Dilwale Dulhania Le Jayenge-1995/ இந்தி சினிமா / மும்பையில் 990 வாரங்களை கடந்து ஓடும் திரைப்படம்.



மிகச்சரியா  ஐந்து நாட்களுக்கு முன்... அதாவது ஆக்டோபர் 20 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே திரைப்படம் மும்பையில் உள்ள மராத்தாமந்தீர் திரையரங்கில்  திரையிடப்பட்டு 19 வருடமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது..




 ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை ஒரு வாரம் இல்லை ஒரு மாதம் இல்லை ஒரு வருடம் இல்லை இரண்டு வருடம் இல்லை  மொத்தம் 19 வருடங்கள்....


அதாவது 990 வாரங்களை கடந்து மும்பையில் உள்ள தியேட்டரில் ஓடிக்கொண்டு இருக்கின்றது..



பாம்பே  சென்ட்ரல் ஸ்டேஷனில்  இருந்து 5 நிமட நடையில்  தொட்டு விடும் தூரத்தில் இருக்கும் தியேட்டர்தான்  மரத்தா மந்தீர்....


1995 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு  முதல் மூன்று வருடங்கள் ஹவுஸ்புல் காட்சிகள்தான்...

 இந்திய சினிமா வரலாற்றில் இந்த படம் பெற்ற வெற்றி போல வேறு எந்த படமும் இன்றுவரை  பெற்றதில்லை என்பதே வரலாறு...


தற்போது 990 வாரங்களை கடந்து தற்போது இந்த திரைப்படத்தை  நிறுத்தபோகின்றோம் என்று  அறிவிப்பு வர ரசிகர்கள் பதறிபோனார்கள்...  தற்போது காலைகாட்சி மட்டுமே ஒடிக்கொண்டு இருக்கின்றது...  கூட்டமும் குறைவாக இருப்பதால் 990 வாரங்களோடு படத்தை நிறுத்த போகின்றோம் என்று சொல்ல...  அது எல்லாம் பொய்... வரும் டிசம்பர் மாதம் வந்தால்.. ஆயிரம் வாரங்களை இந்த திரைப்படம் தொட்டு விடும் என்பதால்  வரும்டிசம்பர்  மாதம் வரை படத்தை ஓட்ட தீர்மாணித்து இருக்கின்றார்கள்.


 படத்தை  தூக்க போகின்றோம் என்று செய்தி பரவியதும் திரும்புவும் தில்வலியா படத்தை  பார்க்க கனிசமான கூட்டம் கூடுவதாக  தியேட்டர் உரிமையாளர் தெரிவிக்கின்றார்..

தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே படத்தின் கதை என்ன தெரியுமா?

கதையோட ஒன்லைன் இதுதான்..

லண்டனில்  வாழும்  ஷாருக்கும் , கஜோலும் ஒரு பிரயாணத்தின் போது ரயில்  சந்திக்கிறார்கள். மோதல். பிறகு, காதலில் விழுகிறார்கள். தன் காதலை கஜோலால் சொல்ல முடியவில்லை. காரணம்  இந்தியாவில் இருக்கும் நாயகியின் அப்பா அவர்  நண்பனின் பஞ்சாபி பையனை நிச்சயித்துவிடுகிறார். ஓடிப்போகாமல் எல்லோருடைய அன்பையும்  ஜெயித்து, குறிப்பாக பிடிவாத அப்பாவின் சம்மதம் வாங்கி திருமணத்தை எப்படி முடிக்கின்றார்கள் என்பதுதான்  கதை..


தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே என்றால்....வீரமான ஆண்மகன் காதலியின் கைப்பிடிப்பான் என்பதுதான் அர்த்தம்.


 இந்த படத்தின் பாடல்கள்  ஒரு காலத்தில் தேசிய கீதமாக இருந்தது என்பதே உண்மை.
பத்துக்கும் மேற்ப்பட்ட பிலிம் பேர் விருதுகளை பல கேட்டகிரியில் அள்ளிய படம்.. அது மட்டுமல்ல சிறந்த பொழுது போக்கு திரைப்படமாக தேர்வு செய்ப்பட்டு தேசிய விருது பெற்றது  என்பது குறிப்பிடதக்து..


பாசிகரில் ஜோடி போட்ட  காஜல் ஷாருக் ஜோடி போல ஒரு ஜோடியை இன்றுவரை மேட் பார் ஈச் அதர் ஜோடியாக இதுவரை எந்த ஜோடியை இந்த அளவுக்கு பாலிவுட் கொண்டாடியதில்லை என்பதே நிதர்சனம்.


இந்த திரைப்படத்தை பார்க்கும்  அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் நிலமையை நினைத்து பாருங்கள்... மனிதருக்கு   எல்லா சீனும் எல்லா வசனமும் மனப்பாடமாகி இருக்கும் அல்லவா? அந்த மனிதரை நினைத்தால்தான் எனக்கு கண்கள் குளமாகின்றன.. எப்படிய்யா.. ஆயிரம் வாரம் ??? சான்சே இல்வை.. எது எப்படியே இந்திய சினிமா உலகில் இந்த திரைப்படம் மைல்கல் என்றால் மிகையில்லை.



எந்த பேட்டியாக இருந்தாலும் ஷாருக்கும் மற்றும் கஜோல் இந்த படத்தை கொண்டாடடிமகிழ்வார்கள்..


ஆயிரம்வது வாரம் இந்திய சினிமாவில் ஒரு திரைப்படம் ஓடுவது சாதனைதான்.

டெல்லி மட்டும்தான் போய் இருக்கேன்.. மும்பை மற்றும் கல்கத்தா இன்னும் போனதில்லை.. இன்றும் இரண்டு வருடங்களில் எப்படியாவது  போய்ட்டு வந்துடனும்...  இந்த படம் ஓடி முடியறதுக்குள்ள இந்த தியேட்டர்ல போய் பார்க்கனும்னு ஆசை... பார்ப்போம்..

 வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வந்தால் மும்பை மரத்தா மத்தீர்   திரையரங்கில் இந்த படம் திரையிட்டு ஆயிரம் வாரங்கள் முடிகின்றன..


 வாழ்த்துகள் தில்வாலேதுல்ஹனியா லேஜாயேங்கே திரைப்படக்குழுவினருக்கும் மரத்தா மந்தீர்  திரையரங்க உரிமையாளர் மற்றும்  ஊழியர்களுக்கு ...



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

25/10/2014





நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS... 

2 comments:

  1. //தற்போது 990 வருடங்களை கடந்து //

    ஜாக்கி அண்ணே..... அது 990 வாரங்கள் அண்ணே...!!!!

    ReplyDelete
  2. 1000ஆவது வாரம் முடிஞ்சதுமே தூக்கிடறாங்க ஜாக்கி :(

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner