happy birthday jackiechan





Armour of God என்றொரு படம்  கடலூர் நியூசினிமாவில்  நான்ஒன்பதாம் வகுப்பு  படிக்கும் போது...1988 ஆம் ஆண்டு ரிலிஸ் ஆகியது…

 அப்படி ஒரு  ஆக்ஷன் படத்தை  நான் என் வாழ்க்கையில் அதுவரை கண்டதில்லை…




காரணம் முதல்முறையாக ஒரு நடிகன் சண்டைகாட்சியில் நடிக்கும் போது மரக்கிளை முறிந்து  காது கிழந்து உயிரை  பணயம் வைத்து நடித்ததை அதுவும் டூப் இல்லாமல் நடித்ததை  அன்றுதான் பார்த்தேன்.

என் வாழ்வில்  தியேட்டரிலேயே 25  முறையும் கேசட், விசிடி, டிவிடி என்று ஒரு 500  முறைக்கு மேல் பார்த்த திரைப்படம் அந்த திரைப்படம்தான்.

ஜாக்கியின் வாழ்க்கை  வறுமையில் தொடங்கிய வாழ்க்கை பார்ன் இன் சில்வர் ஸ்பூன் கேட்டகிரியெல்லாம் இல்லை.
''ஹாங்காங்கில் 1954 ஏப்ரல் மாதம் 7-ம் தேதி ஜாக்கி பிறந்தார்…தந்தை சார்லஸ் சான் ஒரு சமையல்காரர். தாய் லீ-லீ வீட்டு வேலை செய்யும் பெண்.
உழைப்பு என்றால் சாதாரண  உழைப்பு இல்லை… கடுமையான உழைப்பு.

படிபடிப்படியான முன்னேறி இன்று உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இரண்டாவது நடிகர் ஜாக்கிதான்.. சவுத் ஏசியா  சூப்பர் ஸ்டாரும் அவரே..
தற்போது இந்தியாவில் ஜெய்பூரில் குங்பூ யோகா திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 படம் முடியும் முன்னே பரபரப்பாய் கிளம்பும் மனதர்களை கொடாக் பிலிமில் எடுத்தோம் என்று படத்தின் கடைசி பிரேம் வரை  தமிழக ரசிகர்களை தியேட்டரில் நிற்க வைத்தவர் ஜாக்கிதான்...இன்றுதெலுங்கு சினிமாவில் பூளுப்பர்ஸ் வெகு பிரபலம்.

வாழ்க்கையில் நிறைய இடங்களில் அவர்தான் எனக்கு இன்சிபிரேஷன்

ஒரே அடியில் வீழ்த்தும் பலம் இருந்தாலும், உலகம் நம்பாது…

அடி வாங்கி தளர்ந்து   எதிராளி வேஸ்ட்டு பூட்டகேசுன்னு நினைக்கறப்ப.. எழுந்து மரண அடி கொடுப்பது ஜாக்கி ஸ்டைல்.. அடி வாங்கி ஜெயிப்பது ஒரு கலை. அது ஜாக்கியிடம் கற்றுக்கொண்டதுதான்..
அதனால்தான்  எத்தனை பேர்  என்னை துவேஷித்தாலும்,  என் வெற்றியால் எதிராளிக்கு மரண அடி கொடுப்பேன் என்று  மனதில் சூளுரைக்க  காரணகர்த்தா ஜாக்கிதான்..

 அது இயல்பாய் இருக்கவே ஜாக்கி  உலகம் எங்கும் கொண்டாடப்பட்டார் என்றால் அது மிகையில்லை.
எனது பெயரில் பாதியை அவரிடத்தில் கடனாக பெற்றுக்கொண்டேன்..

எனது ரோல் மாடல்  ஜாக்கிசானுக்கு இன்று பிறந்தநாள்..
62 வயதாகின்றது...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாக்கிசான்.
 ஆர்மர் ஆப்  காட் திரைப்படத்தின் இந்த பாடல் எனது  தேசிய கீதம்.

அது உங்களுக்காக.

ஜாக்கிசேகர்
07/04/2016







நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner