THE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.



இன்னைக்கு போல  அவசரம் இல்லை... 1990 களில் தூர்தர்ஷன் மட்டும்தான்...  பல ஆண்டுகள்  இந்தியாவில் அதுதான் தனிக்காட்டு ராஜா... அது என்ன  ஒளிப்பரப்புதோ...  அதை மட்டும்தான்  பார்க்க வேண்டும் ...

 வேறு எந்த  நிகழ்ச்சியும் சேனலும் இல்லாத போது.. சக்திமானாக இருந்தாலும் சிக்மாவாக இருந்தாலும், அது தொடர்ந்து இந்தி பேசினாலும் பார்த்தே ஆக வேண்டிய  கட்டாயம்...

 ஆனால் 1994 ஆம் ஆண்டில்  இருந்து தனியார் சேனல்கள் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுக்க... நிறைய போட்டிகள் உருவாகின...
 செய்திகளை உருவாக்குபவன்தான் உண்மையான செய்தியாளன் என்பது செய்தியாளர்களுக்கு சொல்லும் பால பாடம்...

  தமிழக தலைவர்களில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் ஒரே தலைவர் கருணாநிதிதான்...... யாராவது ஒரு கிடுக்கிபிடி கேள்வி  அவரிடம கேட்டுக‘ வைத்து  அதுக்கு உணர்ச்சி வேகத்தில் பதில் சொல்வதும்...  அதை வைத்து இரண்டு நாட்கள் பரபரப்பாக  ஓட்டுவதும் நாம்  பல வருடங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் விஷயம் தான்.

ஆனால்   இன்றைய முதல்வர்  ஜெயலலிதாவை இந்த  விஷயத்தில் அடித்துக்கொள்ளவே முடியாது... தேவையில்லாமல் பேட்டி கொடுத்து  எதற்கு பத்திரிக்கையாளர்கள செய்தி உருவாக்கும் ஆளாக நாம் இருக்க வேண்டும் என்று  அவர்  பேட்டிகளே தருவதில்லை..

 சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பெற்று  ஜெ  பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது  வார வாரம் உங்களை சந்திக்கின்றேன்... என்று வாக்குறுதி கொடுத்தார்...

 இந்த  மூன்றரை வருடங்களில்   சில முறை தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கின்றார்... அதிக பட்சம் ஏர்போர்ட் போகும் போது  கார் ஜன்னல் வழியாக  இரண்டு அவசர  கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு சென்று விடுவார்...

 காரணம் ...பேட்டி என்ற பெயரில் கிடுக்கிப்பி கேள்விகளை கேட்டுவிட்டால் தப்பிப்பது கடினம்...  பேட்டி கொடுக்கின்றேன் என்று முதல்வன் படத்தில் ரகுவரன்  கிளம்பி யதோடு....கேள்விக்கனைகளின் மூலம் மாட்டிக்கொண்டு பதவி  இழந்த காட்சியை அத்தனை  முதல்வர்களும் பார்த்துதான் இருப்பார்கள்..

தமிழ்  சேனல்களில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில்  அதிமுக அமைச்சர்கள் யாராவது கலந்துக்கொண்டு  சிறப்பித்து இருக்கின்றார்களா???  இல்லை என்ற பதில்தான்... காரணம் வம்பை விலைகொடுத்து ஏன் வாங்குவானேன் என்ற  முன்னெச்சரிக்கைதான்...

 சரி இதையெல்லாம்   ஏன்  எழுதுகின்றேன் என்றால்   நீங்கள் பார்க்க போகும் படத்தில் மேலே எழுதியதற்கு தொடர்பான காட்சிகள் நிறைய இடம் பெற்று இருக்கின்றன என்பதுதான்...

 சரி  சேனல்கள் விஷயத்துக்கு வருவோம்.

தூர்தர்ஷன்  மட்டும் கோலோச்சிக்கொண்டு இருந்த இடத்தில்  இன்று ஒரு பேட்டி என்றால் 25க்கு மேற்ப்பட்ட தமிழ் சேனல்களின் மைக்குகளை  பேட்டி கொடுப்பவரின்  முகத்தை மறைக்கும்அளவுக்கு  தமிழக மீடியா துறை   வளர்ந்து இருக்கின்றது..
  25க்கும்  மேற்பட்ட  சேனல்கள் இருக்கின்றன... 

அவைகள் எல்லாமே  விளம்பரங்களை நம்பி இருக்கின்றன.  விளம்பரங்கள் வர வேண்டும் என்றால்... மக்கள் யார் சேனலை அதிகம் பார்க்கின்றார்கள் என்ற அடிப்படையில் விளம்பர நிறுவனங்கள் விளம்பரங்களை கொடுக்கின்றன...ஹ

 டிவி சேனல் ஆரம்பிப்பது எல்லாம் வெகு சுலபம்.. ஆனால் அதனை மக்கள் மத்தியில் ,  வித்தியாசமான  நிகழ்சிகள்  மற்றும்  எக்ஸ்குளூசிவ் செய்திகள்  மூலம்  பிரபல படுத்தி   முதல் 5  இடங்களில் இடம் பிடிக்க வைப்பது சாதாரணகாரியம் இல்லை...

கண் கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்... எக்ஸ்குளூசிவ் எந்த செய்தியில்   கொடுக்கலாம் என்று அனுதினமும் யோசித்து செயல்பட வேண்டும்..

 செய்தி செனல்களில்  விபத்து நடந்த  களத்துக்கு சென்று யார்  முதலில் லைவ் கொடுக்கன்றார்கள் என்ற போட்டியே  நியூஸ் சேனல்களுக்கு மத்தியில் உண்டு,  அப்படியான எக்ஸ்களூசிவ்  செய்திகளை முதலில் லைவ் அடித்து செய்திகளை சுட சுட கொடுத்தால்தான். விளம்பரங்கள் வரும்....

 ஒரு தொலைக்காட்சிக்கு  விளம்பரம் வர வில்லை என்றால்  அவ்வளவுதான்... யானையை கட்டி தீனி போடுவதும் சேனல்  நடத்துவதும் ஒன்னுதான்.

 இருக்கற பணத்தை எல்லாம் அபுக்கு அபுக்குன்னு சாப்பிட்டுக்கிட்டே இருக்கும். அதனாலதான் எக்ஸ்குளூசிவ் செய்திகளுக்கு நாயா பேயா   ரிப்போர்ட்டர்கள் தங்கள்  உயிரை பணயம் வைத்து அலைஞ்சிக்கிட்டு இருப்பாங்க. ரேட்டிங் வரனும்ன்னு நிர்வாகமும்  அவுங்களை வெரட்டிக்கிட்டு இருப்பாங்க...

 சோ ஓரளவுக்கு   சேனல்ஸ்  நிலவரம்  தெரிஞ்சி  இருக்கும்ன்னு  நினைக்கறேன்.

 சரி கதைக்கு போவோம்..


தென் கொரியாவில்  உள்ள புகழ் பெற்ற செய்தி   சேனலில் நியூஸ் ஆங்கராக வேலை பார்க்கின்றான்  யூன்(Ha Jung-woo)... சுழி சரியில்லைன்னா.. என்ன  ஆகும்...? சில பல பஞ்சாயத்துகளால் டீகிரேட் செய்யப்பட்டு நியூஸ் ஆங்கர் போஸ்ட்டிங்கில் இருந்து ரேடியோ ஜாக்கியா மாத்திட்டாங்க... 

காலையில வந்து வணக்கம் சென்னைன்னு சொல்றதுக்கு பதில் தென் கொரியாவில்.... வணக்கம் சவுத் கொரியான்னு வள வளன்னு பேசிக்கிட்டு இருக்கற வேலை....

 அது மட்டுமில்லை... ரீசண்டா  பொண்டாட்டியை  டிவோர்ஸ் பண்ணி தொலைச்சிட்டான்.

 காலையில் ரேடியோ புரோகிராம்  நடந்துக்கிட்டு இருக்கான்...  வரியை ஏழைகளுக்கு போட்டு விட்டு வரி விலக்கை பணக்காரர்களுக்கு கொடுப்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது  டாபிக்... (அங்கேயுமாடா)லைவ் போய்க்கொண்டு இருக்கின்றது...

 நேயர்கள் தத்தம் கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு இருக்கும் போது... ஒரு நேயர் போன் செய்கின்றார்.... ஒரு மார்கமாக பேசிக்கொண்டு இருக்கும் போதே.... ஏதே ஒரு    மூட்டாக்கூ காலையில் காலாய்க்கின்றான் என்றே யூன்  நினைக்கின்றான்.. 


தோ  பாரு என்கிட்ட பாம் இருக்கும்  ஹான் ரிவர்ல இருக்கற  மாப்போ  பாலத்தை இப்ப வெடி வச்சி தகர்க்க போறேன்னு... சொல்லறான்... போடா லூசுன்னு  நினைச்சிக்கிட்டு  போனை கட் பண்ண டம்முன்னு ஒரு சவுண்டு... ஐன்னல்  வழியா எட்டிப்பார்த்தா... பாலம் பணால்....

 அள்ளு இல்ல...

 என்னடா இப்படி பேசிக்கிட்டு இருக்கும் போதே பாலத்தை வெடிச்சிட்டானேன்னு... சரி பாம் வச்சவன் நம்மக்கிட்டதான் பேசி இருக்கான்... நம்ம சேனலோட எக்ஸ்குளுசிவ் நியூஸ் இதுதான்னு அதை அப்படியே ரெக்கார்ட் பண்ணி   சேனல் எம்டிக்கு போன் பண்ணி இது  மேட்டர்... என்னை டீ கிரேட் பண்ணிங்க  இல்லை.... 

என்னை நியூஸ் ஆங்கரா மாத்துங்க... நான்  நியூஸ்  வாசிக்கனும்ன்னு டீல் போடறான்... லட்டு மாதிரியான நியூஸ் ஆச்சேன்னு சேனல்   எம்டி யும் ஓகே சொல்லறார்...

 இப்படித்தான்  படம் ஆரம்பிக்குது....  நாம  ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்குதுன்னு சொல்லுவாங்க இல்லை... அது போல யூன் தன்னை முன்னிலை படுத்திக்க   இதை ஒரு வாய்ப்பா பயண்படுத்திக்கும் போது  புள்ளையாரை  பிடிக்க குரங்கா அனா கதையாகுது...

  அப்படி என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தான்  என்பதுதான். இந்த  டேரர் லைவ்  தென் கொரிய திரைப்படத்தின் கதை.

=====
படத்தின்  சுவாரஸ்யங்கள்..

 சின்ன கான் செப்ட்தான்  இந்தனைக்கு செலவே இல்ல.... ஒரே ஒரு ஸ்டுடியோ செட்டப்தான்.. ஆனா படம் தீயா  பட்டாசா வெடிச்சி தள்ளுது...  அசத்திட்டாங்க... அசத்தி.. அருமையான திரைக்கதைக்கு செலவில்லாமல் பரபரபப்பான ஆக்ஷன்  திரில்லர் பேக்கேஜ் திரைப்படங்கள் எடுக்க  கொரியாகாரவங்க கிட்ட ஸ்பெஷல்  கோர்ஸ் படிக்கனும் போல...

யூன் கேரக்கடரில் நடித்து இருக்கும் Ha Jung-woo கொரியாவில் பட்டையை கிளப்பும் நடிகர்.... ஆரம்பகாலத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக திரைத்துறைக்கு வந்தவர்... கிம்கிடுக்ககின் இரண்டு படங்களில்  நடித்துக்கொண்டும்,... சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டிக்கொண்டு இருந்தவருக்கு  சேசர் படம் பெரிய அளலில்  அவருக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது... யெல்லோ சீ, பெர்லின் பைல், கிளைன்ட் என்று  வரிசையாக பெயர் சொல்லும் படங்கள் அவர் கேரியரில்  டேரர் லைவ் திரைப்படம்   முக்கியமான திரைப்படமாகும்..

நிறைய சுவாரஸ்யங்களை  சொன்னால்  படம் பார்க்கும்  போது பெரிய அளவில்  சுவாரஸ்யம் இருக்காது என்பதால்  படத்தை  திரையில் பார்த்து    அசந்து  போங்கள்..

====
டிரைலர்


==
படக்குகுழுவினர் விபரம்.
Directed by Kim Byung-woo
Produced by Lee Choon-yeon
Jeon Ryeo-kyung
Written by Kim Byung-woo
Starring Ha Jung-woo
Music by Lee Ju-no
Cinematography Byun Bong-sun
Edited by Kim Chang-ju
Production
  company Cine 2000
Distributed by Lotte Entertainment
Release date(s)
July 28, 2013 (PiFan)
July 31, 2013 (South Korea)
Running time 98 minutes
Country South Korea
Language Korean
Budget US$3.12 million
Box office US$35,659,824
===
பைனல்கிக்.

பரபரப்பான திரில்லர்  படம் பார்க்க வேண்டும் என்று விறுப்பப்படும் ரசிகமகா  ஜனங்கல் இந்த  திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்..

மக்கள்  பிரச்சனையை கடுமையாக சாடிய படங்கள் எல்லாம் வெற்றி பெற்று  இருக்கின்றன... கொரிய திரைப்பட வரலாற்றில்  கலெக்ஷன் அள்ளிய படம்  என்ற பாக்ஸ்  ஆபிஸ் பெருமையும் இந்த படத்திற்கு உண்டு.

 கண்டிப்பாக  இந்த திரைப்படம்  பார்த்தே தீர  வேண்டிய திரைபபடம்.

===
படத்தோட  ரேட்டிங்

  பத்துக்கு எட்டு
======

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

1 comment:

  1. Jackie ji... Neenga movies ellam vangureengala illa torrent download a?

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner