சென்னை பாத்தியன் சாலையில்
அமைந்து இருக்கும் எக்மோர் அரசினர் அருங்காட்சி வளாகத்தில் இருக்கும் இந்த கட்டிடத்தை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க முடியாது,..
வெள்ளைக்காரர்கள் ஆட்சிகாலத்தில் விக்டோரியா ஹால் என்று பெயர் பெற்ற அதுதான் மியூசியத்தில் சுதந்திரத்துக்கு பின் நேஷனல் ஆர்ட் கேலரி கட்டிடமாக மாறியது..
அப்படியும் புரியவில்லை என்றால் ... திருடா திருடா
திரைப்படத்தில் வரும் கொஞ்சம் நிலவு பாடலில்
வரும் கட்டிடம் என்றால் எளிதில் உங்களுக்கு நினைவுக்கு வராது...
இந்த கட்டிடத்தை இன்றைக்கு
எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்... அவ்வளவு
கலைநயம் முகப்பு பக்கத்தில் செதுக்கி இருப்பார்கள் இழைத்து இருப்பார்கள்.......பிசி ஸ்ரீராம் சார்...
ரொம்ப அழக ஆம்பியன் லைட்டிங்கில் மிக அழகாக அந்த
கட்டிடத்தை கொஞ்சம் நிலவு பாடலின் மூலம் செல்லுலாய்டில் பதிய வைத்து இருப்பார்.
சென்னையில்
எனக்கு யாரையும் தெரியாது...1995 ஆம் ஆண்டு
வாக்கில் நண்பர் ராஜூ ஒரு டிவிஎஸ் புதிய டிவிஎஸ்
சேம்ப் வாங்கினார்... அப்போது எல்லாம் அந்த வண்டிதான்....
ஒரு மூட்டை அரிசி, சிமென்ட்
மூட்டை, சிலின்டர், என்று எதை வேண்டுமானலும் இழுத்துக்கொண்டு செல்லும் வல்லமை படைத்த வண்டி.
(நானும் சீனுவும் 18 வருடங்கள் கழித்து....)
அதில் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று நான் கொளுத்தி
போட கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு
டிவிஎஸ் சேம்பில் கிளம்பினோம்.
ஆறு மணி நேர பயணம். சென்னையை
வந்தடைந்தோம்... சென்னையில் திருவெற்றியூரில் நண்பர் ராஜூவின் நண்பர் வீட்டில் தங்கினோம்...
மறுநாள் நம் ஊர்க்காரர் இங்கே சென்னை எக்மோர் மியூசியத்தில்
பணியில் இருக்கின்றார் ...போய் அவரை பார்த்து விட்டு செல்வோம் என்று ராஜுசொன்னார்... நானும் ஆர்வமாக
சென்றேன்...
சென்னை எக்மோர் மியூசியத்தில் நேஷனல் ஆர்ட் கேலரியில் பணியில் இருந்தார்... நாங்கள் ஊரில் சீனு என்று அழைப்போம்.. இங்கே சுந்தரராஜன்...
நான் திருடா திருட படத்தில் நான் பார்த்து
ரசித்த கட்டிடத்தில் நிற்கின்றேன் அதில் என் ஊர்காரார் பணிபுரிகின்றார் என்று
நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருந்தது...
நானும் சுந்தரராஜனும் பால்யகால நண்பர்கள்.
கட்டிடத்தில்
ரவி வர்மா ஓவியங்கள் வைத்து இருந்ததை பார்த்த நியாபகம்... கட்டிடத்தின் மேல்
தளத்துக்கு எல்லாம் அழைத்து சென்று காண்பித்தார்... வாழ்வில்
மறக்க முடியாத தருணங்கள்....
அதன் பிறகு அந்த கட்டிடத்தினுள் நுழையவேயில்லை..
திரும்ப நானும் ராஜூவும் டிவிஎஸ் சேம்பிள் கடலுர் வந்து விட்டோம்.
அதன் பின் சென்னைக்கு சென்னைக்கு வேலை வந்து கஷ்டப்பட்டு அது பெரும் கதை...
சரியாக 18 வருடங்கள் கழித்து
கடந்த வருடம் தந்தி டிவியில் பணியில் இருந்த போது கட்டிடம் கதை சொல்லும் நிகழ்ச்சிக்காக
ஐஏஎஸ் ஜவஹரை அவர்களை சந்தித்து மியூசிய கட்டிடங்கள் பற்றிய பெருமைகளை சொல்ல அனுமதி வாங்கினேன்...
அப்போது
கட்டிடங்கள் பற்றி யாராவது உங்கள் தரப்பில் பேசினால் நன்றாக இருக்கும் என்று சொன்ன போது, சுந்தராஜன்
நாணயவியல் துறையில் இருப்பார் அவரை சந்திக்கவும்
என்று சொன்னார்.
நானும் அவர் சொன்ன நபரை
பார்க்க சென்றால் அவர் என் பால்ய நண்பர் சீனு...
முதலில் அவருக்கு என்னை
அடையாளம் தெரியவில்லை... அதன் பின் நான் என்னை அடையாளப்படுத்திக்கொண்ட போது மிகவும்
மகிழ்ந்து போனேன்... சரியாக அதே வளாகத்தில் என் பால்ய நண்பரே சந்தித்தேன்...
நடுவில் பாம்பே ரிசர்வ்
பேங்கில் எல்லாம் வேலை செய்து விட்டு திரும்ப இங்கே பணி மாற்றம் செய்து வர அவரையே நான் இயக்குவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை..
சரி ராஜூக்கு போன் செய்யலாம் என்று போன் செய்தால் நானும் சென்னையில் இருக்கின்றேன் என்று சொல்ல ....மீயூசியத்து
வா 18 வருடத்திற்கு பிறகு மீண்டும் சந்திக்கலாம் என்று அழைத்தோம்.... மீண்டும் திரும்பவும் 18 வருடத்துக்கு பிறகு மூன்று பேரும் அதே விக்டோரியா மஹாலின் முன் போட்டோ
எடுத்துக்கொண்டோம்...
(18 வருடங்கள் கழித்து நான், சீனு, ராஜூ)
விக்டோரியா மககாராணியின்
பிறந்த தினத்தை முன்னிட்டு மூன்று வருடத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்த டெக்னிக்கல் இன்ஸ்டியூட் கட்டிடம்... தற்போது விக்டோரியா டெக்னிக்கல்
இன்ஸ்டியூட் மவுண்ட்ரோட்டில் ஸ்பென்சர் பக்கத்தில் செயல்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடந்த நான் இயக்கிய இந்த பதிவில் ... பிபிஆர் ஆன் சன்ஸ்
கடைக்கு அடுத்ததாக சந்திரலேக கட்டிடம் பற்றி வரலாற்று சுவாரஸ்யங்கள் இடம் பெறும்.
அதே போல அதற்கு பக்கத்தில் இருக்கும் மியூசியம் தியேட்டர் கட்டிடத்தின் வரலாற்றையும் சென்னை தினத்தில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
நான் மீடியா துறையில் நான் செய்த வேலைகளில் ரொம்ப ரொம்ப ரசித்து செய்த வேலை....
தற்போது தந்தியில் நண்பர் பார்த்தீபன் தொடர்ந்து சென்னை நகரின் வரலாற்று பக்கங்களை சனிக்கிழமை தோறும் மாலை ஆறு மணிக்கு புரட்டி வருகின்றார்... சென்னை வரலாற்றை தெரிந்துக்கொள்ள அந்த தொடரை நண்பர்கள் பார்க்கலாம்.
தினமும் ஒரு எப்பிசோட் வேண்டும் என்று என்னை அலைகழிக்க கொடுத்த புராஜெக்ட்.. இருந்தாலும் நான் நிறைவாக செய்தேன்.. வாரத்துக்கு- ஒன்று என்று நேரம் கொடுத்து இருந்தால் மேலும் நிறைய சுவாரஸ்யங்களை சேர்த்து இருப்பேன்..
இந்த சென்னை தினத்தில் குறிப்பிட்ட சில கட்டிடங்களை பற்றி நான் ஸ்கிரிப்ட் எழுதி இயக்கி பதிவு செய்து இருக்கின்றேன் என்பதே கடலூர் கூத்தப்பாக்கத்தில் வளர்ந்த எனக்கு பெருமையே...
அனைவருக்கும் 375 வது சென்னை தின வாழ்த்துகள்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

கட்டிடத்தின் கலை அழகு அருமை! சுவாரஸ்யமான நினைவுகள்! நன்றி!
ReplyDeleteதிருடா திருடா திரைப்படத்தில் வரும் கொஞ்சம் நிலவு பாடலில் வரும் கட்டிடம் என்றால் எளிதில் உங்களுக்கு நினைவுக்கு வரும் - best example அண்ண
ReplyDeleteகருத்துக்கு நன்றிகள்.
ReplyDelete