Happy New Year-2014/ அசத்தும் இந்தி திரைப்படம் ஹேப்பி நியூயர்.



எழுத்தாளர் ஞானிசங்கரன் மகன் மனுஷ் நந்தன் ஹேப்பி நீயூயர் திரைப்படத்துக்கு   ஒளிப்பதிவு செய்து இருப்பதாகவும்... சாந்தி தியேட்டரில் அப்படத்தின் தமிழ் வெர்ஷன்  பார்த்ததையும் மக்கள் மிகவும் ரசித்ததையும் தனது முகநூலில் எழுதி இருந்தார்... 


நம்ம ஊர்காரர் ஒளிப்பதிவு செய்த பிரமாண்ட படம் எப்படி இருக்கின்றது  என்று பார்த்து விட்டு வரலாம் என்று சாந்தி தியேட்டரில்  தமிழ் வெர்ஷனுக்கே புக் செய்தேன்....

கடந்த ஓராண்டுகளாக ஹேப்பிநியூயர்  படத்தின் பிரோமோஷன் இல்லாத ஊடகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு   சலிக்க சலிக்க பிரமோஷன் இருந்தது  என்றே சொல்ல வேண்டும். இப்படியான  பிரமாண்ட படம்  எப்படி மனுஷ் நந்தனுக்கு கிடைத்தது..


 சின்ன  பிளாஷ் பேக்..


கேவி அனந் பிசி சார்க்கிட்டு சேரும் போது அவர் லாஸ்ட் அசிஸ்டென்ட்.. பட்   அப்ப அவர்கிட்ட வேலை செஞ்ச எல்லோருக்கும் தனி தனியா படம் கிடைக்க.. லாஸ்ட் அசிஸ்டென்ட் கேவி  ஆனந் பர்ஸ்ட் அசிஸ்டென்ட்டா வந்து  தமிழ் மற்றும் இந்தியின் பிரமாண்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இன்று இயக்குனராகவும் கொடி நாட்டிவிட்டார்.. அதைதான் நேரம் என்றும் அதிஷ்டம் என்று இரண்டு விதமாக சொல்லலாம்...



இந்தியில் ரவிகேநந்திரன்,மணிகண்டன், சதுரங்க வேட்டை நட்ராஜ் எல்லோரும் கலக்கிக்கொண்டு இருக்கும் போது மனுஷ் ரவியிடம் உதவியாளராக ஆறு வருடம் உழைத்து இருக்கின்றார்.... ரவியிடம் வேலை செய்வது சாதாரண விஷயம் இல்லை... ஒளிப்பதிவை பற்றிய எல்லா தகவல்களும் விரல் நுனியில் இருக்க வேண்டும்...தகவல் தெரியவில்லை என்று எல்லாம் அவரிடம் ஐல்லியடிக்கமுடியாது.. காரணம்  நெட்டில் கிடைக்காத விஷயமே இல்லை அதனால் தெரியாது என்று சொல்லாதே அறிந்துக்கெள்ள விருப்பம் இல்லை அல்லது தேடலில் சோம்பேறிதனம் என்று சொல்.. என்று தன் அசிஸ்ஸ்டென்டுகளுக்கு டோஸ் விடும் ரகம்.


மனுஷுக்கு முதல் படம் கமலின் மன்மதன் அம்பு.. அது வெற்றிபெறாமல்  புஸ்சாகிவிட்டாலும் அடுத்து தனது குருநாதர்  ரவி இயக்கத்தில் வெளியான யான் திரைப்படத்துக்கும் ஒளிப்பதிவு மனுஷ்தான்... 

அப்படி இருக்கும் போதுதான் பராகான் இயக்கத்தில்  ஹேப்பி நியூயர் படத்துக்கும் மனுஷ்க்கு வாய்ப்பு  கிடைக்க....  அசத்தி விட்டார்.. யப்பா எவ்வளவு லைட்ஸ்.. எத்தனை  டிஸ்க்கோ லைட், பார்கன்... அது இது என்று  அசத்தி விட்டார்.. இந்த சின்ன வயதில்  இப்படியான பிரமாண்டம் கிடைத்ததும் அதை சாதித்து காட்சியதும் கடுமையாகன  உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன்...

 முக்கியமாக அந்த  முதல் சண்டைகாட்சியும் அதன்  ஒளிப்திவும் பின்னனியில் தனி தனியாக  தெரியும் நீர்த்துளிகளும் கிளாஸ்.. வாழ்த்துகள் மனுஷ்..... ஸ்பெஷல் பொக்கே... இவ்வளவு பெரிய புராஜக்ட்டை சக்சஸ் பண்ணியதுக்கு...


சரிக்கு படத்துக்கு வருவோம்..

நேற்று ஏதேச்சையாக இயக்குனர் சூர்யா மற்றும் சத்தியராஜ் இணைந்த  பங்கு பெற்ற காபி வித் டிடி யூடியூபில் பார்த்துக்கொண்டு  இருந்தேன்... அதில் சத்தியராஜ் சொன்னார்.... மிஸ்டர்பாரத் கதைதான் அமைதிப்படை... யோசித்து பார்த்தால்  ஆமாம் இல்லை... அதுதான்  சினிமாவின் ஜிம்மி ஜிக் எனலாம்... 


படத்தின் ஒன்லைனையும் வைத்துக்கொண்டு  கேரக்டர்களின் கலர்களையும் பாடி லேங்கவேஜையும் மாற்றி மாற்றிதான்  படம் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் நாமும் கைதட்டி ரசிக்கின்றோம்... வேறு கதை என்பது எல்லாம் இல்லவே இல்லை... 

இருப்பதையே புரோட்டா போல  மாற்றி மாற்றி அடித்து கிழித்து தொங்க விட வேண்டும் அவ்வளவுதான்.

இந்நதாலியன் ஜாப் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள்...  அதில் அப்பாவை கொன்றவனை பழிக்கு பழிவாங்க மகள் நேரம் வர  காத்திருப்பாள்.. இதில் ஷாருக்கான்...  வைரத்தை கொள்ளை அடிக்கும்  எக்ஸ்பர்ட்.. இதில் அப்பாவை பழி வாங்கியவர்களை  பழிவாங்க துடிக்கும் ஆண் அவ்வளவுதான்..

 அந்த படத்துல நண்பர்களாக வரும்  கேரக்டர் இன்ட்ரோ கொஞ்சம் கலகலப்பாக இருக்கும் இந்த படத்தில் நம்ம நேட்டிவிட்டியுடன் நீட்டி முழங்கி இருக்கின்றார்கள்.. 

அதே போல கொஞ்சம்  தொட்டுக்கொள்ள ஊறுகாயாக ஓஷன்  லெவன் திரைப்படம் உதவி செய்து இருக்கின்றது.. அவ்வவுதான்.. ஆனாலும் அசத்தி இருக்கின்றார்கள் என்றே  சொல்ல வேண்டும்..

.
மேட் மை டே என்று சொல்வது போல நேற்று இரவை ஹேப்பி நியூயர் டீம்  என் வாழ்க்கையின் சில மணி  நேரத்தை  கலகலப்பாக்கி இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.


 படத்தின் ஹீரோ  ஷாருக்கானோ இயக்குனர் பராகானோ இல்லை நாயகி தீபிகாவே இல்லை.. படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதில் அபிஷேக் பச்சன்தான் படத்தின் நாயகன்... பின்னி இருக்கின்றார்... சும்மா சொல்லக்கூடாது டப்பிங் திரைப்படம் என்று தெரியாத அளவுக்கு டப்பிங்கில் அசத்தி இருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்..

 கதை என்ன என்று தெரிய வேண்டுமா? அதான் சொல்லிட்டேனே.....

கோடிகளை தண்ணீராக  இறைத்து செலவு செய்து இருக்கின்றார்கள்... சன்சே இல்லை... ஒரு ஒரு பிரேமும் செம ரிச்சாக ஷூட் செய்து இருக்கின்றார்கள்.. கலர்ஸ் தொலைகாட்சியில் இந்தி சீரியல் பார்த்து இருக்கின்றீர்களா? கண்ணில்  ஒத்திக்கொள்ளலாம் போல லட்டு  லட்டாக பிரேம் மற்றும் செட் பிராப்பர்ட்டி இருக்கும்... 

அந்த சீரியலை எல்லாம் பார்த்தால் இந்தியா அழுக்கு ஊர் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.. பிகர்கள் எல்லாம் கண்ணில் ஒத்துக்கொள்வது பொல இருப்பார்கள்...


ஷாருக் சிக்ஸ்பேக்கில் வரும் போது எல்லாம் தியேட்டரில் விசில் காதை பிளக்கின்றது.. ஒரு பாடல் காட்சியில் சட்டை பட்டனை  அவிழ்த்து விட்டு  அனையின் மேல் சிக்ஸ் பேக் காட்டியபடி  நடந்து வரும் போது தியேட்டரில் விசில் பறக்கின்றது...


 யாரோ உடம்பை சிக்கென வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீபிகாவிடம் சொல்லி இருக்க வேண்டும்.. அல்லது டைம் ஆப் இந்தியா பத்திரிக்கை வம்பு பண்ணியதால் முழுதாக ஜிம்மில்  உடல்பயிற்சியில் காசன்ட்ரேட்டிங்க  செய்கின்றேன் பேர்வழி என்று வத்த விட்டு இருக்கின்றார்.. பார்க்க சகிக்கவில்லை...

வனப்புகள் எல்லாம் மிஸ்சாகி  ஆம்பளை வேஷம்  போட்டது போல இருக்கின்றார்... உடம்பை தேத்துங்க மேடம்...கடைசிகாட்சியில் சேலையிலும் ஒரு நீல நிற உடையிலும் வந்து ரசிகர்களை தூக்கத்தை கெடுக்கின்றேன் பார் என்று போராடுகின்றார்... மனுவா லாகே பாடல் எனக்கு மிகவும் பிடித்த சாங்..


 சான்சே இல்லை பிரபுதேவா ஒரு காட்சியில்  வந்தாலும் நடனத்தில் நம்ம ஊர் ஸ்டேப்ஸ் போட்டு விசிலை அள்ளுகின்றார்கள்..


அனுராக் கஷ்யாப்  எவ்வளவு பெரிய டைரக்டர்... அவரும் இசையமைப்பாளர்  விஷால்  சேகர் இரண்டு பேரும் ஹோமோ பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அலற விடுகின்றார்கள்  எல்லாத்தையும் விட அனுராக் பிரா டிரஸ் போட்டுக்கொண்டு  ஆடும் அந்த  அட்ராசிட்டி சான்சே இல்லை...  

இப்படியான காட்சிகளை எல்லாம் செய்ய ஈகோ இல்லாத தில் வேண்டும்  அடுத்து சினிமாவை  சினிமாவாக  பார்க்க வேண்டும்...

 எப்போதுமே பராகான் படத்தில்  படத்தின்  முடிவில்  படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு மரியாதை செய்வார்.. அது இந்த படத்திலும்.,..

==========
படத்தின் டிரைலர்..




=======
படக்குழுவினர் விபரம்


Directed by Farah Khan
Produced by Gauri Khan
Written by Farah Khan
Althea Kaushal
Mayur Puri (dialogues)
Story by Farah Khan
Starring Shahrukh Khan
Abhishek Bachchan
Deepika Padukone
Sonu Sood
Boman Irani
Vivaan Shah
Narrated by Shahrukh Khan
Music by Songs:
Vishal Shekhar
Background Score:
John Stewart Eduri
Cinematography Manush Nandan
Edited by Anand Subaya
Production
company
Red Chillies Entertainment
Distributed by Yash Raj Films
Release dates
October 23, 2014 (Dubai, Europe & USA)
October 24, 2014 (World-wide)
Country India
Language Hindi
Budget INR1.50 billion (US$24 million)
Box office INR1.49 billion

======
பைனல் கிக்..

விஐய்டிவி போல பராகான் எப்போதுமே தன்  படங்களின் வரும் விஷயத்தை தானே நக்கல் அடித்து உடைப்பார்... படம் முழுக்க மெல்லிய நகைச்சுவை இழையோடியபடி இருக்கும் அதுதான் பராவின் வெற்றி சூத்திரம்... இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வேறு...  பட்டையை கிளப்பி இருக்கின்றார்கள்... அபிஷேக்  மற்றும் அவரின் அக்மார்க்  பாம்பு டான்ஸ் மட்டும் இல்லையென்றால் படம்  பப்படம்  ஆகி  இருக்கும்..


 கண்டிப்பாக ஒரு தரம் இந்த படத்தை பார்க்கலாம்... அபிஷக் பச்சன் அதாவது நந்து  கேரக்டர்  ஒரு காட்சியில் மாறு வேடத்தில் வருகின்றது.. அடுத்த காட்சியில்  மாறுவேடம் இல்லாமல்  ஆடுகின்றது..  அந்த  லாஜிக் சொதப்பல் மட்டுமே  எனக்கு தெரிந்து படத்தில் இருக்கின்றது.. 


ஷாருக்கானுக்கும் பராகானுக்கும்  ஆழமான நட்பு  உள்ளது.. அந்த  நட்புதான் இந்த வெற்றியை சாத்தியபடுத்தி இருக்கின்றது என்று நினைக்கின்றேன்.... கடைசியில் ஷாருக் மனைவி கெளரிகானும் ஒரு காட்சியில் ஹாட் சிக்சர் அடித்து  பிளையிங் கிஸ் கொடுக்கின்றார்..

பிரமாண்டத்துக்காகவும் கலகலப்பிற்காகவும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்...
======
 படத்தின் ரேட்டிங்
பத்துக்கு எட்டு.
==========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

1 comment:

  1. சார் ஏன் இந்த மொக்க படத்துக்கு இதுக்கு 8/10 ஆ?
    ஏன் இப்படி எழுதுநீங்கன்னு தெரியல.
    கதை அதிர பழசு,
    சீன்ஸ் எல்லா படத்திலையும் இருந்து சுட்டது,
    screen play and direction கோட்டை விட்டுட்டாங்க.
    படத்தின் நீளம் தாங்க முடியல.
    dance competition ன்னு கொல்றாங்க,
    செண்டிமெண்ட் க்காக மட்டும் இந்தியாவ பயன் படுத்தி இருக்காங்க. ஒளிப்பதிவு மட்டும் நிறைவு.

    - பாஸ்கர் .ப

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner