நன்றி தமிழ் இந்து.


2012 ஆம்  ஆண்டில்  ஆரம்பிக்க வேண்டியது… ஆனால் அது  தள்ளி  தள்ளி போய் கடந்த வருடம்தான் யூடியூப் வலைதளம் ஆரம்பித்தேன்.
முதன் முதலில் நான் யூடியூப் சேனல் ஆரம்பிக்க  வேண்டும் என்று நினைத்த போது… எல்லோரையும் போல காம்பயரிங் செய்ய  ஒரு அழகான ஒரு ஆண் அல்லது பெண் காம்பயரர் சினிமாவை பற்றி  பேச  தேவை  என்றுதான் யோசித்தேன்..


ஆனால் நான் எழுதியதை  படிக்க வைத்து அவன் மற்றும்  அவள் வரும் நேரம்  காத்திருந்து, லைட்டிங் செய்து,  அந்த நேரத்தில் கரண்ட் இருக்க வேண்டும்,  ஸ்கிரிப்ட்டை கொடுத்து  நாம் எதிர்பார்த்தது போல வாய்ஸ் மாடுலேஷனில் அவர்கள்  பேச வேண்டும். அதன் பின் அதனை எடிட் செய்ய வேண்டும்… ரெண்டரிங் செய்ய தேவுடு காக்க வேண்டும்.. அதன் பின் அதனை அவுட் எடுக்க மீண்டும்  தேவுடு காக்க வேண்டும்.. அதன் பின் அதனை யூடியூப்  வலைதளத்தில் வலையேற்றம் செய்ய வேண்டும்..
பேசிக்கா  கேமராமேன் நான்… எடிட்டிங் கற்றுக்கொள்ளலாம்.. சரி.. யார் பேசுவது.. நாமே  பேசினால்..?? நம் நேரம் நம் கையில் இருக்கும்… யாரையும் நம்ப வேண்டாம்  நினைத்த நேரத்தில்  கேமரா லைட்டிங் செட் செய்து ,  வீடியோ எடுக்கலாம், நானே எடிட் செய்யலாம்.. நானே வலையேற்றலாம்… அப்படி என்றால் காம்பயரராக நாமே பேசினால்??
மனசாட்சியிடம் பேச ஆரம்பித்தேன்.
மண்டையில் முடி இல்லை…
சரி ….
நல்லா இருக்குமா-?
நல்லா இருக்காதுதான் போக போக சரியாகும்…
எப்படி?
இங்கிலிஷ் படத்துல மொக்கை ஹீரோயினைதான் காட்டுவாங்க,  ஆனா நாலாவது ரீல்ல… அந்த பொண்ணை ரொம்ப பிடிக்க ஆரப்பிச்சிடும்.
அது போல கண்டிப்பாக ஒருநாள் பிடிக்க ஆரப்பிக்கும்.. அது மட்டுமல்ல… உருவத்தை விட நீ என்ன பேசப் போற,… எந்த  அளவுக்கு உன்கிட்ட சரக்கு இருக்கு என்பதே பொது வெளியில்  விலை போகும் என்பதை அறிந்தவன்நான்.. 
அதனால் குழப்பங்களை தூக்கி  தூர  போட்டு விட்டு களத்தில் குதித்தேன்.. அது மட்டுமல்ல… நினைத்த விஷயத்தை அன்றே செய்ய வேண்டும் என்று பரபரப்பாகும் ஆசாமி நான்.
ஒன்மேன் ஆர்மி..  நானே காம்பயரர், நானே கேமராமேன், நானே எடிட்டர்,  எல்லாம்  நான் ஒருவனே…..  கடுமையான உழைப்பு.. நிறைய தடங்கல்கள் ஆனாலும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி  மட்டும்…
எனது தளத்தில் சினிமா என்பது ஈர்ப்பு மட்டுமே  நிறைய டாக்குமென்ட்ரிகள் செய்ய வேண்டும் என்பது என் கணா… அதனால்தான் மழை வெள்ளத்தின் போது களத்தில் குதித்து  நிறைய உதவிகளோடு  வீடியோக்களையும்  பதிவு செய்தேன்…தற்போது நேஷனல் ஜியாக்கரபி சேனலில் இருந்து  வந்து இன்டர்வியூ செய்து சென்று இருக்கின்றார்கள்..அதுதான் அங்கீகாரம்..
இன்று பத்தாயிரம் பேருக்கு மேல் சப்ஸ்கிரைபர் வட்டம் என ஜாக்கிசினமாஸ்  வளர்ந்துள்ளது.. ஆனால்   நிறைய தூக்கமில்லா இரவுகளை கடந்து இருக்கிறேன். ஆனாலும் அங்கீகாரம் என்பது குதிரைகொம்பாகத்தான். இருந்தது..
கேகேநகர் அருகே உள்ள நாகத்தம்மன்  கோவில் வாசலில் பழம் விற்கும் ஒரு பழவியாபாரி தலையில்   உட்கார்ந்து கொண்டு மூன்று காக்கைகள் தினமும் உணவு  உண்பதை பார்த்தேன்.. அதனை வீடியோவாக எடுத்து டாக்குமென்ட் செய்தேன்..
முதன் முதலில் அதனை  தமிழ் இந்து இணைய தளத்தில் சிறந்த யூடியூப் பகிர்வு  பக்கத்தில் அந்த காக்கை பழவியாபாரி வீடியோவை  பகிர்ந்து இருந்தார்கள்… ஜாக்கி சினிமாசின் முதல் பத்திரிக்கை அங்கீகாரம் அதுதான்..
நான்  கடந்த எட்டு ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறேன்.. என்னை எல்லோருக்கும்  ஒரளவுக்கு  தெரியும்.. ஆனால் யூடியூப்  ஆரம்பித்த போது நிறைய பேர்  அதனை ரசிக்கவில்லை… ஆனால்  பூ பூத்தவுடன் அது கனியாகி விடும் என்று எதிர்பார்ப்பவன் நான் அல்ல..கடுமையாக உழைத்தால் நினைத்த இடத்தை அடைய முடியும் என்று நம்புகின்றவன் நான்…
தற்போது மீண்டும் ஒரு அங்கீகாரத்தை தமிழ் இந்து இணையதளம்  ஜாக்கிசினிமாசுக்கு அளித்துள்ளது..
ஆம்  யாழினியின் ஜங்கிள்புக் விமர்சனத்தை  வெளியிட்டு  சிறு கட்டுரை ஒன்றை எழுதி இருக்கின்றார்கள்…
அதில் வரும் முதல்பாராவை நான்  வெகுவாக  ரசித்தேன்..
‘//”திரைக்கு முன்னால் தோன்றி விமர்சனம் செய்பவர்கள், திருத்தமாக அழகுடன் இருக்க வேண்டும். பெண்ணாக இருந்தால் இன்னும் நல்லது; அப்போதுதான் அதை அதிகம்பேர் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையை பொய்யாக்கியவர் இணைய திரை விமர்சகர் ஜாக்கி சேகர். திறமையை மட்டுமே நம்பி, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியானால், முதல் ஆளாய் ஜாக்கி சேகரின் விமர்சனமும் நிச்சயம் வெளியாகி இருக்கும்.//
கட்டுரையாளர் ரமணி பிரபாதேவிக்கும், தமிழ் இந்து ஆசிரியர் குழுமத்துக்கும் என் அன்பும் நன்றிம்…

ஜாக்கிசேகர்
12/04/2016
 தமிழ் இந்து கட்டுரைவாசிக்க.. 

நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS... 


8 comments:

  1. True and the perfect statement from Tamil Hindu and Jackie.... You deserve that...... All the best to you...

    ReplyDelete
  2. Best wishes to your dear daughter Yazhini. Blessed you are!

    ReplyDelete
  3. Valthukal sir yazhini Ku valthukkal thodarum unnkal payanam.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. Classic... Well Done Yalini... Nice expressions & marvellous voice... hats off to her... :-)

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner