இன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.






இயக்குனர் ஷங்கர்....

தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற ரத்தம் பாய்ச்சிய பெயர்...

ஏழு அதிசயத்தை ஒரே பாடல் மூலம் பட்டி தொட்டி யில் இருக்கும் ரசிகனுக்கும் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஷங்கர்.


 ஷங்கர் பிறந்தது கும்பகோணம்...

உதவி இயக்குனராக ஜென்டில்மேன் கதையை தயாரிப்பாளரிடம் சொல்ல...
சார் ஹீரோவை ஊட்டியில துரத்தறாங்க...
டிரெயின் போயிக்கிட்டு இருக்கு அப்ப போலிஸ் ஜீப் டிரையினை தாண்டுது... என்று முதல் படத்துக்கதையை சொல்லும் போதே தயாரிப்பாளரை பீதிக்குள்ளாக்க வைத்தவர்.

பர்பெக்ஷன் என்றால் சங்கர் என்று அகராதி பெயரை மாற்றிக்காட்டியவர் ... 

சினிமா என்பது கூட்டு முயற்சி என்பதை உணர்ந்த காரணத்தால்தான். திறமையானவர்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு ஒவ்வோரு முறையும் களம் கண்டு ஜெயிக்கின்றார்... 

ஆனால் இது தெரியாமல் நிறைய இயக்குனர்கள் ஈகோ காரணமாக தனக்கு வராத வசனம் போன்ற விஷயங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு தோல்வி அடைகின்றார்கள்..முன்பு பாலகுமாரன் அதன் பின்பு எழுத்தாளர் சுஜாதா..... இப்போது ஐ படத்துக்காக சுபா.

ஒளிப்பதிவாளர்களும் படத்துக்கு படம் மாற்றிக்கொண்டே இருப்பவர்.. ஆரம்பகால படங்களுக்கு காலம் சென்ற ஜீவா ஒளிப்பதிவு செய்தாலும் அடுத்து அடுத்த படங்களுக்கு ஒளிப்பதிவாளர் மாற்றிக்கொண்டு இருப்பவர்... கேவி ஆனந்தோடு இரண்டு பிரமாண்ட படங்களில் இணைந்தவர்...

எந்த இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தாரோ அவரது மகனையே ஷங்கர் சார் என்று மரியாதையாக பொது இடத்தில் அழைக்கும் அளவுக்கும் எனக்கு ஒருபடம் மீண்டும் பண்ணிக்கொடுங்க நான் காத்து இருக்கின்றேன் என்று நடிகர் விஜய்யை விழா மேடையில் கேட்க வைத்தவர்...

ஆனா பட்ட ஏவிஎம் நிறுவனமே சிவாஜி படம் எடுக்கும் பிரமாண்ட செலவுகளை பார்த்து திக்கி தினறி போனது தமிழ் திரையுலகம் அறிந்த செய்திதான்.....

அர்ஜூன் போன்ற ஆட்களை வைத்தே பெரிய ஹீட் பிலிம் கொடுத்தவர் சங்கர் மட்டுமே...

கமல் யார் படத்தில் நடித்தாலும் அது கமல் படமாக மாறி விடும்.. ஆனால் இந்தியன் மட்டுமே ஷங்கர் படடாக இருந்தது...அதுக்கு காரணம் ஷங்கரின் தீவிர உழைப்பு.. 

ஒரே நாள் அவர் படத்தின் நான் பணியாற்றி இருக்கின்றேன்.. ஷக்கலக்கபேபி பாடல் ஷூட்டிங்கின் போது....

ஐ திரைப்படம் மூலம் இன்னும் பெரிய அளவில் மிரட்ட போகின்றார் என்று இப்போதே கோடம்பாக்க பட்சிகள் அலறுகின்றன.. 

இவருடைய ஒவ்வோரு படத்தின் ரிலிசின் போது அப்படியே மண்ணை கவ்வ வேண்டும் என்று யாகம் நடந்ததா குறையாக வளர்ந்த இயக்குனர் கூட்டமே தமிழ் சினிமாவில் உண்டு.

எஆர்ரகுமானோடு கரம் கோர்த்து வெற்றிப்படியில் ஏறியவர்... அதே போல அவர் அமைக்கும் மெட்டுக்கு திரையில் பிரமாண்டத்தில் உயிர் கொடுப்பவர்..

சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடலுக்கான செட் ஒன்று போதும்... பிரமாணட்த்தை பறை சாற்ற... புதிய தொழில் நட்பங்களை தன் படங்களில் உடனே பயண்படுத்துபவர்...

ஷங்கர் இயக்கிய பாடல்களில் என் ஆல் டைம் பேவரைட்.. ஊர்வசி ஊர்வசி பாடல்தான்... பார்க்கும் போது இளமை ஊங்சலாடும்...

சிஜி என்ற தொழில் நுட்பத்தை கோடம்பாக்கத்தில் இருந்து பட்டி தொட்டி வரை பேச ஷங்கரும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை..

50 வயதாகும் இயக்குனர் ஷங்கருக்கு இன்று பிறந்த நாள்.... பார்த்தால் அப்படி தெரியவில்லை அல்லவா??

இன்று பிறந்த நாள் காணும் இயக்குனர் ஷங்கர் இன்னும் பல வெற்றிகளை பெற நாம் வாழ்த்துவோம்.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.

==========






2013 ஆம் ஆண்டு என் வாழ்வில் மிக மோசமான வருடம்.... வேலை இழப்பு, பொருளாதார சூழலில் சிக்கி தவித்தது... போட்டு படித்து எடுத்த வருடம் என்று சொல்லலாம்.... 

எப்போது வேண்டுமானாலும் கொடு என்று நாங்கள் வீடு வாங்கும் போது மூன்று லட்சம் கொடுத்தார் நண்பர் ... 

இரண்டே வருடத்தில் தனக்கு மொத்த பணமும் தேவை ... தான் மிகுந்த கஷ்டத்தில் இருக்கின்றேன் என்று தெரிவித்தார்...
யாழினி பிறந்த காரணத்தால் மனைவியும் பிரசவ விடுப்பில் வேலைக்கு போகவில்லை... அந்த நேரம் பார்த்து எனக்கு வேலை இழப்பு...

வீட்டுக்கான கடன் சுமை... மற்றும் குடும்ப தேவைகள் என்று பரிதவித்த போது... மூன்று லட்சம் கண்டிப்பாக வேண்டும் என்று உங்கள் நண்பர் கேட்டால்... நீங்கள் என்ன செய்ய முடியும்...???

நான்கு மாதம் டைம் கேட்டேன்... மூன்று லட்சம் பணம் ரெடி செய்ய..

எனக்கு என் மனைவிக்கும் வேலை இல்லை... நான்கு மாதம்.. மூன்று லட்சம்... என்ன செய்ய போகின்றேன் என்று தவித்து போனேன்... தூக்கம் தொலைத்த இரவுகள் அவை..

கடன் பட்டான் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வார்த்தைக்கு எழுத்துக்கு எழுத்து அர்த்தம் கற்பித்த தினங்கள் அவை...

எப்பயுமே எந்த பிரச்சனை வந்தாலும்.... கண்டிப்பாக அதை தீர்க்கும் சொல்யூஷன் நிச்சயம் இருக்கும்... என்ன அதில் சுவாரஸ்யம் என்றால் அதை தேடுவது மட்டும்தான் நமது வேலை என்பதில் நான் உறுதியாக இருப்பவன்...

வீடு வாங்கிய விஷயத்தில் வலையுலக நண்பர்கள் உதவி செய்தது... பலருக்கு பிடிக்கவில்லை... அதில் சிலர் நெருக்குதல் தந்தார்கள்... நண்பர்கள் சிலர் பலியானார்கள்.... தவறில்லை...

பட் நான்கு மாதத்தில் பணம் கொடுக்க வேண்டும்... ஒரு சிலர் அந்த நாளை எதிர் நோக்கி காத்து இருப்பதாகவும், இந்த விஷயத்தில் ஜாக்கியை கிழி கிழி என்று கிழிக்க ஒரு நண்பர் கூட்டமே காத்து இருப்பதாக எனக்கு வேண்டப்பட்ட நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

மூன்று மாத கெடுவுக்கு முதல் நாள் இரவு.... வேலையே இல்லாத நேரத்தில் மூன்று லட்சம் ரூபாய் புரட்டி நண்பர் வீட்டில் நானும் என் மனைவியும் பணத்தை செட்டில் செய்தோம்.

வேட்டி அவிழ்ந்து நடு ரோட்டில் நிர்வாணமாக நிற்க வேண்டிய நிலை... ஒடி வந்து வேட்டி அவிழாமல் காத்தவன்... சீர்காழியில் பிறந்த நண்பர் ராஜசேகர்தான்...

பெரிய பழக்கம் எல்லாம் இல்லை.... தொடர்ந்து என் வலைப்பூவை வாசித்து வருபவர்... ஒரு நாள் சந்தித்தோம்... புகைப்படகலையில் ஆர்வம் அதிகம்... சின்ன ஈக்காடு தாங்கில் சின்ன கம்பெனிவைத்து நடத்தி வருகின்றார்... கடுமையான உழைப்பாளி... புத்திசாலி... நேர்மையானவர்... பிசினசில் கன நேர முடிவுகளை சட் சட்டென்று எடுப்பவர். 

முதலில் தன்னிடம் இருந்த 70/300 லென்ஸ் எனக்கு கொடுத்து உதவியவர்... அப்படித்தான் பழக்கம்.... கிண்டி பக்கம் சென்றால் அவசியம் அவர் கம்பெனி போய் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு வருவேன். மனது இலகுவாகி விடும்... முக்கியமாக உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர்.. சிங்கப்பூரில் பத்துக்கு பத்து அறையில் நண்பர்களோடு தங்கி, கடுமையாக உழைத்து ஒரு கம்பெனி வைக்கும் அளவுக்கு உயர்ந்தவர். கோபம் மூக்குக்கு முன்னாடி வந்து நிற்கும்.

சில நாட்களாக நான் கலகலப்பு இல்லாமல் இருப்பதை பார்த்து விஷயம் என்ன என்றார் விஷயம் சொன்னேன்.
கெடுவை சொன்னேன்... மூன்று பைசா வட்டிக்கு ஒரு லட்சமும், தன்னிடம் இருந்த 50 ஆயிரம் பணத்தையும் கொடுத்தார்... ஒரு பிசினஸ்மேன் அப்படி பணம் கொடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

இத்தனைக்கு அவரது நெருங்கிய நண்பருக்கு வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தை கொடுக்காமல் அலைகழித்த பிரச்சனையில் சிக்கி தவித்த போது.... என் மீது இருந்த மதிப்பு காரணமாக பணம் கொடுத்தார்... திரும்ப வேலைக்கு சேர்ந்து லோன் போட்டு அவர் கொடுத்த ஒன்றைரை லட்சத்தை அடைத்து விட்டேன்...

ஆனாலும் வேட்டி அவிழ்வதை ஒரு நண்பர் கூட்டம் அவலாய் பார்க்க தயாராக இருந்த போது, ஓடி வந்து வேட்டி அவிழாமல் காத்தவர் ராஜசேகர்...

இன்று அவருக்கு பிறந்த நாள்...

இன்னும் பல சாதனைகள் செய்து, உடல்பலத்தோடு மனபலமும் இறைவன் அருளால் கிடைக்கப்பெற்று சீறும் சிறப்புமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்...

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

இந்த குறளை வாசிக்கும் போது எல்லாம் உன் உருவம் என் மனதிரையில்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. நண்பா.


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS..
 

3 comments:

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner