ஆனால் இங்க தார்ரோட்டுல வெயில் அடிச்சி அது பவுன்ஸ ஆகி புட்ரஸ்ட்ல இருக்கற கால் விரல்கள் எல்லாம் சூட்டில் கருக ஆரம்பித்தன…கழுத்தில் ஏற்பட்ட வியற்வை ஆறு நடுமுதுகில் உள்ள வியர்வைகளோடு ஜமா சேர்த்துக்கொண்டு தண்டுவடத்தில் பயணித்து அது போகக்கூடாத இடம் எல்லாம் சென்று வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டு இருந்தன…
ஷேவ் பண்ணும் போதே எதிர் போட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெயில் உக்ரமாக காய்ந்து கொண்டு இருக்கின்றது…. பெங்களூரிலேயே 40 டிகிரின்னா.. நாம எல்லாம் எம்மாத்திரம்.
விஐயா போரம் மாலை கடக்கும் போது சில அழகான பெண்கள் கடந்து வெயிலின் வெப்பத்தை குறைத்தார்கள்..
நான் சரியாக வடபழினி போலிஸ் ஸ்டேஷன் சிக்னலை கடந்து விடவேண்டும் என்று விரைவாக சென்றுக்கொண்டு இருந்தேன்.. காரணம் 100 நொடிகளுக்கு மேல் காக்க வேண்டும்.. பாலம் வேலைகள் வேறு நடந்துக்கொண்டு இருப்பதால் பச்சை விளக்கு எரியும் முன் போய் விட வேண்டும் என்று துடித்தேன்..
ஆனாலும் பைக்கின் வேகத்தை கட்டுபாட்டில்தான் வைத்து இருந்தேன்.. காரணம் நம்ம ஆளுங்க எப்ப வேண்டுமானாலும் பப்பரக்கேன்னு வந்து நடு ரோட்டுல வந்து நிற்கும்… அவன் அடிபடக்கூடாதுன்னு பிரேக் அடிச்சி ஸ்கிட் ஆகி விழுந்து தொலைச்சா…..வெயிலில் போய் தரையில் விழுந்து சிராய்துக்கொள்வது போல பெருங்கொடுமை உலகில் எதுவும் இல்லை..
மிகச்சரியா துப்பாக்கியில் இருந்து விடுபட்டு விரைந்து பறக்கும் தோட்டா போல… அந்த ஆக்டிவா என்னை கடந்தது… என்னை விட வேகம் விழுந்தாலும் உதவிக்கு ஒரு பெருங்கூட்டமே ஓடி வரும்… புலான் தேவி போல முகத்தில் கட்டிக்கொண்டு இருந்த ஷால் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் சாம்பிராணி போட்டு முகத்தில் மயிலிறகால் வருடுவார்களே.. அது போல சீன் காட்டி விட்டு சென்றது….
இப்போது நானும் ஆக்சிலேட்டரை முடுக்கினேன்… ரெண்டு பேருக்குமே லக் இல்லை….ரெட் விழுந்தது… நான் சிம்ரன் ஆப்பக்கடை பக்கம்… ஆக்டிவா பூலான்தேவி போலிஸ்டேஷன் பக்கம்…
மெல்ல திறந்தது கதவு அமலா போல கண்கள் மட்டும் தெரிந்தன.. ஆனாலும் அழகான கண்கள்… கண்களில் என்ன அழகு என்கின்றீர்களா-? அடப்பாவிங்களா… சரி விடுங்க.. இந்த நேரத்தில் அதை விளக்க பெரிய பதிவு தேவை… அதனால் நெக்ஸ்ட்.
கண்களில் கூர்மை கொஞ்சம் அலட்சிய பார்வை… வேகமா வந்த என்னாலே போக முடியலை… நீ எப்படி போவ? என்பதாய் இருந்தது..
புருவம் திருத்தமாக இருந்தது..
இரண்டு நாளைக்கு முன்தான் புருவம் டோனி அன் கையில் 200 ரூபாய் கொடுத்து சரிப்படுத்தி இருக்க வேண்டும்…
பச்சைக்காக இருவரும் தவம் கிடக்க ஆரம்பித்தோம்…100இல் இருந்து முக்கி முக்கி 75க்கு வந்து இருந்தது..
தார்சாலையில் வெயில் பட்டு லைட் பவுன்சாகி கால்களை பதம் பார்த்துக்கொண்டு இருந்தன..
புட்ரெஸ்ட்டில் இருக்கும் காலுக்கு இப்படி என்றால் நடந்து போகுபவர்களின் நிலை..?
அவள் வண்டியை பேலன்ஸ் செய்ய என் பக்கம் காலை ஊன்றினாள். அப்போதுதான் அந்த காலை கவனித்தேன். வெள்ளாவியில் போட்டு வெளுத்தது போலான கால்கள் அது….
என் கால்களை கொஞ்ச நேரத்துக்கு முன்னே பெருமையோடு பாத்தேன் அதை சிறுமையாக நினைக்க கூடாது என்று முடிவெடுத்தேன்..
இப்போது சிக்னல் எண்கள் 60 இல் இருந்து 40க்கு வந்து இருந்தது… அந்த பெண்ணின் கால்களை பாத்தேன்.. தார் ரோட்டின் பவுன்ஸ் வெப்பம் பட்டு கால் சிவந்து போய் விட்டது….எசியிலேயே வளர்ந்த உடம்பு போலும்.. இந்த கடும் வெயிலை தாங்க முடியவில்லை. கால் சிவப்பாகி விட்டது.. எனக்கு செம ஆச்சர்யம்..
சட்டென என் கால்களை கவனித்தேன்.. அவளை போல என் கால்களிலும் ஏதாவது மாற்றம் தென்படுகின்றதா? என்று….
தார்ரோட்டுக்கும் என் காலுக்கு பெரிய வித்தியாசம் இல்லை..
சிக்னலில் ஜீரோ வந்து பிறகு ஆக்டிவா புயல் என பறந்தது…
கொஞ்சமாவது மாறும் என்ற நப்பாசையில் இருக்க…பின் வந்த வாகன ஒலிகளினால் களைந்து மயிலை நோக்கி விரைந்தேன்..
ஜாக்கிசேகர்.
21/04/2016
====
மேலுள்ள பதிவு ஜாலிக்காக எழுதியது.,.. என் கால்கள் கொடுத்த அனுபவங்கள் அது பயணித்த தடங்களை என் வயிற்றை நிரப்ப அது பட்ட பாடுகள்....ஆக்டிவா வாழ்க்கையில் எந்த ஜென்மத்திலும் சாத்தியமே இல்லை என்பது மட்டும் நிஜம்.…
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
you have a very clean eye bro let your eye turn towards underprevileged people also bro
ReplyDeleteyou have a very clean eye bro let your eye turn towards underprevileged people also bro
ReplyDeleteகால் கறுப்பாய் இருந்தால் என்ன ஜாக்கி..உங்க மனசு தங்கம்லா!
ReplyDelete