THE PREY-2011(LA PROIE)/பிரான்ஸ்/சைக்கோவிடம் இருந்து தன் மகளை காக்க போராடும் சிறை கைதி.


 கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஒதவாதுன்னு  ஒரு கிராமத்து  பழமொழி ஒன்னு  இருக்கு... ஜெயிலுக்கு போனா கண்டிப்பா கூட்டு உதவவே உதவாது....

பெட்டி கேஸ் லெவல்ல  உள்ளே போய் இருப்பான் ... அங்க இருக்கற குற்றவாளிங்க...  இவனை அடுத்த லெவலுக்கு மாத்தி அனுப்பி இருப்பாங்க... 

பிட்பாக்கெட் மட்டும் முன்னாடி அடிச்சிக்கிட்டு இருந்தவன் ...இப்போ  கஞ்சா விக்ற அளவுக்கு மாத்தி விட்டு இருப்பாங்க..


ஜெயிலுக்கு போய் திருந்தி யோக்கியமானவனா  வெளிய  வந்தவங்க 50 பர்சென்ட் பேர் இருந்தாலும், மீதி 50 பர்சென்ட்  பேர் தவறான ஆட்களிடம் சிக்கி எதிர்காலத்தை தொலைத்தவர்கள் எராளம்.

பிரே பிரேஞ் படத்தின் கதை என்ன?

 பிராங்க் பெரிய கொள்ளை நிகழ்வுக்கு பிறகு பணத்தை பத்திரமான இடத்தில் பதுக்கி வைத்து விட்டு போலிசிடம் சிக்கி  சிறையில் அடைக்கப்படுகின்றான்...

 சிறையில்   ரஷ்ய மாபியாக்கள்  லூயிஸ் என்ற அப்பாவி ஒருவனை  அடித்து கொலை  செய்யும் லெவலுக்கு  செல்லும் போது ,  பிரான்க் அவனை காப்பாற்றுகின்றான்..

  பிராக் தான் கதையின் நாயகன் என்பதால் பிராக்  பின்னனியை சுருக்கமாக அறிந்துக்கொள்வது  நல்லது  அல்லவா?
   பிராங்க் திட்டம் போட்டு கொள்ளை அடிப்பதில் மன்னன்... அவனக்கு அழகான மனைவி மற்றும் ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை....

 சரி கதைக்கு வருவோம்...

லூயிசின்  நல்லகுணநலன்கள் மற்றும் அப்பாவி தோற்றாத்தை பார்த்து   பிராங்க் லுயிசை ரொம்பவும் நம்பி தொலைத்து விடுகின்றான்...

பிராங்க் விடுதலை ஆவதற்கு  ஒரு மாதம் முன்   லுயிஸ்  விடுதலையாகின்றான்.. ஆனால் அவனிடம் தன்  பணம் மறைத்து வைத்து இருக்கும் இடத்தை சொல்லவில்லை..

 லுயிஸ் வெளிய வந்தவுடன் பிராங்க் மனைவியை கடத்துகின்றான்.. காரணம் கொள்ளை அடித்த பணம் வைத்து இருக்கும் இடம் பிராங்கின் மனைவிக்கும்  தெரியும் என்பதால் பணம் போனால் போய் விட்டு போகின்றது...

 இந்த நிலையில் மேலும் அதிர்ச்சியாக இடியாப்ப சிக்கலாய் ஒரு செய்தியை கேட்டு பிராங்க அதிர்ந்து போகின்றான்... 

சஸ்பென்ட் செய்யப்பட்ட போலிஸ் ஆபிசர் சிறையில் இருக்கும் பிராங்கை சந்தித்து லுயீஸ் நீ நினைப்பது போல நல்லவன்  இல்லை... அவன்  ஒரு சைக்கோ  கில்லர் அது மட்டுமல்ல குழந்தையை கூட விட்டு வைக்க மாட்டான் என்று சொல்லிவிட... பிராங்க  திருடனுக்கு தேள்கொட்டி  நிலையில் விழிக்கின்றான்..

ஜெயிலில்  நண்பன் என்று நினைத்தவன் சீரியல் கில்லர்,.

 அவன் தன் மனைவி குழந்தைகளை கடந்தி விட்டான்.

அவன் ரேப்பிஸ்ட் தன் குழந்தை அவனிடம் சிக்கி இருக்கின்றாள்..  

ஆனால் பிராங்கோ சிறையில்  ....

எப்படி தன் மனை வி குழந்தையை பிராங்க் காப்பாற்றினான் என்பதே படத்தின் பர பர சரசர கர கர கொற கொற  திரைக்கதையின் வேகமாகும்.

 சான்சே இல்ல...

 துரத்தல் என்றால் துரத்தல் அப்படி ஒரு துரத்தல்...


 பெட்ரோலில் தீப்பற்றினால் பக் என்று ஒரு சத்தத்தோடு பற்றிக்கொள்ளுமே அத போல பரபரப்பான திரைக்கதை... 

தான் நம்பியவன் ஒரு ரேப்பிஸ்ட் மற்றும் சீரியல் கில்லர் என்பது தெரிந்ததும்... 

பிராங்க் ஜெயிலில் இருந்த தப்பித்து ஒடுவதில் இருந்து பரபரப்பு ஆரம்பிக்கின்றது...

  பிராங்கை துரத்தி பிடிக்கும் பொருப்பினை ஒரு லேடி டெக்ட்டிவ்வை  கையில்  டைரக்டர் கொடுத்து அசத்தி இருக்கின்றார்

 அந்த பொண்ணும் சும்மா கின்னுன்னு   குதிரை கணக்கா துப்பறிந்து பிராங்கை  விடாமா துரத்துன்னு சொல்லவந்தேன்யா.

 பரபர ஆக்ஷன்  திரில்லர்..

 ஒரு அழகான  பெண்ணை கடத்தி காரணமேயில்லாமல் கொலை செய்து, புதரில்  வீசும் காட்சியை பார்த்தாலே எலும்பு சில்லிட வைக்கும்..

=======
படத்தின் டிரைலர்.


=/=========
படக்குழுவினர்  விபரம்

La Proie
Directed by Éric Valette
Produced by Luc Bossi
Written by Laurent Turner
Luc Bossi
Starring Albert Dupontel
Alice Taglioni
Stéphane Debac
Natacha Régnier
Cinematography Vincent Mathias
Edited by Fabrice Rouaud
Christophe Pinel
Distributed by Cohen Media Group
Release date(s)
13 April 2011 (France)
6 June 2013 (United States)
Running time 102 minutes
Country France
Language French
Budget €8.9 million
Box office $3 million
======

பைனல் கிக்..


 2011 ஆம்  ஆண்டு படம் முதலில்  பிரான்சில் வெளியானது.. படம்  கொடுத்த வெற்றி தன்னம்பிக்கை  தயாரிப்பாளருக்கு தர... சட்டென 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்த திரைப்படத்தை ஆங்கிலம் பேச வைத்து   வெளியிட ,அங்கேயும்  கலெக்ஷனில் கல்லாவை நிரப்பி  பெரிய பெயரை பெற்றுதந்த படம் இது...

பரபரப்பான ஆக்ஷன் படங்கள்  பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படம் இது..

 இந்த படத்தை பார்க்க சொல்லி பரிந்துரைத்த கணேஷ் டி நீரோ நண்பருக்கு என் நன்றிகள்..

 உங்களுக்கு தெரிந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களை நீங்களும் பரிந்துரைக்கலாம்..

 இந்த படம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

======

படத்தோட ரேட்டிங்

பத்துக்கு ஏழு
=====

பிரியங்களுடன்


ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

1 comment:

  1. இந்த படத்தையும் நேற்று தான் பார்த்தேன்.. டச்சு படத்துக்கு அப்புறம்.. சேசிங் சீன் சூப்பர்..
    நமக்கு எவன் வில்லன் என்று தெரிகிறது.. போலீசுக்கு லேட்டா தெரிவது ஒன்று தான் கடுப்பை கிளப்புது

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner