THE SCORE-2001/நம்பிக்கை துரோகி.




24 காவலாளிகள்.


30 மில்லியன் டாலர் விலைமதிக்க முடியாத புரதான செங்கோல்

அந்த செங்கோல் இருக்கும் லாக்கரை கவனிக்க  ஒன்பது வீடியோ கேமராக்கள்...
அந்த செங்கோல் கஸ்டம்ஸ் ஆபிசில் இருக்கின்றது... அதை எப்படி  அபிட் விடப்படுகின்றது என்பதுதான் படத்தின்  மெயின் சுவாரஸ்யம்...


துரோகத்தில் பெரிய துரோகம் நம்பிக்கை துரோகம்தான்.... அப்படியான துரோகத்தின் காரணமாகத்தான்  நாட்டில் பல கொலைகள் நடக்கின்றன.....இந்த படத்திலேயும் ஒரு துரோகம் பச்சை துரோகம்... அதுதான் படத்தோட சஸ்பெண்ஸ்..

ஊர் நாட்டுல ஒரு பழமொழி சொல்லுவாங்க... கொள்ளைக்கு போனாலும் கூட்டு உதவாதுன்னு.... அதுதான் இந்த தி  ஸ்கோர்  படத்தோட ஒன்லைன்.


நிக்(ராபர்ட் டி நீரோ) ஒரு திருட்டு பய....  பரம்பரை பரம்பரையா அவன் திருடறான்னு சொன்னா.. அவன் திருடற ஸ்டைலை  அவமானப்படுத்தியது போல ஆகும் என்பதால், அந்த வார்த்தையை  பிரயோகிக்க மனசு ஒப்பவில்லை...ஜென்ம ஜென்மமா திருடற திருட்டு பய அவன்... 

 நிக்கை அவன் இவன் என்பதால்  ஏதோ சின்ன பையன் என்று எண்ணி விடாதீர்கள்...  கெழப்பய... ரிட்டயர்மென்ட் ஸ்டேஜ்.... பாவம் அவனும் எத்தனை நாளைக்குதான்... ஓடிக்கிட்டே இருப்பான்... கவர்மென்ட் ஆபிஸ்ன்னா 58 வருசத்துக்கு அப்புறம்.... தலைவரே போயிட்டு வாங்கன்னு பிரியா விடைகொடுத்து அனுப்பிடுவாங்க... ஆனா இது கைத்தொழில் இல்லையா... ???

நிக் ஒரு நாள் முடிவு எடுக்கறான்.. ச்சே நாமளும் ஓடிட்டோம்..  இனிமேலாவது வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று முடிவு எடுத்து  தொழிலை விட்டு விடலாம் என்று நினைக்கும் போது, ஜாக் (எட்வர்டு நார்டன்) அறிமுகமாகின்றான்...

பெரிய இடத்து ரெக்கமண்டேஷனோடு ஒரு வேலையை எடுத்து வருகின்றான்.. அதாவது கஸ்டம்ஸ் ஆபிசில் சேப் லாக்கரில் உள்ள புரதான செங்கோலை  கொள்ளை அடிக்க  வேண்டும்.. என்பதுதான்... 

லாஸ்ட் சான்ஸ்... இதுவரை நிக் எந்த கொள்ளை சம்பவத்திலும் மாட்டியதில்லை...  நிக்கும் ஜாக்கும் சேர்ந்து அந்த செங்கோலை எடுத்தானுங்களா? போலிஸ் அவனுங்க எடுத்துக்கிட்டு போகும் வரை பூப்பறிச்சிக்கிட்டு இருந்திச்சான்றதை??? வெண்திரையில் பாருங்க மக்கா..

=================

சுவாரஸ்யங்கள்.



2001இல் வெளிவந்த தி ஸ்கோர் திரைப்படம்.. ஒரு கிரைம் திரில்லர் திரைப்படம்.... எட்வர்டு நார்ட்டன் இந்த  படத்திலும்  வழக்கம் போல பெஸ்ட் பார்பார்மென்ஸ் கொடுத்து இருப்பார்...

ராபர் நீரோ சான்சே  இல்லை... ரோனின் படத்தை போல இந்த படத்திலும் அவர் தி பெஸ்ட்டை கொடுத்து இருப்பார்...

மார்லன் பிராண்டோ மற்றும் நீரோ இணைந்து நடித்த முதலும் கடைசியான படம் இதுவே...

டீடேயில்டு ஸ்டெடி பண்ணி திட்டம் போடும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன... கேன பய போல இந்த படத்திலும்  எட்வர்டு நார்ட்டன் கலக்கி இருப்பார்... 

எனக்கு எட்வர்டு  நடித்த  இல்லுஸ்டனிஸ்ட் பாருங்க... மனுஷன் நடிப்புல பின்னி பெடல்  எடுத்து இருப்பான்...


 படத்தோட கிளைமாக்ஸ்  சான்சே இல்லை... இன்பேக்ட் இந்த படத்தை தூக்கி நிறுத்தறதே இந்த படத்தோட கிளைமாக்ஸ் காட்சிகள்தான்..

 படத்தோட இயக்குனர் Frank Oz க்கும் மார்லனுக்கும் இந்த படத்துல சின்ன பஞ்சாயத்து ஓடியிருக்கு போல..

=============
படத்தோட டிரைலர்


=================
படக்குழுவினர்  விபரம்.

Directed by     Frank Oz
Produced by     Gary Foster
Lee Rich
Written by     Scott Marshall Smith
Daniel E. Taylor
Kario Salem
Starring     Robert De Niro
Edward Norton
Angela Bassett
Marlon Brando
Music by     Howard Shore
Cinematography     Rob Hahn
Editing by     Richard Pearson
Studio     Mandalay Pictures
Distributed by     Paramount Pictures
Release date(s)     July 13, 2001
Running time     124 minutes
Language     English
Budget     $68,000,000
Box office     $113,579,918
 

====================
பைனல்கிக்..


அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும்  மக்கா..... கொள்ளை அடிக்கும்   கிரைம் திரில்லர் படங்கள் கேட்டகிரியில்  இந்த படத்தை சேர்க்காமல் நிறைவு செய்ய  முடியாது... அதனால் இந்த படத்தை டோன்ட் மிஸ் இட்...

============ 

படத்தோட ரேட்டிங்

பத்துக்கு  ஆறரை

==========
குறிப்பு 

என்ன தலைவரே பழைய படங்கள் அதிகம் எழுதறிங்கன்னு ...??யோவ் நானே இப்பதான் இந்த படங்களை எல்லாம் பார்க்கறேன்.. அதுக்கான வாய்ப்பும் இப்பதான்  கிடைக்குது..   

ரெண்டாவது விஷயம்..

90ல பொறந்த பயபுள்ளைங்களுக்கு  இப்ப 23 வயசு ...அவனுங்களுக்கு பத்து வயசு ஆவ  சொல்லோ.... ரிலிஸ் ஆன படம் இது... நம்மளை உட்டா அவனுங்களுக்கு நல்ல படத்தை யார் சொல்லறது...??? என்ன வரட்டா..??
==============

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

8 comments:

  1. super......super......superjiiiiiiiiiiiii

    ReplyDelete
  2. பாஸ்... டி நீரோவும் ப்ராண்டோவும் ஒரே ஷாட்டில் நடித்த ஒரே படமும் இதுதான்

    ReplyDelete
  3. When you are releasing your book "ulaga cinema" or ulagam ungalukkaagave ..

    ReplyDelete
  4. நான் இது வரைக்கும் எட்வர்ட் நோர்டன் நடித்த score, italian job, primal fear matrum illusionist பார்த்து இருக்கிறேன். அருமையான நடிகர். ஆனால் என்ன காரணத்தினாலோ christian bale, leonardo di caprio அளவுக்கு அவர் பெயர் பெற வில்லை.

    ReplyDelete
  5. pls.....watch.....
    in time........movie .......review ....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner