ஒரு வாய்ப்பு...


சரிங்கடா கலைஞர் பாலம் கட்டுனாலும் ஊழல் செய்வார்ன்னு சொல்லுவிங்க......

அட அம்மா ஊழல் செஞ்சாலும் பரவாயில்லை சென்னை போரூர் பாலத்தை கட்டி இருக்கலாம்ன்னு சொன்னா காடாறு மாதம் நாடாறு மாதம் சென்னையிலயும் கோடா நாட்டுலயும் ஆட்சி நடத்துனதுல அவுங்க மறந்து போய் இருக்கலாம்ன்னு அதுக்கும் சப்பை கட்டு கட்டுவிங்க.... அவுங்க ரொம்ப பிசின்னு...

சரி வாட் ஈஸ் த கன்குலுஷன்..

=========

ரெண்டு திராவிட கட்சியும்தான் சார் தமிழகம் கெட்டு போவ காரணம்...

சரி...

இப்ப என்ன செய்யலாம்-?

அதனால மாற்றத்துக்கு மக்கள் நல கூட்டனியை ஆதரிக்க வேண்டும்ன்னு சொல்றோம்.. சார்..

யார் தலைமையில..?

விஜயகாந்த தலைமையில சார்....

சரி.. அதுக்கு காரணம்..?

சார் அவருக்கிட்ட ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே சார்..

ஆஹான் கரெக்ட்தான்... ஆனா நான் ஒரே ஒரு கேள்வியை பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்கள்கிட்ட கேட்கறேன்..

திமுக எதிர்ப்பு காரணமாக எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாம போச்சி திமுக...யாருக்கிட்ட எதிர்கட்சி தலைவர் பதவிவை கொடுத்தோம்..

விஜயகாந்கிட்ட..

இந்த ஐந்து வருடத்தில் அவர் எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் பேசிய சாதனைகள் என்ன? என்ன?

ஆறு மாதத்தில் கரெண்டு கொடுக்கறோம்ன்னு சொன்னவாங்க இன்னைக்கு வரைக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியலை.. அதுக்கு எதிர்கட்சி தலைவரா அவர் எடுத்த போராட்டங்கள் என்ன?

அதற்கு ஆளும் கட்சியை தீர்வை நோக்கி செல்ல வைத்தாரா..?

பாகிஸ்தான் பார்டரில் வாசிம்கானிடம் ரைமிங்காக பேசும் அவர்.. சட்டசபையில் எத்தனை புள்ளி விவரத்தை அடுக்கி ஈழத்தாயை நிலை குலைய வச்சி இருக்கார்ன்னு சொல்ல முடியுமா-?

மநகூ கட்சி தலைவர் மேடையில் இருக்கின்றார்கள்.. நாலே நாலு பேர்தான்.. அவர்களை பெயரையே நினைவு படுத்தி சொல்ல முடியாதவர்..ஏற்கனவே எதிர்கட்சி தலைவர் பதவியை கொடுத்தும் எதையும் கிழிக்காதவர் முதல்வராகி என்ன செய்ய போகின்றார்.???

ஒரு வாய்ப்பு கொடுக்க இது என்ன மெரினா பீச்சுல பலூன் சுடற போட்டியா..?

இதுக்கு திராவிட கட்சிகளே வந்து தொலையாளாம்..

தம்பி தமிழ் நாட்டை திராவிட கட்சிகள்தான் அழிச்சிதுன்னு சொல்ற இல்லை..

ஆமாம்....

வட நாட்டு பக்கம் எல்லாம் போய் பார்த்து இருக்கிறியாப்பா..?

இல்லை?

பார்த்துட்டு வா.. நம்ம ஊரை சொர்கம்ன்னு சொல்லுவே...

அங்க எங்க போவனும்ன்னாலும் ரயிலுதான் அதிலும் டிக்கெட் எடுக்காம போவனுங்க...

நாம ரயிலை விட பேருந்து அதிகம் யூஸ் பண்ணறோம்...குக்கிராமத்தை போக்குவரத்து உள்கட்டமைப்பால் இணைத்து இருக்கோம்...கிராமம் தோறும் ஆரம்பசுகாரதார நிலையம் அமைத்து கர்பினிகள் மற்றும் தொற்று நோய் தடுப்பை மேற்க்கொண்டு நிறைய உயிர் இழப்பை குறைத்து இருக்கோம்... இது எல்லாம் திராவிட கட்சிகளின் சாதனை...

இதை விட நாங்க தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாத்துவோம்ன்னு யாராவது சொன்னா திட்ட வரைவ வெளியிட சொல்லி எத்தனை வருஷத்துலஅப்படி முடிப்பாங்கன்னு கேள்வி கேட்டு ஓட்டு போடுங்க.. அது சாத்தியம்னா.. இன்பேக்ட் நானே ஓட்டு போடறேன்..

அதனால யாருக்கு உங்க ஓட்டுன்னு முடிவு பண்ணிக்கோங்க.

இதுபுரிஞ்சா இந்த பதிவை ஷேர் பண்ணிங்க இல்லாட்டி அப்படியே போய் நீங்க சொல்றது போல ஒரு வாய்ப்பை கொடுங்க... சட்டசபையில காமெடி பார்க்க காத்துக்கிட்டு இருக்கேன்.

நன்றி.

ஜாக்கிசேகர்
07/04/2016


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

2 comments:

  1. ithai facebook pagela pottirukken
    Rajeshkannan southchennai

    ReplyDelete
  2. ஒரு தமிழ் இனத்தையே அழித்த காங்கிரஸ் கூட கூட்டணி.. கேவலமா இல்லை.இதுக்கு நீயும் ஆதரவு...நீங்க எல்லாம் முதுகெலும்பு இல்லா பிறவி !

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner