யாழினியோடு ஒரு வாரம் மற்றும் கடந்த சனி ஞாயிறு என்று இரண்டு நாட்கள் பெண்களூர்
வாசம்... பெண்களூரில் நிறைய மாற்றங்கள்.. அதுமட்டுமல்ல... போற்றி புகழ்ந்த பெங்களூர்
டேஸ் திரைப்படம் பார்த்தாயிற்று ...
அதை நேரம்
கிடைக்கும் போது சிலாகித்து எழுதுவோம்.
மச்சானும் மாமியாரும் மடிவாளாவில் எட்டு வருட வாசம்... தற்போது பொம்மன ஹள்ளிக்கு ஜாகையை
மாற்றி விட்டார்கள்...
மடிவாளா என்பதும்தான்
நினைவுக்கு வருகின்றது.. மடிவாளவில் இருந்த சந்தியா தியேட்டர் டென்ட் கொட்டகையை இடித்து
இருந்த சுவடே தெரியாமல் ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்டியும் பின் பக்கம் பெரிய அப்பார்ட்மென்ட் கட்டி வருகின்றார்கள்...
தமிழ் படங்களும்,
காலைகாட்சியாக சாரி ஆண்ட்டி, பாவம் கொடுரன் போன்ற
பி கிரேட் படங்களை திரையிட்டு கை ரேகை அழிக்க காரணமான சந்தியா தியேட்டர் இன்று இல்லை... அதுவும் அந்த தியேட்டரில் வெளியாகும் தமிர் படம் ஆங்கில படத்துக்கு கன்னடத்தில் போஸ்டர் அடிப்பார்கள் பாருங்கள்.. அந்த போஸ்டரை பார்த்தால் வெறுத்துவிடுவீர்கள்...
சந்தியா தியேட்டர் இருந்த இடத்தின் மெயின் ரொட்டில்
பத்து கடைக்கு மேல் வரிசையாக கட்டி விட்டு இருக்கின்றார்கள். ஒரு வருடத்துக்கு முன் அந்த இடம்
இப்படி மாறுமா? என்று யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க முடியாது.
எப்போது மடிவாளா
போனாலும் அந்த பெரிய ஐயப்பன் கோவில்
பக்கத்தில் இருந்த வெட்டப்பட்ட அந்த ஆலமரம்தான் என் நினைவுக்கு வரும்... அந்த இடத்தில் எப்போதுமே ஒரு ஈரமான வாசம் வீசும்... ஆனால் மரம் வெட்டப்பட்டு
விட்டதால் அந்த இடமே வெறிச்சோடி கிடக்கின்றது....
ஆட்டோக்காரர்கள்
டிராபிக்கை கன்பியூஸ் செய்துக்கொண்டு இருப்பதால் மெஜஸ்ட்டிக் பக்கம்... ஆட்டோக்காரர்களுக்கு
என்று தனி டிராக் வைத்து இருக்கின்றார்கள்.....
நம்ம ஆட்டடோவாலாக்கள் என்றைக்கு அதை மதித்து இருக்கின்றார்கள்.. ஒரு சில ஆட்டோக்கள் தவிர மற்ற ஆட்டோக்கள் அவர்கள்
செல்லும் டிராக்கில் செல்லாமல் ஏனைய வாகனங்கள்
செல்லும் வழியில் செல்வது வருத்தமே...
என்னதான் வெயில்
அடித்தாலும் முன்பு எல்லாம் வாகனத்தில் செல்லும்
போது மெல்லிய குளிர்காற்று உடலை வருடும்... இப்போது எல்லாம் பெங்களூரில் அது மிஸ்சிங்...
அதே போல போட்ட சட்டையை இரண்டு நாளைக்கு மாத்தி
மாத்தி போடலாம்...
ஆனால் ஒரே நாளில் வியர்வை பூத்து விடுகின்றது...
பெண்களூர் என்று ஏன் அடிக்கடி
எழுதுகின்றீர்கள் என்று நண்பர் ஒருவர் கேட்டார்...
அக்ஷுவலா அதை எழுத்தாளர் சுஜாதா எழுதியது...
அது அவ்வளவும் உண்மை என்பதால் தொடர்ந்து எழுதி
வருகின்றேன்...
சென்னையில் ஒரு அழகான பிகரை பார்த்து அசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்த பிகர் கண்ணில் தென்பட எப்படியும் ஒரு ஐந்து நிமிட கால இடைவெளி
கிடைக்கும்.. ஆனால் நொடிக்கு நொடி அழகான பிகர்கள் கண்ணல் பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்... நாம தான்
சொக்கா சொக்க.. எனக்கு வேணும் ஆசை ஆசை என்று
மனது குதித்துக்கொண்டு இருக்கின்றது..
25 மாடி 30 மாடி
உயரக்கட்டிடங்கள் ரொம்ப சர்வசாதாரணமாய் இருக்கின்றன. ஆனால் அடிக்கடி மழை பொழியும் இடத்தில்
கிரவுண்ட் வாட்டர் இல்லை.. அதனால் தண்ணி லாரியில் விலை கொடுத்து வாங்கும் அவலத்தை பெங்களுரில் காண முடிகின்றது....
மக்கள் மக்கள் மக்கள் மக்கள் எந்த இடம் திரும்பினாலும் ஆட்கள் இருக்கின்றார்கள்..
கடந்த முறை பெண்களூர்
சென்ற போது தம்பி அறிவு என்னையும் யாழினியையும் பார்க்க வந்து இருந்தார்.... அதன் பின் இரண்டு மணி நேரம் சுவாரஸ்யமான பேச்சு....
அறிவின் பேச்சில்
சொந்த ஊரையும் அந்த வாசத்தையும் பெண்களூர் கிஞ்சித்தும் மாற்றவில்லை என்பது இரண்டு
மணி நேர பேச்சில் தெரிந்துக்கொண்டேன்...
கடந்த முறை லேப்டாப்
வேலைக்காட்டி விட்டது.. இருந்தாலும் தனது லேப்டாப்பை அவசரத்துக்கு கொடுத்து உதவிய நண்பர் பாஸ்கர் செய்த உதவி... பெரிய விஷயம்...
கண்டிப்பாக இந்த
முறை சந்தித்தே ஆக வேண்டும் என்று சந்தித்த
நண்பர் சுரேஷ்... ஒரு நல்ல பார் எங்கே இருக்கின்றது என்று நண்பர்களிடம் நிறைய கேட்டு இந்த இடத்தை தேர்வு செய்தேன் என்று கொரமங்களாவில்
ஓவர் த டாப் டெரஸ் டவுன்ஜிக்கு அழைத்து சென்றார்.... நிறைய பேசினோம்...
பதிவு எழுத மனப்பாறை முறுக்கு என்றால் அந்த ஊருக்கு சென்று
பெயர் காரணம் மற்றும் அது தயாரிக்கும் இடம் சென்று முழுமையாக அறிந்து எழுத
மாதத்தில் இரண்டு வாரங்கள் களத்திற்கு
சென்று எழுதுவதாக தெரிவித்தார்... கடல் பயணங்கள் தளத்தில் தொடர்ந்து ஊர் ஸ்பெஷல் பகுதியில் தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்... அவரது வலைதளம்...http://www.kadalpayanangal.com
எழுத்தை விட இன்னும் அதை ஒரு டாக்குமென்ட்ரியாக தொகுத்தால் நன்றாக இருக்கும்
என்று சுரேஷ்இடம் தெரிவித்தேன்...
அதே போல மூவி கேலரி
சங்கர் மற்றும் அவர் நண்பர்களோடு புதியதாக ஆரம்பித்து இருக்கும் நிறுவனம்.. அவரது பால்யகால நண்பர்களோடு ஒரு நாள் கழிந்தது என்பேன்...
எல்லாத்தையும் விட கொடுமை நாய்களுக்கு எல்லாம் அழகு நிலையம் வந்து விட்டது..ஆடி பிஎம்டபுள்யூக்களில் வந்து தங்களை அழகு படுத்துக்கிக்எகாண்டு செல்கின்றன.
மற்றபடி பரப்பன அக்ரஹார
சிறையை அம்மா உள்ளே இருந்த போது சென்று பார்த்தேன்... அது அப்படியே உங்களுக்காக..
பெங்களூர் பொம்மனஹள்ளியில் இருந்து ஐந்து நிமிடத்தில் நானும் மச்சானும் பைக்கில் சென்று விட்டோம்... மெயின் ரோட்டில் இருந்து ஒன்றரை கிலோ
மீட்டரில் சிறைச்சாலை இருக்கின்றது...
பரப்பன அக்ராஹாரா சாலையில் திரும்பியதுமே அதிமுக கொடிகள் மற்றும் பென்சி நம்பர்களுடன் இருக்கும் ஸ்கார்ப்பியோ இன்னோவோக்கர் சீறிக்கொண்டு இருந்தன..
போகும் வழியில் பெரிய கடை தெரு இருக்கின்றது.. தீர்ப்பு வழக்கும்
அன்றும் கண்டிப்பாக144 போட்டு இருப்பார்கள் என்பதால் கடைகள் அடைத்துதான் இருந்து இருக்கும்...
சிறை மற்றும் கோர்ட் இருக்கும் வளாகத்துக்கு செல்லும் சாலையில்
பேரி காட் போட்டு கர்நாடக காவல்துறையினர் காவலுக்கு இருந்தனர்... சாலையில் இரு பக்கமும்..
இன்னவோ, ஸ்கார்பியோகார்கள் இளைப்பாறிக்கொண்டு
இருந்தன...
அதிமுக கரை வேட்டிகள்
இங்கும் அங்கும் அலைந்துக்கொண்டு இருந்தனர் ஜெயா டிவியை
சேர்ந்த மூன்று பேர் பாரிகார்டில் கால்
வைத்தபடி நின்றுக்கொண்டு இருந்தனர்... 26 ஆம்
தேதியில் இருந்தே இங்கே இருப்பதாக தெரிவித்தனர்...
வேறு சில ஷார்ட்
கட்டுகளில் போய் சிறை முன் பக்கத்தை பார்க்க
போலாம் என்று சந்து பொந்தில் எல்லாம் பூந்து சென்றால் அங்கே ஜூனியர் விகடன் நிருபர் போட்டோகிராபரை சந்திதேன்..
கேஸ் சூடு பிடிக்க
ஆரம்பித்ததில் இருந்தே தாங்கள் இங்கே இருப்பதாகவும்...
தினமும் எதாவது செய்தி சிக்குமா என்று சந்து பொந்துகளில் எல்லாம் மறைந்து சிறை வாசல்
பக்கம் அலைந்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தனர். காரணம் காவல் துறை அதீத கெடுபிடித்தான்
காரணம் என்றனர்...வர நாட்களில் கூட்டம் சுத்தமாக
இல்லையாம் ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகம்
வந்து இருப்பதாக அங்கே இருக்கும் நபர்கள் தெரிவித்தனர்...
எல்லாம் அரசு கார்களும்
அங்கே ஆஜராகி இருந்தன...சின்ன சேலம் மற்றும் விழுப்புரம் சேர்மேன் வண்டிகள் பளபளப்பாய்
நின்றுக்கொண்டு இருந்தனர்.. கையில்லாத அதிமுக
தொண்டர் ஒருவர் ஜெயலலிதா படத்தை கழுத்தில்
மாட்டிக்கொண்டு திரிந்துக்கொண்டு இருந்தார்...
தண்ணி தகாத்துக்கு நிரந்தரமாக வாட்டர் கேன் வாங்கி வைத்துவிட்டார்கள்...
தொண்டர்கள் தாக சாத்தி அடைந்துக்கொண்டு இருந்தார்கள்..
கர்நாடக போலிஸ் செல்லும் போது கப்சிப் என்று தொண்டகள் நகர்ந்து
வழி விட்டனர்... மதியம் தன்னோடு வந்த தொண்டர்களுக்கு எலுமிச்சை சாதம் மற்றும் தயிர் சாத பொட்டலங்கள்
இன்னவோ, ஸ்கார்ப்பியோ பெரிய தலைகள் வழங்கினார்கள்...
பொதுவாக இது போன்ற நிகழ்வுகளின் போது பிரியாணி
வழங்குவதான் குல வழக்கம்.. ஆனால் எலுமிச்சை சாதம்
தயிர்சாதம் ஏன் என்று புரியவில்லை... புரட்டாசி மாசம் போய் விட்டது தெரியாதா? அல்லது
அம்மாவுக்காக வேண்டுதலா என்று தெரியல்லை....
சரக்கு சலிசாக கிடைப்பதாலும் ஒரிஜினல் சரக்கு என்பதாலும்
பாதி போதையில் சிலரை பார்க்க முடிகின்றது...தினமும்
வரும் வாகனங்களால் டிஸ்டர்ப் ஆகும் ஆட்டோ ஓட்டிகைள்.. தமிழ் நாடு ரஜிஸ்ட்ரேஷன் வாகன ஓட்டிகளிடம் வான்டட் ஆக வம்புக்கு செல்கின்றனர்.,
ஒருவாரம் ஆகி விட்டதால்
அமைதியாகவே பரப்பன அக்ரஹாரம் காட்சி அளிக்கின்றது... மினிதமிழகம் போல மாறி இருக்கிறது..அரசாங்க
வண்டிகள் பெருமளவுக்கு குவிந்து இருப்பதால்
மினி அரசாங்கம் நடப்பது போன்ற பிரமை.
ஜெயில் இருக்கும்
ரோட்டில் இருபுறமும் இருக்கும் பெட்டி கடையில் வரலாறு காணதா அளவில் வியாபாரம் நடந்து
வருகின்றது.. அள்ளிய கலெக்ஷனில் ரிச்மன்ட் சர்க்கிளில் ஒரு கிரவுண்ட் வீடே வாங்கி விடலாம்... அந்த அளவுக்கு கலெக்ஷ்ன்...
ஜெயிலுக்கு பின் புறம் குடியிருப்பு பகுதி அருகே சென்றோம்..
ஜெயிலில் பெரிய அளவில் உற்சாக கூக்குரல்கள்
கேட்டன..ஞாயிறு என்பதால் கைதிகள் விளையாடுகின்றார்கள் போலும்...
அதிகம் கவனிக்க படாத சிறைச்சாலை... ஜெவின் வருகைக்கு பிறகு
நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டது என்பதே
உண்மை...
எனக்கு இந்தியாவில்
மிகவும் பிடித்த ஊர்வசி தியேட்டரில் பேங் பேங் படம் குடும்பத்துடன் சென்று பார்த்தோம்..
பாதி படத்தில் நான் தூக்கி விட்டேன்.. ஆனாலும் இன்னமும் எழுபது ரூபாய்க்கு வயிற்று பசிக்கு சாண்ட்வெஜ் கொடுக்கின்றார்கள்..
கையில் செல்போனை நோண்டிக்கொண்டே கார் ஓட்டுபவர்களை தினமும் கைது செய்தால் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பேரை பெண்களூரில்
கைது செய்யலாம்....
அந்தளவுக்கு செல்போனை கார்
ஓட்டிக்கொண்டே செல்வது பேஷனாகி விட்டது.. முக்கியமாக பெண்கள் இந்த நொண்டுதல் வேலையை
அதிகம் செய்கின்றார்கள்...
தங்கை பிரபாவுக்கு போன் செய்ய வேண்டும் என்றும் தம்பி திட்டக்குடி கார்த்திக் மற்றும் பாண்டி பாலாஜி போன்றவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்து செய்லபடுத்த முடியவில்லை.. பார்ப்போம் அடுத்த முறை கண்டிப்பாக சந்திப்போம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

ஜாக்கி, இந்த பதிவை படிக்கிறப்ப கிடைச்ச சந்தோசம் சொல்ல முடியாதது, எனக்கு பிடித்த உங்களோடு போட்டோ எடுத்து பேசியதே சந்தோசம் எனும்போது, அதை நீங்கள் உங்களது பதிவில் குறிப்பிட்டு என்னுடைய தளத்தையும் சொன்னது ரொம்பவே சந்தோசம்-ஜி !! ஒவ்வொரு பதிவு போடும்போதும் வந்து பார்ப்பேன், கமெண்ட் போட மாட்டேன் அந்த பதிவை மீண்டும் படித்து ரசிப்பேன், இன்று இந்த பதிவை என்னுடைய நண்பர்களுக்கு காட்ட போகிறேன்........ நன்றி !
ReplyDeleteமீண்டும் பெங்களுரு வரும்போது மறக்காமல் போன் செய்யுங்கள் !!
சென்னையில் ஒரு அழகான பிகரை பார்த்து அசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்த பிகர் கண்ணில் தென்பட எப்படியும் ஒரு ஐந்து நிமிட கால இடைவெளி கிடைக்கும்.. ஆனால் நொடிக்கு நொடி அழகான பிகர்கள் கண்ணல் பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் ............(fact.....fact........fact)
ReplyDeleteசென்னையில் ஒரு அழகான பிகரை பார்த்து அசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்த பிகர் கண்ணில் தென்பட எப்படியும் ஒரு ஐந்து நிமிட கால இடைவெளி கிடைக்கும்.. ஆனால் நொடிக்கு நொடி அழகான பிகர்கள் கண்ணல் பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் ............(fact.....fact........fact)
ReplyDeleteMuch happy of suresh and you on a photosnap
ReplyDeleteHi Sandhaya is now Sandhya Digital 4K Cinema: Madiwala
ReplyDeletehttp://in.bookmyshow.com/buytickets/sandhya-digital-4k-cinema-madiwala/cinema-bang-SATB-MT/20150424