என் மீதான அக்கறை கொண்ட நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும், அயனாவரம் அனந் கொஞ்சம் ஸ்பெஷல்…
உடன்பிறவா சகோதரனை போல நிறைய அட்வைஸ்கள் கொடுப்பார்…
சரியாக ஞாயிறு ஒன்றரை மணிக்கு சவுதியில் இருந்து போன் வரும்.. அந்த போனுக்காகவே இருக்கும் வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு அவருடைய போனுக்காக காத்திருப்பேன்
திடிர் என்று ஒரு போன் கால்… நான் சென்னைக்கு வரேன்… சபரிமலைக்கு போய் இருக்கியா?- என்றார்.
போட்டோவுல மட்டுமே ஐயப்பனை பார்த்து இருக்கேன்… நேரில் பார்த்தது இல்லை என்றேன்.. டேட் சொன்னார்…
ஒரு வாரத்துக்கு பிரி பண்ணிக்கோ என்றார்..
ஏங்க நானே ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் என்றேன்.….
வா அவர் பார்த்துக்குவார் என்றார்.…
என்னுடைய குருசாமியாக நின்று என்னை அழைத்து சென்றார்.
நான் ஏதோ ரயிலில் சபரிமலைக்கு போகப்போகின்றேன் என்று நினைத்தேன்… இல்லை. அவர் புதியதாக வாங்கி இருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ் ஒன்னில் செல்ல போகின்றோம் என்று நினைத்து கூட பார்த்ததில்லை..
வாழ்க்கையில் முதல் முறையாக ஐய்யப்பனை தரிசிக்க காரணமாய் இருந்தவர்… அதுவும் பிஎம்டபிள்யூவில் சென்று…
அது ஒரு பரவச நிலை…அங்கே தங்கியது இரண்டுமுறை ஐயப்பனை தரிசித்து எல்லாம் வாழ்வில் மறக்க முடியாத கணங்கள்.
பக்தி என்றால் அப்படியான பக்தியை நான் எவரிடத்திலும் நான் கண்டதில்லை.. ஐயப்பனை பார்த்த உடன் ஒரு ஆணுக்கு கண்ணீல் கர கர என்ற கண்ணீர் வழியுமா?
ஆனந் ஐயப்பனை தரிசித்த அடுத்து நொடி கதறினார்.
கண்களில் கண்ணீர் மடை திரண்டு கொட்டுகின்றது…
நான் ஆடிப்போய்விட்டேன்… எப்படிங்க..?
அப்படி ஒரு கண்ணீர் என்று வினவினேன்.
பொண்ணு பொறந்திட்டா ஜாக்கி…
சொந்தம் எல்லாம் எட்ட நின்னுச்சி.. கடன் பிரச்சனை, தொழிலில் சரிவு… ஐய்யப்பனை வந்து பார்த்துட்டு தோ பாரு உன்கிட்ட நான் சரணாகதி… என் கிட்ட எதுவும் இல்லை.. இனி உன் பாடுன்னு சொல்லிட்டு போயிட்டேன்..
இன்னைக்கு நினைச்சதை வாங்க அருள் வழங்கியவன் இந்த ஐயப்பன்… என்றார் எனக்கு ஒரு முறை சில்லிட்டது…
அதன் பிறகு செங்கனுர் பகவதி, குருவாயூர், என்று சுற்றி சென்னை வந்தோம்..மொத்தம் மூன்று இரவு நான்கு பகல்… மொத்தம் இரண்டாயிரத்து 500 கிலோ மீட்டர் பயணம்… ஆனந் மட்டுமே ஓட்டினார்.
வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.. தரிசனம் எல்லாம்…இன்று பிறந்தநாள் காணும் எனது உடன்பிறவா சகோதரர் ஆனந் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்… மலை போல் வந்த பிரச்சனைகள் பனி போல விலகவும் இனி வரும் காலங்களில் எல்லா நலமும் வளமும் பெற ஹரி ஹர சுதனை வேண்டிக்கொள்கிறேன்.
ஜாக்கிசேகர்05/04/2016
குறிப்பு காலையில் இருந்து வீட்டில் மின்சாரமும் நெட்கனெக்ஷனும் பாடாய் படுத்தி எடுத்த காரணத்தால் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்…
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நண்பர்க்கு!!!
ReplyDelete