்களின் பாசத்தையும் காதலையும் தனியார் பேருந்துகள் மனசாட்சி இல்லாமல் பேருந்து கட்டணம் என்ற போர்வையில் கொள்ளை அடிக்கின்றனர்.

சென்னையிலிருந்து குளிர்சாதன ஏசி பஸ்ஸில் பெங்களுர் செல்ல தமிழக அரசு நி்ர்னயத்த கட்டண தொகை 325ரூபாய் ஆனால் எல்லா தனியார் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி இல்லாமல் 450ரூபாய வசூலிக்கிறார்கள்அதுவும் விசேஷநாட்களில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் . ஏசி இல்லாத பேருந்துக்கு600ரூபாய் கேட்கிறார்கள், இந்த சாப்ட்வேர்காரர்களும் மாத மாதம்பெருந்தொகையை இழக்கின்றனர் இதில் கமலும் விதி விலக்கல்ல

கமல் தான் செய்யும் வேலையை காதலித்தான் எல்லோரும் 8மணி நேரம் கணக்கு பார்த்து வேலை செய்த போது 10 மணி நேரம் ஆனாலும்தனக்கு கொடுக்கபட்ட வேலையை திறம்பட தவறில்லாதமல் செய்தான்.அதனால் டீம் லீடரிடம் நல்ல பெயர் எடுத்தான்.

எல்லா ஆண்களும் வேலை நேரத்தில் பெண்கள் போதையில் மிதக்க இவன் கருமமே கண்ணாக இருந்ததால் வெகு சீக்கரத்தில் டீம் லீடர் ஆனான் .மாதம் 30,000 சம்பளம் வாங்கினான்.

பெங்களுர் பெண்கள் ஒருசிலரை தவிர எல்லோருக்கும் பாய்பிரன்ட் இருந்தார்கள். ஒருமாதம் காதல் என்ற போர்வையில் நன்றாக சுற்றுவார்கள் இன்னும் இரண்டு வாரத்தில் கல்யாணம் செய்து கொள்ள போகிறோம் கமல் என்று சொல்வார்கள் ஆனால் அடுத்த மாதத்தில் அவனோட டேஸ்ட் ஒத்து வரலை அதனால நான் கல்யாணத்துக்கு முன்னமே நான் தப்பிச்சுட்டேன் தேங்காட் என்பார்கள். கமல் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்பான். எல்லாம் காசு தந்த சுதந்திரம், நான் மாதம் 20,000சம்பாதிக்கிறேன் என்னை யார் கேட்க முடியும் என்ற தெனா வெட்டு....

பெற்றோர்களாலும் கேள்வி கேட்க முடியவில்லை ,எங்கே கேள்வி கேட்டால் மாதம் வரும் பணம் கூட நின்று விடும் எனெனில்,எவன் எவன் கால்ல எல்லாம் விழுந்து வட்டிக்கு வாங்கி படிக்க வச்சவனுக்குதான் அந்த வேதனை தெரியும்.

கமல் தன் செலவு மாதம் பத்தாயிரம் போக மீதி 20,000 தன் அப்பாவிடம் கொடுத்து படிப்புக்கு வாங்கிய கடன்களை அடைக்க சொன்னான்.

நிருவை பெண் கேட்டு கமல் அவள் வீடு சென்றான், பெண் கேட்டான். நிருவின் பெற்றோர்கள் இடது சாரிகள் போல் விடாப்பிடியாக இருந்தார்கள்.

ஐந்து நாள் விடுப்பில் பெங்களுரில் இருந்து வந்த கமல் அழகிரி திடும என ராயல் கேபிள் விஷன் தொடங்கியது போல் கமல் நிருவை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தான்.

விஷயம் தெரிந்த நிரு பெற்றோர், மாறன் சகோதரர்களுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அழகிரி அறிவித்தது போல் நிருவின் பெற்றோரும் அறிவித்தனர்,.

கமல் தனது கல்யாணத்துக்கான வறவேற்பை பெங்களுரிலும் கல்பாக்கத்திலும் வைத்தான் கமலுக்கு வந்து குவிந்த பரிச பொருட்களே அதற்க்கு சாட்சி. கமல் நிறைய நல்ல இதயங்களை சம்பாதித்து வைத்து இருந்தான்,



கமலும் நிருவும் தேனிலவுக்கு சிம்லா போனார்கள். தேனிலவு சாப்டர் எழுத வேண்டாம். நானும் தமிழ்படங்கள் தம்பதிகள் பால் சாப்பிட்டு பிறகு அவர்களை காட்டாமல் கேமரா குழந்தை படத்தை காண்பிக்குமே, அதே போல் விட்டு விடுவோம் மீறி நான் தேனிலவு சாப்டர் எழுதினால் சாருநிவேகிதா போல் எழுதிகிறேன் என்பார்கள் எதற்க்கு வம்பு...? அல்லது தமிழ் மணத்தில் வார்த்தை பிரயோகம் தவறு என்பார்கள்.
நானும் நிறைய காமம் என்ற வார்த்தை பயண்படுத்தி இருக்கிறேன்....

காமத்தை ரசித்தபடியே காமத்தை எதிர்க்கும் நம்மவர்களிடம் இருந்து, நான் தப்பிக்க வேண்டும் அவ்வளவே...


(தொடரும்)
(பாகம் 1)
(பாகம் 2)
(பாகம் 3)
(பாகம் 4)
(பாகம் 5)

மற்ற பாகங்களை படிக்க விரும்புவோருக்காக மேலே.....

அன்புடன்/ ஜாக்கிசேகர்

6 comments:

  1. //தேனிலவு சாப்டர் எழுத வேண்டாம்.//

    இதை நான் வன்மையாகக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  2. வெண் ஜ்யோரம் சுந்தருக்கு ஏற்பட்டது எனக்கும் ஏற்பட வேண்டுமா?

    ReplyDelete
  3. *** போட்டு எழுதலாமாம் எழுதுங்க!

    :))))

    ReplyDelete
  4. சிவா , எங்கே போய் இருந்தீர்கள். பொதுவாக வரும் கமென்ட்டுகள் வராததால் ஒரு வேளை கதை ரொம்ப போர் அடிக்கிறதோ என்று நினைத்து விட்டேன்

    ReplyDelete
  5. /
    jackiesekar said...

    சிவா , எங்கே போய் இருந்தீர்கள். பொதுவாக வரும் கமென்ட்டுகள் வராததால் ஒரு வேளை கதை ரொம்ப போர் அடிக்கிறதோ என்று நினைத்து விட்டேன்
    /

    10 நாள் ஊரில் இல்லை அப்புறம் நீதான்பா இந்தவாரம் தமிழ்மண ஸ்ட்டாரு அப்படின்னுட்டாங்க அதனால கொஞ்சம் க்ரவுண்ட் வொர்க்ல பிசி அம்புட்டுதான்

    கதை அருமை, கலக்குங்க.

    ReplyDelete
  6. இன்னும் இரண்டுநாளில் எழுதுகிறேன் நன்றி சிவா

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner