ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம்
மலையாள படங்கள் எதையும் இப்போது விடுவதில்லை.. வாரத்துக்கு ஒரு பீல் குட் மூவியை கொடுக்கின்றார்கள். மகேஷின்ட பிரதிகாரம், டாவினின்டே பரிணாமம் இந்த வாரம் ஜேக்கப்பின்டே சொர்கராஜ்ஜியம். மலையாளிகள் மென்மையாக கதை சொல்வதில் அசத்துகின்றார்கள்..
ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் ஒரு உண்மை சம்பவம்.. இயக்குனர் வினீர் சீனுவாசனின் நண்பர் குடும்பத்தில் நடந்த விஷயத்தை மிக அழகான திரைப்படமாக உருவாக்கி இருக்கின்றார்..
ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் திரைப்படத்தின் கதை.?
ஜேக்கப் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளோடு தூபாயில் பிசினஸ் செய்து செட்டில் ஆன என்ஆர்ஐ இன்டியன் அழகான குடும்பம் பிசினஸ் லாசில் சிக்கி சின்னாபின்னமாகின்றது.. அதில் இருந்து ஜேக்கப் குடும்பம் மீண்டதா இல்லையா என்பதே ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் திரைப்படத்தின் கதை.
நிவின் மனிதர் படத்துக்கு படம் பின்னுகின்றார்… எப்படிடா காதலிச்சே என்று தங்கை கேட்கும் போது.. என்னோட பேஸ் என்னோட பாடி என்று சலும்பும் இடங்களில் ரசிக்க வைக்கின்றார்.
முதல் பாதில் சோம்பலாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் கலக்குகின்றார்
ஜேக்கப்பாக ரென்ஜி பனிக்கர்.. இந்த படத்தில் நிவின் அப்பாவாக நடிக்க இயக்குனர் கவுதம்மேனனை அழைத்தார்கள். ஆனால் அவர் நடிக்கவில்லை.. நடித்து இருந்தால் இன்னும் பெரிய ஸ்டார் அட்ராக்ஷன் கிடைத்துஇருக்கும்.
ஜெக்கப்பின் பாரியாளாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அசத்தி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..
அது எப்படி முடியும் என்று நின் நம்பிக்கை
இல்லாமல் கேட்க.. நான் ஜேக்கப் ஒய்ப்.. நான் ஒன்னும் சும்மா அடுக்களையிலே உட்கார்ந்து இல்லை எனக்கும் ஸ்டீல் பிசினஸ் தெரியும்..
அப்புறம் நீ ஜேக்கப் பையன் அப்புறம் என்ன சாதிக்கலாம் வா? என்று அழைக்கும் இடத்தில் ரசிக்க வைக்கின்றார்..
கார் டிரைவர் கேரக்டரில் வரும் உன்னி அங்கிள் அசத்தி இருக்கின்றார்… விறக்கபோகும் அந்த பென்ஸ் எப்படி வந்தது என்ற பின்கதையும்… அதற்கு பிறகு கொடுக்கும் பணத்தை தந்தை ஸ்தானத்தில் இருந்து கொடுப்பதாக சொல்லும் காட்சி நெகிழ்ச்சியின் உச்சம்.
படம் முழுக்க நெகிழ்ச்சி நெகிழ்ச்சி…ஷான் ரெஹ்மானின் இசை படத்துக்கு பெரிய பலம் இரண்டு பாடல்கள் அசத்தல் அந்த ஓனம் சாங்கும் ராம் சாங்கும்.
நெகிழ்ச்சியான பீல் குட் முவியை பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஜேக்கபினின்டே சொர்க ராஜ்ஜியம் படத்தை மிஸ் பண்ணாமல் பார்க்கவும்.. அதே போல பிசினஸ் செய்யும் குடும்பத்தினர் அனைவரும் கண்டிப்பாக குடும்பத்துடன் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் இது என்று பரிந்துரைக்கின்றேன்.
இந்த திரைப்படத்துக்கு ஜாக்கிசினிமாஸ் அளிக்கும் மதிப்பெண்… ஐந்துக்கு 3.75
ஜாக்கிசேகர்
09/04/2016
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
0 comments:
Post a Comment