கடலூர் கூத்தப்பாக்கத்துல முருகாலாயான்னு ஒரு தியேட்டர் கட்டினாங்க… குணா படம் எல்லாம் அதில்தான் ரிலிஸ்…. ஆனா அந்த தியேட்டர் இப்ப சன்முக கல்யாண மண்டபமா மாறிடுச்சி… அந்த தியேட்டர் கட்டறப்ப தினமும் போய் அந்த தியேட்டரை பார்ப்பேன்…
மெல்ல மெல்ல ஒரு தியேட்டர் என் கண் முன்னால் உருவானதை பார்த்தது அப்போதுதான்.. அது என்னவோ தியேட்டரும் சினிமாவும் என் வாழ்வில் ரொம்ப பிடித்த விஷயங்கள்தான்… அந்த தியேட்டர் மூடுகின்றார்கள் என்ற போது.. தனியாக கன்னியக்கோவில் கென்னடி பாரில் இரண்டு பீரை வயிற்றில் வார்த்துக்கொண்டு சோகத்தோடு முக்கால் போதையில் அந்த தியேட்டரில் ஓடிய திரைப்படங்களை நினைவுப்படுத்தி இருக்கிறேன். ஒரு சினிமா பாரைடைசோதான்னு வச்சிக்கோங்களேன். எந்த ஊரில் இரவு தங்க நேர்ந்தால் அந்த ஊர் தியேட்டரில் கண்டிப்பாக ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்… அது எவ்வளவு மொக்க தியேட்டராக இருந்தாலும். தோழா படம் பார்க்க மூனாற்றில் இருந்து இரண்டாவது ஆட்டத்துக்கு காரில் வந்து போடிநாயக்கனுரில் உள்ள வெற்றி தியேயட்டரில் படம் பார்த்தேன்.. ச நிச்சயம் அது இன்ப அதிச்சிதான். வெற்றி தியேட்டர் இவ்வளவு அற்புதமாக ஆம்பியன்ஸ்களோடு அதுவும் போடி நாயக்கனூரில் இருக்கும் என்று எதிர்பார்க்கவேயில்லை.. எவர் தலையும் மறைக்காத சீட்டிங் அரேன்ஜ்மென்ட், சுத்தமான டாய்லெட், தரை சுத்தம் சிறப்பாக ஒளி ஒலி அமைப்பு.. சென்னையில் சத்தியம் தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற ஒரு அசத்தலான சூழ்நிலையை தியேட்டர் உருவாக்கி இருந்தது… ஒரு நல்ல திரைப்படத்தை ரசிக்க நல்ல திரையரங்குகள் தேவை என்பதை எப்போது நம்மவர்கள் உணருவார்கள் என்று தெரியவில்லை..தனம் தியேட்டர் என்று இருந்த போது எட்டிகூட பார்க்காத பொதுஜனம்தான் இன்று வெற்றி தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாய் படத் பார்க்க வருகின்றார்கள் என்பதே சுத்தமான சிறந்தஒளி ஒலியமைப்பு திரையரங்குகளுக்கு கிடைத்த வெற்றி. போடி நாயக்கனுர் வெற்றி தியேட்டர் நிர்வாகத்துக்கும் ஜாக்கிசினிமாஸ் சார்பாக நமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம். ஜாக்கிசேகர் 06/04/2016
நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
Here is an opportunity for getting paid for you blog. All you need is to copy paste the the content and get paid weekly.
ReplyDelete