Oyee tamil movie review | ஓய் திரைவிமர்சனம்




சிறு முதலீட்டு படங்கள் மற்றும் ஆர்ட்டிஸ் வேல்யூ இல்லாத திரைப்படங்கள்  மீதான காதல் எனக்கு எப்போதும் உண்டு.. அதுவும் வழக்கமான கதையாக இருந்தாலும் அதை  எக்சிகியூட் செய்யும் விதத்தில் உண்மையாக உழைத்து இருந்தாலே போதும்… அந்த படத்தை பற்றி கண்டிப்பாக  பேசலாம் என்பது என் அபிப்பராயம்..



ஒரு காலத்தில் பாலா என்ற இயக்குனர் விக்ரம் என்ற பெரிய ஆர்ட்டிஸ் வேல்யூ இல்ல்லாமல் லோ பட்ஜெட்டில்  இயக்கிய  திரைப்படம்தான்  சேது… இளையாராஜா என்ற   பெயர்  மட்டுமே  அறியப்பட்ட நபராக இருந்தார்… விக்ரம் அறிமுகமானவர் என்றாலும் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லாதவர்…ஆனால் கதை வித்தியாசமான கதை… மனதில் ஆணி அடித்து சட்டென கடந்து விட முடியாத  கதை சேது.. அதனால்  அந்த திரைப்படம் வெற்றி பெற்றது..


சிறு முதலீட்டு படத்தின் மூலம்  வெற்றிக்கொடி நாட்டி இன்று  தமிழ் சினிமாவின்   பெயர் சொல்லும்  இயக்குனர். பட்டியலில் பாலா பெயரும் இடம் பெற்று விட்டது. அதனால்தான் சிறு முதுலீட்டு படங்களில் ஒரளவுக்கு  நன்றாக இருந்தாலும்  அதனை பற்றி பேசுவேன்…

இந்த வாரம் வெளியாகி இருக்கும் ஓய் திரைப்படமும் அப்படித்தான்.
 கதை என்று பார்த்தால் ஜெயிலில் இருந்து அக்கா கல்யாணத்துக்கு  பரோலில் வெளிவரும் நாயகி ஸ்வேதா சந்தர்ப்பவசத்தால் நாயகன் வீட்டுக்கு செல்ல… அவர்தான் தன் மகன்  காதலிக்கும் காதலி  காயத்திரி என்று நினைத்து அவளை கொண்டாடுகின்றார்கள்…  சரி  உண்மையை சொல்லி விட்டு அக்கா வீட்டுக்கு செல்லலாம் என்று பார்த்தால் அவளோ நீ வந்தால் என் கல்யாணம் கெட்டு விடும் என்பதால் நாயகன் வீட்டிலேயே காதலி வேடத்தில் வளைய வருகின்றாள்..  ஒரு  நாள் குட்டு வெளியாக  நாயகி என்னவானாள் என்பதுதான் ஓய் திரைப்படத்தின் கதை.


நாயகனாக கீதன் அவருக்கான பாத்திரத்தை  மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்… முக்கியமாக சிலம்பம் எல்லாம் கற்று  உழைத்து இருக்கின்றார்…  படத்தின் முடிவில் நாயகியோ  பேசும்  காட்சியில் மனதில் நிற்கிறார்.


நாயகியா ஈஷா நடித்துள்ளார்.. நிறைய காட்சிகளில் அழகாக இருக்கின்றார்.. நடிக்கவும் செய்கின்றார்.. ஆனால் இடைவேளைக்கு பிறகு அவருக்கு மேக்கப்பில்  சொதப்பி இருக்கின்றார்கள்..

அர்ஜுனன் சங்கிலி முருகன் காமினேஷன் சில இடங்களில் சிரிப்பை வரவைக்கின்றன.


 படத்தின்  பெரிய பலம் பாஸ்கரன் கிளைமாக்சில் காதலை பற்றி  லெக்சர் வசனங்கள் நன்றாக இருந்தது… அதே போலஇளையராஜாவின்  இசை என்றாலும்  அவர் சாயல் அம்மன்  கோவில் பாடலில் அசத்தி இருந்தார்..

இந்த திரைப்படத்தை பிரான்சிஸ்* மார்கஸ் இயக்கி இருக்கின்றார்….  சலித்து போன கதையாக இருந்தாலும்  மேக்கிங்கில் குறைவைக்காமல் சுவாரஸ்யமாக இயக்கி இருக்கின்றார்

ஓய் திரைப்படம் எப்படி என்றால்.? சோத்து தட்டோட  டிவியில்   படம் பார்த்துக்கிட்டு இருப்போம்… திடிர்ன்னு பார்த்தா அந்த படம் சூர மொக்கையா இல்லாம பார்க்கறது போலவாவது இருக்கும்  இல்லையா..?  அப்படியான திரைப்படம்தான்  ஓய்.
இந்த திரைப்படத்துக்கு ஜாக்கி சினிமாஸ் அளிக்க கூடிய ரேட்டிங் 5க்கு 2,75 என்றாலும் மொக்கையாக இல்லாமல் சுவாரஸ்யமாக கொடுத்தமைக்கு 5க்கு மூன்று மதிப்பெண்கள்.

ஜாக்கிசேகர்

09/04/2016

வீடியோ விமர்சனம்




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
.

1 comment:

  1. அண்ணே.. அண்ணி ஊர்ல இல்லியா? ஒரே வாரத்தில நாலு படம்.. எப்புடி..?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner