பிரேக் அப்





பிரேக் அப்
=============


அது என்ன? அப்படின்னு ஒரு ஆர்வம் பரபரக்கின்றது.. இது இயல்பானதான் என்றாலும் என் கண்ணில் மட்டும்தான் இப்படியான விஷயங்கள் மாட்டித்தொலைக்கின்றன...

ரொம்ப நாள் கழிச்சி யாழினியோடு நாகேஷ்வரராவ் பார்க் போய் இருந்தேன். என்னை பொருத்தவரை மயிலையின் பொட்டானிக்கல் கார்டன் அதுதான்.

யாழினி விளையாடிக்கொண்டு இருந்தாள்...

வெகு நேரமாக ஒரு பெண் நிமிர்ந்து பார்க்காமல் மொபைலை பார்ப்பதும்... அம்மா ஜெயில்ல இருந்த போது அதிமுக அமைச்சர்கள் தாரை தாரையா கண்ணீர் வார்த்து பதவி பிரமாணம் செஞ்சிக்கிட்டாங்களே..

அது போல... குலுங்கி குலுங்கி அழுவதுதுமாக இருந்தார்...

கவுதம் மேனன் படத்து ஹீரோயின் போல இருந்தார்... பூங்காவில் இருக்கும் அழுது வடியும் மின் ஒளியில் கண்ணீல் இருந்து கன்னத்தை நோக்கி வழியும் கண்ணீர் கோடுகள் சிறு மினு மினுப்பை கொடுத்தது...

கழுத்தில் இருந்த சன்னமான செயின் அவளுக்கு மேலும் அழகை கொடுத்தது எனலாம்..

மொபைலை பார்ப்பதும் அழுவதும் திரும்ப டைப் அடிப்பதுமாக இருந்தாள்..

ஆங்கில படம் போல கர்ச்சிப் எடுத்து கொடுக்கலாம் என்றால் அவன்க ஊர்ல மைனஸ் டிகரி வாக்காலி வேர்க்கவே வேர்க்காது. ஆனா நம்ம ஊர்ல அப்படியா?

நம்ம ஊர்ல அண்டசராசரமும் வெந்து போய் நனைஞ்சிகடக்கு.. ஒரு நாள் கர்சிப் மாத்தாம விட்டாலும் கர்சிப்ல அடிக்கற கப்பு நமக்கே குடலை பொறட்டுது.... அதனால் அந்த எண்ணத்தையும் கைவிட்டேன்.

விஜயகாந்த் போல தே புள்ள எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு இருக்கற? இரண்டு தோளையும் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கலாம் என்றால்... நான்கு இளைஞர்கள் தண்டால் எடுத்துக்கொண்டு இருந்தால்...

நான் அழுத உங்களுக்கு என்ன என்ற ஒரு கத்தல் போதும்... உடனே கூடி அந்த இளைஞர்கள் கும்மி அடித்து விடுவார்கள் என்பதால் அந்த யோசனையையும் கை விட்டேன்.

ஆர்வம் அதிகமாகியது.. எனக்கோ... எதற்கான அழுகைஅது என்று தெரிந்துக்கொள்ள ஆவல்...

முகத்துக்கு நேராக கேட்கலாம் என்றால்?
தமிழக பெண்கள் அதை விரும்பமாட்டார்கள்...

திரும்பவும் டைப்புவதும் சில மேசேஜ்களுக்கு குலுங்கி குலுங்கி அழுவதுமாக இருந்தாள்...

இருந்தாலும் ஒரு காதல் பிரேக் அப்பை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்பது மட்டும் அந்த குலுங்கி அழுதத்ற்கான காரணமாக இருக்கும் என்று புரிந்தது போல நடித்து பூங்காவை விட்டு வெளியே வந்தேன்..


பின்னே நான் போய் நிம்மதியாக தூங்கனும் இல்லை..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்

15/04/2016






நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

2 comments:

  1. :).. படித்தேன்.. ரசித்தேன்..
    நன்றி.

    ReplyDelete
  2. பின்னே நான் போய் நிம்மதியாக தூங்கனும் இல்லை..

    HA HA HA........

    Jackie'n Kusumbu......

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner