நான்கு வயது யாழினியின் முதல் சினிமா விமர்சனம் ஜங்கிள் புக்
எனக்கு நான்கு வயது வரை பேச்சுவர வில்லையாம்அம்மாவுக்கு பெரிய வருத்தும். முதல் ஆம்புள புள்ளை இப்படி மக்கு மடசாம்பிராணி மாறி பேசாம கிடக்கே என்று வருத்தமோ வருத்தமாம்..அப்பா ஒரு பிளிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தாராம் அதில் வரும் விளம்பரங்கள் பாடல்களை கேட்டுதான் நான் சரஸ்வதி சபதம் சிவாஜி போல பேச ஆரம்பித்தேன் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள்.. எல்லாத்தையும் விட நகைமுரண் என்னவென்றால் எனக்கு பேச்சு வரவேண்டும் என்று அந்த திருச்செந்தூர் முருகனிடம் என் பெற்றோர் வேண்டிக்கொண்டார்களாம்..மலரே குறிஞ்சி மலரே... தலைவன் சூட நீ மலர்ந்தாய்.. பாடல் அப்போது ரேடியோவில் வெகு பிரபலமாம்.. நான் பாடிய முதல் பாடல் அதுதான்.. மலரே குலுஞ்சி என்பேனாம்...அதுவும் முழுமையாக பாடினதும் இல்லை பேசியதும் இல்லை..ஆனால் யாழினிக்கு நான்கு வயது..ஐங்கிள் புக் திரைப்படத்தின் வீடியோ விமர்சனம் செய்ய லைட்டிங் செய்துக் கொண்டு இருந்தேன்.. அப்பா? என்னம்மா..ஜங்கிள் புக் விமர்சனம் நான் செய்யறேன் என்றாள்...அட ஆமாம் இல்லை.. குழந்தைகளுக்கான படம் அவள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்று முயற்சி செய்தேன்...தொடர்ந்து நான் பேசி வருவதை பார்த்து வருகின்றாள்..அவளுக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும்.ஆனால் எந்த அளவுக்கு பேசுவாள் என்று எனக்கு தெரியாது.. எவ்வளவு நேரம் ஆகும்..? தெரியாது..யாழினிக்கு விடுமுறை வேறு... சரி செய்து பார்க்காலாம் என்று முயற்சி செய்தேன்.நான் பிரபல தொலைகாட்சிகளில் நிகழ்ச்சி தயாரிப்பாளாராக இருந்த போது...வெள்ளைத்தோலோடு ரெக்கமண்டேஷனில் வேலைக்கு வந்த பெண்ணை... இந்த பொண்ணு இனி உங்க ஷோவுக்கு காம்பயரார வச்சிக்கோங்க என்று தலையில் கட்டுவார்கள்..சொன்னதை திரும்ப சொல்லக்கூட தெரியாது... ஸ்கிரிப்டை கையில வச்சிக்கிட்டு பாடாதபாடு படனும் கடைசி வரை ஒழுங்கா சொல்லவே சொல்லாதுங்க..ரெண்டு ஏ போர் ஷிட் ஸ்கிரிப்ட்தான்... ஆனா அதுக்கு ஐந்து மணி நேரம் எல்லாம் ஆகியிருக்கு...யாழினி ஒன்லி டென் மினிட்ஸ்தான்...அவளோட பெஸ்ட்டை கொடுத்து இருக்கான்னுதான் சொல்லுவேன். நான்கு வயது யாழினியின் முதல் சினிமா வீடியோ விமர்சனம்...... ஜங்கிள் புக் ..அபிராமிதியேட்டர் நிர்வாகத்துக்கு யாழினி ஒரு கோரிக்கை வச்சி இருக்கா.பார்த்து விட்டு கருத்து சொல்லுங்க.. அதே போல ஷேர் செய்யுங்க...#yazhinijackiesekar#junglebook#moviereview#abiramitheater#jackiecinemas#Yazhini#யாழினி#யாழனிஜாக்கிசேகர்#அபிராமிதியேட்டர்#யாழினிவிமர்சனம்#ஐங்கிள்புக்#ஜாக்கிசினிமாஸ்ஜாக்கிசேகர்12/04/2016 நினைப்பது அல்ல நீ நிரூபிப்பதே நீ.....EVER YOURS...
Best review in the entire world. Love it.
ReplyDeleteCongratulations Yazhini.
ReplyDeleteAward Confirm.
Sooooo cute review by yazhini kutty
ReplyDeleteAmazing...... Very nice communication and observation....
ReplyDeleteSuperb review... Expecting more reviews from this cuty little princess.. YAZHINI therikka vituta da thangam
ReplyDeleteGood try. ......
ReplyDeleteவாவ்.... கலக்கலான விமர்சனம்...
ReplyDeleteசுத்திப்போடுங்க ஜாக்கி...புலிக்குட்டியே தான்!
ReplyDeleteCongratz yazhini for your good review. Jackie Sir, Pulikku piranthathu Poonai Aagumaa ?
ReplyDeleteMGR Rasigan
Superb Dear. Blessings and wishes to reach Heights
ReplyDeleteWelcome Yazhini.. WELCOME..
ReplyDeleteazhagu :)
ReplyDeleteSema cute sellam
ReplyDeleteSema I didn't listen to words , her malazhai expressions n the final punch nice . anna suthi podunga angelukku
ReplyDeleteBest review. She is so cute.
ReplyDelete